Published:Updated:

பிளைன் புடவை நயன்தாரா முதல் பனாரஸி துப்பட்டா கீர்த்தி சுரேஷ் வரை... டிரெஸ்ஸிங்கில் டாப் 10 ஹீரோயின்ஸ்!

நயன்தாரா முதல் கீர்த்தி சுரேஷ் வரை...

நயன்தாரா, ஜோதிகா, த்ரிஷா, சமந்தா என ஆஃப் ஸ்கிரீன் டிரெஸ்ஸிங் சென்ஸில் டாப் 10 நடிகைகள் யார் யார்?

பிளைன் புடவை நயன்தாரா முதல் பனாரஸி துப்பட்டா கீர்த்தி சுரேஷ் வரை... டிரெஸ்ஸிங்கில் டாப் 10 ஹீரோயின்ஸ்!

நயன்தாரா, ஜோதிகா, த்ரிஷா, சமந்தா என ஆஃப் ஸ்கிரீன் டிரெஸ்ஸிங் சென்ஸில் டாப் 10 நடிகைகள் யார் யார்?

Published:Updated:
நயன்தாரா முதல் கீர்த்தி சுரேஷ் வரை...

பிளாக் அண்ட் வொயிட் காலத்திலிருந்து இன்ஸ்டாகிராம் காலம்வரை பெண்களுக்கான டிரெஸ்ஸிங் டிரெண்டை நிர்ணயிக்கிறவர்கள் நடிகைகள்தாம். நதியா கொண்டை, குஷ்பு பிளவுஸ், ஜோதிகா க்ளிப், சந்திரமுகி புடவை, தேவசேனா நகைகள் என்று நடிகைகள் மற்றும் அவர்கள் ஏற்று நடித்த கதாபாத்திரங்களின் ஆடை, அணிகலன்கள்தான் பெண்களைக் கவர்ந்திழுக்கும் விஷயமாக இருக்கின்றன.

ட்ரெண்டு செட்டர்
ட்ரெண்டு செட்டர்

சினிமா கதாபாத்திரங்கள் தவிர்த்து, நிஜ வாழ்க்கையிலும் தாங்கள் அணியும் உடை, தோற்றம் என ரசிகர்கள் மத்தியில் டிரெண்ட் செட்டராக வலம் வரும் சில நடிகைகளின் பட்டியலைப் பார்ப்போம்...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`ஸ்டைல் ஐகான்' நயன்தாரா

ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய தோற்றத்தில் சிறுசிறு மேஜிக் செய்து வித்தியாசமாகத் தோன்றும் நயன், சினிமாவைத் தவிர பொது நிகழ்ச்சிகளுக்கு வரும்போதும் அனைத்து பிரபலங்களுக்கு மத்தியிலும் தனித்துத் தெரியும் தோற்றம்தான் அவரின் ப்ளஸ்.

பாரம்பர்ய உடைகள்

காட்டன் சில்க், கோட்டா சில்க், காதி, கைத்தறி புடவை போன்ற லைட் வெயிட் புடவைகள்தான் நயனின் ஆல்டைம் ஃபேவரைட். பிளைன் புடவையாக இருந்தாலும், தேர்ந்தெடுக்கும் வித்தியாசமான நிறங்களில் தன்னுடைய தோற்றத்தை மெருகேற்றிவிடுவார். புடவைக்கு, போட் நெக், மாண்டரின் காலர், ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் மற்றும் டிசைனர் ஆன்டிக் நகைகள்தான் இவரின் சாய்ஸ்.

மாடர்ன் உடைகள்

சாதாரண ஜீன்ஸ், த்ரீ ஃபோர்த் பேன்ட், வெஸ்டர்ன் டாப்ஸ் அணிந்தாலும் ரோல் அப் டேப் ஸ்லீவ் ஷர்ட்ஸ் (Roll - up Tap Sleeve), ஓவர் ஜாக்கெட், டெனிம் ஷ்ரக் (Denim Shrug), ஃப்ரன்ட் நாட்டட் ஷர்ட் ( Front Knoted Shirt) என உடைகளின் வடிவமைப்பில் சில வித்தியாசங்களைக் காட்டுகிறார். இதுபோன்ற உடைகளுக்கு சிறிய கம்மல், கைக்கடிகாரம் மட்டுமே அணிகிறார்.

க்ளிப் செய்யப்பட்ட `வேவி' ஹேர்ஸ்டைல்தான் இவரின் எவர்கிரீன் டிரெண்ட். ஆய்லி மேக்கப்பை தாண்டி அழகிய புன்னகையால் வசீகரிப்பது நயனின் ப்ளஸ். மொத்தத்தில் நயன்தாரா மேக்கப், நயன்தாரா நகைகள், நயன்தாரா ஹேர்ஸ்டைல் என இவரது ஸ்டைலை வெறித்தனமாக ஃபாலோ செய்கிறார்கள் இவரின் ரசிகைகள்.

டிரெண்ட் செட்டர்!

Nayanthara
Nayanthara

சமந்தா

புடவையிலும் குழந்தை சிரிப்பில் மனதை கொள்ளைகொள்பவர் சமந்தா. சினிமாக்களில் டிரெடிஷனல் தோற்றத்தைவிட டிரெண்டியாக வலம்வரும் இவர், பொது நிகழ்ச்சிகளுக்கு வரும்போது புதுமையான தோற்றத்தில் வந்து அசத்துவார்.

பாரம்பர்ய உடைகள்

நமது பாரம்பர்யத்துடன் அயல்நாட்டு கலாசாரத்தையும் கலந்து இண்டோ வெஸ்டர்ன் பாணியில் உடையணிவது சமந்தாவின் சாய்ஸ். தோதி புடவை மற்றும் டிசைனர் புடவையுடன் விதவிதமான வெஸ்டர்ன் பிளவுஸ் அணியும் வித்தியாச விரும்பி. தனது பிங்கி சருமத்தை பிரதிபலிப்பது போன்ற பேபி பிங்க், பீச் பிங்க், பீச் ஆரஞ்சு, பேஜ் கலர் என மிதமான நிறங்களில் பிரகாசிப்பார்.

மாடர்ன் உடைகள்

ஜம்ப் சூட் (Jump Suit) போன்ற ரோம்பர் டிரெஸ், ஷிஃப்ட் டிரெஸ், ஸ்ட்ராப்லெஸ் டிரெஸ் எனக் குழந்தைத்தனத்தை தன்னுடைய உடையிலும் வெளிப்படுத்தும் க்யூட்டி.

சருமத்தின் மிருதுத்தன்மையை பாதிக்காதவகையில் நியூடு மேக்கப், நோ மேக்கப் லுக், ஆய்லி மேக்கப் மற்றும் ஃப்ரீ கர்ள்ஸ், ஸ்லீக் ஹேர் ஸ்டைல், மெஸ்ஸி ஃபிஷ்டெய்ல் போன்றவை சமந்தாவின் ஸ்டைல் ஸ்டேட்மென்ட்.

இண்டோ வெஸ்டர்ன் உடைக்கு ஏற்றவாறு வின்டேஜ் லுக் நகைகள் மற்றும் சாந்த்பாலி வகை கம்மல்கள் அணிவதும், மாடர்ன் உடைகளுக்கு சிங்கிள் ஸ்டோன் கம்மல், ரிங் ஸ்டைல் கம்மல்கள் அணிவதும் வழக்கம். ஆனால், பெரும்பாலும் நகைகளுக்கு தடா போட்டுவிடுகிறார்.

க்யூட்டி பியூட்டி!

Samantha
Samantha

`டிரெண்டி' த்ரிஷா

த்ரிஷாவுக்கு கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாமல் இளம் நடிகர்கள் மத்தியிலும் தனி க்ரேஸ் இருக்கிறது. த்ரிஷாவின் இளமை சீக்ரெட்டில் ஒன்று, சமகால டிரெண்டை அப்டேட் செய்துகொண்டே இருப்பது.

பாரம்பர்ய உடைகள்

பட்டுப்புடவை, காட்டன் சில்க், டிசைனர் சாரி, அதற்கு மேட்ச்சாக ஆனால் கண்களை உறுத்தாதவாறு டிசைன் செய்யப்பட்ட பிளவுஸ் என, நடிகை மற்றும் சாமானியப் பெண் என இரண்டுக்கும் நடுவே மெயின்டெய்ன் பண்ணுவதுதான் த்ரிஷாவின் ஸ்டைல். டார்க், பிரைட், பேஸ்டல் என அனைத்து நிறங்களுக்கும் 'டிக்'தான். புடவையில் இவரது உயரமே இவருக்கு ப்ளஸ்ஸாக அமைந்துவிடும்.

மாடர்ன் உடைகள்

கல்லூரிப் பெண்களுக்குப் போட்டியாகத் தற்போதைய ஹாட் டிரெண்டை விரல் நுனியில் வைத்திருப்பதுதான் இவரின் இளமை ரகசியம். டீன் பெண்களின் ஆல் டைம் ஃபேவரைட்டான ஜீன்ஸ் டி ஷர்ட், மேக்ஸி டிரெஸ், ஏ லைன் டிரெஸ் போன்ற ரெகுலர் உடைகளையும் அணிவார்.

தவிர, இவரின் தோற்றத்தை சிறப்பிக்கும் டிரேப்டு டிரெஸ், ஹால்டர் நெக் டிரெஸ், ஒன் ஷோல்டர் டிரெஸ் போன்ற தனித்துவமான வெஸ்டர்ன் டிரெஸ்களுக்கும் இவரின் வார்ட்ரோபில் இடம் உண்டு. அளவான மேக்கப்புடனான பளிச் லுக், மினிமம் நகைகள் என மிதமான அழகில் ஜொலிப்பவர். மொத்தத்தில் புடவையில் நீட் லுக், மாடர்ன் டிரெஸ்ஸில் க்யூட் லுக்.

ஸ்டைல் பேக்கேஜ்!

Trisha
Trisha

அமலா பால்

`மைனா'வாக பாவாடை, தாவணியில் அறிமுகமாகி, புடவை, சுடிதார், மாடர்ன் உடைகள் என அனைத்திலும் தன்னை அழகாக வெளிப்படுத்திக்கொள்பவர் அமலாபால்.

பாரம்பர்ய உடைகள்

ஆன் ஸ்க்ரீன் தவிர இவரை புடவையில் பார்ப்பது அரிது. ஸீ த்ரூ புடவை, ஷிம்மரிங் புடவை, பட்டுப்புடவை மற்றும் டிசைனர் பிளவுஸ் என சில நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே புடவை. ஹோம்லியான முகம், புடவைக்கான கச்சித உடல்வாகு என்றிருந்தாலும் வெஸ்டர்ன் உடைகளின் பக்கம்தான் இவரின் கவனம்.

மாடர்ன் உடைகள்

சமீபகாலமாக இவரின் காதல் 'வின்டேஜ் ஸ்டைல்' உடைகளின் மீதுதான். 1950-களின் ஹை வெயிஸ்ட் பேன்ட் - பெல் ஸ்லீவ் பிளவுஸ், கேப்ரி பேன்ட் - ஃப்ரன்ட் நாட்டட் ஷர்ட், வின்டேஜ் டீ டிரெஸ், ஹால்டர் நெக் டிரெஸ் என வேற லெவலில் வலம் வருகிறார்.

பிரெஞ்சு குடிகள் மிகுந்திருக்கும் புதுச்சேரியில் அதிக நேரம் செலவிடும் அமலா, ஜிப்ஸன் டக், கோல்டன் ஏஜ் வேவ், ஸ்னோ வொயிட் ஹேர்ஸ்டைல் என பக்காவான மாடர்ன் வின்டேஜ் உமனாகவே மாறிக்கொண்டிருக்கிறார். கவர்ந்திழுக்கும் கண்களுக்குச் சொந்தக்காரரான இவர், கண்களுக்கு ஸ்மோக்கி ஐ மேக்கப், உதடுகளுக்கு சிவப்பு, மரூன் மற்றும் ப்ளம் ஷேடு லிப்ஸ்டிக்ஸ் பயன்படுத்துகிறார்.

டஸ்க்கி பியூட்டி!

அமலா பால்
அமலா பால்

கீர்த்தி சுரேஷ்

துறுதுறு கேரக்டர்களில், பளீர் நிற உடைகளில் அனைவர் மனதிலும் ஒட்டிக்கொள்கிறார் கீர்த்தி சுரேஷ். ஒரு ஃபேஷன் டிசைனராகத் தனக்கு எது பொருந்தும், பொருந்தாது என்ற தெளிவுடன் இருப்பதுதான் கீர்த்தியின் பலம்.

பாரம்பர்ய உடைகள்

நிகழ்ச்சிகளுக்கு ஏற்ப பட்டுப்புடவை, டிசைனர் புடவையை அணிகிறார். தவிர, லெஹெங்கா, சுடிதார், அனார்கலி என அனைத்து ஸ்டைல்களையும் தனக்கேற்றவாறு டிசைன் செய்து அணிகிறார். பட்டு மற்றும் பட்டு கலந்த மெட்டீரியல்களிலான உடைகள் அணிவது வழக்கம். காட்டன் அனார்கலியாக இருந்தாலும் ஒரு பனாரஸி துப்பட்டாவை அணிந்து ஜொலிப்பது கீர்த்தியின் ஸ்பெஷல்.

மாடர்ன் உடைகள்

முழுக்க முழுக்க வெஸ்டர்ன் உடை என்பது அரிது. தோதி புடவை, டிரெடிஷனல் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஃபுல் கவுன், வெஸ்டர்ன் பிளவுஸ், டிரெடிஷனல் லெஹெங்கா ஸ்கர்ட் என இண்டோ வெஸ்டர்ன் டிரெஸ் மற்றும் கான்டெம்ப்ரரி லுக்தான் கீர்த்தியின் தேர்வு. வெஸ்டர்ன் டிரெஸ்ஸில் ஜீன்ஸ் டி-ஷர்ட், பேன்ட் சட்டை என்பதைவிட ஸ்கர்ட் டாப், மேக்ஸி டிரெஸ்ஸுடன் ஓவர் ஜாக்கெட் என ஃபெமினைன் தோற்றம்தான் வசீகரிக்கும் கீர்த்தியின் சீக்ரெட்.

அளவான மேக்கப், சிவப்பு, பிங்க், பீச் கலர் லிப்ஸ்டிக் என எப்போதுமே பளிச் தோற்றம். ஃப்ரீ வேவ்ஸ், ஸ்லீக் பன், சைடு பிரைடு என ஹேர் ஸ்டைலிலும் வெரைட்டி காட்டுகிறார்.

பிரைட் பியூட்டி!

பிளைன் புடவை நயன்தாரா முதல் பனாரஸி துப்பட்டா கீர்த்தி சுரேஷ் வரை... டிரெஸ்ஸிங்கில் டாப் 10 ஹீரோயின்ஸ்!

அனுபமா பரமேஸ்வரன்

'பிரேமத்'தில் பிரேமம்கொள்ள வைத்தவர். சினிமாக்களிலும் இன்ஸ்டாகிராமில் பகிரும் கமர்ஷியல் போட்டோ ஷூட்களிலும் ஹேர்ஸ்டைல், மேக்கப் என தலை முதல் பாதம்வரை தனித்துவமான அழகில் வசீகரிப்பவர்.

பாரம்பர்ய உடைகள்

பட்டுப்புடவை, டிசைனர் புடவை, அனார்கலி, தோதி சாரி, கான்டெம்ப்ரரி லுக் என இவரும் கீர்த்தியைப் போலவே அனைத்து வகைகளையும் மிஸ் பண்ணாமல், மிக்ஸ் பண்ணி கலக்குகிறார். கழுத்துக்கான நகைகளுக்கு தடா போடும் இவர், காதுகளுக்கு மட்டும் பெரிய பெரிய ஸ்டேட்மென்ட் தோடுகளை அணிகிறார்.

சைடு ஸ்வெப்ட், ஃபிஷ் டெயில், ஹை பஃப் எனப் பலதரப்பட்ட ஹேர்ஸ்டைல், ஸ்மோக்கி ஐ, ஆய்லி மேக்கப் மற்றும் பிரைட், மேட் ஃபினிஷ், க்ளாஸி லிப்ஸ்டிக் எனத் தேவையைப் பொறுத்து அனைத்தையும் பயன்படுத்துகிறார். ஆனால், இத்தோற்றம் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது மட்டுமே. மற்ற சமயங்களில் மாடர்ன் விரும்பியாக இருக்கிறார்.

மாடர்ன் உடைகள்

நிகழ்ச்சிகளைத் தவிர்த்து மற்ற சமயங்களில் பக்கத்து வீட்டுப் பெண் தோற்றம்தான். பெரும்பாலும் செக்டு ஷர்ட், பேன்ட், டெனிம் ஜாக்கெட், ஸ்னீக்கர்ஸ்தான் அனுபமாவின் அடையாளம். குறிப்பாக நோ மேக்கப் லுக், மெஸ்ஸி ஹேர் ஸ்டைல் என கிறங்கடிக்கிறார் இந்தக் கேரளத்துப் பைங்கிளி.

மெஸ்ஸி பியூட்டி!

அனுபமா
அனுபமா

நதியா

தன்னுடைய படபட பேச்சு, துறுதுறு நடிப்பு என 1985-ல் தமிழுக்கு அறிமுகமாகி 1989-ல் திருமணமாகி அமெரிக்காவில் செட்டில் ஆனவர். ஆனால் 90'ஸ் கிட்ஸின் ஆஸ்தான நாயகி மற்றும் டிரெண்ட் செட்டர். நதியா கொண்டை, நதியா வளையல், நதியா கம்மல் என இவர் பெயரில் உருவான ஸ்டைல்கள் அதிகம்.

பாரம்பர்ய உடைகள்

1980-களிலேயே மாண்டரின் காலர், க்ளோஸ் நெக் பிளவுஸ், எல்போ ஸ்லீவ் எனக் கலக்கியவர். தற்போதும் இன்றைய இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் கார்செட் பிளவுஸுடன் வட இந்திய ஸ்டைலில் புடவை அணிவது, இண்டோ வெஸ்டர்ன் ஸ்டைல், டிசைனர் சாரி, கான்டெம்ப்ரரி லுக் என கம்பீரமாக வலம்வந்து கொண்டிருக்கிறார்.

மாடர்ன் உடைகள்

சல்வார், பேன்ட் ஷர்ட், டி-ஷர்ட், மிடி என இவர் தமிழகத்து பெண்களிடத்தில் அறிமுகப்படுத்திய மேற்கத்திய ஸ்டைல் ஏராளம். இந்த வருடம் நடந்த 80'ஸ் நடிகர்களின் ரீ யூனியனின் 'ரெட்ரோ' கான்செப்டுக்காக கோல்டன் நிற ஓவர் சைஸ்டு ஷர்ட், பிளாக் பேன்ட், தங்க நிற சங்க்கி ஜுவல்லரி என 80-களில் இருந்து நேராக வந்திறங்கியதுபோல கெத்தாகவும் யூத்தாகவும் அசத்தினார்.

என்றும் இளமை!

நதியா
நதியா

குஷ்பு

நதியாவுக்குப் பிறகு கால்பதித்தவர் குஷ்பு. வருஷம் 16-லிருந்து இப்போது வரை தன் 30 ஆண்டுக்கால ரசிகர்களைத் தன்வசம் வைத்திருப்பவர். உதடுகளோடு கண்களும் சேர்ந்து புன்னகைக்கும் அழகைத் தன் தோற்றத்தின் மூலம் மேலும் மெருகேற்றத் தெரிந்த வசியக்காரி.

பாரம்பர்ய உடைகள்

புடவை மீதான தீராக் காதல் அன்றிலிருந்து இன்றுவரை தொடர்கிறது. எல்லோரையும்போல பட்டுப்புடவைக்கு தங்க நகைகள் என்றில்லாமல், பல வகையான ஸ்டேட்மென்ட் நகைகளை அணிந்து வைரலாவது இவரது டிரெண்ட். பிளவுஸ் தேர்விலும் கவனம் செலுத்தி, `குஷ்பு பிளவுஸ்' வேண்டி, தையல் கடைகளில் பெண்களின் க்யூ நீளக் காரணமானவர். இதே வரிசையில், இவர் பிரபலப்படுத்திய முகப்பு வைத்த தாலி செயின் டிசைனையும் மணமான பெண்கள் தேடி அணிந்தனர்.

வட்ட முகத்துக்கு எடுப்பாக பெரிய வட்ட வடிவப் பொட்டு, வகுடில் குங்குமப் பொட்டு, எடுப்பான மூக்குத்தி, உடைக்குப் பொருத்தமான மேக்கப் மற்றும் கொண்டை, சைடு ஸ்வெப்ட் ஹேர்ஸ்டைல் என எப்போதும் பளிச்சென வலம் வருகிறார்.

மாடர்ன் உடைகள்

இன்றைய இளம் நடிகைகளுக்கு இணையாக அன்றே பாடி கான் டிரெஸ், டெனிம் பேன்ட் - ஷர்ட், ஃப்ரன்ட் நாட்டட் ஷர்ட், மினி ஸ்கர்ட் எனத் தன்னுடைய பப்ளினஸ்ஸுக்கு பொருத்தமான பல வெஸ்டர்ன் உடைகள் அணிந்து  80'ஸ் கிட்ஸின் மனதில் இடம்பிடித்தவர். தற்போதும் தன்னுடைய வயதுக்குப் பொருந்தும் வகையில் வெஸ்டர்ன் உடைகளில் தரிசனம் தரத் தவறுவதில்லை. 

பப்ளி பியூட்டி!

குஷ்பு
குஷ்பு

சிநேகா

தரகரிடம், சிநேகா மாதிரி ஒரு பொண்ணு பாருங்கன்னு சொல்லும் அளவுக்குக் குடும்பக் குத்துவிளக்காக அனைவரது மனதிலும் இடம்பிடித்தவர்.

பாரம்பர்ய உடைகள்

ஷிஃபான் மெட்டீரியல், காட்டன், ஜியார்ஜெட், சில்க் என இவர் அணியாத புடவை ரகங்களே கிடையாது. அணியும் ஒவ்வொரு புடவைக்கும், ஹேர்ஸ்டைலில் ஆரம்பித்து மேக்கப், பிளவுஸ், நகைகள் என அனைத்தையும் ஹைலைட் செய்வது இவரின் ஸ்டைல். தன் புடவைக் கட்டுக்காகவே பல பெண் ரசிகர்களை ஃபாலோ செய்ய வைத்தவர். இன்றளவும் ஆன்லைன் ஷாப்பிங்கில் சிநேகா பிளவுஸ், சிநேகா சாரியின் விற்பனை அமோகம்.

மாடர்ன் உடைகள்

அனைத்து வகையான புடவைகளிலும் அசத்தும் சிநேகா, வெஸ்டர்ன் உடைகளில் ஜீன்ஸ், கேப்ரி பேன்ட், ஸ்கர்ட், ஒன் ஷோல்டர் டாப்ஸ், வெஸ்டர்ன் பிளவுஸ் போன்ற உடைகளில் தனக்கு எது பொருந்தும், பொருந்தாது என சரியான புரிந்துணர்வுடன் இருக்கிறார். பொருத்தமான நகைகள் மற்றும் ஹேர்ஸ்டைலுடன் பளிச்சென இருந்தாலும். ரசிகர்களால் ரசிக்கப்படுவது இவரின் ஹோம்லி லுக்தான்.

மேக்கப்பைத் தாண்டி சரியான பராமரிப்பில் மிளிரும் க்ளியர் ஸ்கின்தான் சிநேகாவின் பிரகாசமான அழகுக்குக் காரணம். உடைக்கும், நிகழ்ச்சிக்கும் ஏற்ற மேக்கப் இவரின் ப்ள்ஸ். ஃப்ரீ ஹேர், ஸ்லீக் பன், ஸ்ட்ரெயிட் ஹேர்ஸ்டைல் எனத் தேவையான அலங்காரத்துடன் ஜொலிக்கிறார்.

க்ளியர் ஸ்கின் பியூட்டி!

சிநேகா
சிநேகா

ஜோதிகா

ஆரம்பத்தில் துறுதுறுன்னு பப்ளியாக அடையாளம் காணப்பட்டு தற்போது அமைதி, தன்னம்பிக்கை என கம்பீரமாகக் கலக்கிக் கொண்டிருக்கிறார் ஜோதிகா.

பாரம்பர்ய உடைகள்

நடிக்கும் கதாபாத்திரத்துக்கு ஏற்ப விதவிதமாக அவதாரம் எடுக்கிறார் ஜோதிகா. ஆனால், நிஜ வாழ்க்கையில் ஆடம்பரம் இல்லாத பட்டு, காட்டன் புடவைகள், சிம்பிளான நகைகள் அணிந்து எளிமையாக இருந்தாலும் இவர் அதைக் கையாளும் விதத்தில் ரசிக்க வைக்கிறார். மிதமான நிறங்களானாலும், பளீர் நிறங்களானாலும் வித்தியாசமான நிறங்களில் வடிவமைக்கப்பட்ட சுடிதார், அனார்கலிக்கும் இவரது அலமாரியில் இடமுண்டு.

மாடர்ன் உடைகள்

திருமணத்துக்குப் பிறகு, பொது நிகழ்ச்சிகளுக்கு வெஸ்டர்ன் உடைகளில் வருவது மிகமிக அரிது. ஆனால் தோதி சாரி, இண்டோ வெஸ்டர்ன் உடைகள், போல்டான ஸ்டேட்மென்ட் நகைகள் என கம்பீரமாக வலம் வருகிறார்.

அன்றிலிருந்து இன்றுவரை தன்னுடைய வயதுக்கேற்ற உடைகளை அணிந்து அமைதி, மெல்லிய புன்சிரிப்பு, ஜொலிக்கும் முட்டைக் கண்கள் என ரசிகர்கள் மனதை வசியப்படுத்திவிடுகிறார்.

கம்பீர அழகி!

ஜோதிகா
ஜோதிகா