Published:Updated:

ரப்பர், லெதர், ஸ்னீக்கர்ஸ்... உங்களுக்கான காலணிகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

ஷூ ( pexels )

நினைத்த நேரத்துக்கு ஷூவைக் கழற்றி மாட்ட சிரமப்படுபவர்களுக்கு கைகொடுப்பதுதான் லோஃபர்ஸ் வகை ஷூ

ரப்பர், லெதர், ஸ்னீக்கர்ஸ்... உங்களுக்கான காலணிகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

நினைத்த நேரத்துக்கு ஷூவைக் கழற்றி மாட்ட சிரமப்படுபவர்களுக்கு கைகொடுப்பதுதான் லோஃபர்ஸ் வகை ஷூ

Published:Updated:
ஷூ ( pexels )

``அவசரமா கிளம்பும்போதுதானா இந்தச் செருப்பு பிஞ்சுபோகணும்?" நாம் எல்லாருக்குமே இப்படி ஒரு தர்மசங்கடமான அனுபவம் வாய்த்திருக்கும். பண்டிகை காலத்தில் மட்டுமே பர்சேஸ் செய்த காலம் போய், ஆஃபர் கிடைக்கிறதே என நினைத்த நேரத்துக்கு ஆன்லைனில் பர்சேஸ் செய்யும் கூட்டம் பெருகிவிட்டது.

ஷூ
ஷூ
freepik

ஒவ்வோர் உடைக்கும் பொருத்தமாக அணிவதற்கு ஏற்ற, விதவிதமான காலணிகளையும் ஆன்லைனிலேயே வாங்கிக் குவிக்கிறார்கள். உடைகளைப் பாதுகாக்கும் பீரோ, வார்ட்ரோப் போன்று காலணிகளை வைப்பதற்கான ஷூ ரேக்குகளும், கப்போர்டுகளும் வந்துவிட்டன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஷூ ரேக்
ஷூ ரேக்
pexels

காலணிகளை வாங்கும்போது விலையையும் தரத்தையும் பார்த்து வாங்குவதுபோல், பருவ நிலைக்கு ஏற்றவையா என்றும் பார்த்து வாங்க வேண்டியது அவசியம்.

ஒவ்வொரு சீஸனுக்கு ஏற்ற காலணிகள் எவை எனப் பரிந்துரைக்கிறார் சென்னை வேப்பேரியில் உள்ள காலணி ஏற்றுமதி நிறுவனத்தின் மேலாளர் சுலைமான்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கோடைக்காலம்

சம்மர் வந்துவிட்டாலே இலவச இணைப்பாக வியர்வைத் தொல்லையும் வந்துவிடும். அதனாலதான் உடம்பை இறுக்கிப் பிடிக்காமல் காற்றோட்டத்தை அளிக்கக்கூடிய காட்டன் உடைகளை அணிகிறோம்.

சீஸனுக்கு ஏற்ற காலணி அவசியம்
சீஸனுக்கு ஏற்ற காலணி அவசியம்
pexels

அதுபோல் பாதங்களும் வியர்க்காமல், காற்றோட்டமாக, செளகர்யமாக இருப்பதற்கான செருப்பு வகைகள் எவை தெரியுமா?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

1. எஸ்படிரில்ஸ்

எஸ்படிரில்ஸ் (Espadrilles) காலணிகள் எஸ்பார்டொ (Esparto) எனப்படும் புல்வகையைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. காலணியின் அடிப்பகுதி ஜூட் மெட்டீரியலிலும் மேல்பகுதி காட்டன் அல்லது கேன்வாஸ் மெட்டீரியலிலும் இருப்பதால், இதை ஒரு முழுமையான எக்கோ ஃபிரெண்ட்லி பேக்கேஜ் எனலாம்.

எஸ்படிரில்ஸ்
எஸ்படிரில்ஸ்
pexels

பாதங்களில் நல்ல காற்றோட்டம் கிடைப்பதாலும், வியர்வையை உறிஞ்சும் தன்மை இருப்பதாலும் கோடைக்காலத்தில் உங்கள் பாதங்களுக்கான பெஸ்ட் ஃபிரெண்டு இந்த எக்ஸ்படிரில்ஸ் காலணிகள்தான். ஃபிளாட், ஹீல்ஸ், வெட்ஜஸ், ஷூ போன்ற பல மாடல்களில், ஆண் பெண் இருபாலருக்கும் கிடைக்கின்றன

2. ஸ்லைட்ஸ்

இந்த ஸ்லைட்ஸ் (Slides) காலணிகளில், குதிகால் மற்றும் கால் விரல் பகுதிகள் இரண்டுமே மூடப்படாமல் இருப்பதால், பாதங்களுக்கு நல்ல காற்றோட்டம் கிடைக்கும். வியர்க்கும் வாய்ப்பு இல்லை. ஆனால், பாதத்தின் மேல்பகுதி சருமம் வெயில் பட்டுக் கருத்துப்போக (சன் டேன்) வாய்ப்பு இருக்கிறது.

ஸ்லைட்ஸ்
ஸ்லைட்ஸ்
freepik

ஃப்ளிப் ஃப்ளாப் காலணியில் இருப்பதைப் போல் 'Y' வடிவ ஸ்ட்ராப் இல்லாததால், பாதங்கள் வெயிலில் கருத்துப்போகாமல் இருக்க கால்களுக்கு சன்ஸ்க்ரீன் லோஷன் தடவி சாக்ஸ் அணிந்தபின் இக்காலணியை அணியலாம். தற்போது டிரெண்டாக இருக்கும் இக்காலணி, மிக எளிமையான ஃபிளாட் மாடல் முதல் ஃபேஷனான ஹீல்ஸ், வெட்ஜஸ் போன்ற மாடல்களிலும் கிடைக்கின்றன.

3. ஸ்னீக்கர்ஸ்

கேன்வாஸ் துணி மற்றும் ஹெம்ப் துணியில் தயாரிக்கப்படும் ஸ்னீக்கர்ஸ், பாதங்களை முழுக்க முழுக்க மூடி இருந்தாலும் காற்றோட்டத்தை அளித்து வியர்க்காமல் காக்கும். அதுமட்டுமல்லாமல், வெயில் மற்றும் தூசுகளிலிருந்து கால்களைப் பாதுகாக்கும்.

கேன்வாஸ் ஸ்னீக்கர்ஸ்
கேன்வாஸ் ஸ்னீக்கர்ஸ்
pexels

பாதங்களைக் குளிர்ச்சியாக வைத்திருக்கக்கூடிய இந்தக் காலணிகள் எடை குறைவாக இருக்கும். டீன் வயதினரிடம் டிரெண்டாக இருக்கும் இந்த கேன்வாஸ் ஸ்னீக்கர்ஸ் பல வண்ணங்களில் கிடைக்கிறது.

குளிர் காலம்

கோடைக்காலத்தில் ஏசியைப் போட்டுக்கொண்டு படுத்தாலும் ஏசி குளிருக்கு இதமாக கால்களை மட்டும் போர்வையால் போர்த்திக்கொண்டு, சுகமாக உறங்கும் பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கும்.

குளிர் காலம்
குளிர் காலம்
pexels

அவ்வளவு சென்சிடிவ்வான பாதங்களைக் குளிர்காலத்தில் பாதுகாக்கும் காலணி வகைகள்...

1. லெதர் லோஃபர்

நடுங்கும் குளிரிலும் பாதங்களைக் கதகதப்பாக வைத்திருக்கும் குணம் லெதர் ஷூவுக்கு உண்டு. ஆனால், சிலருக்கு சாக்ஸ் போடுவது, லேஸ் கட்டுவது என ஷூ போடுவதற்கென நேரம் ஒதுக்க சிரமப்படுவார்கள். நினைத்த நேரத்துக்கு ஷூவைக் கழற்றி மாட்ட சிரமப்படுபவர்களுக்கு கைகொடுப்பதுதான் லோஃபர்ஸ் வகை ஷூக்கள்.

லோஃபர்ஸ்
லோஃபர்ஸ்
pexels

சாக்ஸுடன் அல்லது சாக்ஸ் இல்லாமலும் லோஃபர் ஷூவை அணியலாம். நீண்ட நாள்கள் உழைப்பது, பாதத்தின் அளவுக்கு ஏற்ப சுருங்கி விரியும் தன்மை, குளிரிலிருந்து பாதங்களைக் காத்து இதமளிப்பது போன்றவை லெதர் லோஃபர் ஷூக்களினால் கிடைக்கும் பலன்கள்.

2. ஸ்னீக்கர்ஸ்

கோடைக்காலத்தில் கேன்வாஸ் ஸ்னீக்கர்ஸ் கைகொடுப்பதுபோல், குளிர்காலத்துக்கு சிந்தெடிக் லெதர் ஸ்னீக்கர்ஸ் கைகொடுக்கும். லெதரைப் போலவே இதுவும் பாதங்களுக்கு கதகதப்பைக் கொடுக்கும்.

ஸ்னீக்கர்ஸ்
ஸ்னீக்கர்ஸ்
pexels

நடப்பதற்கும் ஓடுவதற்கும் மிக செளகர்யமாக இருக்கும். நீண்ட நேரம் அணிந்திருந்தாலும் பாதங்களுக்கு அழுத்தத்தைக் கொடுக்காது. சிந்தெடிக் ஸ்னீக்கர்ஸை சாக்ஸுடனும் சாக்ஸ் இல்லாமலும் அணியலாம். நீடித்து உழைப்பதுடன் லெதர் ஷூவைவிட குறைந்த விலையில் கிடைக்கும்.

3. பல்லெரினா

சாட்டின், லேஸ், கேன்வாஸ் என பலவிதமான மெட்டீரியலில் தயாரிக்கப்படும் பல்லெரினா காலணிகளில், லெதர் அல்லது சிந்தெடிக் லெதர் பல்லெரினா காலணிகள்தான் குளிகாலத்தில் பாதங்களைக் கதகதப்பாக வைத்திருக்கும். குதிகால் மற்றும் கால்விரல்களை மூடி இருக்கும் இந்த ஷூவை சாக்ஸுடன் அணிந்தால் இன்னும் கதகதப்பு கூடும்.

பல்லெரினா
பல்லெரினா

`பாலெட்' நடனத்துக்குப் பயன்படுத்தப்படும் இந்த மாடல் காலணிகளை இப்போது தினசரி உபயோகத்துக்கும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். அணிவதற்கு மிக செளகர்யமாகவும், ஸ்டைலாகவும் இருப்பதனால், இதற்கு ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.

மழைக்காலம்

மழைக்காலத்தில் குளிர், ஈரப்பதம் என அனைத்திலிருந்தும் நம் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதுபோல், நமது காலணிகளையும் பாதுகாப்பது அவசியம். இல்லையெனில் அவை சேதமடைவதுடன், அவற்றில் பூஞ்சை வரும் வாய்ப்பும் இருக்கிறது.

மழைக்கால காலணி பராமரிப்பு
மழைக்கால காலணி பராமரிப்பு
pexels

மழைக்காலத்துக்கேற்ற சில காலணிகள்...

1. ஆங்கிள் லென்த் பூட்ஸ்

கணுக்கால் வரையிலான பூட்ஸ் இருந்தாலும், அது தினசரி பயன்பாட்டுக்கு செளகர்யமாக இருக்காது. ஆனால், ஆங்கிள் லென்த் பூட்ஸ் பயன்படுத்த சுலபமானதாக இருக்கும். லெதர் அல்லது சிந்தெடிக் பூட்ஸ் இரண்டுமே வாட்டர் ப்ரூஃப் என்பதால் மழையில் நனைந்தாலும் காலணிகளுக்கு எந்தச் சேதாரமும் இருக்காது.

ஆங்கிள் லென்த் பூட்ஸ்
ஆங்கிள் லென்த் பூட்ஸ்
pexels

ஆனால், மழையில் நனைந்த பூட்ஸைத் துடைத்து ஹேண்ட் டிரையரின் மூலம் ஈரப்பதத்தைப் போக்கி உலரவைப்பது அவசியம்.

2. வாட்டர் ப்ரூஃப் பல்லெரினா

ரப்பர் மெட்டீரியலில் வளையும் தன்மையுடன் கிடைக்கக்கூடிய பல்லெரினா ஷூக்கள் மழைக்காலத்துக்கான பெஸ்ட் சாய்ஸ். வாட்டர் ப்ரூஃப் பல்லெரினா ஷூக்களை சுத்தப்படுத்துவது சுலபம். வெறும் காட்டன் துணியால் துடைத்தாலே போதும்.

பல்லெரினா
பல்லெரினா
pixels

ட்ரான்ஸ்பரென்ட் மெட்டீரியலில் கல்லூரிப் பெண்களைக் கவரும் வகையில் உள்ள இந்த ஷூ மழைக்காலத்திலும் `ஹாட்' டிரெண்டாக இருக்கும்.

3. க்ளாக்ஸ் சேண்டல்

ரப்பர் மெட்டீரியலில் கிடைக்கக்கூடிய க்ளாக்ஸ் மாடல் காலணியையும் காட்டன் துணியால் துடைத்துச் சுத்தப்படுத்தினாலே போதும். ஆண் பெண் என இருபாலருக்குமான காலணி வகை இது.

க்ளாக்ஸ்
க்ளாக்ஸ்
pixels

நனைந்தாலும், சேதமடையும் வாய்ப்பில்லாத இக்காலணிகள் கால்களின் விரல்பகுதி முழுவதும் மூடியும், பின்பகுதி திறந்தும், சில மாடல்களில் கிரிப்புக்காக ரப்பர் ஸ்ட்ராப்புடனும் வருகிறது. வருடக்கணக்கில் உழைப்பது இதன் கூடுதல் சிறப்பு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism