விருந்தோம்பலுக்குப் பெயர்பெற்றவர்கள் நாம். விதம்விதமாகச் சமைப்பதற்கு இணையானது விருந்தோம்பலின்போதான மேஜை அலங்காரம். பெரிய ஹோட்டல்களில் ஸ்பூன், ஃபோர்க், கத்தி போன்றவற்றை அழகான நாப்கினில் மடித்து வைத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். உங்கள் வீட்டு பார்ட்டிக்கும் அதேபோல செய்ய, நாப்கின் ஃபோல்டிங் கற்றுத் தருகிறேன்....
தேவையானவை:
விருப்பமான நிறங்களில் சிறிய டர்க்கி டவல்கள், ஸ்பூன்கள், கத்திகள், ஃபோர்க்குகள்
ஸ்டெப் 1: டவலை முழுவதுமாக விரிக்கவும்.
ஸ்டெப் 2: இடது பக்கத் துணியை வலது பக்கமாக பாதியாக மடிக்கவும்.
ஸ்டெப் 3: மடித்த துணியை வலது மேல் பக்கம், நான்கு மடிப்புகள் வரும்படி திருப்ப வேண்டும்.
ஸ்டெப் 4: வலது கை மேல் இருக்கும் முதல் துணியை முக்கோண வடிவில் கீழ் நோக்கி மடிக்கவும்.
ஸ்டெப் 5: பின் இரண்டாவது, மூன்றாவது துணியையும் கீழ் நோக்கி முக்கோண வடிவில் மடிக்க வேண்டும்.
ஸ்டெப் 6: மூன்று முக்கோண மடிப்புகள் இருக்கும் மேல் பாகத்தை முக்கோணம் கீழ் வருமாறு திருப்பிப்போடவும்.
ஸ்டெப் 7: திருப்பிய துணியின் வலது பக்கத்தை பாதி மடித்து பின் இடது பக்கத்தையும் மடிக்க வேண்டும். மடித்த துணியை மேல் பக்கமாகத் திருப்பினால் அழகான நாப்கின் ஃபோல்டிங் ரெடி.
ஸ்டெப் 8: மூன்று மடிப்புகளில் ஸ்பூன்கள், ஃபோர்க்குகள், கத்திகள் வைத்து விருந்து பரிமாறும் மேஜையை அலங்கரிக்கலாம்.