Published:Updated:

டெம்பிள் ஜூவல்லரி... டிசைன் முதல் பராமரிப்பு வரை... முழுமையான வழிகாட்டி!

தங்க நகைகளைப் பொறுத்தவரை ஆன்டிக் நகைகள், ஃபேன்ஸி நகைகள், கல் நகைகள், பெங்கால் டிசைன் நகைகள், கேரள டிசைன் நகைகள் எனப் பல ரகங்கள் உள்ளன

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி

நகை என்பது பெண்களின் அழகுக்கு அழகு சேர்ப்பது. ஆரம்பக்காலத்தில் பூக்களைக்கோத்து ஆபரணங்களாக அணிந்தார்கள். பின் கற்கள், மரத்துண்டுகள் என ஆபரணங்களின் தன்மை மாற்றம் அடைந்தது. அக்காலத்தில் பெண்கள் அணிந்ததுபோல, ஆண்களும் அதிக அளவு ஆபரணங்கள் அணிந்துள்ளனர் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. கால மாற்றத்தில் ஆபரணங்கள் பெண்களுக்குரியது ஆகின.

உலோகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின், உலோக ஆபரணங்கள் அணியத் தொடங்கிய பெண்களுக்குத் தங்க நகைகளின் மீது தீராத காதல் ஏற்பட்டது. அது இன்றுவரை தொடர்கிறது. இந்தியாவில் எளிய குடும்பங்கள் முதல் செல்வந்தர்கள் வரை, தங்களின் பொருளாதாரத்துக்கு ஏற்ப தங்க நகைகள் வாங்குவதை சம்பிரதாயமாகவே கொண்டுள்ளார்கள். தங்க நகைகள் வாங்குவது ஒருபுறம் அழகுக்காக என்றாலும், மற்றொரு புறம் சேமிப்பும்கூட என்பதுதான் இந்தியக் குடும்பங்களின் இந்தத் தங்க சேமிப்புக்கு காரணம்.

டெம்பிள் ஜூவல்லரி... டிசைன் முதல் பராமரிப்பு வரை... முழுமையான வழிகாட்டி!

தங்க நகைகளைப் பொறுத்தவரை ஆன்டிக் நகைகள், ஃபேன்ஸி நகைகள், கல் நகைகள், பெங்கால் டிசைன் நகைகள், கேரள டிசைன் நகைகள் எனப் பல ரகங்கள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட ரக நகைகள் மக்களிடம் பிரபலம் ஆகும். அந்த வகையில், டெம்பிள் ஜுவல்லரி இப்போது பெண்கள் பலராலும் விரும்பப்படுகிறது. நடிகை சமந்தா தொடங்கி பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் வரை பல செலிபிரிட்டிகளும் தங்களின் திருமணத்துக்கு டெம்பிள் நகைகளையே அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், செலிபிரிட்டிகள் முதல் நம் வீட்டுப் பெண்கள் வரை பலரும் தற்போது கடைகளில் வாங்கவும், விசேஷங்களுக்கு அணிய தேர்வு செய்வதிலும் முதன்மை யானதாக டெம்பிள் நகைகளே இருக்கின்றன.

டெம்பிள் நகைகள் என்பது என்ன? அதன் வேலைப்பாடுகளில் உள்ள சிறப்புகள், வகைகள் என்னென்ன? ஆரம் முதல் சுட்டி வரை வாங்கும்போது அதன் எடையில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? உங்கள் பட்ஜெட்டுக்கேற்ப ஆபரணம் வாங்குவதற்கான ஆலோசனை இதில் என்ன? மேலும் டெம்பிள் நகைகளின் பராமரிப்பு மற்றும் ஸ்டைலிங் என, சென்னை, சலானி ஜுவல்லரி மார்ட் சார்பாக வழங்கும் தகவல்கள் இந்த இணைப்பிதழில்... உங்கள் கண்களுக்கு விருந்தாக விதவிதமான டெம்பிள் நகைகள் புகைப்படங்களுடன்.

டெம்பிள் ஜூவல்லரி... டிசைன் முதல் பராமரிப்பு வரை... முழுமையான வழிகாட்டி!

தங்க வலத்துக்குத் தயாரா? - டெம்பிள் ஜுவல்லரி... பாரம்பர்ய நகைகள்!

டெம்பிள் நகைகள் என்பது பாரம்பர்யத்தை பிரதிபலிக்கும் வகையிலான வேலைப்பாடுகள் கொண்ட நகைகள். குறிப்பாக, தென்னிந்தியாவின் பாரம்பர்யத்தை அவை பிரதிபலிக்கின்றன. தென்னிந்தியாவின் கோபுரங்கள், சிற்பங்களின் வடிவ அமைப்புகளுடன் கற்பனைத்திறன் சேர்த்து, அதை வேலைப்பாடுகளாகக் கொண்ட ஆபரணங்களாக இவை உருவாக்கப்படுகின்றன.

டெம்பிள் ஜுவல்லரி நகைகள் கலைநயம் மிகுந்தவை. சோழர், பாண்டிய அரசர்களின் காலத்தில் கலைநயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதுவரை அழகுக்காகப் பயன்படுத்தப்பட்ட ஆபரணங்கள் சோழர்கள், பாண்டியர்கள் காலத்தின் அவர்களின் அடையாளங்களாகப் பார்க்கப்பட்டன. அரசர்கள் தங்கள் நாட்டுக்குரிய சின்னங்களை அணிகலன்களாக வடிவமைத்து அணிய ஆரம்பித்தனர்.

அதன்பின் அந்த ஆபரணங்களின் வடிவங்கள் கலாசார மாற்றம் அடைந்து இறைவனின் உருவங்கள், சிற்பங்கள் என மாறி, இன்று மேலே சொன்ன அனைத்து வேலைப்பாடுகளையும் உள்ளடக்கிய டெம்பிள் ஜுவல்லரி ஆக கொண்டாடப்படுகிறது. ஆரம்பக்காலத்தில் இந்த வகை நகைகள் அனைத்தும் கைவேலைப்பாடாக உருவாக்கப்பட்டன. தற்போது உற்பத்தி அதிகரிப்பு காரணமாக மெஷின் கட் நகைகளும் செய்யப் படுகின்றன.

டெம்பிள் ஜூவல்லரி... டிசைன் முதல் பராமரிப்பு வரை... முழுமையான வழிகாட்டி!

டெம்பிள் ஜுவல்லரி நகைகள் வாங்கும் முன்...

பொதுவாக, தங்க நகைகள் அதிக பளபளப்புத் தன்மை கொண்டிருக்கும். ஆனால், டெம்பிள் ஜுவல்லரியைப் பொறுத்தவரை பளபளக்கும் வகை யிலான ஆபரண உருவாக்கத்தில் அதன் பாரம்பர்ய டிசைன்கள் முழுமையாக வெளிப்படாது என்பதால், டெம்பிள் ஜுவல்லரிக்கு `டல் ஃபினிஷ்' கொடுக்கப்பட்டு மங்கியது போன்ற நிறத்தில் இருக்கும். எனவே, அதை பழைய நகை போன்று இருக்கிறதே என்று நினைக்க வேண்டாம். அதன் பிரத்யேக அடையாளமே அதுதான்.

எடை சற்று அதிகம்!

டெம்பிள் ஜுவல்லரி நகைகள் மிகவும் நுணுக்கமான வேலைப் பாடுகளைக் கொண்டவை. எனவே, மற்ற நகைகளைப் போல் குறைந்த கிராம் எடைகளில் இதை உருவாக்குவது எளிதானது அல்ல. கம்மல் போன்ற சிறிய அளவிலான நகைகளே குறைந்தபட்சம் 15 கிராம் எடைக்கு மேல்தான் இருக்கும்.

டெம்பிள் ஜூவல்லரி... டிசைன் முதல் பராமரிப்பு வரை... முழுமையான வழிகாட்டி!

டிசைன்கள் பல ரகம்!

டெம்பிள் ஜுவல்லரி வாங்க, உங்களுக்குப் பிடித்த டிசைன்களை ஆன்லைனில் தேடலாம். அதில் உங்களுக்குப் பிடித்த மாடலை நகைக்கடைகளில் கொடுத்து ஆபரணமாகச் செய்து தரச்சொல்லிக் கேட்கலாம் அல்லது நகைக்கடைகளில் உள்ள டெம்பிள் ஜுவல்லரி ஆபரணங்கள், ஆபரண கேட்லாக்கிலும் உங்களுக்குப் பிடித்த டிசைனைத் தேர்வு செய்யலாம் என்றாலும், டெம்பிள் ஜுவல்லரி கலெக்‌ஷன்கள் அதிகம் இருக்கும் கடைகளைத் தேர்வு செய்தால் நிறைய மாடல்களை அணிந்து பார்த்து, அதில் விரும்பியவற்றைத் தேர்வு செய்து வாங்க முடியும். ஏனெனில், சில நகைகள் புகைப்படம்/கேட்லாக்கில் பார்க்கும்போதும், அது செய்து வந்த பின்னர் அணிந்து பார்க்கும்போது உயரம், கிராண்டு லுக் போன்றவற்றில் வித்தியாசமாக, எதிர்பார்த்தபடி இல்லாமல் போகலாம்.

ஆரம்பக்காலத்தில் கோயில் மணி, மயில், அன்னம், யானை வடிவங்களில் அமைக்கப்பட்ட டெம்பிள் ஜுவல்லரி தற்போது இறை உருவங்கள், சிற்பங்களின் வடிவில் வடிவமைக்கப்படுகின்றன. டெம்பிள் ஜுவல்லரி நகைகளின் அழகே அதன் ஃபினிஷிங்கில்தான் உள்ளது. எனவே, நகை நேர்த்தியான ஃபினிஷிங்கில் இருக்கிறதா, அதில் வடிவமைக்கப்பட்டு இருக்கும் உருவங்கள் நல்ல அமைப்புடன் இருக்கின்றனவா என்பதை நன்கு பார்த்து வாங்கவும்.

டெம்பிள் ஜூவல்லரி... டிசைன் முதல் பராமரிப்பு வரை... முழுமையான வழிகாட்டி!

என்னென்ன நகை, எப்படி வாங்கலாம்?

உங்களின் பட்ஜெட்டுக்கேற்ப மோதிரம், ஜிமிக்கி, ஆரம், வளையல் என, என்ன ஆபரணம் வாங்கப்போகிறீர்கள் என்பதை முன்பே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

சில ஆபரணங்களை டூ இன் ஒன் ஆகப் பயன்படுத்தலாம். உதாரணமாக ஆரமாக வாங்கும் நகைகளை ஒட்டியாணமாகவும் பயன்படுத்தலாம்.

இது போன்று டூ இன் ஒன் ஆப்ஷன் இருக்கும் நகையைத் தேர்வு செய்தால் வெவ்வேறு லுக்கில் பட்ஜெட்டுக்குள் அசத்தலாம்.

நீங்கள் ஆரம் வாங்குகிறீர்கள் என்றால், உங்களிடம் ஏற்கெனவே இருக்கும் சோக்கர், ஜிமிக்கி போன்றவற்றுக்குப் பொருத்தமான டிசைனில் அதை வாங்கினால், ஒரு ‘செட்’ ஆக அது அமைந்துவிடும். அணியும்போது பார்க்க அழகாக ஒன்றுக்கொன்று மேட்சிங்காக இருக்கும். செலவும் குறையும்.

ஒரு தலைமுறை பயன்படுத்திய நகையை அடுத்தடுத்த தலைமுறை யினருக்குக் கொடுக்கும் ‘குடும்ப நகை’ சென்டிமென்ட் மற்றும் வழக்கம் இருப்பவர்களுக்கு, டெம்பிள் ஜுவல்லரி நல்ல தேர்வாக அமையும். ஏனெனில், டெம்பிள் ஜுவல்லரி டிசைன்கள் எந்தத் தலைமுறையினர் எப்போது அணிந்தாலும் டிரெடிஷனலான லுக் கொடுக்கும். எனவே

அவுட் ஆஃப் டிரெண்ட் பற்றியெல்லாம் கவலைப்படத் தேவையில்லை. ‘இது எங்க பாட்டியோட நகை’ என்று சொல்லி பேத்தி அணிந்தாலும், அப்போதும் அதற்கு மவுசு குறைந்திருக்காது.

நீங்கள் வாங்கும் நகையில் அன்கட் டைமண்ட், ரூபி, முத்து என நவரத்தினங்களில் எவை வேண்டுமானாலும் பொருத்தப்பட்டு இருக்கலாம். கெம்ப் ஸ்டோன்களும் பொருத்தப்பட்டிருக்கலாம். எது பொருத்தப்பட்டு இருந்தாலும், அதன் தரம் பற்றிக் கேட்டு அதுகுறித்து ஒருமுறை உறுதி செய்துகொள்ளுங்கள்.

டெம்பிள் ஜூவல்லரி... டிசைன் முதல் பராமரிப்பு வரை... முழுமையான வழிகாட்டி!

பேக் செயின் (Back Chain) தேவையா?

உங்களுக்கு ஒரு நெக்பீஸ் (கழுத்தில் அணியும் நகை) பிடித்திருக்கிறது. ஆனால், பட்ஜெட் கை மீறுகிறது என்றால், அந்த நெக்பீஸுக்கு தங்கத்திலான பேக் செயினைத் தவிர்த்து, பேக் ரோப்கள் (Back Rope) பயன்படுத்திக்கொள்ளலாம். செலவு குறையும். அதன்பின் இயலும்போது பேக் செயின் வாங்கிப் பொருத்திக்கொள்ளலாம்.

பேக் செயினைப் பொறுத்தவரை, எல்லா நகைகளுக்கும் கழற்றி மாட்டிக்கொள்ளக்கூடிய வகையில் ஹூக் இருப்பதாகப் பார்த்து வாங்கினால், ஒரே பேக் செயினை பல நெக்பீஸ்களுக்கும் மாற்றி மாற்றி பயன்படுத்திக்கொள்ளலாம். ஒவ்வொரு நெக்பீஸுக்கும் பேக் செயினில் 4 முதல் 6 கிராம்கள் என செலவழிக்க வேண்டியதைத் தவிர்க்கலாம்.

டெம்பிள் ஜூவல்லரி... டிசைன் முதல் பராமரிப்பு வரை... முழுமையான வழிகாட்டி!

தரம் முக்கியம்!

செய்கூலி, சேதாரம் போன்றவற்றைப் பொதுவான வரையறையைப் பின்பற்றாமல் தங்கள் நோக்கத்துக்கேற்ப பில்லில் சேர்க்கும் நகைக்கடை களைத் தவிர்த்துவிடுங்கள். பொதுவாக, டெம்பிள் நகைகளுக்கு சேதாரம் 16% முதல் 40% வரை நிர்ணயிக்கப்படும். எக்காரணம் கொண்டும் தரத்தில் சமரசம் வேண்டாம். எனவே, நம்பிக்கைக்கு உரிய கடைகளைத் தேர்வு செய்து வாங்குங்கள். எப்போது தங்கம் வாங்கினாலும், கடைக்காரர்கள் கொடுக்கும் இலவசம், சலுகைகளைவிட, தங்கத்தின் தரத்துக்கே முக்கியத் துவம் கொடுங்கள்.

ஃபினிஷிங்... பிரத்யேக அழகு!

டெம்பிள் ஜுவல்லரிகள் மேட் ஃபினிஷ் (Matt finish), கெரு ஃபினிஷ் (Geru finish) என இரண்டு வகையான ஃபினிஷிங்கில், இரண்டு வகையான நிறங்களில் கிடைக்கின்றன. `மேட் ஃபினிஷ்' என்பது

கறுப்பு ஷேடில் (Shade) ஆன்டிக் நகை போன்ற நிறத்தில் இருக்கும். `கெரு ஃபினிஷ்' என்பது மெரூன் ஷேடில் இருக்கும். இந்த ஃபினிஷிங் ஒரு ‘கோட்டிங்’ (Coating) போலதான் என்பதால், நீங்கள் நகை வாங்கும் போது கெரு ஃபினிஷிங்கில் வாங்குகிறீர்கள் என்றால் எப்போது வேண்டு மானாலும் மேட் ஃபினிஷிங்குக்கு மாற்றிக்கொள்ளலாம். அதே போன்று மேட் ஃபினிஷிங் நகை வாங்கினால் எப்போது வேண்டுமானாலும் கெரு ஃபினிஷிங்குக்கு மாற்றிக்கொள்ள முடியும். இது டெம்பிள் ஜுவல்லரியின் கூடுதல் ப்ளஸ்.

டெம்பிள் ஜூவல்லரி... டிசைன் முதல் பராமரிப்பு வரை... முழுமையான வழிகாட்டி!

உங்களுக்குப் பிடித்த ஆபரணம் என்ன?!

டெம்பிள் ஜுவல்லரி நகைகளைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் கழுத்தில் அணியும் நெக்பீஸ் நகைகள்தாம் வழக்கத்தில் இருந்தன. இப்போது கம்மல், ஒட்டியாணம், வளையல் எல்லா வகையான ஆபரணங்களும் கிடைக்கின்றன. வேலைப்பாடுகள் மிகுந்த நகை என்பதால் பெரிய ஆபரணங்களைக் குறைந்தபட்சம் 60 கிராம் எடையிலிருந்துதான் வாங்க இயலும். அந்த நகைகளின் கண்கவர் டிசைன்கள் இங்கே...

டெம்பிள் ஜூவல்லரி... டிசைன் முதல் பராமரிப்பு வரை... முழுமையான வழிகாட்டி!

ஆரம்

பட்டுப்புடவை அணிந்து ஒரு பெரிய ஆரம் அணிந்தாலே கிராண்டாக இருக்கும். ஆரம் வாங்க விரும்பினால் 100 கிராம் எடையிலிருந்து வாங்க இயலும். அதற்குக் குறைந்த கிராமில் வாங்கும்போது, ஆரத்தில் உள்ள டிசைன்கள் நன்றாக வெளிப்படாது.

டெம்பிள் ஜூவல்லரி... டிசைன் முதல் பராமரிப்பு வரை... முழுமையான வழிகாட்டி!

கம்மல்

டெம்பிள் ஜுவல்லரி நகையில் லைட் வெயிட்டான கம்மல் எனில் 10 கிராமில் இருந்து வாங்கலாம்.

டெம்பிள் ஜூவல்லரி... டிசைன் முதல் பராமரிப்பு வரை... முழுமையான வழிகாட்டி!

ஜிமிக்கி

ஜிமிக்கி கம்மல் மீது பெண்களுக்கு எப்போதும் தீராத ஆசை இருக்கும்.

24 கிராமில் இருந்து டெம்பிள் ஜுவல்லரி ஜிமிக்கி வாங்க இயலும்.

டெம்பிள் ஜூவல்லரி... டிசைன் முதல் பராமரிப்பு வரை... முழுமையான வழிகாட்டி!

மிட் லென்த் மாலை

மார்பு அளவுக்கு வருவது போன்ற உயரத்திலான மாலைகளை, மிட் லென்த் (mid length) மாலை என்கிறார்கள். இதை குறைந்தபட்சம் 40 கிராம் அளவிலிருந்து வாங்க இயலும்.

டெம்பிள் ஜூவல்லரி... டிசைன் முதல் பராமரிப்பு வரை... முழுமையான வழிகாட்டி!

சோக்கர்

கழுத்தை ஒட்டி அணியும் நகைகளை `சோக்கர்' என்கிறார்கள். நார்த் இந்தியன் லுக்கை விரும்பும் பெண்கள் சோக்கரை விரும்பி அணிவார்கள். நம்முடைய பாரம்பர்யத்தில் அட்டிகை என்று குறிப்பிடப்படும் கழுத்தை ஒட்டிய நகைகளும் இந்த வகையே. டெம்பிள் ஜுவல்லரியில் சோக்கர் வாங்க விரும்புபவர்கள் குறைந்தபட்சம் 45 கிராமில் இருந்து வாங்க இயலும்.

டெம்பிள் ஜூவல்லரி... டிசைன் முதல் பராமரிப்பு வரை... முழுமையான வழிகாட்டி!

வளையல்

டெம்பிள் ஜுவல்லரியில் ஒரு வளையல் அணிந்தாலும் கிராண்டு லுக் தரும். அதை 40 கிராமில் இருந்து வாங்க இயலும். வளையல்களில் திருகாணி கொண்டு பொருத்துவது, ஓப்பன் டைப், வழக்கமான வட்ட வடிவ வளையல்கள் எனப் பல ரகங்கள் உள்ளன. ஒரு வளையல் மட்டும் வாங்கி, ஒரு கைக்கு மட்டும்கூட ‘படா பேங்கிள்’ போல அணிந்துகொள்ளலாம். பட்ஜெட்டில் எடையும் விலையும் குறையும்.

டெம்பிள் ஜூவல்லரி... டிசைன் முதல் பராமரிப்பு வரை... முழுமையான வழிகாட்டி!

வங்கி

பெண்கள் கைப்பகுதியில் பிளவுஸ்களின் மீது அணியும் வங்கி, பாரம்பர்ய லுக் கொடுக்கும். குறிப்பாக, முகூர்த்த தினத்தன்று மணப்பெண்ணும், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு பெண்களும் இதை அணியும்போதும் ஹைலைட்டாக இருக்கும். டெம்பிள் ஜுவல்லரியில் ஒரு கைக்கான வங்கி 50 கிராமில் இருந்து வாங்க இயலும்.

டெம்பிள் ஜூவல்லரி... டிசைன் முதல் பராமரிப்பு வரை... முழுமையான வழிகாட்டி!

நெத்திச்சுட்டி

சிம்பிளான சிங்கிள் லைன் நெத்திச்சுட்டியை குறைந்தபட்சம் 15 கிராமில் இருந்து வாங்கலாம்.

டெம்பிள் ஜூவல்லரி... டிசைன் முதல் பராமரிப்பு வரை... முழுமையான வழிகாட்டி!

கொண்டைக் குச்சி

மணநாளில் கூந்தலை கொண்டையிட்டுக் கொள்வது தற்போதைய ஃபேஷனாக உள்ளது. கொண்டையிட விரும்பும் பெண்கள் கொண்டைக் குச்சி பயன்படுத்தலாம். கொண்டைக் குச்சியை 24 கிராமில் இருந்து வாங்க இயலும்.

டெம்பிள் ஜூவல்லரி... டிசைன் முதல் பராமரிப்பு வரை... முழுமையான வழிகாட்டி!

குஞ்சம்

தங்கக் குஞ்சம் விரும்பும் பெண்கள், உங்களுக்குப் பிடித்த வடிவத்தில் தங்கக் குஞ்சம் செய்துகொள்ளலாம். இதை 50 கிராமில் இருந்து வாங்க இயலும்.

டெம்பிள் ஜூவல்லரி... டிசைன் முதல் பராமரிப்பு வரை... முழுமையான வழிகாட்டி!

ஜடை அலங்காரம்

பூ ஜடைகளுக்குப் பதிலாக தங்கத்திலான ஜடைகள் இப்போது விரும்பப்படுகின்றன. டெம்பிள் ஜுவல்லரி மாடலில் தங்க ஜடை அலங்காரத்தை 300 கிராமில் இருந்து வாங்க இயலும்.

டெம்பிள் ஜூவல்லரி... டிசைன் முதல் பராமரிப்பு வரை... முழுமையான வழிகாட்டி!

பிரைடல் செட்

ஆரம், சோக்கர் நெக்பீஸ், ஒட்டியாணம், வளையல், கம்மல், நெத்திச்சுட்டி என முழு பிரைடல் செட்டும் டெம்பிள் ஜுவல்லரியில் வாங்க விரும்புகிறீர்கள் என்றால் 500 கிராம் முதல் 600 அளவில் வாங்க இயலும். பட்ஜெட் குறைவு எனில் ஆரம், நெக்பீஸ், வளையல், கம்மல் மட்டும் வாங்கி அணிந்தாலும் கிராண்டாக இருக்கும்.

டெம்பிள் ஜூவல்லரி... டிசைன் முதல் பராமரிப்பு வரை... முழுமையான வழிகாட்டி!

ஸ்டைலிங் டிப்ஸ்..!

டெம்பிள் ஜுவல்லரி நகைகள் பொதுவாக டிரெடிஷனல் ஆடை களுக்குப் பொருத்தமாக இருக்கும். என்றாலும், டிரெடிஷனலான பட்டுப் புடவைகளுக்குத்தான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.

நீங்கள் நகை வாங்கும்போது டிரெடிஷனல், டிரெண்டி என இரண்டு ஆடைகளுக்கும் பொருந்திப் போகும் வகையிலான நகைகளைத் தேர்வு செய்து வாங்கினால், இரண்டு வகை ஆடைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். டிரெண்டியான ஆடைகளுக்கு டெம்பிள் ஜுவல்லரி நகைகளை நீங்கள் அணியும்போது இண்டோ வெஸ்டர்ன் லுக் கிடைக்கும்.

டெம்பிள் ஜுவல்லரியில் கொஞ்சம் ஃபேன்ஸியான நகைகள் வேண்டு மெனில், தற்போது டிரெண்டில் இருக்கும் இரண்டு, மூன்று, ஐந்து வரிசை முகப்புச் செயின் மாடல் வாங்கலாம். அந்த செயின் தங்க செயினாக இல்லாமல், தங்க மணிகள் அல்லது முத்துகளால் ஆனதாக தேர்வு செய்து வாங்கலாம்.

டெம்பிள் ஜுவல்லரியில் பெண்டன்ட் தனியாகக் கிடைக்கிறது. அதைத் தேவையான செயினுடன் மிக்ஸ் - மேட்ச் செய்து உங்கள் லுக்குக்கு ஏற்ப ஸ்டைலிங் செய்துகொள்ள முடியும்.

டிசைனர் புடவைகளுக்கு டெம்பிள் ஜுவல்லரியை மேட்ச் செய்யப் போகிறீர்கள் என்றால் ஜிமிக்கி அல்லாமல் டெம்பிள் ஜுவல்லரியில் இருக்கக்கூடிய டிசைனர் கம்மல்களை நீங்கள் பயன்படுத்தலாம்.

டெம்பிள் ஜூவல்லரி... டிசைன் முதல் பராமரிப்பு வரை... முழுமையான வழிகாட்டி!

பட்டுப்புடவை அணிந்து டெம்பிள் ஜுவல்லரியில் கிராண்டான ஆரம் அணிகிறீர்கள் என்றால் அதற்கு மேட்சிங்கான சோக்கர், ஜிமிக்கி அணிந்தால் மிகவும் கிராண்ட் லுக் கிடைக்கும்.

டெம்பிள் ஜுவல்லரியில் பெரிய கம்மல் அணிகிறீர்கள் என்றால் நெக்பீஸ் எதுவும் அணியாமல்கூட விடலாம். அதன் பிரசன்ஸ் (Presence) அவ்வளவு நிறைவாக இருக்கும். இந்த லுக் டிரெண்டியாகவும் இருக்கும்.

டெம்பிள் ஜுவல்லரியில் உங்களிடம் சோக்கர் மட்டும் இருக்கிறது எனில், சோக்கர் அணிந்து அதற்குப் பொருத்தமான கம்மல் அணிந்தாலே போதும்... முழுமையாக, அழகாக இருக்கும்.

சிலர் அஷ்டலட்சுமி, சீதா கல்யாணம், ராதா - கண்ணன் எனத் தனித்துவமான டிசைன் கொண்ட ஆரங்களைத் தேர்வு செய்து வாங்கு வார்கள். மற்ற ஆபரணங்களை அதனுடன் மேட்ச் செய்யும்போது,

அவை அதே டிசைன் நகைகளாக இல்லாமல் இருக்கலாம். என்றாலும், மேட் ஃபினிஷ், கெரு ஃபினிஷ் என அதே ஃபினிஷிங் இருப்பது போன்ற நகைகளைத் தேர்வு செய்து வாங்கினால் மேட்சிங்காக இருக்கும்.

டெம்பிள் ஜூவல்லரி... டிசைன் முதல் பராமரிப்பு வரை... முழுமையான வழிகாட்டி!

நீங்கள் பார்த்து வியந்த சிற்பங்கள், ஓவியங்களைக்கூட டெம்பிள் ஜுவல்லரி நகைகளாக மாற்ற முடியும். உரிய புகைப்படங்களுடன் நகைக்கடைகளை அணுகலாம். ஆனால், இதுபோன்ற கஸ்டமைஸ்டு நகைகள் செய்ய ஒரு மாதத்துக்கு மேலாக அவகாசம் தேவைப்படலாம். பொறுமை அவசியம்.

பொதுவாக லட்சுமி, விநாயகர் உருவங்கள் பொறிக்கப்பட்ட டெம்பிள் ஜுவல்லரிகள்தாம் பெரும்பாலான பெண்களின் தேர்வாக இருக்கிறது. நீங்கள் கொஞ்சம் மாற்றித் தேர்வு செய்தால் தனித்துவமாக இருக்கும்.

டெம்பிள் ஜூவல்லரி... டிசைன் முதல் பராமரிப்பு வரை... முழுமையான வழிகாட்டி!

பராமரிப்பு முக்கியம்!

டெம்பிள் ஜுவல்லரியை விரும்பி வாங்கும் ஆர்வத்தை, அதைப் பராமரிப்பதிலும் காட்ட வேண்டும். ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் நகையை ஒரு காட்டன் துணியால் துடைத்து வைக்கவும். தண்ணீர், சோப்பு, துணி துவைக்கும் பவுடர், ஷாம்பூ போன்றவற்றைப் பயன்படுத்தி சுத்தம் செய்யக் கூடாது. அதன் ஃபினிஷிங் பொலிவிழந்துவிடும்.

டெம்பிள் ஜுவல்லரி நுணுக்கமான டிசைன் கொண்டது என்பதால், அதை அன்றாடம் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அதை அணிந்தபடியே அன்றாட வேலைகளைச் செய்வதையும் தவிர்க்க வேண்டும். விசேஷம் முடிந்து வீடு திரும்பிய உடனேயே கழற்றி வைத்து விட வேண்டும்.

டெம்பிள் ஜூவல்லரி... டிசைன் முதல் பராமரிப்பு வரை... முழுமையான வழிகாட்டி!

உங்கள் நகையை பாலிஷ் போட வேண்டும் என்றாலோ, நகையின் ஃபினிஷிங் நிறத்தை மாற்ற வேண்டும் என்று நினைத்தாலோ, நீங்கள் அந்த நகையை வாங்கிய கடையிலேயே கொடுத்து பாலிஷ் செய்வது நல்லது.

பாடி ஸ்பிரே, பெர்ஃபியூம்கள் போன்றவை நகையின் பொலிவை பாதிக்கும் என்பதால், டெம்பிள் ஜுவல்லரி நகையை அணிந்த பிறகு பெர்ஃபியூம்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

ஒருவருக்கு ஒருவர் நகையை மாற்றி அணியும்போது, அந்த நகையை சுத்தமான துணியைப் பயன்படுத்தித் துடைத்து அதன் பின் பயன்படுத்தினால் சுகாதாரமின்மைக் காரணங்களால் ஏற்படக்கூடிய அலர்ஜி, அரிப்பு போன்ற வற்றை தவிர்க்கலாம்.

டெம்பிள் ஜூவல்லரி... டிசைன் முதல் பராமரிப்பு வரை... முழுமையான வழிகாட்டி!

அடிக்கடி மாற்றுவதைத் தவிர்க்கவும்!

அதிக எடை மற்றும் வேலைப்பாடுகள் கொண்ட டெம்பிள் ஜுவல்லரியை வாங்கும்போது செய்கூலி, சேதாரம் அதிகமாக இருக்கும்; பட்ஜெட்டும் அதிகம் ஆகும். எனவே, டெம்பிள் ஜுவல்லரியை வாங்கும்போது பல டிசைன்களையும் பார்த்து, மனசுக்குப் பிடித்ததாக வாங்கவும். நகை வாங்கிய பிறகு டிசைன் பிடிக்கவில்லை என்று மாற்றினால், செய்கூலி, சேதாரத்தில் அதிகப் பணம் வீணாக நேரிடும். எனவே, ‘பிடிக்கவில்லை என்றால் பின்னர் மாற்றிக்கொள்ளலாம்’ என்று மற்ற நகைகளை வாங்கும்போது நினைப்பதுபோல டெம்பிள் ஜுவல்லரியைக் கையாள்வதைத் தவிர்க்கவும்.

கற்கள் தவிர்க்கவும்!

டெம்பிள் ஜுவல்லரி நகைகளைப் பொறுத்தவரை அதில் பதிக்கப்பட்டிருக்கும் கற்களுக்குத் தனி விலை போடப்படுவது இல்லை; அதேபோல கற்களின் எடை ஆபரண எடையில் இருந்து கழிக்கப்படுவதும் இல்லை. கற்களுக்கும் தங்கத்தின் எடையே கணக்கிடப்படும். சிலருக்கு, கற்கள் பதித்த நகைகள் மிகவும் பிடிக்கும். சிலருக்கோ கற்கள் கொண்ட நகையால் பட்ஜெட் கை மீறும். எனவே, பட்ஜெட்டை குறைக்க விரும்பினால், அதிக அளவு கல் வேலைப்பாடுகள் இல்லாத நகைகளாகத் தேர்வு செய்து வாங்கலாம். நகையில் கற்களின் பயன்பாடு குறையும்போது, நகையின் எடையும் குறையும். நகையின் எடை குறையும்போது பட்ஜெட்டும் குறையும்.

டெம்பிள் ஜூவல்லரி... டிசைன் முதல் பராமரிப்பு வரை... முழுமையான வழிகாட்டி!

ஹால்மார்க் முத்திரை!

மற்ற நகைகளைப் போலவே, டெம்பிள் ஜுவல்லரி நகை வாங்கும்போதும் அதில் ஹால் மார்க் முத்திரை இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும். இந்தியத் தரக்கட்டுப்பாட்டு நிறுவனமான பி.ஐ.எஸ் (BIS - Bureau of Indian Standards), தங்க நகைகளுக்கு வழங்கும் `ஹால்மார்க்' முத்திரையில் கீழ்க் காணும் அம்சங்களின் அடிப்படையில் அதன் தரம் உறுதி செய்யப்படுகிறது.

1. முக்கோண வடிவ ஹால்மார்க் லோகோ.

2. தங்கத்தின் தூய்மையைக் குறிக்கும் மூன்று இலக்க எண். உதாரணமாக, 916 என்றால் 91.6% தூய தங்கம் (22 காரட்). தங்கத்தின் தூய்மைக்கு ஏற்ப இந்த மூன்று இலக்க எண் மாறுபடும்.

3. அந்த நகைக்கு `பி.ஐ.எஸ்’ தரச்சான்று வழங்கிய மதிப்பீட்டு மையத்தின் முத்திரை (இந்தியாவில் ஏறக்குறைய 900 ஹால்மார்க் மதிப்பீட்டு மையங்கள் உள்ளன).

4. `பி.ஐ.எஸ்’ முத்திரை வழங்கப்பட்ட ஆண்டைக் குறிக்கும் ஆங்கில எழுத்து (2000-ம் வருடத்தில் இருந்து `பி.ஐ.எஸ்’ முத்திரை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வருடம் முத்திரை வழங்கப்பட்ட நகைகளில் ‘A’ என்ற எழுத்தும், 2001-ம் வருடம் முத்திரை வழங்கப் பட்ட நகைகளில் `B’ என்ற எழுத்தும், 2002-ம் வருடத்துக்கு

‘C’ என்ற எழுத்தும் என இப்படியே ஒவ்வோர் ஆண்டுக்கும் வரிசை நகர்ந்துகொண்டே வரும். நடப்பு ஆண்டுக்கு, அதாவது 2021-க்கு ‘U’ என்ற எழுத்து இருக்கும்).

5. நகை விற்பனையாளரின் முத்திரை.

டெம்பிள் ஜூவல்லரி... டிசைன் முதல் பராமரிப்பு வரை... முழுமையான வழிகாட்டி!
டெம்பிள் ஜூவல்லரி... டிசைன் முதல் பராமரிப்பு வரை... முழுமையான வழிகாட்டி!

ஜுவல் பாக்ஸ்

ஆபரணங்கள் மட்டுமல்ல... குங்குமச் சிமிழ் போன்று பூஜையறை மற்றும் அலங்காரப் பொருள்களும் டெம்பிள் ஜுவல்லரி டிசைனில் கிடைக்கின்றன. உங்களின் பட்ஜெட்டுக் கேற்ப தேவையான எடையில் வாங்கிக் கொள்ளலாம். உங்களுக்கு விருப்பமான பொருள்களை ஆர்டர் கொடுத்தும் வாங்கலாம்.

ஒரே நிறக் கற்கள்!

முழு பிரைடல் செட் வாங்குகிறீர்கள் என்றால் சோக்கர் நெக்பீஸ், ஆரம், வளையல், கம்மல் என எல்லாவற்றிலும் ஒரே மாதிரியான டிசைன், ஃபினிஷிங் இருப்பது போன்று தேர்வு செய்து வாங்குங்கள். அந்த எல்லா நகைகளிலும் ஒரே நிறத்திலான கற்கள் பதிக்கப்பட்டு இருந்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.

வெல்வெட் அட்டைப்பெட்டிகள் வேண்டாம்!

பொதுவாக நகைகள் வாங்கும்போது நகைகளை பத்திரப் படுத்தி வைக்க நகைக் கடைகளில் வெல்வெட் துணியால் ஆன அட்டைப்பெட்டிகள் தருவார்கள். வெல்வெட் அட்டைப் பெட்டியில் உள்ள பசை நாளடைவில் நகைகளின் மீது பட்டு நகை கறுத்துப்போக வாய்ப்பு இருப்பதால், வெல்வெட் அட்டைப் பெட்டிகளில் நகைகளை வைப்பதைத் தவிர்க்கவும். மாறாக, நகைகளைச் சுத்தமான பருத்தித் துணியில் சுத்தி, அதன் டிசைன்கள் மடங்கி சேதாரமாகிவிடாதபடி நீள வாக்கில் பிளாஸ்டிக் டப்பாக்களில் வைத்து, எடுத்துப் பயன்படுத்தலாம். வங்கி லாக்கரில் நகைகளை வைக்கும் போது இதையே பின்பற்றவும்.

டெம்பிள் ஜூவல்லரி... டிசைன் முதல் பராமரிப்பு வரை... முழுமையான வழிகாட்டி!

இது மிக முக்கியம்!

நகைகள் வாங்கிய பில்லை எப்போதும், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பத்திரப்படுத்துங்கள். தங்கத்தின் தரத்தில் குறைபாடு இருக்கிறது எனில் உங்களிடம் நகைக்கான பில் இருந்தால் மட்டுமே வழக்கு தொடர்பாகவோ, நுகர்வோர் நீதிமன்றத்திலோ உங்களது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு