Published:Updated:

`என்னால் நிகர் செய்ய முடியாது; முயற்சி செய்கிறேன்!' - ட்விட்டரில் கலாய்த்த ஷாரூக் கான்

இந்த ஸ்பெஷல் தருணத்தில் க்ளிக்கிய புகைப்படங்கள்தான் தற்போதைய பாலிவுட்டின் வைரல்.

ஷாரூக் கான்
ஷாரூக் கான்

ஹீரோ என்பதைத் தாண்டி இயல்பாகவே நகைச்சுவை உணர்வுடைய ஷாரூக் கானுக்கு, வட இந்தியாவில் மட்டுமல்ல தென்னிந்தியாவிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். `ஜீரோ' திரைப்படத்துக்குப் பின் நீண்ட விடுமுறையிலிருக்கும் ஷாரூக், கடந்த வாரம் தன்னுடைய புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

ஷாரூக் கான், கரண் ஜோஹர்
ஷாரூக் கான், கரண் ஜோஹர்

அந்தப் புகைப்படத்தைவிட, ஷாரூக் அதற்குக் கொடுத்துள்ள கேப்ஷன் வைரலாகி வருகிறது.

கரண் ஜோஹரும் ஷாரூக்கும் திரைத்துறையில் ஒன்றாக வெற்றிகளைப் பதித்தவர்கள். ஆன்ஸ்க்ரீனில் மட்டுமல்ல ஆஃப் ஸ்க்ரீனிலும் அனைவரையும் ரசிக்க வைத்தவர்கள். இந்த நிலையில், கரண் பரிசளித்த ஸ்டைலிஷான 'The Dust of Gods' டெனிம் ஜாக்கெட் அணிந்திருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு,

'The Dust of Gods ஜாக்கெட் பரிசளித்ததற்குக் கரண் ஜோஹருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி. உங்களின் இந்த ஸ்டைலிஷ் ஃபேஷன் உணர்வை ஒருபோதும் என்னால் நிகர் செய்ய முடியாது. ஆனால், முயற்சி செய்கிறேன்' என தனக்கே உரித்தான நகைச்சுவை பாணியில் கரணின் ஃபேஷன் உணர்வைக் கலாய்த்து ட்வீட் செய்திருக்கிறார்.

Karan Johar's friends get together
Karan Johar's friends get together

இதற்குக் காரணம் அந்த ஜாக்கெட்டில் இரண்டு வெவ்வேறு வண்ண பாக்கெட்களும் `Dust' என பொரிக்கப்பட்டிருக்கும் வித்தியாசப் பேட்டர்னும்தான்.

`உங்களாலும் உதவ முடியும்!'- மனச்சோர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கரம் நீட்டும் தீபிகா படுகோன்

ஷாரூக்கின் இந்தப் பதிவுக்கு, "Hahahahaha! Bhai!" என்று பதிலளித்துள்ளார் கரண். மேலும், ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் மல்ஹோத்ரா, ஹ்ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி ஸூசானே கான் (Sussanne Khan), ஷாரூக் கான் மற்றும் அவரின் மனைவி கவுரி கான் உள்ளிட்ட சில நெருங்கிய நண்பர்களை அழைத்து விருந்தளித்துள்ளார் ஜோஹர். அந்தத் தருணத்தில் க்ளிக்கிய புகைப்படங்கள்தான் தற்போதைய பாலிவுட்டின் வைரல்.