Published:Updated:

வக்கீல் அஜித், `ராயப்பன்’ விஜய், பூ புடவை விஜய் சேதுபதி... 2019-ன் டிரெண்டிங் லுக் யாருக்கு? #VikatanRewind2019 #VikatanPoll

டிரெண்டிங் லுக் - உங்கள் ஓட்டு யாருக்கு ?
News
டிரெண்டிங் லுக் - உங்கள் ஓட்டு யாருக்கு ? ( instagram )

'ராயப்பனி'ன் கரை வேஷ்டி, 'மைக்கேலி'ன் ஸ்போர்ட்ஸ் அவுட்ஃபிட் என... ஆன்லைன் ஷாப்பிங் வலைதளத்தில் ஹிட் அடித்தன 'பிகில்' உடைகள்.

வக்கீல் அஜித், `ராயப்பன்’ விஜய், பூ புடவை விஜய் சேதுபதி... 2019-ன் டிரெண்டிங் லுக் யாருக்கு? #VikatanRewind2019 #VikatanPoll

'ராயப்பனி'ன் கரை வேஷ்டி, 'மைக்கேலி'ன் ஸ்போர்ட்ஸ் அவுட்ஃபிட் என... ஆன்லைன் ஷாப்பிங் வலைதளத்தில் ஹிட் அடித்தன 'பிகில்' உடைகள்.

Published:Updated:
டிரெண்டிங் லுக் - உங்கள் ஓட்டு யாருக்கு ?
News
டிரெண்டிங் லுக் - உங்கள் ஓட்டு யாருக்கு ? ( instagram )

திரைப்படங்களில் கதாநாயகர்கள் என்றால் 'ஸ்மார்ட் லுக்', கதாநாயகிகள் என்றால் 'ஹோம்லி அல்லது வெஸ்டர்ன் லுக்' என்றிருந்த காலம் இப்போது மாறியிருக்கிறது. படத்துக்குப் படம் ஸ்டார்களின் லுக்கில் வெரைட்டி எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள், அதை நிறைவேற்ற உழைக்கிறார்கள் க்ரியேட்டர்கள்.

இயக்குநரின் கேரக்டர் வடிவமைப்பு, காஸ்ட்யூம் டிசைனரின் உழைப்பு, நடிகர்கள் அதை கேரி செய்யும் விதம் என அனைவரின் கூட்டு உழைப்பு அது. பலனாக, திரையில் ஃப்ரெஷ்ஷான லுக்கில் தோன்றி நம்மை 'வாவ்' சொல்ல வைக்கிறார்கள் நட்சத்திரங்கள். அப்படி 2019-ல் 'சூப்பரு!' பாராட்டுகள் பெற்ற டாப் ஸ்க்ரீன் லுக்ஸ் இங்கே!

கதாபாத்திரத்துக்கு வலுசேர்த்த தோற்றங்கள்!

1. 'சூப்பர் டீலக்ஸ்' விஜய்சேதுபதி

பொதுவாக, தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களைத் தாண்டி 'விஜய் சேதுபதி'யை ரசிக்க வைக்கும் நடிகர், 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் படம் நெடுக ஃப்ளோரல் புடவையில் தோன்றி, 'ஷில்பா'வை மட்டுமே முன்னிறுத்தி ஸ்கோர் செய்தார்.

2. 'அசுரன்' தனுஷ்

'சுள்ளான் மாதிரி இருந்துகிட்டு...' என்று தனுஷின் ஆரம்பகால படங்களின் சண்டைக் காட்சிகளை கேலி செய்தவர்கள்கூட, 'வடசென்னை'யின் அன்பு மற்றும் 'மாரி'யின் மாஸை ரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதையெல்லாம் தாண்டி சடாரென, ஒரு பாசக்காரத் தந்தையாகவும் பக்குவமான நடிகராகவும் 'அசுரனி'ல் வெளிப்பட்டவருக்கு, பலம் சேர்த்தது அவரின் தோற்றம்.

3. 'கைதி' கார்த்தி

ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான நடிப்பு, ஆக்ரோஷக் காட்சிகளில் அல்டிமேட் துடிப்பு என 'சிறுத்தை'யில் போலீஸாக கர்ஜித்த கார்த்தி, 'கைதி'யில் திருடனாகக் கவர்ந்தார். ஒரு கைதியையும் ரசிக்க வைத்தது, திரையில் அவரின் தோற்றம்.

4. 'தர்மபிரபு' யோகிபாபு

காமெடி நடிகராக என்ட்ரி, நயன்தாராவோடு டூயட் என்று ஏறுமுகமாகச் சென்றுகொண்டிருக்கும் யோகிபாபு, கதைநாயகனாக நடித்து வெளிவந்தது 'தர்மபிரபு' படம். 'யோகி ஸ்பெஷல்' சுருட்டைத் தலையை எருமைக்கொம்பு கிரீடத்தில் மறைத்து, எமனின் தோற்றத்துக்குக் கச்சிதமாகப் பொருந்தினார்.

புடவையில் கொள்ளையடித்த ஹீரோயின் லுக்ஸ்!

1. 'விஸ்வாசம்' நயன்தாரா

படத்திலும் நிஜ வாழ்க்கையிலும் தன்னுடைய தோற்றத்துக்காகவே பல ஃபாலோயர்களை வசப்படுத்தியுள்ள நயன்தாரா, அஜித்துடன் தான் நடித்த நான்காவது படமான 'விஸ்வாசத்'தில் இரண்டு தோற்றங்களில் அசரடித்தார். படத்தின் முதல் பாதியில் கண்ணைப் பறிக்கும் நிறங்களில், 'பாலும் பழமும் கட்டம்' புடவைகள், இரண்டாம் பாதியில் 'லினன் காட்டன்' புடவைகள் என லைக்ஸை அள்ளினார்

2. 'ராட்சசி' ஜோதிகா

'கடலோரக் கவிதைகளி'ல் ஆரம்பித்த வழக்கப்படி டீச்சர் என்றாலே காட்டன் புடவைதான். திடமான மனநிலையில் உள்ள டீச்சரின் தோற்றத்தை வெளிப்படுத்தும் விதமாக, 'க்ளோஸ் நெக் காலர்டு பிளவுஸ்' மற்றும் காட்டன் புடவை என 'ராட்சசி'யில் கம்பீர நடைபோட்டார் ஜோதிகா.

3. 'என்.ஜி.கே' சாய் பல்லவி

சினிமா நடிகை என்றாலே மேக்கப் என்ற விஷயத்தை கெத்தாக மாற்றிக் காட்டும் 'நோ மேக்கப்' லுக், சாய் பல்லவியின் சாய்ஸ். 'என்.ஜி.கே'ல் ஆங்காங்கே மலர் டீச்சரை நினைத்து ஏங்கவைக்கும் விதத்தில் புடவையணிந்து மனதைத் திருடினார் இந்த ரௌடி பேபி.

மரண மாஸ் லுக்ஸ்!

1. 'பேட்டை' ரஜினி

கல்யாணப் பந்தியில் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டே, முறுக்கு மீசை, சிரித்த முகம் என்று பழைய ரஜினியாக இளமைத் துள்ளலுடன் ஸ்டைலாக நடந்துவந்த 'பேட்டை' படத்தின் டீசரே பலகோடி ரசிகர்களைக் கிறங்கடித்தது. 'இளமை திரும்புதே' எனப் பாடிய வார்டன், கொள்ளை இளமை திரும்பியிருந்த லுக்கில் ரசிகர்களுக்கு செம திரை விருந்து அளித்தார்.

2. 'பிகில்' விஜய்

'பிகிலி'ல் இரண்டு கெட்டப்களில் மாஸ் காட்டியிருந்தார் விஜய். 'ராயப்பனி'ன் கரை வேஷ்டி, 'மைக்கேலி'ன் ஸ்போர்ட்ஸ் அவுட்ஃபிட் என... ஆன்லைன் ஷாப்பிங் வலைதளத்தில் ஹிட் அடித்தன 'பிகில்' உடைகள்.

3. 'நேர்கொண்ட பார்வை' அஜித்

வித்யாபாலனின் கணவராக 'க்ளியர் ஷேவ்' அஜித், வக்கீலாக வாதாடும் 'ஃபுல் பியர்டு' அஜித் என இரண்டு கெட்டப்களிலும் ரசிகர்களின் நேர்கொண்ட பார்வையைக் கொள்ளை கொண்டார்.

காதல் கொள்ள வைத்த ஸ்டைலிஷ் லுக்ஸ்!

1. 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' ஹரிஷ் கல்யாண்

'பிக் பாஸ்' வீட்டில் கேஷுவலாக இருக்கும்போதே, சும்மா ஸ்டைலாக இருப்பார் ஹரிஷ் கல்யாண். 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தில் அவரது ஸ்டைலிஷ் உடைகள் மற்றும் ஹேர்ஸ்டைல், கேர்ள்ஸிடம் ஹார்ட்டின் குவிக்க வைத்தன.

2. 'ஆதித்ய வர்மா' துருவ் விக்ரம்

அப்பா எட்டடி பாய்ந்தால், மகன் பதினாறடி பாய்கிறார் என்று சொல்லும் அளவுக்கு 'ஆதித்ய வர்மா'வில் அதிரடியாகக் களமிறங்கியிருக்கிறார் துருவ். தன்னுடைய கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக முகம் நிறைய தாடியுடன்கூடிய 'ரக்டு லுக்கில்' நடித்து ஸ்கோர் செய்து இருக்கிறார்

3. 'மிஸ்டர் லோக்கல்' சிவகார்த்திகேயன்

'மிஸ்டர் லோக்கல்' எனப் படத்தின் பெயர் லோக்கலாக இருந்தாலும், நம்ம ஹீரோ சார் படம் முழுக்க ஸ்டைலாகத்தான் வந்தார். அதுவும் பாட்டு சீன்களில் எல்லாம் ஓவர் ஜாக்கெட் போட்டுக்கொண்டு ஸ்டைலு ஸ்டைலுதான்.

ஹீரோயிஸ மீசை லுக்ஸ்!

1. 'காப்பான்' சூர்யா

போலீஸ் ஆபீசராக இருந்து, பிரதமரின் பாதுகாவலராக மாறுதல் வாங்கி, எப்போதும்போல் விரைப்பும் மிடுக்கும் எனக் கவர்ந்தார் சூர்யா. ஹேண்டில் பார் மீசை, கோட்டே(Goatee) பியர்டு என ஸ்டைலு, கெத்து.

2. 'கடாரம் கொண்டான்' விக்ரம்

டபுள் ஏஜென்டாக, கிட்டத்தட்ட ஜேம்ஸ்பாண்ட் ஃபீலை கொடுக்கும் அளவுக்கு நடிப்பு, பாடி லேங்வேஜ் என, 'கடாரம் கொண்டானி'ல் கலக்கியிருந்தார் விக்ரம். மகன் நடிக்க வந்த பிறகும் முறுக்கு மீசை, ஃபுல் பியர்டு லுக்கில் வசீகரம் குறையவில்லை நம்ம சீயானுக்கு.

3. 'பேட்டை' ரஜினி

அருவா மீசை, வெட்டருவா மீசை, கெடா மீசை, முறுக்கு மீசை என எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். இதை இதற்கு முன் எத்தனையோ நட்சத்திரங்கள் வைத்துப் பார்த்திருந்தாலும், 'பேட்டை'யில் ரஜினியை இந்த படா மீசையில் பார்த்தபோது, வேற லெவல். செம்ம வெயிட். மரண மாஸ்.