Published:Updated:

தாமதமாக வந்த பிரியங்கா சோப்ரா-நிக்; காத்திருந்த `வொண்டர் வுமன்’ #DiorFashionShow

பாரிஸில் நடைபெற்ற 'டியோர்' ஃபேஷன் ஷோவில் 'Wonder Woman' நாயகி கல் கடோட்டுடன் பிரியங்கா சோப்ரா இணைந்து எடுத்தப் புகைப்படம் வைரல் லிஸ்டில் இணைந்துள்ளது.

பிரியங்கா சோப்ரா
பிரியங்கா சோப்ரா

டந்த சில வாரங்களாக சமூக வலைதளங்களின் டிரெண்டிங் குயினாக பிரியங்கா சோப்ரா வலம் வந்துகொண்டிருக்கிறார். அந்த வரிசையில், திங்களன்று பாரிஸில் நடைபெற்ற 'டியோர்' ஃபேஷன் ஷோவில் 'Wonder Woman' நாயகி கல் கடோட்டுடன் இணைந்து எடுத்த புகைப்படம் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு, வைரல் லிஸ்டில் இணைந்துள்ளது.

Priyanka Chopra with Nick
Priyanka Chopra with Nick

பிரபல 'டியோர்' பிராண்டின் 2019-ம் ஆண்டின் இலையுதிர் கால கலெக்ஷன் அறிமுக விழா கடந்த வாரம் பாரிசில் கோலாகலமாகத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக, திங்களன்று மாபெரும் ஃபேஷன் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக, தன் உறவினர் ஜோ ஜோனஸ் மற்றும் சோஃபி டர்னர் திருமண நிகழ்வை முடித்துவிட்டு, பாரிசிற்கு விரைந்தனர் பிரியங்கா-நிக் தம்பதியினர். உலகளவில் பல பிரபலங்கள் பங்குபெறும் இந்நிகழ்ச்சிக்கு, பிரியங்கா-நிக் ஜோடி ஒரு மணிநேரம் தாமதமாக வந்தனர். இவர்களுக்காகப் பல பிரபலங்கள் காத்துக்கொண்டிருந்தனர். எனினும், அவர்களின் வருகை அரங்கைப் பரபரப்பாக்கியது.

முதல் வரிசையில், பல பிரபலங்களுடன் அமர்ந்திருந்த பிரியங்காவிற்கு, ஏராளமான வாழ்த்துகள் குவிந்தன. இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக வந்திருந்த 'Wonder Woman' புகழ் கல் கடோட், பிரியங்காவோடு இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம், ரசிகர்களால் கொண்டாடப்பட்டுவருகிறது. 'Keyhole slit' கழுத்து வடிவமைப்பில் எமரால்டு பச்சை நிற கவுனில் மிடுக்கான தோற்றத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் பிரியங்கா. கறுப்பு, சாம்பல், ரஸ்ட் நிறங்களிலான ஃபேன்ஸி கவுனில் மிகவும் எளிமையாகவே வந்திருந்தார் கல் கடோட். சாம்பல் நிற பெரிய ரோஜாப்பூ அப்ளிக் பதித்த Bomber ஜாக்கெட் அணிந்து பிரியங்காவிற்கு 'டஃப்' கொடுத்தார் நிக்.

Gal Gadot and Priyanka Chopra
Gal Gadot and Priyanka Chopra

ஃபேஷன் நிகழ்ச்சியை முடித்துவிட்டு தன் குடும்பத்தினரோடு இரவு உணவு அருந்தச் சென்ற சோப்ரா-ஜோனஸ் குடும்பப் புகைப்படங்களும் வைரலாகிவருகின்றன.