Published:Updated:

ஹேமமாலினி முதல் நயன்தாரா வரை... பிரபலங்களுக்கு சேலை கட்டிவிடும் சரஸ்வதி

நான் புடவை கட்டிவிடுறேன் மேடம்னு சொன்னதும் ஆச்சர்யமா பார்த்தாங்க

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி

“வாழ்க்கையில் நம் உழைப்பை யும் நம்பிக்கையையும் தவிர எதுவும் நிலையில்லை. உழைப்புதான் என் அடையாளம்” - உற்சாக மாகப் பேசுகிறார் சரஸ்வதி. ஹேமமாலினி தொடங்கி, நயன்தாரா வரை பல பிரபலங்களுக் கும் சேலை கட்டிவிடும் சாரி டிரேப்பிஸ்ட்.

“சொந்த ஊர் ஆந்திரா. சின்ன வயசிலேயே சென்னைல செட்டில் ஆகிட்டோம். குடும்ப சூழல் காரணமாகப் படிக்க முடியாமப் போச்சு. நான் சிங்கிள் மதர். ஒரு பெண் தனியா குழந்தைகளையும் கரியரையும் சமாளிச்சு, பொறுப்புகளைச் சுமக்குற வலியை வார்த்தைகள்ல சொல்லிப் புரிய வைக்க முடியாது. என் அண்ணன், செலிபிரிட்டிகளுக்கு காஸ்டியூமரா இருந்தார். அவர் மூலமாதான் எனக்கு மீடியா அறிமுகம் ஆச்சு. அண்ணன் மூலமா விளம்பர மாடல்கள், நடிகைகளுக்கு புடவை கட்டிவிடற வேலையைப் பண்ணிட்டு இருந்தேன். நான் மீடியாவுக்கு வந்த காலத்துல சாரி டிரேப்பிஸ்ட்டுனு ஒரு துறையே கிடையாது. புடவை கட்டிவிட வந்திருக்கேன்னு சொன்னா, `அதுக்கெல்லாம்கூட ஆள் இருக்கா'னு ஆச்சர்யமா கேட்பாங்க.

ஹேமமாலினி முதல் நயன்தாரா வரை... பிரபலங்களுக்கு சேலை கட்டிவிடும் சரஸ்வதி

நிறைய விளம்பரங்கள்ல சாரி டிரேப்பிஸ்டா வொர்க் பண்ண ஆரம்பிச்சேன். விளம்பர ஷூட்ல ஒரு நாளைக்கு 50 புடவையெல்லாம் தனி ஒருத்தியா கட்டிவிட்டிருக்கேன். இப்போ நினைச்சா அதெல்லாம் ஆச்சர்யமா இருக்கு'' என்ற சரஸ்வதி பிரபலங்களுக்கு நெருக்கமான அனுபவம் பற்றிப் பேச ஆரம்பித்தார்.

“ஒரு விளம்பரத்துல ஹேமமாலினி மேடத் துக்குப் புடவை கட்டிவிட வாய்ப்பு கிடைச்சுது. அவங்க ரூமுக்குள் போயி, ‘நான் புடவை கட்டிவிடுறேன் மேடம்’னு சொன்னதும் ஆச்சர்யமா பார்த்தாங்க. ‘நானே கட்டிப் பேன்’னு சொன்னாங்க. ‘ஒரு முறை நான் கட்டிவிடுறேன், பிடிக்குதானு பாருங்க’னு சொல்லி, கொஞ்சம் நடுக்கத்தோடு புடவை கட்டிவிட்டேன். கண் ணாடியில் பார்த்துட்டு ‘ரொம்ப அழகா கட்டிருக் கீங்க’னு சொன்னாங்க.

20 வருஷங்கள்ல ஸ்ரீதேவி, நதியா, மீனா, சினேகா, சிம்ரன், காஜல் அகர்வால், நயன்தாரா, சமந்தா, தமன்னானு பல செலிபிரிட்டிகளுடனும் வேலை பார்த்துட்டேன். விளம்பர ஷூட்ல கமிட் ஆகும்போதே சரஸ்வதி அந்த டேட்ல இருக்காங் களானு கேட்குற செலி பிரிட்டீஸும் இருக்காங்க.

 சமந்தாவுடன்....
சமந்தாவுடன்....
 கீர்த்தி சுரேஷுடன்...
கீர்த்தி சுரேஷுடன்...

என் ரெண்டு மகள் களும் இப்போ சாரி டிரேப்பிஸ்ட்டா கரியரை தொடங்கியிருக்காங்க. நிறைய பெண்களுக்கு

சாரி டிரேப்பிஸ்ட்டாக நான் பாதை அமைச்சுக் கொடுத்துருக்கேன்னு நினைக்கும்போது சந்தோ ஷமா இருக்கு. உழைப்பை நம்புறவங்களுக்கு வெற்றி நிச்சயம் சாத்தியமாகும்”

- தானே சாட்சி என விடைபெற்றார் சரஸ்வதி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு