Published:Updated:

ஜம்ப் ஸூட், த்ரீ பீஸ், டெனிம் டெனிம், நோட்டிஃபை... ஆண்கள், பெண்களுக்கான அசத்தல் கேஷுவல் உடைகள்!

கேஷுவல் உடைகள்
கேஷுவல் உடைகள் ( instagram )

கேஷுவல் உடைகள் என்றாலே ஜீன்ஸ், டி-ஷர்ட்தானா?

ஒரே ஒரு டெனிம் பேன்ட். அதுக்கு மேட்ச்சா, ஆண்கள்னா புளூ டி-ஷர்ட், பெண்கள்னா பிங்க் டி-ஷர்ட்னு சட்டுனு கிளம்பிடுவாங்க. ஆனா, கேஷுவல் அவுட் ஃபிட்னாலே இந்த க்ளாஸிக் காம்போ மட்டும்தானா? இவை தவிர புதுசா என்ன ட்ரை பண்றதுன்னே தெரியலையா..?

அர்ச்சனா ஆர்த்தி
அர்ச்சனா ஆர்த்தி
Makka Photography

எவர்கிரீன் கேஷுவல் உடையான ஜீன்ஸ், டி-ஷர்ட் காம்போவுக்குப் போட்டியாக பல ரகங்களில் கேஷுவல் உடைகள் வந்துவிட்டன. ஆண்களுக்கும் பெண்களுக்கும் செளகர்யமான, அதே நேரம் ஸ்மார்ட் லுக் தரும் டிரெண்டியான கேஷுவல் உடைகளைப் பற்றி விவரிக்கிறார் காஸ்ட்யூம் டிசைனர் மற்றும் ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா ஆர்த்தி.

1. லாங் ஸ்கர்ட் - கேஷுவல் டாப்!

முழு நீள ஸ்கர்ட், முழங்கால்வரை நீளும் ஸ்கர்ட், முட்டிவரை நீளும் ஸ்கர்ட் என இந்த மூன்று அளவிலான ஸ்கர்ட்களுடன் கேஷுவல் காட்டன் டாப்ஸ், டி-ஷர்ட் என எதையும் மேட்ச் செய்து அணியலாம்.

நயன்தாரா
நயன்தாரா
instagram

நீங்கள் அணியும் டாப்ஸை ஸ்கர்ட்டுடன் டக் இன் செய்தும் அணியலாம். இதனுடன் சாண்டல் மற்றும் ஃபிளிப் ஃப்ளாப் வகை காலணிகளை அணிவது வழக்கம். ஆனால் தற்போது ஸ்கர்ட்டுடன் ஸ்னீக்கர்ஸ், கேன்வாஸ் போன்ற ஷூக்களை அணிவதுதான் ஸ்டைல் ஸ்டேட்மென்ட்.

2. த்ரீ பீஸ் டிரெண்ட்!

ஜெகிங்ஸ் பேன்ட்டுடன் டி-ஷர்ட் அல்லது டேங்க் டாப் அணிந்து, அதன் மேல் ஜாக்கெட் என, த்ரீ பீஸ் டிரெஸ் இப்போதைய டிரெண்டில் இருக்கிறது.

சமந்தா
சமந்தா
instagram

ஜெகிங்ஸ் என்றில்லாமல் ஆங்க்கிள் லெங்த் டெனிம் பேன்ட்டுடனும் இந்த ஸ்டைலை ட்ரை செய்யலாம். டெனிம் ஜாக்கெட், லெதர் ஜாக்கெட், ஹூடட் ஜாக்கெட் என வெரைட்டியான ஜாக்கெட்களையும் ட்ரை செய்யலாம். வியர்வைத் தொந்தரவு இருப்பவர்கள் இந்த ஸ்டைலைத் தவிர்க்கலாம்.

3. ஜம்ப் ஸூட்!

பொதுவாகக் கைக்குழந்தைகளுக்கான உடையான `ஜம்ப் ஸூட்', தற்போதைய டீன் ஏஜ் பெண்களின் ஃபேவரைட் உடையாகி வருகிறது.

ஹன்சிகா மோத்வானி
ஹன்சிகா மோத்வானி
instagram

ஃபேஷன் ஃபாலோயராகத் தங்களை வெளிப்படுத்த நினைப்பவர்களுக்கான பெஸ்ட் சாய்ஸ் இது. ஆனால் தொப்பை உள்ளவர்கள் இதைத் தவிர்க்கவும். இந்த உடை தொப்பையை வெளிப்படுத்திக் காட்டிக்கொடுத்துவிடும்.

4. ஒன் பீஸ் டிரெஸ்!

`என்னதான் டிரெண்டுல இருந்தாலும் எனக்கு கம்ஃபர்ட்தான் முக்கியம்' என்று நினைப்பவர்களுக்கான உடைதான், `ஒன் பீஸ்' டிரெஸ். இதில் ஃபுல், த்ரீ ஃபோர்த், முட்டி வரை நீளும் டிரெஸ் என, விருப்பமான மாடல்களில் வாங்கிக்கொள்ளலாம்.

அனுபமா பரமேஸ்வரன்
அனுபமா பரமேஸ்வரன்
instagram

நல்ல தரமான காட்டன் மெட்டீரியலில் ஒன் பீஸ் டிரெஸ் அணிந்தால் செளகர்யம் மட்டுமல்லாமல் சம்மரிலும் கூலாக வலம்வரலாம்.

5. டாம் பாய் லுக்!

ட்ராக் பேன்ட்டுடன் ஹூடட் டி-ஷர்ட், ஆங்க்கிள் ஃபிட் பேன்ட்டுடன் முழுக்கை `ஸ்வெட்' டி-ஷர்ட் போன்றவை, டாம் பாய் மற்றும் ஸ்போர்ட்டி லுக் பிரியர்களுக்கான பெஸ்ட் சாய்ஸ்.

ரித்திகா சிங்
ரித்திகா சிங்
instagram

மேக்கப், ஹேர்ஸ்டைல் என்று மெனக்கெட விரும்பாத லேஸி கேர்ள்ஸுக்கான பெஸ்ட் சாய்ஸ் இது.

ஆண்களுக்கு...

6. `கூல்' ட்யூடு லுக்!

கழுத்தில் `டை' கட்டி, முழுக்கை சட்டையை `டக் இன்' செய்யும் ஃபார்மல் தோற்றத்திலிருந்து விடுதலை வேண்டுமா? நாள் முழுவதும் ரிலாக்ஸ்டாக, கம்ஃபர்ட்டபுளாக இருக்க விரும்பும் உங்களுக்கான உடைதான் நிட்டட் ஜாகர் (Knitted Jogger) அல்லது ட்ராக் பேன்ட்.

தோனி
தோனி
twitter

இதோடு முழுக்கை ஸ்வெட் டி-ஷர்ட், சிம்பிளான டி-ஷர்ட் என மேட்ச் செய்து அணிந்து சூப்பர் கூல் கேஷுவல் லுக்கில் அசத்தலாம்.

7. மேன்லி லுக்!

ஜீன்ஸ், ட்ரவுசர்ஸ் என இறுக்கமான உடைக்கு `டாடா' சொல்லிவிட்டு, செளகர்யமான காட்டன் பேன்ட் அணிந்தாலே போதும்... உங்கள் தோற்றம் கேஷுவலாக மட்டும் இல்லாமல் `ரிச்'சாகவும் இருக்கும்.

ஹரிஷ் கல்யாண்
ஹரிஷ் கல்யாண்
instagram

இதனுடன் லைட் கலரில் லூஸ் ஃபிட் லினென் ஷர்ட் அல்லது கேஷுவல் ஷர்ட் மற்றும் லோஃபர் ஷூஸ் அணிந்தாலே போதும், மேன்லி லுக்கில் பெண்களை அசத்தலாம்.

8. டெனிம் டெனிம்!

எந்த பேன்ட்டுக்கு எந்த ஷர்ட் மேட்ச் செய்யலாம் என்று குழப்பமாக இருக்கிறதா? அப்போ டெனிம் பேன்ட், டெனிம் ஷர்ட்தான் உங்களுக்கான கரெக்ட் சாய்ஸ்.

அருண் விஜய்
அருண் விஜய்
instagram

டெனிம் பேன்ட்டுக்கு கான்ட்ராஸ்ட் கலர் சட்டையைத் தேடிப் பிடித்து மேட்ச் பண்ண வேண்டிய அவசியமின்றி, ஒரே கலரில் அணியலாம். தவிர, ஸ்டோன் வாஷ் டெனிம் பேன்ட்டுக்கு ஸ்டோன் வாஷ் டெனிம் ஷர்ட். டோன்டு டெனிம் பேன்ட்டுக்கு டோன்டு டெனிம் ஷர்ட் என ஒரே டெக்ஸ்ச்சரிலும் அணியலாம்.

9. ஸ்மார்ட் லுக்!

'உயிரே உயிரே' என்று பாடிய அரவிந்த்சாமியிடம் இருந்து தமிழ்நாட்டு ஆண்களிடம் பரவிய ஸ்டைல்தான் இந்த த்ரீ பீஸ் டிரெஸ்.

துருவ் விக்ரம்
துருவ் விக்ரம்
instgram
பிளாக், கம்மல், கூலர்ஸ், ஃபிட் லுக்... வழுக்கை லுக்கை ஸ்மார்ட் ஆக்கும் 8 ஐடியாக்கள்! #BaldAndBeautiful

உங்களுக்குப் பிடித்தமான மற்றும் செளகர்யமான பேன்ட்டுடன் ரவுண்டு அல்லது 'V' நெக் உடைய சிம்பிளான டி-ஷர்ட், அதற்கு மேல் லெதர் அல்லது டெனிம் ஜாக்கெட் அணிந்து வரும் ஆண்கள், டீன் பெண்களின் பார்வையைத் தவறவிடவே மாட்டார்கள்.

10. நோட்டிஃபை லுக்!

சிவப்பு, மஞ்சள், பச்சை என பளிச் நிறப் பேன்ட்களும் கோடுகள், கட்டங்கள் போன்ற டிசைன்கள் உள்ள பேன்ட்களும், அதற்கு மேட்ச்சாகும் கேன்வாஸ் ஷூக்களும்தான் இப்போதைய டிரெண்டு.

ரன்வீர் சிங்
ரன்வீர் சிங்
லெகிங்ஸ் அணியும்போது செய்யக் கூடாத 5 தவறுகள்! #LeggingsGuide

இதனுடன் கேஷுவல் ஷர்ட், முழுக்கை வைத்த ஸ்வெட் டி-ஷர்ட், ஷார்ட் ஸ்லீவ் உள்ள சிம்பிள் டி-ஷர்ட் என உங்களுக்குப் பிடித்ததைத் தேர்ந்தெடுத்து அணியலாம். அனைவரின் பார்வையும் என்மீதுதான் இருக்க வேண்டும் என விரும்புபவர்களுக்கான பிரைட் லுக் ஸ்டைல் இது.

அடுத்த கட்டுரைக்கு