Published:Updated:

கோலா கரடி நெயில் ஆர்ட்... ஆஸ்திரேலியா தீவிபத்துக்கான செரீனாவின் விழிப்புணர்வு முயற்சி!

செரீனா
News
செரீனா

ஆஸ்திரேலியா ஓப்பன் டென்னிஸ் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் செரீனா வென்றிருந்தாலும், மக்களின் கவனம் என்னவோ அவருடைய கைவிரல்களுக்குத்தான் சென்றது. காரணம்...

ஹர்திக் ஹேர்ஸ்டைல் முதல் ரொனால்டோ சூட் ஸ்டைல்வரை ஒவ்வொரு விளையாட்டு வீரரும் விளையாட்டில் மட்டுமல்ல உடுத்தும் உடை முதல் காலணிவரை அனைத்திலும் தனக்கென்ற தனிப்பட்ட ஸ்டைலை உருவாக்கியுள்ளனர். அதில் எப்போதும் முதலிடத்தில் இருப்பவர் செரீனா வில்லியம்ஸ்.

Serena Williams
Serena Williams

விளையாட்டின்போது 'கேட் சூட்', 'கேப் ஸ்டைல் சூட் ', மெட் காலா போன்ற நிகழ்வுகளில் வித்தியாச உடை, காலனி, ஹேர்ஸ்டைல் என எப்போதும் தனக்கான ஃபேஷனை புதுப்பித்துக்கொண்டே இருப்பவர் செரீனா.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அந்த வரிசையில் சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓப்பன் டென்னிஸ் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் செரீனா வென்றிருந்தாலும், மக்களின் கவனம் என்னவோ அவருடைய கைவிரல்களுக்குத்தான் சென்றது. காரணம், அவருடைய நகங்களில் வரையப்பட்டிருந்த ஓவியம்.

Kola Bear Nail art
Kola Bear Nail art

ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்போர்ன் பார்க்கில் நடைபெற்ற இந்தப் போட்டிக்கு, அழகிய 'கோலா கரடியின்' உருவத்தை தன்னுடைய நகங்களில் வரைந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் செரீனா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட தீவிபத்தில் குறைந்தது 100 கோடி விலங்குகள் அழிந்திருக்கக்கூடும். அதை நினைவுகூரும் விதமாகவே கோலா கரடியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் இந்த 'முன்னாள் நம்பர் ஒன்' டென்னிஸ் வீராங்கனை.

Serena Instagram Post
Serena Instagram Post

ஏற்கெனவே அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தீவிபத்திலிருந்து மீட்கப்பட்ட கோலா கரடியின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, அதன் பேரழிவு குறித்த தன்னுடைய வருத்தத்தைப் பதிவிட்டிருந்தார். மேலும், இந்தத் தீவிபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடை வழங்குமாறு தன்னுடைய ஆதரவாளர்களையும் வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து செரீனாவின் இந்த நெயில் ஆர்ட் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.