Published:Updated:

வெள்ளி... நகைகள், பாத்திரங்கள்... பராமரிப்பு முதல் ஆரோக்கியம் வரை!

வெள்ளி
பிரீமியம் ஸ்டோரி
வெள்ளி

80 கிராம் முதல் 18 கிலோ வரை, 4 இன்ச் முதல் 5 அடி வரை விதவிதமான வெள்ளிக் குத்து விளக்குகளை இனி நீங்கள் வாங்க முடியும்.

வெள்ளி... நகைகள், பாத்திரங்கள்... பராமரிப்பு முதல் ஆரோக்கியம் வரை!

80 கிராம் முதல் 18 கிலோ வரை, 4 இன்ச் முதல் 5 அடி வரை விதவிதமான வெள்ளிக் குத்து விளக்குகளை இனி நீங்கள் வாங்க முடியும்.

Published:Updated:
வெள்ளி
பிரீமியம் ஸ்டோரி
வெள்ளி

வெள்ளியில் நாம் விரும்பும் எந்த வடிவத்தையும் செய்ய முடியும் என்பதுதான் அதன் மிகப்பெரிய ப்ளஸ். ஆனால், பெரும்பாலும் நாம் காணக்கூடிய வெள்ளிப் பொருள்கள் என்னென்ன? கொலுசு, வெள்ளிக் காசுகள், வெள்ளிப் பாத்திரங்கள், ஜாதகக்கல் மோதிரங்கள், பூஜைப் பொருள்கள் மட்டும்தான். இன்றைக்கோ, வெள்ளியாலான பர்ஸ், வெள்ளித்தகடு வேயப்பட்ட மிக்ஸி, குழந்தைகள் விளையாட குட்டி வெள்ளி சைக்கிள், உலர்பழங்கள் போட்டு வைக்க சின்னச் சின்ன ரயில் பெட்டிகள், கிரிக்கெட் மட்டை, பந்து என்று பல்வேறு பொருள்களாக ஜொலிக்கும் வெள்ளி ‘வாவ்’ சொல்ல வைக்கிறது. மாஸ்க் முதல் மிக்ஸி வரை, டோர் ஹேண்டில் முதல் சீலிங் வரை அனைத்தையும் வெள்ளி யில் செய்து இனி வாங்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியுள்ள சென்னை, தி.நகரில் இயங்கிவரும் ‘சலானி ஹவுஸ் ஆஃப் சில்வர்’ சார்பாக வழங்கப்படும் வெள்ளி நகைகளின் தனித்துவம் மற்றும் பராமரிப்பு ஆலோ சனைகள் இந்த இணைப்பிதழில்..!

திருமண நிகழ்ச்சிகளில் வெள்ளி...

வட இந்தியாவில், திருமணப் பத்திரிகை கொடுப்பதை பெரிய சடங்காகச் சில குடும்பங்கள் செய்கின்றன. பத்திரிகையை வெள்ளியால் ஆன உருளைப்பெட்டியில் சுருட்டிவைத்துத் தருகின்றனர். பார்சி திருமணங்களில் வெள்ளித் தேங்காய் முதலிய வெள்ளிப் பொருள்கள் அடங்கிய வெள்ளித் தாம்பூல செட் சீராக வழங்கப்படுகிறது. மணமக்களின் பாதணிகள் முதல் வாட்ச், சீப்பு, கண்ணாடி முதலியவை அடங்கிய டிரஸ்ஸிங் செட் வரை வெள்ளியில் கிடைக்கின்றன. திருமண வைபவத்தில் தேவைப்படும் முக்காலி, அன்னக்கூடை, முறம், மணப்பெண்ணை நீராட் டும் சல்லடை என்று எல்லாமே இப்போது வெள்ளியில் வாங்க முடிகிறது.

வெள்ளி... நகைகள், பாத்திரங்கள்... பராமரிப்பு முதல் ஆரோக்கியம் வரை!

தங்கத்துக்கு மாற்றாக வெள்ளி!

`கோல்டு டிப் (Gold Dip)' அடங்கிய வெள்ளி நகைகள் அச்சு அசல் தங்கம் போலவே இருப்பதால், சுப நிகழ்ச்சிகளில் தலை முதல் பாதம் வரை தங்க ஆபரணங்கள் அணிய விரும்புபவர்கள், தங்களால் முடிந்தளவு தங்க நகைகள் வாங்கி விட்டு, அதே டிசைனில் பிற நகைகளை வெள்ளியில் தங்க முலாம் பூசி வாங்கலாம். ரெட் பாலிஷ், யெல்லோ பாலிஷ் மற்றும் ஆன்டிக் டிசைன்களிலும் வெள்ளி ஆபரணங்கள் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. தங்கத்தில் இருக்கும் அனைத்து நகைகளும் வெள்ளியில் கிடைக்கின்றன. அதனால் பட்ஜெட்டுக்குள், அழகிய வேலைப்பாடுகள் அடங்கிய ஆபரணங்கள் உங்கள் கைவசம்.

டெம்பிள் ஜுவல்லரியின் கம்பீரத்தில் வெள்ளி நகைகள் வேண்டும் என்பவர்கள் `ஆன்டிக் வெள்ளி' நகைகளை வாங்கலாம். வெள்ளியில் வெஸ்டர்ன் லுக் தேடுபவர்கள் கறுப்பு தோற்றத்தில் இருக்கும் `ஆக்ஸிடைஸ்டு' நகைகள் வாங்கலாம். ‘கல்யாணம்னாலே தங்க நகைகள்தான்’ என்றிருந்த காலம்போய் மக்களின் மனப்பான்மைகூட, கூறைப்பட்டுக்கு மேட்சாக கோல்டு பிளேட்டட் வெள்ளி நகைகளுக்கு மாறிவிட்டதென்றால், வெள்ளி இந்தத் தலை முறையினரால் எந்தளவுக்கு விரும்பப்படுகிறது என்பது புரிகிறதல்லவா?

வெள்ளி... நகைகள், பாத்திரங்கள்... பராமரிப்பு முதல் ஆரோக்கியம் வரை!

வெள்ளியில் பிளாட்டினம் லுக்!

‘பிளாட்டினம் லுக்’ நகை போட விரும்புபவர்களும் வெள்ளி ஆன்டிக் அல்லது வெள்ளி ஆக்ஸிடைஸ்டு நகை களைத் தேர்ந்தெடுக்கலாம். பேன்ட் - சட்டையில் ஆரம்பித்து புடவை வரைக்கும் இந்த நகைகள் பொருந்தும்.

கிஃப்ட்டிங் ஐடியா!

திருமணத்தன்று மணமக்களுக்கு வெள்ளிக் காசுகளை கிஃப்ட்டாகக் கொடுக்கலாம். அவர்களின் பெயர் பொறித்த, வாழ்த்துச் செய்திகள் அடங்கிய ஹார்ட்டின் முதலிய பல வடிவங்களில் வெள்ளிக் காசுகளை வழங்கலாம். திருமணச் சீராக ஸ்பூன், தட்டு, டம்ளர், சொம்பு முதற்கொண்டு வாட்டர் பாட்டில், டீ பாட், மசாலா டப்பாக்கள், குடுவைகள், பால் குக்கர், பிரஷர் குக்கர், மிக்ஸி, கிரைண்டர் என எல்லாமே வெள்ளியில் கிடைக்கின்றன.

வெள்ளி... நகைகள், பாத்திரங்கள்... பராமரிப்பு முதல் ஆரோக்கியம் வரை!

விதவிதமாய், வித்தியாசமாய் விளக்குகள்!

80 கிராம் முதல் 18 கிலோ வரை, 4 இன்ச் முதல் 5 அடி வரை விதவிதமான வெள்ளிக் குத்து விளக்குகளை இனி நீங்கள் வாங்க முடியும். குத்து விளக்குகளின் மேலே பெரும்பாலும் வேல் போன்ற அமைப்பு அல்லது கிளி இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். தற்போது பெருமாள், விநாயகர், லக்ஷ்மி, சங்கு சக்கரம் போன்ற அழகிய தெய்வச் சிலைகள் அடங்கிய தனித்தன்மையான விளக்குகள் கிடைக்கின்றன.

7, 9, 11, 13 & 15 முகங்கள் வைத்த அரிய வெள்ளி குத்து விளக்குகளும் தற்போது கிடைக்கின்றன. மேலும், வெள்ளியில் செய்யப்பட்ட பாவை விளக்கு, மலர்கள் வைக்க தட்டுகள் கொண்ட விளக்கு, பிங்க் குவார்ட்ஸ் கல் பதித்த விளக்கு, அஷ்டலக்ஷ்மி விளக்கு, அரசிலை விநாயகர் விளக்கு, நவதானிய விளக்கு ஆகியவற்றைப் பார்த்துப் பார்த்து வாங்கலாம். இவை ஒவ்வொன்றும் கைகளால் செய்யப்படும் கலைப் படைப்புகள் என்பது இதன் தனிச் சிறப்பாகும். குத்து விளக்குகள் போல, பற்பல வடிவுகளில் காமாட்சி விளக்குகளும் கிடைக்கின்றன.

வெள்ளி... நகைகள், பாத்திரங்கள்... பராமரிப்பு முதல் ஆரோக்கியம் வரை!
வெள்ளி... நகைகள், பாத்திரங்கள்... பராமரிப்பு முதல் ஆரோக்கியம் வரை!
வெள்ளி... நகைகள், பாத்திரங்கள்... பராமரிப்பு முதல் ஆரோக்கியம் வரை!

வீட்டை அலங்கரிக்க வெள்ளி!

பாரம்பர்ய முறையில் வீடுகளில் இன்டீரியர் டிசைனிங் செய்ய நினைப்போருக்கு வெள்ளி டாப் சாய்ஸ். மரக்கதவுகள் மேல் நுண்ணிய வேலைப்பாடுகள் அடங்கிய வெள்ளித் தகடுகளைப் பொருத்தலாம், வெள்ளி வேயப்பட்ட உள் கூரை, சுவர்களில் வெள்ளித் தகடு பதித்தல், நாற்காலி, ஸோஃபா கூட வெள்ளியில் செய்ய முடியும். ஷோ கேஸில் வெள்ளிப் பொருள்கள் வைக்கும் காலம்போய், ஷோ கேஸையே வெள்ளியில் செய்யும் காலம் வந்துவிட்டது.

குறைவான விலையில் வெள்ளிப் பொருள்களால் வீட்டை அலங்கரிக்க நினைப்போர் வெள்ளியில் மூடப்பட்ட மர வேலைப்பாடுகளை வாங்கலாம். எடை குறைந்த, நுணுக்கமான வேலைப்பாடுகள் அடங்கிய இவற்றால் உங்கள் இல்லத்துக்கு ரிச் லுக் கிடைக்கிறது. வால் கிளாக், வெள்ளித் தோரணம், சின்ன ஃபவுண்டெயின், தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட சாமி சிலைகள், பீடங்கள், கேடயங்கள், வீர வாள், செஸ், பரமபதம் போன்ற விளையாட்டுப் பொருள்கள் என்று உங்களின் எண்ணத்தையெல்லாம் இனி வெள்ளியில் வார்த்திடலாம்.

வெள்ளி... நகைகள், பாத்திரங்கள்... பராமரிப்பு முதல் ஆரோக்கியம் வரை!
வெள்ளி... நகைகள், பாத்திரங்கள்... பராமரிப்பு முதல் ஆரோக்கியம் வரை!
வெள்ளி... நகைகள், பாத்திரங்கள்... பராமரிப்பு முதல் ஆரோக்கியம் வரை!
வெள்ளி... நகைகள், பாத்திரங்கள்... பராமரிப்பு முதல் ஆரோக்கியம் வரை!
வெள்ளி... நகைகள், பாத்திரங்கள்... பராமரிப்பு முதல் ஆரோக்கியம் வரை!
வெள்ளி... நகைகள், பாத்திரங்கள்... பராமரிப்பு முதல் ஆரோக்கியம் வரை!
வெள்ளி... நகைகள், பாத்திரங்கள்... பராமரிப்பு முதல் ஆரோக்கியம் வரை!

வெள்ளி நகைகளை எப்படிப் பராமரிக்க வேண்டும்?

நகாசு வேலை செய்யப்பட்ட வெள்ளி ஆன்டிக் நகைகளை அணிந்த பின்னர், வீட்டுக்கு வந்தவுடனேயே வெள்ளை சாஃப்ட் காட்டன் துணியால் (பனியன் க்ளாத்) ஒற்றினாற்போல துடைத்து, வெள்ளை நிற காட்டன் அல்லது சாஃப்ட் காட்டன் துணியில் சுற்றி, பிளாஸ்டிக் டப்பாவில் வைத்து மர அலமாரியில் வைக்க வேண்டும்.

ஆக்ஸிடைஸ்டு நகைகளுக்கான பராமரிப்பு!

வெள்ளியில் ஆக்ஸிடைஸ்டு நகைகள் செய்யும்போது, அவற்றை ஆக்ஸிடைஸ்டு செய்வது மட்டுமல்லாமல் பாலிஷும் செய்வார்கள். அதனால், அவற்றுக்கென தனியாக எந்தப் பராமரிப்பும் செய்யத் தேவையில்லை. ஏற்கெனவே சொன்னதுபோல, அணிந்த பின்னர் வெள்ளை காட்டன் அல்லது சாஃப்ட் காட்டன் துணியால் வியர்வை ஈரம் போக துடைத்தால் மட்டும் போதும். வெள்ளி ஆக்ஸிடைஸ்டு நகைகள் பற்றிய சுவாரஸ்ய தகவல் ஒன்று இருக்கிறது. அதாவது, ஆக்ஸிடைஸ்டு நகைகளில் கறுப்பேற ஏற அவற்றிலிருக்கிற வேலைப்பாடுகளின் அழகு இன்னும் அதிகரிக்கவே செய்யும். கூடவே, அவற்றின் நகாசு வேலைப்பாடுகளும் பளிச்செனத் தெரியும்.

வெள்ளி... நகைகள், பாத்திரங்கள்... பராமரிப்பு முதல் ஆரோக்கியம் வரை!

வெள்ளி பராமரிப்புக்கு சோப்பு, பாத்திரம் தேய்க்கும் பொடி/பார்... தவறு!

இன்றைக்கும் பலர் வெள்ளிக் கொலுசை சோப்பு தண்ணீரில் ஊற வைக்கிறார்கள். பாத்திரம் தேய்க்கும் பொடியால் துலக்குகிறார்கள். இப்படியெல்லாம் செய்தால் கொலுசில் இருக்கிற பாலிஷே போய் விடும். மாறாக, வெள்ளை நிற பற்பொடியைக் கொலுசின் மீது தூவி, வெள்ளை நிற சாஃப்ட் காட்டன் துணியால் துடைத்து எடுக்கலாம். பற்பொடி கொலுசு வேலைப்பாடுகளுக்குள் சென்று அடைத்துக் கொண்டால், காது குடையும் பட்ஸால் சுத்தம் செய்யலாம். வேலைப்பாடுகள் மிகவும் சிறியதாக இருந்தால், மெல்லிய தென்னங் குச்சி அல்லது துடைப்பம் குச்சியின் நுனியில் பஞ்சை சுற்றி, டிசைன்களுக்குள் விட்டு சுத்தம் செய்யலாம்.

வெள்ளி... நகைகள், பாத்திரங்கள்... பராமரிப்பு முதல் ஆரோக்கியம் வரை!
வெள்ளி... நகைகள், பாத்திரங்கள்... பராமரிப்பு முதல் ஆரோக்கியம் வரை!

வெள்ளித் தட்டும் நடுவே தங்கக் காசும்!

குழந்தைகளுக்குச் சோறூட்ட கிண்ணம், புதிதாகத் திருமணமானவர்கள் சாப்பிடுவதற்கு தட்டு, பால் டம்ளர் என்று சில வீடுகளில் தினசரி உபயோகத்தில் சில வெள்ளிப் பாத்திரங்கள் இருக்கும். இவற்றை பல்பொடி தூவித் துடைத்துவிட்டுப் பயன்படுத்த முடியாது. தண்ணீரால் கழுவித்தான் ஆக வேண்டும். அப்படி தண்ணீரால் கழுவுவதற்கு முன்னர், டிஷ்யூ பேப்பரால் அந்தப் பாத்திரங்களை நன்கு துடைத்து சுத்தம் செய்து விட்டு, பிறகு தண்ணீருடன் சேர்த்துக் குழைத்த வெள்ளை நிற பல்பொடியைத் தடவ வேண்டும். பிறகு, வெறும் கைகளால் இந்தப் பாத்திரங்களைத் தேய்த்துக் கழுவ வேண்டும்.

வெள்ளிப் பாத்திரங்கள் தண்ணீரில் நீண்ட நேரம் இருந்தால் சீக்கிரம் கறுத்துவிடும். மற்ற பாத்திரங்களுடன் சிங்கில் கிடந்தால், கீறல் விழுந்து வெள்ளியின் பளபளப்பு மங்கி விடும். ஸ்கிரப்பரால் தேய்த்துக் கழுவினால் வெள்ளிப் பாத்திரங்கள் தேயும். இதுவே கைகளால் தேய்த்துக் கழுவினால் தேய்மானம் ஆகாது. குறிப்பாக, வெள்ளித்தட்டின் நடுவே தங்கக் காசை ஒட்ட வைத்திருந் தால், அதை ஸ்கிரப்பரால் தேய்க்கவே கூடாது. தங்கமும் தேய்மானமாகும்.

வெள்ளி பால் பாட்டில், வெள்ளி வாட்டர் பாட்டில்... எப்படி சுத்தம் செய்வது?

பற்பொடியைத் தண்ணீரில் கரைத்து பாட்டிலுக்குள் ஊற்றி, ஸ்பான்ஜால் செய்த பிரெஷ்ஷால் கழுவலாம். ஸ்டெரிலைஸ் செய்வதற்கு பதில், வெதுவெதுப்பான நீரினால் கழுவலாம்.

வெள்ளி... நகைகள், பாத்திரங்கள்... பராமரிப்பு முதல் ஆரோக்கியம் வரை!
வெள்ளி... நகைகள், பாத்திரங்கள்... பராமரிப்பு முதல் ஆரோக்கியம் வரை!
வெள்ளி... நகைகள், பாத்திரங்கள்... பராமரிப்பு முதல் ஆரோக்கியம் வரை!

வெள்ளிக்கு கால்சியம் உதவி அவசியம் தேவை!

வெள்ளிப் பொருள்களை ஏன் விபூதியால் துடைக்கக் கூடாது என்பதற்கான காரணம் தெரிந்துவிட்டது. ஆனால், ஏன் அதற்கு வெள்ளை நிற பற்பொடியைப் பயன்படுத்த வேண்டும் என்று தெரிய வேண்டுமல்லவா? பற்பொடியில் கால்சியம் அதிகமாக இருக்கும். கால்சியத்துக்கு வெள்ளி யைப் பளபளக்க வைக்கிற இயல்பு உண்டு.

எதில் சுற்றி வைக்கலாம்?

வெள்ளி நகைகளை காட்டன் அல்லது சாஃப்ட் காட்டன் துணியில் சுற்றி வைக்கலாம் என்று ஏற்கெனவே பார்த்தோம். காட்டன் துணி சீக்கிரமாக வெப்பமும் ஆகாது, குளிர்ச்சியும் ஆகாது. எனவே, வெள்ளி நகைகளைச் சுற்றி வைப்பதில் இதற்கு முன்னுரிமை கொடுக்கலாம். வெள்ளிப் பாத்திரங்கள் என்றால், பயன்படுத்திய பிறகு ஈரமில்லாமல் சுத்தமாகத் துடைத்து, பிளாஸ்டிக் கவர்களில் போட்டு, காற்றுப் புகாத வண்ணம் பேக் செய்ய வேண்டும்.

வெள்ளி அலங்காரப் பொருள்களை எப்படிப் பராமரிப்பது?

ஸ்டார் ஹோட்டல்களிலும் பெரிய பெரிய அலுவலகங் களிலும் வெள்ளி அலங்காரப் பொருள்களின் பயன்பாடு அதிகமாக இருக்கும். ஆனால், அங்கெல்லாம் ஏசி இருக்கும் என்பதால், வெள்ளி அலங்காரப் பொருள்களில் ஆன்டிக் மாடல்களே அதிகம் இருக்கின்றன. இவற்றின் மீது `லேக்கர்' (Lacquer) பாலீஷ் போடுவதால் ஏசியிலும் கறுக்காது. அப்படியே நிறம் மாறினாலும் 80 சதவிகிதம் வரை வெளியே தெரியாது.

செய்கூலி, சேதாரம், ரீ சேல் வேல்யூ!

வெள்ளிப் பாத்திரங்களுக்கு, கிராம் ஒன்றுக்குக் குறைந்த பட்சம் ரூ.2-ல் இருந்து, அதிகபட்சம் ரூ.8 வரைக்கும் செய்கூலி இருக்கும்.

வெள்ளி நகைகளைப் பொறுத்தவரை, ஆன்டிக், ஆக்ஸிடைஸ்டு, கோல்டு பிளேட்டட் என நகைகளைப் பொறுத்தும், வேலைப்பாடுகளைப் பொறுத்தும் செய் கூலி மாறுபடும்.

சில பொருள்கள் 100 சதவிகிதம் வெள்ளியில் ஆனதாக இருக்கும். வெள்ளியில் ஆன்டிக்கில் செய்கிற பொருள்கள், 3டி கான்செப்ட் பொருள்கள் ஆகியவை 92.50 சதவிகிதம் என்கிற அளவில் வெள்ளியிலான பொருள்களாக இருக்கும். இந்தப் பொருள்களுக்கு எல்லாம் செய்கூலியுடன் சேதாரமும் உண்டு. இதுவும் அந்தந்தப் பொருள்களின் வேலைப்பாடுகளைப் பொறுத்து மாறுபடும்.

ரீ சேல் வேல்யூவைப் பொறுத்தவரை, தங்கத்தைப் போலவே அன்றைய விலை மற்றும் தூய்மைத் தன்மை யைப் பொறுத்து வேறுபடும்.

யோ.தீபா
யோ.தீபா

வெள்ளிப் பாத்திரங்களின் மருத்துவ பலன்கள்!

பிறந்த குழந்தைக்குப் பால் சங்கு, குழந்தைக்கு பருப்பு சாதம் சாப்பிட கிண்ணம், பாலூட்ட டம்ளர், முதலிரவுக்கு பால் சொம்பு, மணமக்கள் சாப்பிடத் தட்டு என வெள்ளிக்கு நம் கலாசாரத்தில் முக்கியப் பங்குண்டு. இதற்குப் பின்னணி யில் இருக்கிற மருத்துவக் காரணங்கள் பற்றிச் சொல்கிறார் இயற்கை மருத்துவர் யோ.தீபா.

``வெள்ளிக்கு பாக்டீரியாவை எதிர்த்து அழிக்கிற குணமிருக்கிறது. தினமும் ஏதோ ஒரு வகையில் வெள்ளிப் பாத்திர பயன்பாடு உங்கள் வாழ்க்கையில் இருந்தால், உடலுக்குத் தீமை செய்கிற பாக்டீரியாக்களை அது அழித்துவிடும்.

வெள்ளி டம்ளரில் பால் குடிப்பது அல்லது வெள்ளித் தட்டில் சாப்பிடுவது, உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். கொரோனா இன்னமும் முடிவுக்கு வராத நிலையில், வெள்ளியின் பயன்பாடு நம் தினசரி வாழ்க்கையில் இருப்பது ஆரோக்கியத்துக்கு நல்லது.

வெள்ளி... நகைகள், பாத்திரங்கள்... பராமரிப்பு முதல் ஆரோக்கியம் வரை!
வெள்ளி... நகைகள், பாத்திரங்கள்... பராமரிப்பு முதல் ஆரோக்கியம் வரை!
வெள்ளி... நகைகள், பாத்திரங்கள்... பராமரிப்பு முதல் ஆரோக்கியம் வரை!
வெள்ளி... நகைகள், பாத்திரங்கள்... பராமரிப்பு முதல் ஆரோக்கியம் வரை!

நாம் உட்கொள்ளும் உணவுகளில் உள்ள சத்துகள்தான், நம்முடைய உடலில் உள்ள செல்களில் ஆற்றலாக மாறும். இந்தச் செயலை வளர்சிதை மாற்றம் என்போம். இது சரியாக நடைபெற்றால் ஆரோக்கியமும் ஆயுளுமாக மகிழ்ச்சியாக வாழலாம். இந்த வளர்சிதை மாற்றத்தை வெள்ளி மேம்படுத்தும்.

பருவநிலை மாறுபாடுகளால் வருகிற உடல் நலப் பிரச்னைகள் வராமல், வெள்ளியின் பயன்பாடு தடுக்கும். உதாரணத்துக்கு, வெயில் காலத்தில் வருகிற உடற்சூடு, பனிக்காலத்தில் வருகிற ஜலதோஷம் போன்றவற்றை தவிர்க்கும் தன்மை வெள்ளியில் உண்டு. அதனால், குறைந்தபட்சம் தண்ணீர் மொண்டு அருந்துகிற குவளையாவது வெள்ளியில் இருப்பது நல்லது.

பெண்கள் கால்களில் கொலுசு அணிகிற இடத்தில் கருப்பையைத் தூண்டுகிற அக்குபஞ்சர் புள்ளிகள் இருக்கின்றன. கொலுசு அங்கு உரசிக்கொண்டே இருந் தால், கருப்பைக்கும் அது சார்ந்த மற்ற உறுப்புகளுக்கும் சீரான ரத்த ஓட்டம் செல்லும். இதனால், அந்த உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கும்.

வெள்ளிப் பாத்திரத்தில் குடிநீரை ஊற்றி வைத்துக் குடித்தால், நீரிலிருக்கிற கிருமிகளை அழிக்கும்.

மருத்துவத்தில், வெள்ளியிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட எக்ஸ்ராக்ட்டை (Extract) சில மருந்துத் தயாரிப்பில் பயன்படுத்துகிறார்கள்.’’

வெள்ளி... நகைகள், பாத்திரங்கள்... பராமரிப்பு முதல் ஆரோக்கியம் வரை!
வெள்ளி... நகைகள், பாத்திரங்கள்... பராமரிப்பு முதல் ஆரோக்கியம் வரை!
வெள்ளி... நகைகள், பாத்திரங்கள்... பராமரிப்பு முதல் ஆரோக்கியம் வரை!

சுறுசுறு மூளை!

வெள்ளிக்கு மூளையைச் சுறுசுறுப்பாக்கும் தன்மை இருக்கிறது. அதனால்தான், நம்முடைய கலாசாரத்தில் குழந்தைகளுக்கு வெள்ளிக் கிண்ணத்தில் சோறூட்டு கிறோம்.

வெள்ளி உடலைக் குளிர்ச்சியாக்கும். அதனால்தான், உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தும் பயணங்களின் போது வெள்ளி கூஜாவில் குடிநீர் எடுத்துச் சென்றார்கள் நம் முன்னோர்கள். அடிக்கடி உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்கள் வெள்ளி வாட்டர் பாட்டிலை பயன்படுத்தினால் தீர்வு கிடைக்கும்.

அசிடிட்டி பிரச்னை பலருக்கும் இருக்கும். வெள்ளித் தட்டில் சாப்பிடுவது அல்லது வெள்ளி டம்ளரில் நீர் அருந்துவது என்று தினந்தோறும் செய்துவந்தால், வெள்ளியிலிருக்கிற குளிர்ச்சியானது அசிடிட்டி ஏற்படுவதைக் குறைக்கும்; கூடவே எதுக்களிப்பையும்.

வெள்ளி ஜீரண சக்தியை அதிகப்படுத்தும். தினசரி வெள்ளிப் பயன்பாடு கோபத்தையும் மன அழுத்தத்தை யும் குறைக்கிறது என்கின்றன சில ஆய்வுகள்.

வெள்ளிப் பாத்திர பயன்பாடு சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும். எனவே, ரத்த சோகை உள்ள பெண்களுக்கு வெள்ளிப் பாத்திரப் பயன்பாடு பரிந்துரைக்கத்தக்கது.

வெள்ளியில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் (Antioxidants) இருப்பதால், சரும சுருக்கங்கள் ஏற்படுவதைத் தள்ளிப்போட்டு இளமையை நீட்டிக்கச் செய்யும்.

பிறகென்ன... வீட்டில் இருக்கட்டும், பெருகட்டும் வெள்ளி!

வெள்ளி... நகைகள், பாத்திரங்கள்... பராமரிப்பு முதல் ஆரோக்கியம் வரை!

கோல்டு பிளேட்டிங் - கோல்டு பாலிஷிங்... என்ன வித்தியாசம்?

வெள்ளி நகைகளின் மேல் தங்கத்தை ஏற்றுவது கோல்டு பிளேட்டிங். இது இரண்டு வருடங்கள் வரை அப்படியே இருக்கும். அதுவே பாலிஷிங் என்பது மேலோட்டமாக இருக்கும். இது ஆறு மாதங்கள் வரை தாங்கும்.

வெள்ளி... நகைகள், பாத்திரங்கள்... பராமரிப்பு முதல் ஆரோக்கியம் வரை!

விபூதியால் வெள்ளிப் பொருள்களைச் சுத்தம் செய்யக் கூடாது... ஏன்?

வெள்ளி விளக்குகளை, வெள்ளிப் பொருள்களைச் சுத்தம் செய்ய வேண்டும் என்றாலே ‘விபூதியை எடு’ என்றுதான் இருந்தோம். அந்தக் காலத்தில் மென்மையாக இருக்கும் பொருளாக விபூதி மட்டுமே இருந்திருக்கலாம். அதனால், அது வெள்ளிப் பொருள்களில் கீறல் படாமல் சுத்தம் செய்ய ஏற்றதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால், விபூதியில் இப்போது சில பிராண்டுகள் சொரசொரப்பாக இருக்கின்றன. இந்த வகை விபூதியை வைத்து வெள்ளிப் பாத்திரங்களைத் தேய்த்தால் கீறல் விழுந்து, வெள்ளியின் அழகான அந்தப் பளபளப்பு மங்கிவிடும்.

வெள்ளி... நகைகள், பாத்திரங்கள்... பராமரிப்பு முதல் ஆரோக்கியம் வரை!

டல் ஃபினிஷிங் வெள்ளி... என்ன ஸ்பெஷல்?

இதை `மேட் ஃபினிஷிங்' (Matt Finishing) என்றும் சொல்வோம். வெள்ளியின் பளபளப்புடனும் இருக்காது; ஆன்டிக் லுக்கிலும் இருக்காது; ஆக்ஸிடைஸ்டு போல கறுப்பாகவும் இருக்காது. கண்களை உறுத்தாத வெள்ளியின் அழகு, அளவாக ஜொலிக்கும். கறுக்காது. நிறம் மாறினால், பற்பொடியைத் தூவித் துடைத்தால் பழைய நிறத்துக்கு வந்துவிடும்.

வெள்ளி... நகைகள், பாத்திரங்கள்... பராமரிப்பு முதல் ஆரோக்கியம் வரை!
வெள்ளி... நகைகள், பாத்திரங்கள்... பராமரிப்பு முதல் ஆரோக்கியம் வரை!
வெள்ளி... நகைகள், பாத்திரங்கள்... பராமரிப்பு முதல் ஆரோக்கியம் வரை!

நோ வெல்வெட் துணி!

அது வெள்ளி நகையோ, வெள்ளிப் பொருளோ... வெல்வெட் பாக்ஸிலும் வைக்கக் கூடாது; வெல்வெட் துணியில் சுற்றியும் வைக்கக்கூடாது. அதிலிருக்கிற கெமிக்கல்ஸ் வெள்ளியைச் சேதப்படுத்தும்.

யார், எதை விரும்புகிறார்கள்?

நடுத்தர வயதுக்கு மேல் இருப்பவர்கள் பளபளவென்று இருக்கிற வெள்ளிப் பாத்திரங்களை விரும்பி வாங்குகிறார்கள். இளம் வயதினர் டல் ஃபினிஷிங், ஆன்டிக் வகைகளை விரும்புகிறார்கள்.