Published:Updated:

`கிரேக்கக் கணிதத்தின்படி உலகின் மிக அழகான பெண் இவர்..!' -`சூப்பர்மாடல்’ பெல்லா ஹாடிட்

பெல்லாவின் கண்கள் மற்றும் நெற்றிப் பகுதிகள்தான் 'சிறந்த அம்சங்கள்' எனப் பதியப்பட்டிருக்கின்றன. இந்தப் பட்டியலில் பியான்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

பெல்லா ஹாடிட்
பெல்லா ஹாடிட் ( Dailymail )

கிரேக்கக் கணிதத்தின்படி உலகின் மிக அழகான பெண்ணாக `சூப்பர்மாடல் பெல்லா ஹாடிட்' தேர்வு செய்யப்பட்டுள்ளார். கிரேக்கர்களின் `Golden Ratio of Beauty Phi' விதியின்படி, 23 வயதான பெல்லாவின் முகம் 94.35 சதவிகிதம் கச்சிதமாக உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Bella Hadid
Bella Hadid

இந்தக் கணிதத்தின் அளவுபடி, பெல்லாவின் சகோதரியும் சூப்பர் மாடலுமான ஜீஜி ஹாடிட், அமெரிக்கப் பாடகி பியான்ஸ், பிரிட்டிஷ் மாடல் காரா டெல்வின், அமெரிக்கப் பாடலாசிரியரும் பாடகியுமான கேட்டி பெர்ரி ஆகியோர்களைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார் பெல்லா.

லண்டனின் சிறந்த முக அழகு அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஜூலியன் டி சில்வா, இந்த அளவீடுகளின் பரிசோதனையை நடத்தியதாக அந்நாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ``கிரேக்கர்களின் அழகுக் கணித குறிப்பின் பர்ஃபெக்ட் உடலமைப்பிற்கான ஆய்வில், முகத்தின் அளவீடுகளைக் கணக்கிடும்போது, பெல்லா ஹாடிட் போட்டியாளர்கள் யாருமின்றி வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Bella's sister Gigi Hadid
Bella's sister Gigi Hadid

கன்னத்திற்கான அளவீடுகளில் 99.7 சதவிகித மதிப்பெண் பெற்று முதலிடத்தைப் பிடித்தார்" என்று டாக்டர் ஜூலியன் கூறியுள்ளார்.

`உங்களாலும் உதவ முடியும்!'- மனச்சோர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கரம் நீட்டும் தீபிகா படுகோன்

மேலும், Snazzy mapping நுட்பத்தின்படி, பெல்லாவின் கண்கள் மற்றும் நெற்றிப் பகுதிகள்தான் 'சிறந்த அம்சங்கள்' எனப் பதியப்பட்டிருக்கின்றன.

Ariana Grande
Ariana Grande

இந்தப் பட்டியலில் பியான்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளார். அமெரிக்க நடிகை அம்பர் ஹியர்ட், பாடகி அரியானா கிராண்டே மற்றும் டெய்லர் ஸ்விஃப்ட் ஆகியோர் அடுத்தடுத்த நிலையில் உள்ளனர்.