பெண்களுக்கான ஷாப்பிங்கு களை ஈஸி அண்டு குயிக் ஷாப்பிங்காக மாற்ற ஆடை வடிவமைப்பாளர் நந்திதா தரும் ஷாப்பிங் டிப்ஸ்...

ஷாப்பிங் கிளம்பும்போதே என்ன கலர் டிரஸ் எடுக்கணும்னு பிளான் பண்ணாதீங்க. அப்படி ஷாப்பிங் போகும்போது, நீங்கள் மனதில் நினைத்த நிறத்தைத் தவிர மற்ற நிறங்கள் தனித்துவமாக இருந்தாலும்கூட அவை ஸ்பெஷலாக இருக்காது. மனதில் நினைச்ச கலர், டிசைன் கிடைக்காமல் திருப்தியில்லா ஷாப்பிங்காக மாறிவிடும். எனவே ஷாப்பிங் கிளம்பும்போது என்ன கலர் வாங்க வேண்டும் என்று யோசிக்காமல், எந்தக்கலர் வாங்கக் கூடாது என்பதை மட்டும் தீர்மானிச்சுட்டு ஷாப்பிங்கை என்ஜாய் பண்ணுங்க.

ரஃபில், ஃப்ளோயி போன்ற டிசைன்கள்தான் இப்போ பெண்களுக்கான லேட்டஸ்ட் டிரெண்ட். இப்போது இருக்கும் டிரெண்டுக்கு ஏற்ற மாதிரி நம்மை அப்டேட் பண்ணணும் என்பது அவசியம்தான். அதற்காக உங்கள் உடலமைப்புக்குப் பொருந்தாத ஆடைகளைத் தேர்வு செய்யாதீர்கள்.

ஒரு குறிப்பிட்ட அவுட்ஃபிட் டிரெண்டில் இருக்கிறது எனில், ஒரே பேட்டர்னில் நிறைய ஆடைகளை வாங்கிக் குவிக்காதீர்கள். அந்த டிரெண்ட் முடிந்த பிறகு, அந்த ஆடையை வெளியிடங்களுக்கு அணிய முடியாது என்பதால் ஆயிரங்களைக் கொட்டிக்கொடுத்து நீங்கள் தேர்வு செய்த ஆடை வார்ட்ரோப்புக்குள் முடங்கிவிடும். எனவே எவர்கிரீன் ஆடைகளைத் தேர்வுசெய்வது பெஸ்ட் சாய்ஸ்.

உங்களுடைய சாய்ஸ் சல்வார் எனில் காட்டன், சிந்தடிக் மெட்டீரியல்களைத் தேர்வு செய்யலாம். டிசைனர் ஆடைகள் எனில் புரோகேட் வகைத் துணிகளைத் தேர்வு செய்யுங்கள். புடவைப் பிரியை எனில் காட்டன் என்றால் போட் நெக் அல்லது ஹை நெக் வைத்து த்ரீ ஃபோர்த் ஸ்லீவ் என உங்களுடைய பிளவுஸை வடிவமைக்கலாம். டிசைனர் புடவை எனில் கோல்ட் ஷோல்டர், ஹாவ் ஷோல்டர், ரஃபீல் ஸ்லீவ் என ஸ்லீவ்களின் வெரைட்டி காட்டினால் டிரெண்டியாக இருக்கும்.

கேஷுவல் லுக் உங்களுடைய சாய்ஸ் எனில் பலாசோ பேன்ட்களுடன் டாப்களை மிக்ஸ் மேட்ச் செய்யுங்கள்.பண்டிகைகள் தவிர்த்து மற்ற நாள்களில் கிராண்டான ஆடைகளைப் பயன்படுத்த விரும்பாதவர்கள், அதிக தொகையை ஆடையில் செலவிட வேண்டாம். அதற்குப் பதிலாக, சிம்பிளான ஆடையைத் தேர்வுசெய்து யுனிக்கான அக்ஸசரீஸ்களை மேட்ச் செய்தால் சிம்பிளான லுக்கிலும் மாஸ் காட்டலாம்.

குறைந்த விலை என்பதற்காக, சில ஆடைகளை வாங்கத் தவிர்த்திருப்போம். ஆனால், துணி தரமாக இருக்கும்பட்சத்தில் குறைந்த விலையிலோ, சலுகை விலையிலோகூட துணிகளைத் தேர்வு செய்து, உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சில வேலைப்பாடுகள் செய்து ஆடைக்கு நியூ லுக் கொடுத்தால் நீங்கள்தான் டிரெண்ட் செட்டர்.

உங்கள் மனதுக்குப் பிடித்த ஆடைகளை ஒரு முறைக்கு இரு முறைகூட அணிந்துபார்த்து ஆடையைத் தேர்வு செய்யுங்கள். நீங்கள் வாங்கும் ஆடைகளுக்கு ஏற்ப அக்ஸசரீஸ்களையும் உடனே தேர்வு செய்துவிடுவது நல்லது. இதனால் ஆடையை எடுத்துக்கொண்டு இன்னொரு நாள் கடைகள் ஏறி இறங்க வேண்டிய அவசியம் இருக்காது.

ஆன்லைன் ஷாப்பிங்கில் நிறம் மற்றும் அளவுகள் மாறிவருவதற்கும் வாய்ப்பு இருப்பதால், பண்டிகையின்போது சரியான அளவில் ஆடையில்லாமல் வீண் டென்ஷன் ஏற்படும்.அதனால் ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்கள் பண்டிகைகளுக்கு 20 நாள்களுக்கு முன்னரே உங்களுடைய ஷாப்பிங்கை முடித்துவிடுவது நல்லது.

- படங்கள்: கிரண்