Published:Updated:

மாடலிங் துறையில் என்ட்ரி கொடுத்த சாரா டெண்டுல்கர்; வெளியான முதல் விளம்பரம்!

சாரா டெண்டுல்கர்
News
சாரா டெண்டுல்கர்

இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் சாராவை 16 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். இதனால் சாரா மாடலிங் துறையில் நுழைவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் சாராவிடமிருந்து எந்த வித தகவலும் இல்லாமல் இருந்தது.

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் கிரிக்கெட் துறையில் நுழைந்துவிட்ட நிலையில், டெண்டுல்கர் மகள் சாரா மும்பை அம்பானி இன்டர்நேஷனல் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு லண்டனில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். தற்போது புதிய திருப்பமாக சாரா மாடலிங் துறையில் நுழைந்துள்ளார். ஏற்கெனவே சாரா ஃபேஷன் துறையில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். சமூக வலைதளத்தில் அதிகம் ஆக்டிவ்வாக இருக்கும் அவர், அடிக்கடி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தனது மாடலிங் ஆசையை வெளிப்படுத்தி வருகிறார்.

குடும்பத்தினருடன் சாரா
குடும்பத்தினருடன் சாரா
Instagram Photo: @saratendulkar

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் சாராவை 16 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். இதனால் சாரா மாடலிங் துறையில் நுழைவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் சாராவிடமிருந்து எந்த வித தகவலும் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில்தான் சாரா, தான் ஒரு விளம்பரத்தில் மாடலாக நடித்த வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் சாரா மாடலிங் துறையில் தான் நுழைந்துவிட்டதை உறுதிப்படுத்தி இருக்கிறார். சாராவுடன் நடிகைகள் பனிதா சந்து, தனியா ஷெராஃப் ஆகியோரும் அந்த விளம்பரத்தில் நடித்துள்ளனர்.

சாரா டெண்டுல்கர்
சாரா டெண்டுல்கர்

ஆடை நிறுவனம் ஒன்றுக்கு சாரா மாடலிங் செய்துள்ளார். மாடலிங்கை தொடர்ந்து விரைவில் சினிமாவிற்கு அவர் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சச்சின் மகன் கிரிக்கெட்டில் பெரிய அளவில் சாதிக்க முடியாத நிலையில் சாரா தனது மாடலிங் துறையில் சாதிப்பாரா என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.