Published:Updated:

லண்டனில் நடக்கும் மிஸ் வேர்ல்டு 2019 - வாகை சூடுவாரா இந்தியாவின் சுமன் ராவ்?!

சுமன் ராவ்
சுமன் ராவ் ( Instagram )

2019-ம் ஆண்டின் 'ஃபெமினா மிஸ் இந்தியா' போட்டியில் வென்ற ராஜஸ்தானைச் சேர்ந்த 21 வயதான சுமன் ரத்தன் சிங் ராவ், இந்தியா சார்பாக 'மிஸ் வேர்ல்டு' போட்டியில் கலந்துகொள்கிறார்.

பிரபஞ்ச அழகிப் போட்டியைத் தொடர்ந்து, உலக அழகிப் போட்டிக்காக லண்டன் மட்டுமல்ல, 'அடுத்த உலக அழகி யார்?' என்ற கேள்வியின் விடையை நோக்கி ஃபேஷன் உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. டிசம்பர் 14-ம் தேதி லண்டனில் நடைபெறவிருக்கும் இந்த 69-வது உலக அழகிப் போட்டிக்காக, 120 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். டிசம்பர் 14-ம் தேதி நடைபெறவிருக்கும் இப்போட்டியின் சில சுவாரஸ்ய அப்டேட்ஸ் இதோ...

Miss world contestants
Miss world contestants
Instagram

2019-ம் ஆண்டின் உலக அழகிப் போட்டியின் தொடக்க விழா நவம்பர் 20-ம் தேதி லண்டனில் நடைபெற்றது. இதையடுத்து, பல்வேறு விதமான போட்டிகளில் தொடர்ச்சியாகப் போட்டியிட்டு, முதல் கட்டமாக 40 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதிலிருந்து 10 போட்டியாளர்கள் இறுதிச் சுற்றுக்கு விரைவில் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அழகிக்குக் கடந்த ஆண்டின் உலக அழகி, மெக்ஸிகோவைச் சேர்ந்த வனேசா போன்ஸ் மகுடம் சூட்டுவார். லண்டனின் பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளர் பியர்ஸ் மோர்கன், இந்த அழகிப் போட்டியின் தலைமை நடுவராகப் பங்கேற்கவுள்ளார்.

Miss world 2018 Vanessa Ponce
Miss world 2018 Vanessa Ponce
Instagram

சில காலமாக உலக அழகிப் போட்டி நிகழ்ச்சிகளைப் பிரதான சேனல்களில் ஒளிபரப்பவில்லை. ஆனால், இம்முறை நேரடியாக ஒளிபரப்ப முடிவு செய்திருக்கிறார்கள். 140 நாடுகளில் வசிக்கும் 90 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த நிகழ்வினை நேரலையில் பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சுமார் ஒரு கோடி மக்கள் இறுதிச் சுற்றின் ஓட்டெடுப்பில் வாக்களிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

2019-ம் ஆண்டின் 'ஃபெமினா மிஸ் இந்தியா' போட்டியில் வென்ற ராஜஸ்தானைச் சேர்ந்த 21 வயதான சுமன் ரத்தன் சிங் ராவ், இந்தியா சார்பாக 'மிஸ் வேர்ல்டு' போட்டியில் கலந்துகொள்கிறார். வெற்றிகரமான மாடலாக வளர்ந்து வரும் சுமன், ஜூன் மாதம் நடந்த மிஸ் இந்தியா உலகப் போட்டியில் கிரீடத்தை மட்டுமல்ல, 'மிஸ் ராம்ப் வாக்' டைட்டிலையும் வென்றார்.

Miss India 2019 Suman Rao
Miss India 2019 Suman Rao
Instagram
பிரபஞ்ச அழகிப் போட்டியின் இறுதிச்சுற்றுக் கேள்வி... ஸோஸிபினியின் வலிமையான பதில்! #MissUniverse2019

மேலும், 'புராஜெக்ட் பிரகதி' எனும் அரசு சாரா அமைப்போடு இணைந்து பணியாற்றியதால்,`பியூட்டி வித் எ பர்பஸ்’ பட்டதையும் தன்வசமாக்கியுள்ளார் சுமன் ராவ். இது, வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ள பெண்களுக்கு நிதி திரட்ட உதவும் அமைப்பு.

சுமன் ராவ், 2019-ம் ஆண்டின் உலக அழகிப் போட்டியின் டாப் 10 போட்டியாளர்களில் ஒருவராக முன்னேறுவாரா, இறுதிச் சுற்றில் வாகை சூடுவாரா? காத்திருப்போம்!

அடுத்த கட்டுரைக்கு