2022 - ம் ஆண்டின் முடிவுக்கு வந்துவிட்டோம். சாமான்ய பெண்கள் முதல் செலிப்ரிட்டிகள் வரை இந்த வருடம் சமூக வலைதளங்களில் வைரலான பெண்கள் பற்றிய ஒரு ரீவைண்ட்...
ஸ்மிருதி மந்தனா
கிரிக்கெட்டில் ஆண்கள் மட்டுமே ஜாம்பவான்களாக இருந்த நிலையில் மும்பையை சேர்ந்த ஸ்மிருதி மந்தனா டி20 போட்டியில் தன் திறமையால் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தார். இந்த வருடம் ஐசிசி டி20யின் மகளிர் பிரிவில் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றார். இந்த வருடம் ஸ்மிருதியை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

சமந்தா
திரைப்படங்களில் எனர்ஜி பேக்கேஜாக வலம் வரும் சமந்தா `ஊ சொல்றியா' பாடல் மூலம் இந்த வருடம் சமூக வலைதளங்களில் க்ளாப்ஸ் அள்ளினார். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம், தான் 'மயோசிடிஸ்' என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சமந்தா தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டார். மயோசிடிஸ் சோஷியல் மீடியாவில் பேசுபொருளானது. ரசிகர்கள் பலரும் சமந்தாவிற்கு தங்கள் அன்பையும் ஆதரவையும் அனுப்பினர்.
லட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா ஷோவில் `என்னுள்ளே என்னுள்ளே’ பாடலை, ஷோவின் ஒரு பகுதியில் பாடினார் லட்சுமி. அவரின் குரல் அனைவரையும் ஈர்க்க அடுத்த சில நாள்களில் பலருடைய வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் லட்சுமி பாடிய வீடியோ தான்.
நயன்தாரா
நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியின் திருமணம், சினிமா உலகின் ஹைலைட் நிகழ்வு. திருமணத்தில் நயன்தாரா புடவை தொடங்கி மேக்கப் வரை அனைத்தும் டிரெண்ட் ஆகின. மேலும், திருமணமான ஐந்தாவது மாதம் தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக அறிவித்தனர் இந்தத் தம்பதி.
மானஸி
நடிகர் விஜய் திரைப்படம் வெளிவருகிறது என்றாலே பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் 2022-ம் ஆண்டு வாரிசு திரைப்படத்திற்கு பெரிய அளவு ஹைப் கிளம்பியது. இந்த திரைப்பட பாடல்களில் ஒன்றான ' ரஞ்சிதமே' பாடலின் லிரிக்கல் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிய உடனே, அந்தப் பாடலை பாடி, லிரிக்கல் வீடியோவில் நடித்திருந்த மானஸியை மக்கள் கொண்டாடி தீர்த்தனர். மானஸி தன் க்யூட் ரியாக்ஷன் மற்றும் குரல் வளத்தால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து ட்ரெண்ட் ஆனார்.

ஆலியா பட்
பாலிவுட்டின் காதல் ஜோடிகளான ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் திருமணம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்றது. திருமண அறிவிப்பு வந்ததில் இருந்தே ஆலியாவின் வெட்டிங் லுக் பற்றிய எதிர்பார்ப்பு கிளம்பியது. ஆனால், பாரம்பர்ய ஆடையில் நோ மேக்கப் லுக்கில் ஆலியா அசத்தினார். ஆலியாவின் நோ மேக்கப் லுக் பரபரப்பாக பேசப்பட்டது.
இவானா
`லவ் டுடே’ திரைப்படம் மூலம் ட்ரெண்ட் ஆனவர் நடிகை இவானா. ``சொல்லுங்க மாமா குட்டி" என்ற ஒற்றை டயலாக் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கட்டிப்போட்டவர்.

இவானா பேசிய அந்த டயலாக் ரீல்ஸ், ஷார்ட்ஸ் என சோஷியல் மீடியாவில் வேற லெவல் டிரெண்ட் ஆனது.
மேக்னா சுமேஷ்
கேரளாவில் ஒரு ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற மேக்னா சுமேஷ் ஜி.வி பிரகாஷ் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். ஷூட்டிங்கில் ஜி.வி பிரகாஷிடம், `அடியாத்தி இது என்ன ஃபீலு' பாடலை மேக்னா பாட, அதை தன் மொபைலில் வீடியோ எடுத்து ட்விட்டரில் பதிவிட்டார் ஜி.வி. அந்த வீடியோவை தனுஷ் ' தேவதையின் குரல் இப்படித்தான் இருக்கும்' என்ற வரிகளுடன் ரீ- ட்வீட் செய்தார். அடுத்த சில மணி நேரத்தில் அனைத்து யூடியூப் சேனலையும் மேக்னா ஆக்கிரமித்தார்.

ஐஸ்வர்ய லட்சுமி
பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகியதும், பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஐஸ்வர்ய லட்சுமிக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ஹார்ட்களை பறக்க விட்டார்கள். அந்த ட்ரெண்ட் அடங்குவதற்குள் `கட்டா குஸ்தி' திரைப்படத்தில் ஐஸ்வர்யா சண்டை போடும் காட்சிகளில் ரசிகர்கள் ஸ்தம்பித்து போனார்கள் என்றே சொல்லலாம்.