வீட்டை அலங்கரிப்பதில் வால் ஹேங்கிங்கிற்கு முக்கிய இடமுண்டு. அதிக செலவில்லாமல் உங்கள் கைப்பட வால் ஹேங்கிங் செய்து அறைக்கொன்றாக மாட்டி வீட்டை அலங்கரிக்கலாம். எல்லோருக்கும் பிடித்த புத்தர் உருவம் பதித்த சிம்பிள் வால் ஹேங்கிங் செய்யக் கற்றுத் தருகிறேன்...
தேவையானவை:
கார்டு போர்டு அட்டை
கயிறு
பசை
பென்சில்
கத்தரிக்கோல்
க்ளு கன்
விருப்பமான படம்
போர்டு பின் (Board Pin)
ஸ்கெட்ச் பேனா
தொடர் மணிகள்
பிரஷ்
ஃபேப்ரிக் பெயின்ட்
வேஸ்ட் துணி
ஸ்டெப் 1: கார்டுபோர்டு அல்லது தடிமனான அட்டையில் நம் விருப்பத்துக்கேற்ப வட்டத்தை வரைந்து, கத்தரித்துக் கொள்ளவும்.
ஸ்டெப் 2: வட்டத்தின் நடுப்பகுதியிலிருந்து க்ளூ கன் பயன்படுத்தி கயிற்றை கைமுறுக்கு சுற்றுவதுபோல் சுற்றி அட்டை முழுக்க வட்டமாக ஒட்டி முடிக்கவும்.
ஸ்டெப் 3: விருப்பமான படத்தை கத்தரித்துக் கொள்ளவும்.
ஸ்டெப் 4: கத்தரித்த படத்தை கயிறு சுற்றிய வட்டத்தின் நடுவில் பின் செய்யவும்.
ஸ்டெப் 5: அதன்பின் படத்தைச் சுற்றி அவுட்லைன் வரைந்து படத்தை எடுத்துவிடவும்.
ஸ்டெப் 6: அவுட்லைனின் உள் பக்கத்தில் பெயின்ட் செய்யவும்.
ஸ்டெப் 7: பின்னர் வட்டத்தின் விளிம்பு கயிற்றை மட்டும் பெயின்ட் செய்யவும். பெயின்ட் செய்த விளிம்பு பகுதியின் மேல் தொடர் மணிகளை ஒட்டவும்.
ஸ்டெப் 8: படத்தில் உள்ளபடி பின்பக்கம் கயிற்றை ஒட்டினால் அழகிய வால் ஹேங்கிங் ரெடி.