Published:Updated:

உருமாறிய பாவாடை, சட்டை... டிரெண்டாகும் ஸ்கர்ட் அண்டு டாப்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
டிரெண்டாகும் ஸ்கர்ட் அண்டு டாப்!
டிரெண்டாகும் ஸ்கர்ட் அண்டு டாப்!

சுங்குடி, கைத்தறி, பட்டு மெட்டீரியல்களில் லாங் ஸ்கர்ட் வடிவமைத்து பிளெயின் டாப்பை மேட்ச் செய்யலாம்.

பிரீமியம் ஸ்டோரி

பாவாடை சட்டை இப்போது, ஸ்கர்ட் அண்டு டாப் வடிவில் நவீனமாகியிருக்கிறது. எல்லா வயதினரின் விருப்ப உடையாகவும் இருக்கிறது. ஸ்கர்ட் அண்டு டாப்பை மிக்ஸ் மேட்ச் செய்து வெரைட்டி காட்டுவது எப்படி என விளக்குகிறார் நாட் வெடிங் ஹவுஸின் உரிமையாளரும் டிசைனருமான ஹாஸிரா ஷாருக்...

 ஹாஸிரா ஷாருக்
ஹாஸிரா ஷாருக்

எத்னிக் லுக்

புரோக்கேட், சில்க், சில்க் காட்டன், எம்ப்ராய்டரி, நெட்டடு, ஜர்தோஸி வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஸ்கர்ட்டுகள் எத்னிக் லுக்குக்கு ஏற்றவை. எம்ப்ராய்டரி அல்லது மிரர் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஸ்கர்ட்டுக்கு கான்ட்ராஸ்டான நிறத்தில் கிராப் டாப் அணிந்து ஸ்கர்ட்டின் நிறத்திலேயே துப்பட்டாவை மேட்ச் செய்யலாம். கிராப் டாப்களில் கோல்டு (Cold) ஷோல்டர், குஞ்சம் வேலைப் பாடுகள் என வித்தியாசம் காட்டலாம். போட் நெக், ஹை நெக் போன்றவை இன்னும் தனித்துவமாகக் காட்டும். எத்னிக் லுக் ஸ்கர்ட்களுக்கு எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்பட்ட பிளவுஸ் கியூட் சாய்ஸ். புரோகேட் மெட்டீரியல் ஸ்கர்ட்டுடன், அதற்கு கான்ட்ராஸ்டான நிறத்தில் லாங் புரோகேட் டாப்பை மேட்ச் செய்யும் போது சராரா லுக் கிடைக்கும்.

உருமாறிய பாவாடை, சட்டை...
டிரெண்டாகும் ஸ்கர்ட் அண்டு டாப்!

டிரெடிஷனல் லுக்

சுங்குடி, கைத்தறி, பட்டு மெட்டீரியல்களில் லாங் ஸ்கர்ட் வடிவமைத்து பிளெயின் டாப்பை மேட்ச் செய்யலாம்.

உருமாறிய பாவாடை, சட்டை...
டிரெண்டாகும் ஸ்கர்ட் அண்டு டாப்!

கேஷுவல் லுக்

கலம் காரி, இக்கட், பாந்தினி, காட்டன் போன்ற மெட்டீரியல் களில் உள்ள ஸ்கர்ட்களுக்கு அதே மெட்டீரியலில் வடிவமைக்கப்பட்ட ஷார்ட் டாப் அல்லது பிளெயின் டாப்பை மேட்ச் செய்து அணியலாம். டெனிம் ஷர்ட்டில் தனித்துவமாகத் தெரிவீர்கள். பிரின்டடு ஸ்கர்ட்டுக்கு டி-ஷர்ட்டை மிக்ஸ் மேட்ச் செய்ய லாம். அவுட்டிங் செல்ல இந்த லுக் பொருத்தமாக இருக்கும். பிரின்டடு டி-ஷர்ட் வேண்டாம். பிளெயின் ஓகே.

உருமாறிய பாவாடை, சட்டை...
டிரெண்டாகும் ஸ்கர்ட் அண்டு டாப்!

டிரெண்டி லுக்

டிரெண்டி லுக் வேண்டும் என்பவர்கள் பென்சில் ஸ்கர்ட்டுடன் ஷர்ட்டை மேட்ச் செய்யலாம். லாங் ஸ்கர்ட் வேண்டும் எனில் நிறத்திலும், மெட்டீரியலின் தன்மையிலும் வித்தியாசம் காட்ட

லாம். நெட்டடு மெட்டீரியல், லேஸ் மெட்டீரியல், லெதர் போன்றவை டிரெண்டியாகக் காட்டும். கவுல் (Cowl) நெக், ஹாஃப் ஷோல்டர், லெதரில் ஓவர் ஜாக்கெட் எனத் தனித்துவமாக ஸ்டைலிங் செய்தால் கூடுதல் அழகாக இருக்கும். ஃப்ளோரல் டிசைன் கொண்ட ஜார்ஜெட் ஸ்கர்ட் இப்போதைய டிரெண்ட். ஸ்கர்ட்டில் உள்ள பூக்களின் நிறத்தில் பிளெயின் டாப் அணிந்தால் டிரெண்டியாக இருக்கும்.

உருமாறிய பாவாடை, சட்டை...
டிரெண்டாகும் ஸ்கர்ட் அண்டு டாப்!

ஃபியூஷன் லுக்

ஸ்கர்ட் டிரெடிஷனலாக இருந்தால் டாப் டிரெண்டியாகவும், டாப் டிரெடிஷனலாக இருந்தால் ஸ்கர்ட் டிரெண்டியாகவும் இருக்க வேண்டும். ஸ்கர்ட் அண்டு கிராப் டாப் வித் ஓவர் லே என்று ஸ்டைலிங் செய்தால் அழகாக இருக்கும். சில்க் அல்லது புரோகேட் ஸ்கர்ட்டுக்கு வெள்ளை அல்லது கறுப்பு நிற ஷார்ட் ஷர்ட் அணிவது இப்போதைய டிரெண்ட். டிரெடிஷனல் லுக் மெட்டீரியலில் ஸ்கர்ட்டும் நெட்டடு மெட்டீரியலில் ஸ்கர்ட்டின் கீழ்ப் பகுதியில் ரஃபில்களும் வைத்துக்கொள்ளலாம்.

உருமாறிய பாவாடை, சட்டை...
டிரெண்டாகும் ஸ்கர்ட் அண்டு டாப்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு