Published:Updated:

`ஜம்ப்சூட், இடையில் `சாஷ்', பிரின்டட் மிடி..!’ - இந்திய விசிட்டில் மெலனியா ட்ரம்ப்பின் மிடுக்கு

மெலனியா ட்ரம்ப்
மெலனியா ட்ரம்ப்

மெலனியாவின் ஜம்ப்சூட் பலரின் மீம்களுக்குப் பயன்படுத்தப்பட்டாலும், இந்த உடையை வடிவமைக்க, நியூயார்க்கின் முன்னணி ஆடை வடிவமைப்பாளர்களான நிகோலஸ் கெய்ட்டோ மற்றும் ஹெர்வ் பியரி எடுத்த முயற்சிகள் பல.

கடந்த இரண்டு நாள்களாக ஊடகக் கண்கள் முழுவதும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் இந்திய வருகையில்தான் இருந்தன. ட்ரம்ப்புடன் அவரின் மனைவி மெலனியா, மகள் இவாங்கா மற்றும் மருமகன் ஜாரட் குஷர் ஆகியோரும் வந்திருக்கிறார்கள்.

 ட்ரம்ப்
ட்ரம்ப்

பிரமாண்ட வரவேற்பு, மோடியுடனான சந்திப்பு, தடபுடல் விருந்து எனப் பரபரப்பாக நகர்ந்துகொண்டிருக்கும் வேளையில், இவர்கள் உடுத்தியிருக்கும் ஆடைகளைப் பற்றியும் நெட்டிசன்கள் பேச மறக்கவில்லை.

நேவி புளூ சூட், மஞ்சள் நிற டை அணிந்து பெர்ஃபெக்ட் ஃபார்மல் லுக்கில் குஜராத்தில் வந்திறங்கினார் டொனால்டு ட்ரம்ப்.

 ட்ரம்ப்
ட்ரம்ப்

வெள்ளை நிற கிரேப் மெட்டீரியலில் வடிவமைக்கப்பட்ட ஜம்ப்சூட் அணிந்து, இடையைச் சுற்றி பச்சை மற்றும் தங்க புரொகேட் `சாஷ் (Sash)' அணிந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் முன்னாள் ஃபேஷன் மாடலும் அமெரிக்காவின் இந்நாள் முதல் பெண்மணியுமான மெலனியா ட்ரம்ப். இந்த சாஷ், 18-ம் நூற்றாண்டின் வின்டேஜ் டிசைன் என்பது குறிப்பிடத்தக்கது.

மெலனியாவின் ஜம்ப்சூட் பலரின் மீம்களுக்குப் பயன்படுத்தப்பட்டாலும், இந்த உடையை வடிவமைக்க, நியூயார்க்கின் முன்னணி ஆடை வடிவமைப்பாளர்களான நிகோலஸ் கெய்ட்டோ மற்றும் ஹெர்வ் பியரி எடுத்த முயற்சிகள் பல.

 ட்ரம்ப்
ட்ரம்ப்

`பாரிஸில் பழங்கால ஆவண சேகரிப்பாளர்கள் மற்றும் என் நண்பர்கள் மூலம் நான் கண்டறிந்த இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகால இந்திய ஜவுளி ஆவணங்களிலிருந்துதான் இந்த சாஷ் தயாரிக்கப்பட்டுள்ளது. பச்சை வண்ணப் பட்டு மற்றும் தங்க உலோக நூலால் ஆனது இது. இதன் பார்டர் அழகிய வின்டேஜ் தோற்றம் தரும் என்பதால் இதைத் தயார் செய்தது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது' என்று இன்ஸ்ட்டாகிராமில் பதிவு செய்திருந்தார் வடிவமைப்பாளர் பியரி.

`ட்ரம்ப் - மோடி சந்திப்பு!'- இரு நாட்டின் பொருளாதார எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகுமா?

இன்று ராஷ்ட்ரபதி பவன் சென்று இந்தியக் குடியரசுத் தலைவரைச் சந்தித்தபோது, காலர் பொருத்திய பிரின்டட் மிடி டிரெஸ் அணிந்து மிகவும் மிடுக்காகத் தோன்றினார் மெலனியா.

அடுத்த கட்டுரைக்கு