Published:Updated:

டியர் ஃபேஷன் ஃப்ரீக்ஸ்..!- 2020 `மெட் காலா’ தீம் என்ன தெரியுமா? #MetGala

விதவிதமான தீம்கள், வித்தியாசமான தோற்றம் என வலம் வரப்போகும் பிரபலங்களில் அனைவரையும் கவரப்போகிறவர் யார்? 2020-ம் ஆண்டு மெட் காலா... எகிறும் எதிர்பார்ப்பு

பிரபலங்கள் மத்தியில் 2020-ம் வருடத்துக்கான மெட் காலா நிகழ்ச்சி ஃபீவர் இப்போதே ஆரம்பித்துவிட்டது. இந்த வருடம் மே மாதம் நடைபெற்ற மெட் காலா நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் உடை நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளாக இருந்தது.

பிரியங்கா சோப்ரா
பிரியங்கா சோப்ரா
harpersbazaar.com

'கேம்ப்: நோட்ஸ் ஆன் ஃபேஷன்' (Camp: Notes On Fashion) எனும் தலைப்பின் கீழ் செயற்கைத்தனமான மிகைப்படுத்தப்பட்ட அலங்காரத்தில் பங்கேற்ற பிரியங்கா சோப்ராவின் சிகை அலங்காரத்தை நடிகர் யோகிபாபுவுடன் ஒப்பிட்டு மீம்ஸ் போடுமளவுக்கு ட்ரோல் செய்தனர்.

இந்நிகழ்ச்சி ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு தீமின் கீழ் நடைபெறும். அந்தவகையில், 'நடக்கவிருக்கும் 2020-ம் ஆண்டு மெட் காலா நிகழ்ச்சிக்கான தீம் என்னவாக இருக்கும்' என ஃபேஷன் ஃப்ரீக்ஸ் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

மெட் காலா
மெட் காலா
indiatvnews.com

இந்நிலையில், கடந்த வாரம் 2020-ம் ஆண்டு மெட் காலாவுக்கான தீம் அறிவிக்கப்பட்டது. வரும் மே மாதம் முதல் திங்களில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிக்கான இந்த தீம் பிரபலங்கள் மற்றும் ஃபேஷன் ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பைக் கூட்டியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிகழ்ச்சியை நடத்தும் நியூயார்க்கின் மெட்ரோபாலிடன் மியூசியம் ஆஃப் ஆர்ட் (Metropolition Museum of Art) 2020-ம் ஆண்டில் தனது 150-வது ஆண்டுவிழாவைக் கொண்டாடவிருக்கிறது. இதன் அடிப்படையில் வரும் 2020-ம் ஆண்டுக்கான மெட் காலா நிகழ்ச்சிக்கான தீம் 'About Time: Fashion and Duration' என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த அறிவிப்பு வந்தவுடன் நெட்டிசன்கள் இது குறித்த ட்வீட்களை பதிவேற்றத் தொடங்கிவிட்டனர். ஃபேஷனுக்கும் காலத்துக்குமான தொடர்பைக் குறிக்கும் இந்தத் தலைப்பின் கீழ், 1870 களின் ஃபேஷன் முதல் 19 மற்றும் 20-ம் நூற்றாண்டுகளின் ஃபேஷன் மற்றும் இப்போது ட்ரெண்டில் உள்ள ஃபேஷன்வரை பிரபலங்கள் எவ்வாறு உடைகளை வடிவமைக்கப்போகிறார்கள் என பெரும் ஆவல் எழுந்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு