Published:Updated:

எல் புரொஃபஸர், ஏவியேட்டர், கேட் ஐ... பவர் லென்ஸ்களுக்கும் டிரெண்டி ஃபிரேம்ஸ்!

டிரெண்டி கிளாஸஸ்
டிரெண்டி கிளாஸஸ்

கடந்த வருடம் ஹிட்டடித்த நெட்ஃபிளிக்ஸ் `மணி ஹெய்ஸ்ட்' தொடரின் கதாபாத்திரமான எல் புரொஃபஸர் அணியும் கண்ணாடி செம டிரெண்டி!

வெயிலில் கண்கள் கூசாமல் இருப்பதைவிட ஸ்டைலாக வலம்வரத்தான் கூலிங் கிளாஸைப் பலரும் பயன்படுத்துகிறார்கள். இன்னொரு பக்கம், பார்வைக் குறைபாட்டுக்காக அணியும் கண்ணாடிகள், `சோடாபுட்டி' எனச் சொல்லப்படும் அளவுக்குத்தான் அதன் டிசைன்கள் உள்ளன. இதில் ஸ்டைலை எதிர்பார்க்க முடியாது.

High power lens
High power lens

ஏனெனில், பவர் கிளாஸ்களின் கனமான லென்ஸைத் தாங்கிப்பிடிக்கத் தடிமனான ஃபிரேம்கள்தான் பொருந்தும். ஆனால், தற்போது பவர் கிளாஸுக்கும் ஸ்டைலான கண்ணாடி வகைகள் மார்க்கெட்டில் குவிந்துள்ளன. இதுகுறித்து பிரபல ஆப்டிக்கல் பிராண்டின் சென்னைக் கிளையின் மேனேஜர் விளக்குகிறார்.

ஏவியேட்டர் ஃபிரேம்ஸ்

70-களில் வெளிவந்த சினிமாக்களின் கதாநாயகன், நாயகிகள் முகத்தில் பாதியை மறைத்தபடி அணிந்திருக்கும் கண்ணாடிகளின் ஃபிரேம்கள் பெரும்பாலும் ஏவியேட்டர் ரகம்தான். பிறகு, சாமான்யர்களிடமும் ஏவியேட்டர் கண்ணாடிகள் புழக்கத்தில் வந்தன. இதுவரை கூலிங் கிளாஸ் வகைகளில் மட்டுமே வந்துகொண்டிருந்த இவ்வகைக் கண்ணாடிகள், சமீபமாக பவர் லென்ஸ்களையும் பொருத்திக்கொள்ளும் வகையில் வந்துவிட்டன.

Aviator Glass
Aviator Glass

குறுகிய முகவடிவமைப்பு உள்ளவர்களைவிட, அகலமான முகவடிவமைப்பு கொண்டவர்களுக்கு இக்கண்ணாடி கச்சிதமாகப் பொருந்தும். கேஷுவல் மற்றும் புரொஃபஷனல் என இரண்டு விதமான தோற்றங்களுக்கும் பொருந்தக்கூடியதுதான் இதன் சிறப்பம்சம். `பிக்பாஸ்' வீட்டில் ஸ்டைலாக வலம் வந்த முகின் அணிந்திருந்தது இவ்வகை கண்ணாடிதான்.

டாப்லைன் ஃபிரேம்ஸ்

இந்த வகை கண்ணாடிகளில் மேல் பகுதியில் மட்டுமே ஃபிரேம் இருக்கும். இது வட்டம் மற்றும் செவ்வக வடிவ லென்ஸ்களுக்கு மட்டுமே கச்சிதமாகப் பொருந்தும்.

Topline Frames
Topline Frames
மைக்கேல் ஜாக்ஸன் தொப்பி, இளையராஜா குர்தா, விஜயலட்சுமியின் பொட்டு... இசைஞர்களின் ஃபேஷன் ஸ்டேட்மென்ட்!

சிம்பிளாக, எலகென்ட்டாக இருக்க விரும்புபவர்களுக்கு இது சரியான சாய்ஸ். இதில் கறுப்பு நிற ஃபிரேம்கள்தான் இப்போதைய டிரெண்டு!

ட்ரான்ஸ்பரன்ட் ஃபிரேம்ஸ்

சென்ற வருடப் புது வரவு, ட்ரான்ஸ்பரன்ட் கண்ணாடிகள். நீலம், சிவப்பு, பிங்க் எனப் பல வண்ணங்களில் பார்ப்பதற்குப் புதுமையாகவும் ஸ்டைலாகவும் இருக்கும் இதற்கு, ஆண்களைவிட பெண்களிடம்தான் மவுசு அதிகம்.

Transparent Glass
Transparent Glass

அனைத்து விதமான முகவடிவங்களுக்கும் பொருந்தக்கூடிய வகையில் வட்டம், செவ்வகம், ஏவியேட்டர், சதுரம் எனப் பல வடிவங்களில் கிடைக்கின்றன. கல்லூரி மாணவர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கும் இந்த ட்ரான்ஸ்பரன்ட் கண்ணாடிகளை ஜீன்ஸ், டீஷர்ட்டுடன் அணிந்து டிரெண்டியாக வலம் வரலாம்.

எல் புரொஃபஸர் கண்ணாடி

கடந்த வருடம் ஹிட்டடித்த நெட்ஃபிளிக்ஸ் `மணி ஹெய்ஸ்ட்' தொடரின் கதாபாத்திரமான எல் புரொஃபஸர் அணியும் கண்ணாடி செம வைரல். இது புரொஃபஸரின் தீவிர ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

El Professor
El Professor

கறுப்பு நிறத்தில் வட்டம், சதுரம், ஏவியேட்டர் என அனைத்து வடிவங்களையும் மிக்ஸ் செய்தது போன்ற வடிவத்தில் இருக்கிறது. ஃபார்மல் மற்றும் கேஷுவல் என இரண்டு தோற்றங்களுக்குமே பொருந்தக்கூடிய இக்கண்ணாடி `எல் புரொஃபஸர் கிளாஸ்' எனும் பெயரிலேயே ஆன்லைனில் விறபனையாகும் அளவுக்குப் பிரபலமடைந்திருக்கிறது.

கேட் ஐ ஃபிரேம்ஸ்

பூனையின் கண்களுடைய வடிவத்தில் இருப்பதால் இது 'கேட் ஐ கண்ணாடி' என்று அழைக்கப்படுகிறது. அனைத்து அளவுகளிலும் கிடைக்கக்கூடிய இது பெண்களுக்கானது.

Cat Eye Frame
Cat Eye Frame
`இந்தியாவில் ஆசிட் வாங்குவது எவ்வளவு ஈஸி தெரியுமா?!' -ஸ்டிங் ஆபரேஷனில் இறங்கிய தீபிகா #Viral

வட்டவடிவ மற்றும் நீள்வட்டவடிவ முக அமைப்பினருக்குக் கச்சிதமாகப் பொருந்தும். பாலிவுட் சினிமாவின் ஸ்டைல் ஐகான் தீபிகா படுகோனின் ஆல் டைம் ஃபேவரைட் இந்த கேட் ஐ கிளாஸ்தான்.

வட்ட வடிவ ஃபிரேம்ஸ்

வட்ட வடிவில் இருக்கும் இந்தக் கண்ணாடியைக் காந்தி கண்ணாடி என்றும் ஹாரி பாட்டர் கண்ணாடி என்றும் சொல்வதுண்டு. ஒரு காலத்தில் இதுபோன்ற கண்ணாடி அணிபவர்களைப் படிப்பாளி என்றும் சோடாபுட்டி என்றும் கேலி செய்வர்.

Round Frame
Round Frame

`பிக்பாஸ்' கமல் முதல் விராட் கோலி வரை அனைவரிடமும் பாஸ் மார்க் வாங்கியிருக்கும் இது கடந்த இரண்டு வருடங்களாக அதிக மக்களால் வாங்கப்பட்டிருக்கிறது. இதில் ஃபுல் ஃபிரேம் மற்றும் டாப் லைன் ஃபிரேம் என இரண்டு வகைகளிலும் கிடைக்கும்.

சதுர வடிவ ஃபிரேம்ஸ்

ஒரு காலத்தில் சதுர வடிவக் கண்ணாடி அணியாதவரே இல்லை எனலாம். அதன் பின்னர் பல வடிவக் கண்ணாடிகளின் வரவால் சதுர வடிவக் கண்ணாடியின் மவுசு சற்றே குறைந்தது. தற்போது மீண்டும் மக்களால் விரும்பி வாங்கப்படும் கண்ணாடிகளில் இதுவும் ஒன்றாகி இருக்கிறது.

Square Frames
Square Frames

பல்வேறு நிறங்களிலும் உள்ள இது அனைத்து வகை முக அமைப்பினருக்கும் பொருந்தும். இதிலேயே பெரிய அளவு கண்ணாடிகள் இப்போது டிரெண்டாக இருக்கின்றன. மலையாள நடிகை பார்வதி, பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் போன்றோர் இவ்வகை கண்ணாடியைத்தான் தொடர்ந்து அணிந்து வருகின்றனர்.

பெரும்பாலும் அனைத்துக் கண்ணாடிக் கடைகளிலும் ஒவ்வொருவரின் முகத்துக்கும் பொருத்தமான கண்ணாடியின் வடிவத்தை அறிந்துகொள்வதற்கான சாஃப்ட்வேர் வசதி இருக்கிறது. அதைப் பயன்படுத்தி, எப்போதும் ஒரே மாதிரி தோற்றத்தில் வலம் வராமல், உங்களுக்குப் பொருத்தமான டிரெண்டியான கண்ணாடியைத் தேர்ந்தெடுத்து அணிந்து அவ்வப்போது உங்கள் தோற்றத்தை மெருகேற்றிக் கொள்ளலாமே!

அடுத்த கட்டுரைக்கு