Published:Updated:

உங்களுக்குப் பொருத்தமான ஸ்டைலில் தாடி வளர்ப்பது எப்படி? #InternationalMensDay

Nivin Pauly
Nivin Pauly

ஆண்களிடம் இந்த மூன்று ஸ்டைலான தாடிகள்தான் இப்போ செம்ம டிரெண்டுல இருக்கு.

விதவிதமான தாடியில் வலம்வரும் நம்ம பசங்ககிட்ட `இது என்ன ஸ்டைல்'னு கேட்டா... `அதெல்லாம் தெரியாது. சலூனுக்குப் போய், புடிச்ச நடிகரோட தாடி ஸ்டைலைக்காட்டி அதேமாதிரி வேணும்னு கேட்பேன்'னு பதில் சொல்றாங்க.

செலிபிரிட்டி ஸ்டைலிஸ்ட் ஜாமி ஃபெர்னாண்டோ
செலிபிரிட்டி ஸ்டைலிஸ்ட் ஜாமி ஃபெர்னாண்டோ

நம்ம பசங்களுக்கு என்ன மாதிரியான தாடி பொருத்தமா இருக்கும்னு செலிபிரிட்டி ஹேர் அண்டு பியர்டு ஸ்டைலிஸ்ட் மற்றும் சென்னையில் உள்ள பிரபல சலூனின் டைரக்டர் ஜாமி ஃபெர்னாண்டோவிடம் பேசியதில்...

``தென்னிந்திய பசங்களுக்கு `ஃபேடட் பியர்டு, திக் அண்டு `வி' ஷேப் பியர்டு மற்றும் கான்டூர் பியர்டு' இந்த மூன்று ஸ்டைலுமே பொருத்தமா இருக்கும். இந்த மூன்றும்தான் இப்போ செம்ம டிரெண்டுல இருக்கு.

ஃபேடட் லாங் பியர்டு (Faded Long Beard)

தாடையில் இருக்கும் ரோமங்களில் ஆரம்பித்து கன்னங்களை நோக்கி அப்படியே காதின் ஓரங்களுக்குப் போகப்போக ரோமங்களின் அடர்த்தியைக் குறைத்துக்கொண்டே போக வேண்டும். இதுதான் ஃபேடட் லாங் பியர்டு ஸ்டைல். இது, வட்ட மற்றும் சதுர வடிவ முகத்துக்கான ஸ்டைல்.

மாதவன்
மாதவன்
From Instagram

இந்த ஸ்டைலில் மிக டிரெண்டியான நபராக உங்களை வெளிப்படுத்திக்கொள்ளலாம். ஆனால், பராமரிப்புக்கு அதிக நேரம் செலவாகும். மாதம் இரண்டுமுறை சலூனுக்குச் சென்று ஷேப் மாறாமல் ட்ரிம் செய்ய வேண்டும்.

ட்ரிம்மர், ஷேப்செய்ய உதவும் ஆங்குலர் சீப்பு மற்றும் சரியான கத்தரிக்கோல் போன்றவற்றின் மூலம் நீங்களே பராமரித்துக் கொள்ளமுடியும். ஆனால், மிகுந்த கவனமும் போதிய பயிற்சியும் அவசியம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திக் அண்டு `வி' ஷேப் பியர்டு (Thick & 'V' Shape Beard)

இந்த ஸ்டைலுக்கு நீண்ட மற்றும் அடர்ந்து வளர்ந்த தாடி அவசியம். கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு தாடியை வெட்டாமல் வளர்த்தபின் சலூனுக்குச் சென்று ஷேப் செய்துகொள்ளலாம். இது நீண்ட மற்றும் ஓவல் வடிவ முகங்களுக்கான ஸ்டைல்.

Vikram
Vikram
Irumugan Movie

இது முரட்டுத்தனமான தோற்றத்தை விரும்புகிறவர்களுக்கான சரியான தேர்வு. இந்த ஸ்டைலை `பாயின்டட் பியர்டு' என்றும் குறிப்பிடலாம். இந்த ஷேப்பை நீங்களே பராமரித்துக்கொள்ளாமல் சலூனுக்குச் சென்று பராமரிப்பது அவசியம். அடர்ந்த மீசைதான் இந்த ஸ்டைலுக்கான கெத்து. அதனால் முறுக்கு மீசைக்காரர்கள் இந்த ஸ்டைலை தயங்காமல் தேர்ந்தெடுக்கலாம்.

கான்டூர் (Contour Beard)

இந்த ஸ்டைல், வட்டவடிவ முகத்தினரை சாக்லேட் பாய் இமேஜிலிருந்து விடுவித்து முரட்டு தோற்றத்தைக் கொடுக்கக்கூடியது. கான்டூரிங் பியர்டு மூலம், உங்கள் முகத்தின் வடிவமே மாறியது போன்ற போலியான தோற்றத்தைக் கொடுக்கமுடியும்.

Surya
Surya
Anjaan Movie

சிலருக்கு தாடியில் ரோமம் சீராக இல்லாமல் ஆங்காங்கே இடைவெளியுடன் வளரும். இவர்களுக்கு இந்த ஸ்டைல் கைகொடுக்காது.

பியர்டு க்ரூமிங் அக்ஸசரீஸ்

ஸ்டைலாக தாடி வளர்க்க ஆசைப்படுவது பெரிதல்ல. அதைச் சரியாகப் பராமரிக்க வேண்டும். `பியர்டு க்ரூமிங் அக்ஸசரீஸ்' என விதவிதமான பொருள்கள் சந்தையில் கிடைக்கின்றன.

இந்தப் பொருள்களைவைத்து தினசரி நீங்களே உங்கள் தாடியைப் பராமரித்துக்கொள்ள முடியும். மாதம் ஒருமுறை சலூனுக்குச் சென்றால் போதும்.

பியர்டு ஷாம்பு

தினமும் தவறாமல் ஷாம்பூ பயன்படுத்தி தாடியை நன்கு அலச வேண்டும். சோப் பயன்படுத்தினால் ரோமங்கள் வறண்டு பொலிவிழந்துவிடும்.

பியர்டு ஷாம்பு, பியர்டு பாம்
பியர்டு ஷாம்பு, பியர்டு பாம்
walmart.com themodcabin.com

பியர்டு பாம்

சிறிதளவு பியர்டு பாமை எடுத்து உள்ளங்கைகளில் சூடுபறக்கத் தேய்த்து, பின்னர் தாடியில் தடவவேண்டும். இது ரோமங்களை ஈரப்பதத்துடனும் மிருதுவாகவும் வைத்திருக்க உதவும்.

பியர்டு சீரம்

ரோமங்களை சிக்கில்லாமல் வைத்திருக்கும். பொலிவிழந்த ரோமங்களுக்குப் பளபளப்பைத் தரும். மாசு மற்றும் சூரியக் கதிர்களினால் ரோமங்கள் சேதமடையாமல் பாதுகாக்கும். காலை மாலை என இரண்டுவேளை பயன்படுத்தவும்.

பியர்டு சீரம், பியர்டு வேக்ஸ்
பியர்டு சீரம், பியர்டு வேக்ஸ்
alibaba.com gloutique.com

பியர்டு வேக்ஸ்

வெளியே கிளம்பும் முன் சிறிதளவு வேக்ஸை எடுத்து ரோமங்களில் தடவி விரும்பிய வடிவத்தில் ஸ்டைல் செய்துகொள்ளலாம். நாள் முழுவதும் கலையாமல் இருக்கும்.

இந்த ஐந்து விஷயங்களுடன் தினமும் ட்ரிம் செய்வது மற்றும் வாரம் ஒருமுறை ஷேவ் செய்வதும் அவசியம். இவை அனைத்தையும் தவறாமல் கடைப்பிடித்து வந்தால் உங்கள் தாடி ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

Beard Style
Beard Style
ஆண்களுக்கு தாடி, பெண்களுக்கு மீசை... ஆரம்பம் நோ ஷேவ் `நவம்பர்'!

முகத்தின் அழகைக் கூட்டிக்காட்டவும், ட்ரெண்டியாக வலம்வரவும் வெறும் ஸ்டைல் மட்டுமே போதாது. தாடியின் ரோமங்கள் உறுதியுடனும் பளபளப்புடன் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு