Published:Updated:

ஆடை பாதி, ஆளுமை பாதி... ஃபேஷன் டிசைனரின் வித்தியாச போட்டோஷூட்

கவிதா சச்சி
பிரீமியம் ஸ்டோரி
News
கவிதா சச்சி

படங்கள்: கேமரா செந்தில்; மேக்கப்: ஜீவிதா

கவிதா சச்சி
கவிதா சச்சி

‘ஆடை பாதி, ஆளுமை பாதி'... திருச்சி, முசிறியைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் கவிதா சச்சி, பல்துறை பிரபலங்களை வைத்துச் செய்துள்ள போட்டோ ஷூட்டின் கான் செப்ட் இது. “பிரபலங்களின் குணாதிசயங் களை ஆடையின் நிறம் மற்றும் ஆடையின் வேலைப்பாடுகள் மூலம் வெளிபடுத்துவதுதான் கான்செப்ட். இந்த ஷூட்டிற்கு பத்து பிரபலங்களை அணுகினேன். அவர்கள் ஒவ்வொருவரின் பிளவுஸும் ஒவ்வொரு தனித்துவம் கொண்டது’’ என்கிற கவிதா, அது குறித்துப் பகிர்ந்துகொள்கிறார்.

ஆடை பாதி, ஆளுமை பாதி... ஃபேஷன் டிசைனரின் வித்தியாச போட்டோஷூட்

நடிகை விஜி சந்திரசேகர்

மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் ஆளுமை என்பதைப் பிரதிபலிக்கும்படி, போல்டான டிரெடிஷனல் புடவை, கான்ட்ராஸ்ட்டான பிளவுஸ் தேர்வு செய்தேன். நீங்கள் ஃபியூஷன் லுக் பிரியைகள் எனில் புடவையை மைல்டு நிறத்திலும். பிளவுஸை டிரெடி ஷனல் நிறத்திலும் தேர்வு செய்யலாம்.

ஆடை பாதி, ஆளுமை பாதி... ஃபேஷன் டிசைனரின் வித்தியாச போட்டோஷூட்

பாடகி சைந்தவி

மைல்டு நிற புடவை, கான்ட்ராஸ்ட் பிளவுஸை சைந்தவிக்கு தேர்வுசெய்தேன். பிளவுஸில் வடிவமைக்கப் பட்ட ஃப்ளோரல் டிசைன் கொஞ்சம் டிரெண்டி லுக்கை கொடுத்தது. மிக்ஸ் மேட்ச் செய்பவர்கள் புடவையின் நிறத்தில் நூல் வேலைப்பாடுகள் செய்யாமல், கோல்டன் நிறத்தை மட்டும் பயன்படுத்தலாம்.

ஆடை பாதி, ஆளுமை பாதி... ஃபேஷன் டிசைனரின் வித்தியாச போட்டோஷூட்

மருத்துவர் ரம்யா - தொழிலதிபர் செளமியா

ரம்யா - செளமியா இருவரும் சகோதரிகள். இதயநோய் சிறப்பு மருத்துவரான ரம்யாவின் ஆளுமையைப் பிரதிபலிக்கும் வண்ணம், பீட்டர் பேன் நெக் டிசைன் செய்தேன். தொழிலதிபர் செளமியாவுக்கு வித்தியாசமான சாரி டிரேப்பிங் செய்தேன். இருவருமே ஒல்லியாக இருந்ததால், பிளவுஸின் கைகளில் முத்துகளால் ஆன டிசைன்களை வடிவமைத்தேன். பொதுவாக ஒல்லி பெல்லி பெண்கள் ஸ்லீவ் முழுவதும் டிசைன் இருப்பது போன்று பிளவுஸை வடிவமைக்கலாம்.

ஆடை பாதி, ஆளுமை பாதி... ஃபேஷன் டிசைனரின் வித்தியாச போட்டோஷூட்

பாடகி அருணா சாய்ராம்

அருணா சாய்ராம் அம்மா அணிந்துள்ள பிளவுஸில் ‘ஸ ப ஸ' என்ற எழுத்துகள் `Sa Pa Sa' என்று ஆங்கிலத்தில் இருக்கும். இந்த எழுத்துகள் அவர் கற்றுக்கொண்ட முதல் ஸ்வரமாம். அதனால் அதை ஹைலைட் செய்தேன். திருமண பிளவுஸ்களில் மண மக்களின் பெயர்கள் அல்லது முதல் எழுத்துகளை வடிவமைப்பது லேட்டஸ்ட் டிரெண்ட். புடவையின் நிறத்தில் நூல் வேலைப்பாடுகள் செய்து, ஜர்தோஸி ஸ்டைலில் எழுத்துகளை வடிவமைக்கலாம்.

ஆடை பாதி, ஆளுமை பாதி... ஃபேஷன் டிசைனரின் வித்தியாச போட்டோஷூட்

தொழிலதிபர் அர்ச்சனா கல்பாத்தி

தொழிலதிபர் அர்ச்சனாவின் நம்பிக்கை மிகுந்த தோற்றத்தைப் பிரதிபலிக்கும் வகையில் சிம்பிளான டிசைனில் புடவையும், அதே நிற பிளவுஸை போல்டான ஜர்தோஸி, நூல் வேலைப்பாடுகளில் செய்தேன். புடவையில் உள்ள டிசைனின் நிறத்தில், பிளவுஸ் டிசைன் செய்யும்போது, நீட் லுக் கிடைக்கும்.

ஆடை பாதி, ஆளுமை பாதி... ஃபேஷன் டிசைனரின் வித்தியாச போட்டோஷூட்

நடிகை கே.ஆர்.விஜயா

கே.ஆர்.விஜயா அம்மா, எவர்கிரீன் நாயகி. அதைப் பிரதிபலிக்கும்படி வெளிர் பச்சைநிற புடவையில் சிம்பிள் லுக் ஆன்டிக் நிற ஜர்தோஸியை பயன்படுத்தினேன். கிராண்டாக இல்லாமல் டிரெண்டிற்கு ஏற்ற சிம்பிள் லுக்கில் பிளவுஸ் வேண்டும் என்பவர்கள் இது போன்ற ஆன்டிக் நிற ஜர்தோஸியைத் தேர்வு செய்யலாம்.

ஆடை பாதி, ஆளுமை பாதி... ஃபேஷன் டிசைனரின் வித்தியாச போட்டோஷூட்

கவிதா ராமு ஐ.ஏ.எஸ்

கவிதா ராமு ஐ.ஏ.எஸ் வித்தியாசமான சாரி டிரேப்பிங் குக்கு சம்மதித்தார். மைல்டு நிற புடவை, புடவையின் பார்டர் நிறத்தில் பிளவுஸ் என்று முடிவுசெய்தேன். சிம்பிள் லுக் வேண்டும் எனில் மேட் ஃபினிஷ் கொண்ட ஸ்டோன்கள் அல்லது ஆன்டிக் லுக் கொண்ட ஸ்டோன்கள், ஜர்தோஸியைத் தேர்வு செய்யலாம்.

ஆடை பாதி, ஆளுமை பாதி... ஃபேஷன் டிசைனரின் வித்தியாச போட்டோஷூட்

கதை சொல்லி வித்யா

கதை சொல்லியாக புது முயற்சிகள் செய்யும் வித்யாவுக்கு மைல்டு ஷேடு புடவை, கான்ட்ராஸ்ட் பிளவுஸை வடிவமைத்தேன். ஜர்தோஸி, பிரெஞ்சு நாட் டிசைன் செய்யப்பட்ட பிளவுஸை டிசைன் செய்தேன். டிரெண்டி லுக் வேண்டும் என்பவர்கள் நியான், சோபர், டின்ட், பேஸ்டல் நிறங்களைத் தேர்வு செய்யலாம்.

ஆடை பாதி, ஆளுமை பாதி... ஃபேஷன் டிசைனரின் வித்தியாச போட்டோஷூட்

கதக் டான்ஸர் ஜிக்யாசா கிரி

புடவையையும், பிளவுஸையும் ஒரே நிறத்தில் வடிவமைத்தேன். போட் நெக், ஷார்ட் ஸ்லீவ் என வடிவமைக்கப்பட்ட பிளவுஸில் ஜர்தோஸி , முத்து வேலைப்பாடுகள் சிறப்பானவை. புடவையும், பிளவுஸும் ஒரே நிறத்தில் அணியும் வழக்கம் உள்ளவர்கள், டபுள் ஷேட் பிளவுஸை மிக்ஸ் மேட்ச் செய்யலாம்.