Published:Updated:

பிளாக், கம்மல், கூலர்ஸ், ஃபிட் லுக்... வழுக்கை லுக்கை ஸ்மார்ட் ஆக்கும் 8 ஐடியாக்கள்! #BaldAndBeautiful

வழுக்கை லுக்கை ஸ்டைலாக்கலாம்
வழுக்கை லுக்கை ஸ்டைலாக்கலாம் ( freepik )

வழுக்கை லுக்கை சமன்செய்ய தாடி, மீசையை ஸ்டைல் செய்வதுடன் கட்டுடலை சற்றே வெளிப்படுத்துவதும் அவசியம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இன்று, சிலருக்கு 25, 30 வயதுகளிலேயே வழுக்கை பாதிப்பு ஏற்படுகிறது. அதற்கான காரணத்தைக் கண்டறிந்து சரிசெய்யும்வரை, 'தலை'மறைவாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை.

மொஹமத் இத்ரிஸ் கான்
மொஹமத் இத்ரிஸ் கான்

அமெரிக்காவில், வழுக்கையால் பாதிக்கப்பட்ட ஆண்கள் ஸ்டைலாக மாறி வருடங்கள் ஆகிவிட்டன. நீங்களும் 'பால்ட் அண்ட் ஹேண்ட்ஸம்' ஆக வலம்வர முடியும். அதற்கான ஸ்டைலிங் வழிமுறைகளைக் கூறுகிறார், டிசைனர் மற்றும் ஸ்டைலிஸ்ட் மொஹமத் இத்ரிஸ் கான்.

க்ளீயர் ஸ்கின்

மற்றவரின் பார்வை உங்கள் வழுக்கையின்மீது விழாமல் திசைதிருப்ப பளிச் சருமமும், ஸ்டைலான தாடி, மீசையும் உதவும்.

பளிச் சருமம்
பளிச் சருமம்
Claudia Busch

சருமம் பளிச்சென இருந்தால், அனைவரின் மனதிலும் பளிச்சென இடம்பிடிக்கலாம். இதற்கு சருமத்தைச் சுத்தமாக வைத்திருப்பது அவசியம்.

டிப்ஸ்

தினமும் முகத்தை ஃபேஸ்வாஷ் கொண்டு கழுவ வேண்டும் (தாடி, மீசைக்கு ஃபேஸ்வாஷ் பயன்படுத்தக்கூடாது).

தேவை இருப்பின் ஸ்க்ரப் க்ரீம் கொண்டு முகத்தை இரண்டு நிமிடங்கள் மசாஜ் செய்யலாம். இதனால், சருமத்தின் இறந்த செல்கள் நீங்கி முகம் பொலிவாகும்.

ஃபேஸ் மாஸ்க்
ஃபேஸ் மாஸ்க்

பப்பாளி, முல்தானிமட்டி என சருமத்துக்குப் பொருந்தும் ஏதாவது ஒரு ஃபேஸ் மாஸ்க்கை வாரம் இருமுறை பயன்படுத்தவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மீசையும் தாடியும்

ஆண்களுக்கான ஸ்பெஷல் சலூன்களும் பியர்டு ஸ்டைலிஸ்ட்டுகளும் பெருகிவிட்ட இக்காலத்தில், உங்கள் முகவெட்டுக்குப் பொருத்தமாகவும் டிரெண்டியாகவும் இருக்கும் தாடியை வைத்துக்கொள்வது சுலபம்.

மீசையும் தாடியும்
மீசையும் தாடியும்
Vladimir Poplavskis
உங்களுக்குப் பொருத்தமான ஸ்டைலில் தாடி வளர்ப்பது எப்படி? #InternationalMensDay

குறிப்பாக முறுக்கு மீசை, ஃபிரெஞ்சு பியர்டு, ஃபேடட் பியர்டு என மேன்லியான தோற்றம் தரும் ஸ்டைல்களைத் தேர்ந்தெடுப்பது சிறப்பு.

ஸ்டைலான மீசையும் தாடியும் உங்கள் வழுக்கையை ப்ளஸ்ஸாக மாற்றி உங்களை டிரெண்டியான, ஸ்டைலிஷான நபராக எடுத்துக்காட்டும்.

டிப்ஸ்

தாடியையும் மீசையையும் அதற்கென இருக்கும் ஷாம்பூ, பியர்டு ஆயில் போன்றவற்றை உபயோகித்து சரிவரப் பராமரிக்க வேண்டும்.

பியர்டு ஸ்டைலிங்
பியர்டு ஸ்டைலிங்
freepik

தாடி மற்றும் மீசையின் வடிவத்தை வீட்டிலும், தேவைப்படும் நேரத்தில் சலூனுக்கும் சென்று ட்ரிம் மற்றும் ஷேப் செய்துகொள்வது அவசியம்.

ஃபிட்னெஸ் முக்கியம்

வழுக்கைத் தலையுடன் தொந்தியும் தொப்பையும் இருந்தால், 30 வயதிலும் 40 ப்ளஸ்ஸில் இருப்பது போன்ற தோற்றம் வந்துவிடும். அதனால், ஒரு டயட்டீஷியனின் ஆலோசனையுடன் உணவுப் பழக்கத்தைக் கடைபிடியுங்கள்.

ஃபிட்னெஸ் முக்கியம்
ஃபிட்னெஸ் முக்கியம்
freepik

தவிர, முறையான உடற்பயிற்சியாளரின் அறிவுறுத்தலின்படி தினசரி உடற்பயிற்சியும் செய்தால், 'இளமை திரும்புதே புரியாத புதிராச்சே' என பாடிக்கொண்டே வலம்வரலாம்.

ஷேவ் செய்வது அவசியம்
ஷேவ் செய்வது அவசியம்

தினசரி உடற்பயிற்சி செய்வதோடு, வழுக்கைத் தலையில் எஞ்சியுள்ள மொத்த கேசத்தையும் ஷேவ் செய்துகொள்வது அவசியம். அப்போதுதான் உங்களின் ஃபிட்டான உடல் உங்கள் வழுக்கைத் தலையைத் தாண்டி மேன்லியான தோற்றத்தைத் தரும்.

டிப்ஸ்

முகத்தின் சருமத்தைவிட தலையின் ஸ்கால்ப் நிறம் அதிகமாக இருக்கும். முழுக்க ஷேவ் செய்யும்பட்சத்தில், இந்த நிற வேறுபாட்டையும் சரிசெய்ய வேண்டும்.

டேன்டு ஸ்கால்ப்
டேன்டு ஸ்கால்ப்

தினசரி அதிகபட்சமாக 10 நிமிடங்கள் தலையில் வெயில் படும்படி இருந்தால், தலையின் சரும நிறம் 'டேன்' ஆகும்.

தினசரி அதிக நேரம் வெயிலில் அலைய நேர்ந்தால், சரும மருத்துவரின் அறிவுரைப்படி, தலைக்கென இருக்கும் சன்ஸ்க்ரீன் லோஷன்களைப் பயன்படுத்தலாம்.

மைனஸை ப்ளஸ்ஸாக மாற்றுங்கள்

வழுக்கை லுக்கை சமன்செய்ய தாடி, மீசையை ஸ்டைல் செய்வதுடன் கட்டுடலை சற்றே வெளிப்படுத்துவதும் அவசியம்.

பியர்டு லுக்
பியர்டு லுக்

சட்டையின் முதல் இரண்டு பட்டன்களை அன்பட்டன் செய்துகொள்ளும்போது தாடி, மீசை, ஃபிட்டான உடல் என இந்த விஷயங்கள் எல்லாம் வழுக்கையை மீறி ஹைலைட் ஆகும்; பிறரின் கண்களை ஈர்க்கும்.

டிப்ஸ்

அன்பட்டன் செய்யும் முன்பு, சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ளவும். வழுக்கைத் தலை மற்றும் தாடி, மீசை என்று இருக்கும்பட்சத்தில், மார்புப் பகுதியின் ரோமங்களை நீக்கிவிட வேண்டும்.

அன்பட்டன் ஸ்டைல்
அன்பட்டன் ஸ்டைல்

தாடி, மீசை இல்லாத வழுக்கைத் தலை லுக் என்றால், மார்புப்பகுதியின் ரோமங்களை ஷேவ் செய்யாமல் அன்பட்டன் செய்துகொள்ளவும்.

கம்பீரம் தரும் கறுப்பு நிறம்

வழுக்கை உள்ளவர்கள், கறுப்பு நிறத்தில் குறிப்பாக காட்டன், லினன், சாட்டின், சில்க் போன்ற மெட்டீரியல்களில் சட்டை அணிந்தால் ஸ்டைலாக இருக்கும்.

ஜான் ட்ரவோல்டா
ஜான் ட்ரவோல்டா

அலுவலகம் செல்பவர்கள், தினசரி கறுப்பு உடையை அணிய விருப்பமில்லையெனில், நேவி ப்ளூ, மெரூன், கிரே போன்ற அடர் நிறங்களில் உடை அணியலாம். கறுமையான சருமத்தினர் பேஜ், லைட் பிரௌன் போன்ற மிதமான நிறங்களில் உடை அணியலாம்.

ராக்
ராக்

சரும நிறத்தை மீறியும், பால்ட்னஸ் உள்ளவர்களுக்கு கறுப்பு நிற உடை கம்பீரத்தைக் கொடுக்கும். அலுவலகம் அல்லாது மற்ற இடங்களுக்கு ஓவர் ஜாக்கெட், ரோல் அப் டேப் ஸ்லீவ் ஷர்ட்ஸ் போன்ற உடைகள் அணிந்தால், அடுத்தவரைத் திரும்பிப்பார்க்க வைக்கும் 'ரக்டு' லுக்குக்கு சொந்தக்காரர் ஆகலாம்.

டிப்ஸ்

பெல்ட், வாலட், ஷூ என நீங்கள் பயன்படுத்தும் அக்ஸசரீஸுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்.

லெதர் அக்ஸசரீஸ்
லெதர் அக்ஸசரீஸ்
freepik

லெதர் ஜாக்கெட், லெதர் பூட்ஸ் என கூடுமானவரை லெதர் பொருள்களைப் பயன்படுத்துங்கள்.

கவர்ந்திழுக்கும் கண்ணாடி

கேசத்தை இழந்ததால் அழகை இழந்துவிட்டதாக நினைத்து வருந்த வேண்டாம். மேலே சொன்ன விஷயங்களுடன் ஒரு ஸ்டைலான கண்ணாடியை அணிந்தால், நீங்கள் எதிர்பாராத அளவுக்கு உங்களது தோற்றத்தில் மாற்றத்தை உணர்வீர்கள்.

ஸ்டைலிஷ் கூலர்ஸ்
ஸ்டைலிஷ் கூலர்ஸ்
freepik

நீங்கள் செய்யும் பணி, உங்களது முகவெட்டு, தற்போதைய டிரெண்டு என இம்மூன்றையும் கருத்தில் கொண்டு கண்ணாடியைத் தேர்வுசெய்யுங்கள். இது உங்களது தோற்றத்தை மெருகேற்றுவதுடன் இழந்த தன்னம்பிக்கையையும் மீட்டுத் தரும்.

டிப்ஸ்

இப்போதெல்லாம், கண்ணாடி விற்பனை செய்யும் கடைகளிலேயே உங்கள் முகத்துக்குப் பொருந்தக்கூடிய ஃபிரேம்கள் எது எனக் கண்டறிந்து சொல்லும் சாஃப்ட்வேர் வைத்திருக்கிறார்கள். அதன் உதவியுடன் உங்கள் முகத்துக்கான ஃபிரேமைத் தேர்வுசெய்யலாம்.

ஸ்டைலிஷ் கூலர்ஸ்
ஸ்டைலிஷ் கூலர்ஸ்
freepik
ஹேர்ஸ்டைல் முதல் காலணி வரை... ஆண்களுக்குப் பெண்களிடம் லைக்ஸ் குவிக்கும் 5 விஷயங்கள்!

வழுக்கை உள்ளவர்களுக்கு ஆஃப் ஃபிரேம், ஏவியேட்டர் ஃபிரேம், ரவுண்டு ஃபிரேம், ஓவல் சைஸ்டு ஃபிரேம் மற்றும் ரெட்ரோ ஸ்டைல் ஃபிரேம்களையுடைய கண்ணாடிகள் கச்சிதமாகப் பொருந்தும். இவற்றில் உங்கள் முகத்துக்குப் பொருந்தக்கூடிய ஸ்டைலைத் தேர்ந்தெடுத்து அணியலாம்.

யூத்தாக மாற்றும் இயர் ரிங்ஸ்

புதுப்புது ஹேர்ஸ்டைலுடன் 'யூத்தாக' சீன் போடும் இளைஞர்களைவிட, கேசத்தைப் பற்றிய கவலையை மறந்து காதில் கம்மல், கண்களுக்கு கூலர்ஸ் என ஸ்டைலாக கெத்து காட்டுபவர்களை ஃபேஷனிஸ்ட்களாகப் பார்க்கும் காலம் இது.

தலைமுடி இருப்பவர்களைவிட வழுவழு தலையின் சொந்தக்காரர்களுக்குத்தான் இயர் ரிங்ஸ் எடுப்பாகவும் ஸ்டைலாகவும் இருக்கும்.

ஸ்டைலிஷ் இயரிங்ஸ்
ஸ்டைலிஷ் இயரிங்ஸ்

முகத்துக்கும் பணிக்கும் பொருந்தும் வகையில் பல ரகங்களில் இயர் ரிங்ஸ் கடைகளில் கிடைக்கின்றன. உங்களுக்குப் பிடித்த கம்மலைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். கம்மல் வாங்குவதுடன் அங்கேயே காதுகுத்திக்கொள்ளலாம் என்ற வகையிலான கடைகளும் இன்று நிறைய வந்துவிட்டன.

ஸ்டைலிஷ் இயரிங்ஸ்
ஸ்டைலிஷ் இயரிங்ஸ்

காது குத்தியுள்ளவர்களுக்கு வட்டம், கட்டம், முக்கோணம் என அனைத்து வடிவ ஸ்டட், 'ஹூப்' எனப்படும் தொங்கட்டான்கள், 'டேப்பர்' எனப்படும் இயர் ஸ்டட் எனப் பல வகைகளில் கம்மல்கள் இருக்கின்றன. காது குத்தாதவர்களுக்கும் 'க்ளிப் ஆன்', 'மேக்னட்டிக்' கம்மல்கள் போன்றவை கிடைக்கின்றன.

டிப்ஸ்

ஸ்டைலுக்காக கம்மல் அணியும் ஆண்கள், இடது காதில் மட்டுமே கம்மல் அணிய வேண்டும். வலது காதில் கம்மல் அணிந்தால் 'கே (gay)' என அர்த்தம்.

அலுவலகம் செல்லும்போது சிங்கிள் ஸ்டோன் கம்மல் அணிந்தால் ஜென்டில்மேன் தோற்றத்தில் வலம்வரலாம்.

தலை முதல் கால்வரை

வழுக்கை இருந்தால், தலைக்கு ஹிப்-பாப் கேப், கோல்ஃப் கேப், ஸ்கல் கேப், பீனி கேப் போன்ற ஃபேஷன் கேப்கள் அணிந்து டிரெண்டி லுக்கில் அசத்தலாம்.

ஸ்டைலிஷ் கேப்
ஸ்டைலிஷ் கேப்
freepik

கைகளில் 'சங்க்கி' பிரேஸ்லெட்டுகள், 'ரக்டு' டிரெண்டி வாட்ச் மற்றும் லெதர் ஸ்ட்ராப் வாட்ச் போன்றவற்றை அணியலாம்.

டாட்டூ குத்திக்கொள்வதும் உங்களை ஸ்டைலாகக் காட்டும்.

ரக்டு லுக்
ரக்டு லுக்

கால்களுக்கு 'டேன்டு' லெதர் ஷூக்கள், ரக்டு லுக் ஷூக்கள், பூட்ஸ் அணிவது கம்பீரத்தை அதிகரிக்கும்.

மொத்தத்தில் வழுக்கைத் தலை வருத்தத்தை மறந்து டிரெண்டி, ஸ்டைலிஷ், ரக்டு எனப் பலவித தோற்றங்களில் ஹாட்டாகவும் கம்பீரமாகவும் உங்களை மெருகேற்றி, லைக்ஸ் அள்ளலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு