Published:Updated:

ஜென்டில்மென்... இந்த 5 பேன்ட் உங்ககிட்ட இருந்தா, நீங்க எப்பவும் ஹீரோதான்!

ஆண்களின் வார்ட்ரோபில் நிச்சயம் இருக்கவேண்டிய உடைகள் பற்றிச் சொல்கிறார், சென்னையில் உள்ள COAXcouture நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் மாடல் மொஹமத் இத்ரிஸ் கான்.

ஐந்தே பேன்ட்... அசத்தல் ஃபேஷன் கைடு.
ஐந்தே பேன்ட்... அசத்தல் ஃபேஷன் கைடு.

வார்ட்ரோபை ரெஃப்ரஷ் பண்ணுங்க!

முதலில் உங்க வார்ட்ரோபில் இருக்கும் உடைகளை, ரெகுலராக யூஸ் செய்து கொண்டிருக்கும் உடைகள், அதிகம் உபயோகப்படுத்தாமல் வைத்திருக்கும் உடைகள், மற்றும் இனி உபயோகப்படுத்த முடியாத உடைகள் எனத் தனித்தனியாகப் பிரித்தெடுங்கள். அதில் தேவையில்லாமல் இருக்கும் உடைகளை உடனடியாக டிஸ்போஸ் செய்துவிடுங்கள்.

தினசரி உபயோகத்துக்கான ஃபார்மல், கேஷுவல் மற்றும் விழாக்கால உடைகள் என்று உங்க வார்ட்ரோபை மூன்று பகுதிகளாகப் பிரித்துக்கொள்ளுங்கள்.

உங்கள் வாட்ரோபில் கர்சீஃப், இன்னர்வேர், பெல்ட், வாலட், பெர்ஃப்யூம், கூலர்ஸ், கேப் போன்ற பொருள்களுக்கு என ஒரு சிறு பகுதியை ஒதுக்கினால், அவசரத்துக்குத் தேடும் நிலை ஏற்படாது. அதுமட்டுமல்லாமல் இவற்றின் ஆயுட்காலம் முடிந்ததும் புதிது வாங்கவேண்டும் என உங்கள் மைண்டில் நோட்டிஃபிகேஷனும் வரும்.

டேப்பர்டு ட்ரெளஸர்கள்!

அலுவலகம் மற்றும் கல்லூரிக்கு அணியக்கூடிய ரெகுலர் டேப்பர்டு ட்ரெளஸர்களுக்கு (Tapered Trousers) உங்கள் வார்ட்ரோபில் முக்கிய இடம் கொடுங்கள்.

டேப்பர்டு ட்ரெளஸர் என்பது நீங்கள் தினசரி உபயோகிக்கும் ஃபார்மல் பேன்ட்டுகள்தான். ஆனால், இது இடுப்புப் பகுதியில் சற்று லூஸாக ஆரம்பித்து கால்களின் ஆங்க்கிள் நோக்கிச் செல்லச் செல்ல ஃபிட்டாக இருக்கும்.

உங்கள் வார்ட்ரோபில் நிச்சயம் இருக்கவேண்டிய 5 டேப்பர்டு ட்ரெளஸர்களின் நிறங்களைத் தெரிந்துகொள்ள வேண்டுமா?

டேப்பர்டு ட்ரெளஸர்களை ஃபார்மல் லுக்குக்கு மட்டுமல்லாமல் செமி ஃபார்மல், கேஷுவல் என விதவிதமான ஸ்டைல்களிலும் அணிந்து கலக்கலாம்.

இந்த 5 பேன்ட்டுகளுக்கும் மேட்ச்சிங்காக பகல் மற்றும் இரவு வேளைகளுக்கு அணியவேண்டிய சட்டை நிறங்கள் மற்றும் ஃபார்மல், செமி ஃபார்மல், கேஷுவல் தோற்றத்துக்கு எவையெல்லாம் பொருந்தும் என்பதற்கான ஃபேஷன் கைடு இதோ...

கிரே 

மரூன்

நேவி ப்ளூ

பேஜ் கலர்

பிளாக் கலர்