Election bannerElection banner
Published:Updated:

நியூடு கலர், நேக்கட் ஸ்டைல்... இந்திய நடிகைகளின் இன்டர்நேஷனல் ஃபேஷன்!

கோலிவுட்
கோலிவுட் ( instagram )

நம்ம ஊர்ப் படங்கள் எல்லாம் இன்டர்நேஷனல் தரத்துக்கு வளர்ந்ததுக்கு அப்புறம் கோலிவுட் நடிகைகளின் ஃபேஷன் சென்ஸும் இன்டர்நேஷனல் தரத்துக்கு வளர வேண்டியது அவசியம்.

தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா, சமந்தா, தமன்னா என வட இந்திய நடிகைகளும் தென்னிந்திய நடிகைகளும் போட்டி போட்டுக்கொண்டு நியூடு கலர் மற்றும் நேக்கட் ஸ்டைல் ஆடைகளை அணிந்து அசத்துகிறார்கள்.

நசியா சையத்
நசியா சையத்
Facebook

ரசிகர்களைத் திரும்பிப்பார்க்க வைக்கும் நடிகைகள், இப்போது திரும்பத் திரும்பப் பார்க்கத் தூண்டும் விதத்தில் உடையணிந்து வலம்வருகிறார்கள். செலிப்ரிட்டி டிசைனர் நசியா சையத், நடிகைகளின் ஃபேஷன் அப்டேட்கள் குறித்தும், அது அதே வேகத்தில் சமான்யப் பெண்களிடம் பரவும் வேகம் பற்றியும் பேசினார்.

``லைட் ஷேட் உடைகள் ஹாலிவுட், பாலிவுட்னு ட்ரெண்டாகி, இப்போது கோலிவுட்டிலும் ஹிட்டடித்து வருகிறது. முன்பெல்லாம் இந்தி நடிகைகளிடமிருந்து மேக்கப், ஹேர் ஸ்டைல், டிரெஸ்ஸிங் ஸ்டைலை தமிழ் நடிகைகள் ஃபாலோ செய்ய ஆரம்பித்து, அப்படியே சாமான்யப் பெண்களிடமும் அவை ட்ரெண்டாகிப் பரவும். ஆனால், இப்போதெல்லாம் நடிகைகளின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலமாகவே ட்ரெண்ட் இன்ஸ்டன்ட்டா பரவிடுது. இது வரவேற்கவேண்டிய விஷயம்தான்.

பிரியங்கா சோப்ரா
பிரியங்கா சோப்ரா
instagram

நடிகைகள் எல்லாருமே சிவப்பு, மெஜந்தா, பச்சை, நீலம்னு பிரைட் கலர் உடையிலிருந்து ஸ்கின் டோன் உடைகள், நேக்டு ஸ்டைல் உடைகள்னு அணிய ஆரம்பிச்சதுக்கு முக்கியக் காரணம், சோஷியல் மீடியாதான். இன்டர்நேஷனல் ஃபேஷன் ட்ரெண்டை டிஜிட்டல் மீடியத்தின் உதவியால் உடனுக்குடன் அப்டேட் செய்துகொள்ளும் வசதி வந்துவிட்டதால அந்த விஷயத்தில் நடிகைகள் பாலிவுட், கோலிவுட்னு வித்தியாசம் இல்லாம இருக்காங்க.

நம்ம ஊர்ப் படங்கள் எல்லாம் இன்டர்நேஷனல் தரத்துக்கு வளர்ந்ததுக்கு அப்புறம் நடிகைகளின் ஃபேஷன் சென்ஸும் இன்டர்நேஷனல் தரத்துக்கு வளர வேண்டியது அவசியம். இன்னொரு பக்கம், இந்த ட்ரெண்ட் சாமானியப் பெண்களிடமும் பரவி இருக்கிறது. இப்போதெல்லாம் முகூர்த்தத்துக்குக்கூட பிரைட் கலர் புடவைகளைத் தவிர்த்து பேஸ்டல் ஷேடுகளில் காஞ்சிபுரம் பட்டுப்புடவைகள் வந்துவிட்டன. அதிலும் தங்க நிற ஜரிகையைத் தவிர்த்து, சில்வர் நிற ஜரிகை ட்ரெண்டாகி இருக்கிறது.

சில்வர் ஜரிகை புடவை
சில்வர் ஜரிகை புடவை
instagram

நடிகைகள் அணியும் கிளாமரான ட்ரெண்டி உடைகளை, தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு ஏத்த மாதிரி கஸ்டமைஸ் செய்துதரச் சொல்லி அணியும் பெண்கள் அதிகரிச்சுட்டாங்க. இந்த மாதிரி ஸ்கின் டோன் உடைகள் சரும நிறத்தைக் கூட்டிக் காட்டுவதுடன், சருமத்தில் ஒருவித பளபளப்பையும் கூட்டிக்காட்டும். இதனுடன் சிம்பிளான நகைகள் அல்லது ஸ்டேட்மென்ட் நகைகள் அணியலாம். குறிப்பாக டைமண்ட் போன்ற கிறிஸ்டல்கள் அல்லது டிரெஸ் கலருக்கு கான்ட்ராஸ்ட்டாக ரூபி ரெட், எமரால்டு கிரீன்னு கற்கள் பதித்த நகைகள் எனக் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளுக்குப் பொருத்தமாக அணியலாம்" என்று ஃபேஷன் அப்டேட் குறித்துப் பேசியவர், நடிகைகளில் யாருக்கு எந்த ஸ்டைல் உடைகள் பொருத்தமாக இருக்கும் எனக் கூறுகிறார்.

நடிகைகளின் நியூட் மற்றும் நேக்கட் ஸ்டைல் அல்லது அவர்களுக்குப் பொருத்தமான ஸ்டைலில் உங்களுக்குப் பிடித்த ஸ்டைலுக்கு ஓட்டளியுங்களேன்...

சமந்தா
சமந்தா
ரகுல் ப்ரீத்
ரகுல் ப்ரீத்
ஹன்சிகா
ஹன்சிகா
தமன்னா
தமன்னா
அதிதி ராவ்
அதிதி ராவ்
ஜான்வி கபூர்
ஜான்வி கபூர்
திபீகா படுகோன்
திபீகா படுகோன்
பிரியங்கா சோப்ரா
பிரியங்கா சோப்ரா
சோனாக்ஷி சின்ஹா
சோனாக்ஷி சின்ஹா
சோனம் கபூர்
சோனம் கபூர்
அலியா பட்
அலியா பட்
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு