Published:Updated:

`உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன்..!’ - அன்புக்குரியவரின் உடையைக் காதலிக்கலாமா? எப்படி?

கணவர் அல்லது காதலரின் உடையை அணியும் வழக்கமுடைய பெண்கள் எவ்வாறு உணர்கிறார்கள்?

அலைபாயுதே
அலைபாயுதே ( Madras Talkies )

பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் உளவியல் துறையில் வித்தியாசமான ஆய்வு ஒன்றை நடத்தியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 96 ஜோடிகளிடம் இந்த ஆய்வு நடைபெற்றது.

கணவரின் உடையை அணியும் பெண்கள்
கணவரின் உடையை அணியும் பெண்கள்

இதில் பங்கேற்ற ஆண்களிடம், வாசனைத்திரவியங்கள், பவுடர் என எதையும் உபயோகிக்காமல் தொடர்ந்து 24 மணி நேரம் அவர்கள் அணிந்திருந்த சட்டை அல்லது டி - ஷர்ட்டைத் துவைக்காமல் அப்படியே வாங்கி குளிர்சாதனத்தின் மூலம் உறைய வைத்துள்ளார்கள். பின்னர் பங்குபெற்ற ஆண்களின் மனைவி மற்றும் காதலியிடம் உறையவைத்த உடையை மோந்து பார்க்கச் செய்துள்ளார்கள்.

இந்த ஆய்வில் பெண்கள் தங்களின் இணையின் உடையை மோந்து பார்த்தபோது அவர்களின் மன அழுத்தம் குறைவதாகவும் அடுத்தவரின் உடையை மோந்து பார்த்தபோது மன அழுத்தம் அதிகரிப்பதாகவும் கண்டறிந்துள்ளனர்.

ஸ்ட்ரெஸ் ஹார்மோனின் அளவு குறைகிறது
ஸ்ட்ரெஸ் ஹார்மோனின் அளவு குறைகிறது

இதன் மூலம் பெண்கள் தங்களின் காதலன் அல்லது கணவரின் உடையை அணிவதனால், அவர்களது மூளையில் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய கார்டிசால் (Cortisol) எனப்படும் ஹார்மோனின் அளவு குறைவதாக அறிவித்துள்ளனர்.

கணவர் அல்லது காதலரின் உடையை அணியும் வழக்கமுடைய பெண்கள் குறித்து சென்னையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்திடம் பேசியதில், ``மற்றவர் தூக்கிக் கொஞ்சும்போது சிணுங்கும் குழந்தை, அம்மாவின் கரங்களில் தவழும்போது அவளின் கதகதப்பில் சிரித்து விளையாடும். அக்குழந்தை எப்படி பாதுகாப்பாக உணர்கிறதோ அது போன்ற விஷயம்தான் இது.

உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்த்
உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்த்

நாம் யாரிடம் பாதுகாப்பாக உணர்கிறோமோ அவர் அருகில் இல்லாதபோது அவரின் உடையை மோந்து பார்ப்பதாலும் அணிந்துகொள்வதாலும் அவர் நம்முடன் இருப்பது போன்ற பிரமை ஏற்படும்.

எளிமையாகச் சொல்லவேண்டும் என்றால், நமக்குப் பிடித்தமான ஒருவரைப் பிரிந்திருக்கும் தருணத்தில், யாரோ ஒருவர் அவரின் பெயரை உச்சரித்து அது நம் காதை வந்தடையும்போது, சந்தோஷம், ஏக்கம், வருத்தம் எனப் பல கலவையான உணர்வுகளுக்கு உள்ளாவோம். ஏனெனில் அவரின் பெயரைக் கேட்டதும் அது அவருடன் கடந்துவந்த மகிழ்ச்சியான தருணங்களை நினைவுபடுத்தும்.

கணவரின் உடையை அணியும் பெண்கள்
கணவரின் உடையை அணியும் பெண்கள்

அதேபோல் பணிநிமித்தம் பிரிந்துவாழும் தம்பதிகள் மற்றும் காதலர்கள், தன்னுடைய இணையைப் பிரிந்து இருப்பதன் வலிக்கு நிவாரணம் தேடும் வகையில் அவரின் உடையை எடுத்து மோந்து பார்த்தும் அணிந்தும் அவரின் அண்மையை உணர முற்படுகிறார்கள்.

ஆண்களுக்கு தாடி, பெண்களுக்கு மீசை... ஆரம்பம் நோ ஷேவ் `நவம்பர்'!

தம்பதிகள் மற்றும் காதலர்கள் என்றில்லை, நம் கல்லூரிக் காலங்களுக்கு நம்மைக்கொண்டு செல்லும் ஒரு பாடலைத் திரும்பத் திரும்பக் கேட்கத் தோன்றுவது, பாட்டியின் கைப்பக்குவத்தை உணர வைக்கக்கூடிய பலகாரங்களை வாங்கிச் சாப்பிடுவது என நமக்குப் பிடித்த விஷயங்களைத் தற்காலிகமாக உணரவைக்கக்கூடிய செயல்களைப் பழக்கமாக்கிக்கொண்டு, அவற்றின்மூலம் ஆறுதலடைவது போன்ற உணர்வுதான் இது.

ஸ்ட்ரெஸ் ஹார்மோனின் அளவு அதிகரிக்கிறது
ஸ்ட்ரெஸ் ஹார்மோனின் அளவு அதிகரிக்கிறது

இதேபோன்று நமக்குப் பிடிக்காதவர்களின் உடையை மோந்து பார்த்தால் ஸ்ட்ரெஸ் ஹார்மோனின் அளவு அதிகரித்து மன அழுத்தம் கூடுவதும் இயல்பே. ஏனெனில் அது அந்த நபருடனான கசப்பான தருணங்களை நினைவுபடுத்தும்" என்கிறார்.

பெரும்பான்மையான பெண்கள், மனதுக்குப் பிடித்தவரின் உடையை அவருடன் தனிமையில் நேரம் செலவிடும்போது அல்லது வீட்டில் யாரும் இல்லாத தருணங்களில்தான் அணிந்து மகிழ்கிறார்கள். ஆனால், இன்றைய தினத்தில் மாடர்ன் பெண்கள் இதையே ஒரு ஸ்டைலாக மாற்றிவிட்டார்கள்.

பாய்ஃப்ரெண்டு ஸ்டைல்
பாய்ஃப்ரெண்டு ஸ்டைல்
in.pinterest.com azita66.tumblr.com

`பாய் ஃப்ரெண்டு ஸ்டைல்' எனச் சொல்லப்படும் இந்த வகை உடையை அணியும் டீன் ஏஜ் பெண்கள், சட்டையின் முதல் பட்டனைத் திறந்துவிடுவது, டி ஷர்ட்டின் கைகளை மடித்துவிடுவது என விதவிதமாக அணிந்து கேஷுவலாக வலம் வருகிறார்கள்.