Published:Updated:

5,000 வாடிக்கையாளர்கள், ஆர்வலர்களின் போராட்டம்... சர்ச்சைக்குள்ளான லண்டன் ஃபேஷன் வீக்!

சரியான முறையில் இவர்களுக்குப் பதிலளிக்காமல் LFW நடைபெற்றதால், தொடக்க நாளிலேயே கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்படி பல்வேறு சர்ச்சைகளுக்கிடையே இன்றுடன் நிறைவேற உள்ளது, லண்டன் ஃபேஷன் வீக்.

London Fashion Week
London Fashion Week

உலகெங்கிலும் இருக்கும் முன்னணி ஆடை வடிவமைப்பாளர்கள், தங்களின் படைப்புகளை மாடல்களுக்கு அணிவித்து, 'ராம்ப் வாக்' மூலம் காட்சிப்படுத்தும் மிகப் பெரிய ஃபேஷன் ஷோவான லண்டன் ஃபேஷன் வீக், கடந்த 13-ம் தேதி தொடங்கி இன்றுடன் (17.09.19) நிறைவடைகிறது. இந்த LFW-ல் தற்போதுவரை 5,000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். மேலும், இந்த ஐந்து நாள்களில், நூறு மில்லியன் பவுண்டுக்கும் அதிகமான ஆர்டர்களைப் பெற்றிருக்கிறது LFW.

LFW 2019
LFW 2019

ஆடை வடிவமைப்பாளர்கள், தங்களின் புதிய ஆடை கலெக்ஷனை கோடைக்காலம் மற்றும் குளிர்கால பாகமாகப் பிரித்து ஃபேஷன் ஷோ மூலம் வெளியிடுவார்கள். அந்த வகையில், தற்போது 2020-ம் ஆண்டின் கோடைக்கால ஆடை கலெக்ஷனை வெளியிட்டுள்ளது LFW. இதைத் தொடர்ந்து நியூயார்க், மிலன், பாரிஸ் என ஏராளமான ஃபேஷன் ஷோக்கள் வரிசையாக நடைபெற உள்ளன.

பிரபல 'Spicy Girls' ஆங்கில பாப் இசைக் குழுவில் ஒருவரான விக்டோரியா பெக்கம், தன் முதல் ஆடை கலெக்ஷனை வெளியிட்டு, இந்த LFW 2020 ஃபேஷன் ஷோவைத் தொடங்கிவைத்துள்ளார். 1970-களின் டாப் ஃபேஷனான பெரிய காலர் உடைய சட்டை மற்றும் ஜாக்கெட், ரஃபுல்ஸ் (Ruffles), ஹால்டர் நெக், ஃப்ளோரால் உள்ளிட்ட பேட்டன்கள் மற்றும் மஞ்சள், பச்சை, ஊதா, கறுப்பு உள்ளிட்ட நிறங்களை, 2020-ன் கோடைக்கால கலெக்ஷனுக்காகத் தேர்ந்தெடுத்திருந்தார் விக்டோரியா. மேலும், மார்கரெட் ஹோவெல் (Margaret Howell), பர்பேரி, கிரிஸ்டோஃபர் கேன் உள்ளிட்ட பல பிரபல ஆடை வடிவமைப்பாளர்கள், தங்களின் புதிய ஆடை கலெக்ஷனை வெளியிட்டுள்ளனர்.

Victoria Bekham and family
Victoria Bekham and family
பயணத்தின்போதும் பளிச் லுக்... அழகான சருமத்துக்கு அவசிய டிப்ஸ்!

நிகழ்ச்சிக்கு முன்னதாக, தற்போதைய சுற்றுச்சூழலில் ஃபேஷன் துறை ஏற்படுத்தும் மோசமான தாக்கத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி, Extinction Rebellion எனும் காலநிலை ஆர்வலர் குழுவைச் சேர்ந்த (climate activist group), சுமார் 30 ஆர்ப்பாட்டக்காரர்கள், வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். வடிவமைப்பாளர்கள், தாங்கள் வடிவமைத்த ஆடைகளை வெளியிடும் இந்த ஐந்து நாள் நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு லண்டன் ஃபேஷன் வீக் அமைப்பாளர்களுக்கு ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருந்தது, இந்த ஆர்வலர் குழு. ஆனால், சரியான முறையில் இவர்களுக்கு பதிலளிக்காமல் LFW நடைபெற்றதால், தொடக்க நாளிலேயே கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்படி பல்வேறு சர்ச்சைகளுக்கிடையே இன்றுடன் நிறைவேற உள்ளது, லண்டன் ஃபேஷன் வீக்.