Published:Updated:

ஸ்வீடன், தமன்னா, பப்பி குட்டி செல்லம்ஸ்... `பில்லோ சேலன்ஞ்'ல இதெல்லாம் கவனிச்சீங்களா?

தமன்னா
தமன்னா ( instagram )

கேஷுவல் உடைக்கும் அடுத்த லெவலுக்குச் சென்று, வெறும் தலையணையை உடையாக அணிவதுதான் இந்தச் சவால்.

க்ரியேட்டிவ் மூளைக்காரர்கள் எந்தச் சூழ்நிலையிலும் மனம் தளராமல் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் உற்சாகமாக வைத்திருப்பார்கள். இதற்கு உதாரணம்தான் இந்த லாக்டெளன் நாள்களில் அணிவகுத்துக்கொண்டிருக்கும் சோஷியல் மீடியா 'சேலன்ஞ்சுகள்'.

கலைத்துறையில் உள்ளவர்களிடம் க்ரியேட்டிவிட்டிக்கு பஞ்சமிருக்காது. அதிலும் ஃபேஷன் துறையின் அடிப்படையே கற்பனைதான்.

Samantha
Samantha
instagram

கடந்த மாத இறுதியில் #SareeChallenge ஆரம்பித்ததும் பெண்கள், தங்களது புடவைப் புகைப்படத்தை சோஷியல் மீடியா பக்கங்களில் பதிவேற்ற ஆரம்பித்தனர். வைரலான இந்த டிரெண்டு மீம்ஸ் க்ரியேட்டர்களால் ட்ரோலும் செய்யப்பட்டது.

ஆனால், 'லாக்டௌனால் வீட்டுக்குள் முடங்கிச் சோர்வாகும் எங்கள் மனங்களுக்கு, ஏதாவது ஒரு சேலன்ஞ் மூலம் இப்படி டிஜிட்டல் மீடியம் வழியாக நட்பு, உறவு என ஒரு கனெக்ட் ஏற்படுத்திக்கொள்வது உற்சாகமளிக்கிறது' எனத் தங்களது கருத்தை வலுவாகப் பதிவு செய்தனர் பெண்கள். 

அடுத்ததாக, வீட்டிலிருந்தே வேலைசெய்பவர்கள் பெரும்பாலும், பேன்ட், டி-ஷர்ட், லெகிங்ஸ், டிரெஸ் என மிக கேஷுவலாக மட்டுமே உடை அணிகின்றனர்.

இதனால் சோர்வடைந்த, ஃபேஷனில் அதிக ஆர்வமுள்ள 'The New Yorker' பத்திரிகையின் எழுத்தாளர் ரச்சேல், #DistanceButMakeItFashion எனும் சேலன்ஞ்சை ஆரம்பித்துள்ளார்.

விடுமுறை தினமான ஒரு ஞாயிற்றுக்கிழமையில், மிக ஃபேஷனாக உடையணிந்து, அதை செல்ஃபி எடுத்து, அந்தப் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார் ரச்சேல். அந்த பதிவின் மூலம் ஆன்லைனில் ஒரு ஃபேஷன் ஷோ நடத்த அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். இந்த சேலன்ஞ்சை ஏற்று, வீட்டிலிருந்தபடியே பணிபுரிந்து வரும் ஆண்களும் பெண்களும் தற்போதுவரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தங்களை நன்கு அலங்கரித்துக்கொண்டு உற்சாகத்துடன் படம்பிடித்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். 

வீட்டிலேயே இருப்பதால் மிக கேஷுவலாக உடையணிவதிலிருந்து, மனதை உற்சாகப்படுத்த வந்ததுதான் #DistanceButMakeItFashion. ஆனால் தற்போது இந்த சேலன்ஞ்சுக்கு முரணாக ஒரு சேலன்ஞ்ச் முளைத்துள்ளது. அதுதான் #QuarantinePillowChallenge. கேஷுவல் உடைக்கும் அடுத்த லெவலுக்குச் சென்று, வெறும் தலையணையை உடையாக அணிவதுதான் இந்தச் சவால்.

ஸ்வீடன் நாட்டு ஃபேஷன் பிளாகரால்ஆரம்பிக்கப்பட்ட இந்த #QuarantinePillowChallenge-ல் தலையணைதான் உடை. அதை இடுப்புடன் ஒரு பெட்டால் சேர்த்துக்கட்டிக்கொண்டு படமெடுத்துப் பதிவேற்ற வேண்டும்.

இந்த சேலன்ஞ்ச், பல ஃபேஷனிஸ்டாக்களால் தொடரப்பட்டு வருவதோடு, ஹாலிவுட் பிரபலங்களையும் கவர்ந்துள்ளது.

வெறும் உடலில், தலையணையை மட்டுமே உடையாக அணியும் இந்த கிளாமரான சேலன்ஞ்ச்சை விரும்பி ஏற்ற ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் ஃபேஷன் பிளாகர்கள், இதை அடுத்தகட்டத்துக்குக் கொண்டுசென்றனர்.

அதிக வேலைப்பாடுகள் நிறைந்த டிசைனர் தலையணை, மற்றும் தலையணையின் டிசைனிலேயே உள்ள பெட்ஷீட்டை லாங் டெயில்போல் பயன்படுத்தி, தலையணையை கிட்டத்தட்ட ஒரு டிசைனர் உடையாகவே மாற்றி தங்களது க்ரியேட்டிவிட்டியை உலகுக்கு வெளிப்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக, பிரபல ஹாலிவுட் நடிகை அன்னெ ஹாதவே (Anne Hathaway) பளீர் நீலத்தில் ஒன்றும், பளிச் வெள்ளை நிறத்தில் இரண்டுமாக, மொத்தம் மூன்று தலையணைகளுடன், தலையில் கிரீடத்துக்கு பதிலாக ஹெட்போன் சகிதம், தன்னுடைய 'The Princess Diaries' படத்தை நினைவுபடுத்தும் விதமாகப் படமெடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 

இந்தத் தலையணை ட்ரெண்டு ஹாலிவுட்டை தாண்டி பாலிவுட் மாடல் மற்றும் நடிகையான ஸ்கார்லெட் எம் ரோஸ் (Scarlett M Rose), பாடகி நேஹா கக்கர் (Neha Kakkar) மற்றும் டோலிவுட் நடிகை பாயல் ராஜ்புட் போன்ற இந்தியப் பிரபலங்களிடமும் பரவியுள்ளது.

தற்போது கோலிவுட் பியூட்டி தமன்னாவும் இந்த #QuarantinePillowChallenge -ல் பங்கெடுத்துள்ளார். ஒரு வெள்ளை நிற தலையணையை, கறுப்பு நிற பெல்டுடன் உடலோடு சேர்த்துக் கட்டிக்கொண்டு, கால்களில் பளிச் சிவப்பு நிற ஷூக்களை அணிந்து தமன்னா பதிவேற்றியுள்ள படம்... ஹாட்! 

ஜன்னலில் இருந்து வீட்டினுள் விழும் வெயிலில் படுத்தவாறு தமன்னா எடுத்துக்கொண்ட இப்புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இது அவர் ரசிகர்களிடம் வைரலாகப் பரவிவருகிறது.

இது போன்ற ட்ரெண்டுகள் காஸ்ட்யூம் டிசைனர் மற்றும் ஸ்டைலிஸ்ட் அம்ரிதா ராமிடம் கேட்டோம். ``புதுசா ஒரு டிரெஸ் போடும்போது ஒரு உற்சாகம் கிடைக்கும்ல, அது மாதிரிதான் இந்த சேலன்ஞ்சுகள். ஃபிசிக்கல் வொர்க் அவுட்கள், சமையல் வீடியோக்கள் வரிசையில் இப்போ ஃபேஷன் சம்பந்தமான சோஷியல் மீடியா ஆக்டிவிட்டியை, ஒரு டிசைனரா வரவேற்கிறேன்.

Amritha Ram
Amritha Ram
instagram

குறிப்பா, என்டர்டெயினிங் துறையில இருக்கும் சினிமா நடிகர்கள், போட்டோஸ், வீடியோஸ்னு தங்களோட லாக்டெளன் பொழுதுகளை சோஷியல் மீடியாவில் பதிவு செய்யுறது மூலமா, மக்களுக்கு ஒரு பொழுதுபோக்குக கொடுக்கிறாங்க. வீட்டுக்குள் முடங்கியிருக்கும் சோர்வுக்கு நடுவில், 'இது புதுசா இருக்கே'னு ஒரு இன்ட்ரஸ்ட்டை ஏற்படுத்துறாங்க.

இதுபோன்ற சோஷியல் மீடியா ஆக்டிவிட்டிகள் மனசுக்கு ஒரு ரெஃப்ரெஷிங் பட்டனை அழுத்தும்'' என்றார் அமிர்தா.

இப்போது இந்த சேலன்ஞ்ச் #PillowChallenge, #PillowDress, #PillowDressChallenge எனப் பல்வேறு ஹாஷ்டேகுகளுடன் பரவிவருகிறது.

இதில் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும், குழந்தைகளும் பங்களித்து வருவது ஹைலைட்!

இதற்கும் ஒருபடி மேலேபோய், தங்களது செல்ல நாய்க்குட்டிகளின் உடலில் தலையணையைக் கட்டி, அவற்றை படம்பிடித்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர் சிலர்.

பிளைன் புடவை நயன்தாரா முதல் பனாரஸி துப்பட்டா கீர்த்தி சுரேஷ் வரை... டிரெஸ்ஸிங்கில் டாப் 10 ஹீரோயின்ஸ்!

கிளாமராக பெண்களிடம் ஆரம்பித்த இந்த ஃபேஷன் சேலன்ஞ்ச் தற்போது க்யூட்டாக நாய்க்குட்டி படங்களுடன் சோஷியல் மீடியாவில் உலாவருகிறது.

அடுத்த கட்டுரைக்கு