அண்மையில் மொரீஷியஸில் நடைபெற்ற ‘மிஸஸ் இந்தியா யுனிவர்ஸ் எர்த் 2019 - பிளாட்டினம்’ போட்டியின் டைட்டில் வின்னர் கோயம்புத்தூரைச் சேர்ந்த சோனாலி பிரதீப். தமிழ் சினிமாக்களின் அழகான அம்மா கேரக்டர்களுக்கு சோனாலியைப் பரிந்துரைக்கலாம்!

மோட்டிவேஷனல் ஸ்பீக்கர், கல்லூரிகளில் கம்யூனிகேஷன் மற்றும் சாஃப்ட் ஸ்கில் பயிற்சியாளர், பிசினஸ் வுமன் என சோனாலிக்கு வேறு முகங்களும் உண்டு.

``எல்லாமே கடந்த சில வருடங்களில் வந்து சேர்ந்த அடையாளங்கள். கல்யாணம், குழந்தை பிறப்புக்குப் பிறகு காணாமல் போயிடற எத்தனையோ பெண்களில் நானும் ஒருத்தியா இருந்திருக்க வேண்டியவள். என் தலையெழுத்தை மாத்தி, தன்னம்பிக்கையை வளர்த்த என் ஃபிட்னஸுக்குத்தான் நன்றி சொல்லணும்...’’ - புதிராகப் பேச ஆரம்பிக்கிற சோனாலி, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். ஆனாலும், வார்த்தைகளில் தமிழ் தாண்டவ மாடுகிறது.

``பிறந்து வளர்ந்தது, படிச்சதெல்லாம் கோயம்புத்தூர்ல. 21 வயசுல கல்யாணம் ஆயிடுச்சு. முதல் டெலிவரி சிசேரியன். கல்யாணமானபோது 60 கிலோவா இருந்த நான், டெலிவரிக்குப் பிறகு 98 கிலோவானேன். என் குழந்தையைக்கூடப் பார்த்துக்க முடியாமல் கிட்டத்தட்ட ஒரு பேஷன்ட் மாதிரி ஆயிட்டேன். ‘குழந்தை பிறந்தபிறகு இப்படி வெயிட் போடறது சகஜம்தான்'னு நிறைய பேர் சொன்னாங்க... நானும் அதை நம்பினேன். கர்ப்பமா இருந்தபோதும் குழந்தை பிறந்தபோதும் நெய்யும் வெண்ணெயுமா எனக்கு வீட்டுல சாப்பாடு கொடுத்துப் பார்த்துக் கிட்டாங்க. எடை கூடினதன் விளைவா மூட்டுவலியும் முதுகுவலியுமா ஏகப்பட்ட பிரச்னைகள் வந்தன.

‘எல்லாத்துக்கும் ஒரே தீர்வு வெயிட்டைக் குறைக்கிறதுதான்’னு டாக்டர் சொல்லிட்டாங்க. ஆனாலும், அதுக்கான வழிகள் தெரியலை. ஒரு கட்டத்துல எனக்குத் தெரிஞ்சவங்களும் பார்க்கிறவங்களும் என்னைக் கிண்டல் பண்ணவும் தவிர்க்கவும் ஆரம்பிச்சாங்க. என் தோற்றமே ரொம்ப அசிங்கமா மாறிடுச்சு. காலேஜ்ல படிக்கிறபோது எல்லாரும் என்னை ‘நீ ரொம்ப அழகா இருக்கே’ன்னு சொல்லியே கேட்ட எனக்கு, திடீர்னு எல்லாமே தலைகீழா மாறின மாதிரி இருந்தது. டபுள் சின்னும் பெரிய வயிறுமா என்னையே எனக்குப் பிடிக்கலை. கணவரோடு வெளியில போவதைத் தவிர்க்க ஆரம்பிச்சேன். மொத்தத்துல என் தன்னம்பிக்கை முழுக்க காலியாயிடுச்சு...’’ - பருமனானவர்கள் சந்திக்கிற அனைத்துப் பரிகாசங்களையும் அனுபவித்த வலியும் வேதனையும் சோனாலியின் பேச்சில்.

நீங்க ஆரோக்கியமா இருந்தால்தான் சந்தோஷமா இருக்க முடியும். நீங்க சந்தோஷமா இருந்தால்தான் குடும்பத்தாரை சந்தோஷமா வெச்சுக்க முடியும்!

``இந்த மனநிலையைத் தொடரவிடறது நல்லதில்லைன்னு தோணுச்சு. எப்படியாவது வெயிட்டைக் குறைச்சே ஆகணும்னு முடிவு பண்ணினேன். என்னால எக்சர்சைஸ் எதுவும் பண்ண முடியலை. முதல் வேலையா உணவுக் கட்டுப்பாட்டை முயற்சி பண்ணினேன். அரிசி, கோதுமைன்னு கார்போஹைட்ரேட் உணவுகளை முற்றிலும் தவிர்த்துட்டு பழங்கள், ஜூஸ்னு ஆரோக்கியமான உணவுகளுக்கு மாறினேன். மெள்ள மெள்ள ஸும்பா, வாக்கிங், ஜாகிங்னு வொர்க் அவுட்டையும் ஆரம்பிச்சேன். எட்டு மாசத்துல ஐடியல் வெயிட்டுக்குத் திரும்பினேன். என்னைக் கிண்டல் பண்ணினவங்களும் விமர்சனம் பண்ணினவங்களும் வெயிட் குறைந்த என் தோற்றத்தைப் பார்த்து ஆச்சர்யப்பட்டாங்க. அது எனக்கு உத்வேகத்தைக் கொடுத்தது’’ - இலக்கை எட்டிய பிறகும் எந்த சமரசத்தையும் செய்துகொள்ளவில்லை சோனாலி.

‘`வெயிட்டைக் குறைக்கிறதைவிட, அதைத் தக்கவெச்சுக்கிறதுதான் மிகப் பெரிய சவால். நிறைய பேர் பண்ற தவறு என்ன தெரியுமா? மணிக்கணக்கா ஜிம்முல வொர்க் அவுட் பண்ணிட்டு வருவாங்க. வழக்கமா சாப்பிடுற மூன்று இட்லிக்குப் பதில் அன்னிக்குக் கூடுதலா ஒரு இட்லி உள்ளே போகும். ‘அதான் வொர்க் அவுட் பண்ணிட்டோமே’ன்னு அலட்சியமா இருப்பாங்க.

இந்த மனநிலை வெயிட்டைக் குறைக்க உதவாது. எடைக் குறைப்பைப் பொறுத்தவரைக்கும் 70 சதவிகிதம் உணவுக்கட்டுப்பாடும் 30 சதவிகிதம் மட்டுமே வொர்க் அவுட்டும் உதவும்’’ - எடைக்குறைப்பில் பலரும் இடறும் இடத்தைச் சுட்டிக்காட்டுகிறவர், இந்தப் பயணத்தை வெற்றிகரமாக்கச் சில யோசனைகளையும் பகிர்கிறார்.

``ஆரோக்கியமான உணவுப்பழக்கம் என்பது வெயிட்டைக் குறைக்க நினைக்கிறவங்களுக்கு மட்டும்தான்னு நினைக்காம, அதைக் குடும்பத்தில் உள்ள அனைவருக்குமான வழக்கமா மாத்தலாம். குழந்தைங்களுக்கு சிப்ஸ், பர்கர் கொடுப்பதற்குப் பதில் வேகவெச்ச சுண்டல், புரொக்கோலி சாலட், பழங்கள் கொடுக்கலாம்.

வொர்க் அவுட் பண்ணும்போது குழந்தைகளையும் அதில் ஈடுபடுத்தலாம். குழந்தைகளை வொர்க் அவுட் பண்ணச் சொல்றது கஷ்டம். நான் அதையே விளையாட்டா மாத்திப் பண்ணவைக்கிறேன். எங்க வீட்டில் லிஃப்ட் கிடையாது மாடிப்படிகளில் நானும் என் குழந்தைகளும் ஏறி இறங்கி விளையாடுவோம். யார் முதலிலும் வேகமாகவும் ஏறி, இறங்கறாங்கன்னு போட்டி வெச்சுப்போம். இது அவங்களுக்கும் எனக்கும் எக்சர்சைஸா மட்டுமல்லாம, எங்களுக்குள்ள அந்நியோன்யத்தையும் வளர்க்குது.

டாக்டர் அல்லது ஃபிட்னஸ் டிரெய்னரின் ஆலோசனையோடு வொர்க் அவுட் செய்யறது நல்லது. உங்க உடல்வாகு, உங்களுடைய தேவை, வெயிட்டைக் குறைப்பதில் உங்க இலக்கு... இப்படிப் பல விஷயங்களைப் பொறுத்து வொர்க் அவுட்டைத் தேர்ந்தெடுக்கணும். தவறான வொர்க் அவுட் உங்க முக அழகையும் மாத்திடும், கவனம்’’ - அலர்ட் செய்பவர், தன் அழகிப் போட்டிப் பயணம் பற்றிய கதைக்குள் வருகிறார்.

``2015-ம் வருஷம்... ‘நீதான் இப்போ வெயிட்டைக் குறைச்சு ஸ்லிம்மா அழகா, இளமையா மாறிட்டியே... நீ ஏன் அழகிப் போட்டியில் கலந்துக்கக்கூடாதுன்னு என் ஃபிரெண்ட்ஸ் சிலர் ஆரம்பிச்சு வெச்சாங்க. எனக்கு அதுபத்தி எந்த ஐடியாவும் இல்ல. மேடையேற ஒரு வாய்ப்பு கிடைக்குது. அங்கே என் பாசிட்டிவிட்டியைக் காட்ட முடியுமேன்னு முதன்முறையா சிட்டி லெவல் அழகிப் போட்டியில் கலந்துக்கிட்டேன். அது தந்த தன்னம்பிக்கையில், 2017-ல் மிஸஸ் இந்தியா போட்டியில் கலந்துக்கிட்டு `மிஸஸ் இந்தியா தமிழ்நாடு' டைட்டிலை ஜெயிச்சேன்.

அந்த மேடைகளும் அங்கே எனக்குக் கிடைச்ச அனுபவங்களும் அடுத்த லெவலுக்குப் போக யோசிக்க வைத்தன. அதன் தொடர்ச்சியாக ‘மிஸஸ் இந்தியா யுனிவர்ஸ் எர்த் 2019’ போட்டியில கலந்துக்கிட்டேன். இந்த விஷயங்கள் எல்லாம் நடக்குறதுக்கு முன்னாடி வரைக்கும் நான் ரொம்ப கூச்ச சுபாவத்துடன், அதிகம் பேசாதவளா இருந்திருக்கேன். இன்று நான் ஒரு மோட்டி வேஷனல் ஸ்பீக்கர். பல மேடைகளில் என் அனுபவங்களைப் பேசறேன். எல்லாத்துக்கும் காரணம் என் வெயிட் லாஸ்.

வெயிட் லாஸ்னு சாதாரணமா சொல்லிடலாம். ஆனா, அதுக்கு எக்கச்சக்கமான பவர் தேவை. அந்த பவர் ஒவ்வொரு பெண்ணிடமும் இருக்கு. வெயிட்டைக் குறைக்க நினைக்கிற பெண்களுக்குத் தன்னம்பிக்கை அதிகரிப்பதை நிச்சயம் ஃபீல் பண்ணுவாங்க. அந்தத் தன்னம்பிக்கை அவங்களுக்குப் பல வெற்றிகளைத் தேடிக் கொடுக்கும்.

சரியான எடையில் இருக்கிறது உங்களை ஆரோக்கியமாக வைக்கும். நீங்க ஆரோக்கியமா இருந்தால்தான் சந்தோஷமா இருக்க முடியும். நீங்க சந்தோஷமா இருந்தால்தான் குடும்பத்தாரை சந்தோஷமா வெச்சுக்க முடியும்’’ - எடைக்குறைப்பின் மகத்துவம் சொல்பவருக்கு கல்வித்துறையில் நாட்டம் அதிகம்.

``நிறைய மார்க் வாங்கினவங்களா இருப்பாங்க. நாலு பேருக்கு முன்னாடி அறிமுகப்படுத்திக்கச் சொன்னா பேசவே தயங்குவாங்க. அந்தத் தயக்கத்தையும் கூச்சத்தையும் தகர்க்கறதுக்கான பயிற்சிகளைக் கொடுக்கறேன். எல்லாப் பெண்களுக்கும் கல்வி கிடைக்கணும். அதில் என் பங்களிப்பும் இருக்கணும்னு ஆசைப்படறேன்’’ - நிஜமான லட்சியம் சொல்கிறவர் அதற்கான முயற்சிகளையும் அமைதியாகச் செய்துகொண்டிருக்கிறார்.