Published:Updated:

ஆயிரம் ரூபாய்க்குள் அசத்தல் மேக்கப்!

 சோஃபியா
பிரீமியம் ஸ்டோரி
சோஃபியா

மேல் உதட்டின் ‘V’ லைன் (மேல் உதட்டின் நடுப்பகுதி) தொடங்கி, மேல் உதடு, கீழ் உதடு முழுவதும் சீராக லிப்ஸ்டிக் அப்ளை செய்யவும்.

ஆயிரம் ரூபாய்க்குள் அசத்தல் மேக்கப்!

மேல் உதட்டின் ‘V’ லைன் (மேல் உதட்டின் நடுப்பகுதி) தொடங்கி, மேல் உதடு, கீழ் உதடு முழுவதும் சீராக லிப்ஸ்டிக் அப்ளை செய்யவும்.

Published:Updated:
 சோஃபியா
பிரீமியம் ஸ்டோரி
சோஃபியா
 சோஃபியா
சோஃபியா

‘மேக்கப் போட்டதே தெரியக் கூடாது. ஆனாலும் பளிச் லுக் வேண்டும். முக்கியமா, பட்ஜெட் எகிறக் கூடாது’ என்ற ஆர்வம் பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும். ‘`கன்சீலர், காம்பேக்ட், காஜல், லிப்ஸ்டிக்... இந்த நான்கும் இருந்தாலே போதும். நீங்கள் விரும்பும் சிம்பிள் லுக்கில் அசத்தலாம்’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் சோஃபியா. சிம்பிள் மேக்கப்புக்கான வழிகளையும் வழங்கும் அவர், “மேக்கப் செய்யும் முன் முகத்தை கெமிக்கல் குறைவான சோப் அல்லது ஃபேஸ்வாஷ் பயன்படுத்தி சுத்தம் செய்து கொள்ளுங்கள்'' என்கிறார்.

ஆயிரம் ரூபாய்க்குள் அசத்தல் மேக்கப்!

ஸ்டெப் 1

உங்கள் ஸ்கின் டோனைவிட ஒரு டோன் அதிமாக இருக்கும் கன்சீலரை தேர்வு செய்து, முகத்தில் கரு வளையம், கருந்திட்டுகள், பருக்கள் உள்ள இடங்களில் அப்ளை செய்யுங்கள்.

ஆயிரம் ரூபாய்க்குள் அசத்தல் மேக்கப்!

ஸ்டெப் 2

ஃபேஸ் பிளெண்டர் பயன்படுத்தி கன்சீலரை முகத்தில் சீராக பரவும்படி `டச்' செய்யுங்கள். நீண்ட நேரம் மேக்கப் கலையாமல் இருக்க வேண்டும் என்றால், கன்சீலர் பயன்படுத்திய பின் ஃபவுண்டேஷன் அப்ளை செய்து கொள்ளலாம்.

ஆயிரம் ரூபாய்க்குள் அசத்தல் மேக்கப்!

ஸ்டெப் 3

முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் காம்பேக்ட் பவுடர் அப்ளை செய்யவும்.

ஆயிரம் ரூபாய்க்குள் அசத்தல் மேக்கப்!

ஸ்டெப் 4

கண்களின் `வாட்டர் லைன்' என்று சொல்லக் கூடிய, இமைகள் இருக்கும் பகுதியில் காஜல் அப்ளை செய்யவும்.

ஆயிரம் ரூபாய்க்குள் அசத்தல் மேக்கப்!

ஸ்டெப் 5

கண்களின் மேல் இமைகளை ஒட்டி ஐ லைன ருக்கு பதில் காஜல் அப்ளை செய்யவும்.

ஆயிரம் ரூபாய்க்குள் அசத்தல் மேக்கப்!

ஸ்டெப் 6

மேல் உதட்டின் ‘V’ லைன் (மேல் உதட்டின் நடுப்பகுதி) தொடங்கி, மேல் உதடு, கீழ் உதடு முழுவதும் சீராக லிப்ஸ்டிக் அப்ளை செய்யவும். சிம்பிள் மேக் அப் லுக்கில் நீங்கள் தயாராகி இருப்பீர்கள். கன்சீலர், காம்பேக்ட், காஜல், லிப்ஸ்டிக் என இந்த நான்கையும் நல்ல பிராண்டில் ஆயிரம் ரூபாய்க்குள் வாங்கிவிட முடியும். பல மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

டிப்ஸ்...

காம்பேக்ட், கன்சீலர், ஃபவுண்டேஷன் இவற்றை உங்கள் கை மற்றும் கழுத்துப் பகுதியில் அப்ளை செய்து, பொருத்தமாக இருக்கிறதா என்பதை செக் செய்து வாங்கவும்.

ஃபேஸ் பிளெண்டர் பயன்படுத்தும்போது லேசாக தண்ணீரில் நனைத்துப் பயன்படுத்தினால் மேக்கப் திட்டுத் திட்டாக இல்லாமல் சீராக இருக்கும்.