Published:Updated:

மதுர மக்கள்: "காதுபடவே எங்க உருப்படப் போறான்னு பேசினாங்க... ஆனா இப்ப..?" - சைவா பார்மஸி மணிமாறன்

சைவா பார்மஸி மணிமாறன்
News
சைவா பார்மஸி மணிமாறன்

மதுரையின் அடையாளமே அதன் மக்கள்தான். மதுரையின் நலனுக்காகவே உழைக்கும் மக்களை அடையாளப்படுத்துவதும், அவர்களின் குரல்களை உலகிற்கு ஒலிக்கச்செய்வதுமே இந்தத் தொடரின் நோக்கம்.

Published:Updated:

மதுர மக்கள்: "காதுபடவே எங்க உருப்படப் போறான்னு பேசினாங்க... ஆனா இப்ப..?" - சைவா பார்மஸி மணிமாறன்

மதுரையின் அடையாளமே அதன் மக்கள்தான். மதுரையின் நலனுக்காகவே உழைக்கும் மக்களை அடையாளப்படுத்துவதும், அவர்களின் குரல்களை உலகிற்கு ஒலிக்கச்செய்வதுமே இந்தத் தொடரின் நோக்கம்.

சைவா பார்மஸி மணிமாறன்
News
சைவா பார்மஸி மணிமாறன்

"ஐடி வாழ்க்கைதான். ஐடில லட்சங்கள்ல சம்பளம், அதனால எல்லாத்தையும் விட்டுட்டு சம்பந்தமே இல்லாம ஒரு வேலையா பார்த்துக்குறேன்னு சொல்லுறது எல்லாருக்கும் ஃபேஷனாகிருச்சுன்னு நினைக்கலாம். ஆனா லட்சங்கள்ல சம்பளம் வாங்குன ஒருத்தன் தனக்குன்னு ஓர் அடையாளத்த உருவாக்குறதுக்காக காசு பணமெல்லாம் தீர்ந்து சுத்தி இருக்கிறவங்க கிட்ட பொழைக்க தெரியாதவன்னு பேச்செல்லாம் வாங்கும்போது ஒரு உத்வேகம் வரும். அந்த அவமானங்கள்தான் அடுத்தடுத்து ஓட வச்சது."

அத்தனை நம்பிக்கையாகப் பேசுகிறார் மணிமாறன். ஐடி துறையிலிருந்து விலகி சித்த மருத்துவத்துக்கான மருந்துகளைத் தயார் செய்யும் இளைஞர். ஸ்ரீ சைவா பார்மஸியின் உரிமையாளர்!

மணிமாறனை பத்தி சொல்லுங்க...

சைவா பார்மஸி மணிமாறன்
சைவா பார்மஸி மணிமாறன்

"இன்ஜினியரிங் முடிச்சுட்டு வழக்கம்போல பொருள் தேடணும்னு ஓட ஆரம்பிச்ச சராசரி ஐடி இளைஞன்தான் நான். எல்லாருக்குள்ளயும் வாழ்க்கையில் எதாவது ஒரு இடத்துல ஒரு திருப்புமுனை வரும்ல. அப்படித்தான் எனக்கும் ஒரு நாள் 2014-ல வந்தது. வேலை பார்த்துட்டு இருக்கப்போ திடீர்னு மனைவிக்கு டெங்கு. கர்ப்பிணியாக இருந்தவங்களுக்கு டெங்கு, நிலைமை ரொம்ப மோசமா இருக்குன்னு போன். எல்லாத்தையும் அப்படியே போட்டுட்டு கிளம்பி வந்துட்டேன். குடும்பமா வேலையான்னு தோணுனப்போ வேலை வேணாம்னு வேலையை விட்டுட்டேன். இருந்த கொஞ்ச சேமிப்பும் மருத்துவத்துலயே காலி பண்ணிட்டேன். அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிக்கும்போதே என்னை சுத்தி இருந்த எல்லாருக்குமே என்மேல இருந்த நம்பிக்கை போச்சு. காதுபடவே எங்க உருப்படப் போறான்னு பேசினாங்க."

எப்படி சாத்தியமாச்சு சித்த மருத்துவ உலகம்..?

சைவா பார்மஸி மணிமாறன்
சைவா பார்மஸி மணிமாறன்

"இன்னமும் யோசிச்சுப்பார்த்தா எனக்கு இதுக்கு சரியான பதில் கிடையாது. இங்கேயே வேலை பார்க்கணும்னு யோசிச்சேன். சுயமா தொழில் தொடங்குனா இவ்வளவு லாபம் வரும் இவ்வளவு சம்பாதிக்கப்போறோம்னு எனக்கு எந்த நோக்கமும் இல்ல. வேலை பார்க்கணும், மனசுக்கு நிம்மதியா எந்த அழுத்தமும் இல்லமா ரிலாக்ஸா இருக்கணும். அதே நேரத்துல மத்தவங்களுக்கும் பயனுள்ளதா இருக்கணும்னு தோணுச்சு. மனைவிக்கு டெங்கு வந்தப்போ சித்த மருந்துகள் மூலமாதான் குணமடைஞ்சாங்க. அதுவே எனக்கு இன்னமும் நம்பிக்கையை அதிகப்படுத்துச்சு. அப்படித்தன் சித்த மருத்துவ உலகம் எனக்கு அறிமுகமாச்சு. இதுதான் நமக்கான பாதைன்னு நான் முடிவு பண்ணதும் அப்போதான்."

சம்பந்தமே இல்லாத ஒரு துறை... உங்களை எப்படித் தயார் பண்ணிக்கிட்டீங்க?

சைவா பார்மஸி மணிமாறன்
சைவா பார்மஸி மணிமாறன்

"ஆரம்பத்துல ரொம்பவே சிரமமா இருந்தது. நல்ல வேலை, நல்ல சம்பளம், கல்யாணத்துக்கு அப்பறம் இப்படி பண்ணிட்டு வந்து நிக்கிறேன்னு சொந்தக்காரங்ககிட்ட கூட அவ்ளோ நல்ல அபிப்ராயம் இல்லை. இன்னும் சிலர் வீடு முழுசும் டப்பா டப்பாவ இருக்கறதைப் பார்த்து என்ன தம்பி பெட்டிக்கடையா ஆரம்பிச்சுருக்கீங்கன்னெல்லாம் கேட்டாங்க. ஆனா எதையும் நான் காதுல வாங்குனதோட சரி, மனசுல ஏத்திக்கல. சித்த மருத்துவத்துக்கான மருந்துகளை முறைப்படி பாரம்பர்யமா செய்கிற ஆட்களேதான் நேரடியா வந்து செய்றாங்க. படிப்படியா செஞ்சு முடிச்சு லைசென்ஸ் கிடைச்சப்போதான் பாதி ஜெயிச்சுட்டோம்னு சந்தோஷம் வந்தது. இன்னைக்கு தமிழ்நாட்டுல இருக்க எல்லா முன்னணி சித்த மருத்துவர்களும் என்னோட கம்பெனி மருந்துகளைத்தான் பரிந்துரை பண்ணுறாங்க."

ஐடியில் கிடைச்ச வருமானத்தை இந்தத் துறைல சம்பாதிக்கிறீங்களா?

சைவா பார்மஸி மணிமாறன்
சைவா பார்மஸி மணிமாறன்

"ஐடி வருமானத்தை சம்பாதிக்கணும்னு நினைச்சு நான் ஓட ஆரம்பிச்சா, நிச்சயமா என்னால சம்பாதிக்க முடியும். ஆனா என்னோட நோக்கம் அது இல்ல. என் தேவைக்கு ஏத்த வருமானம் போதும். நினைச்ச நேரம் குடும்பத்தோட கிளம்பி நிம்மதியா எங்கயாவது டூர் போயிட்டு வரலாம்னு கிளம்பி போக முடியுது. எந்த புற அழுத்தமும் வேலை மூலமா நான் ஏத்துக்கிறது இல்ல. இதைவிட நான் சேர்க்கணும்னு நினைக்கிற பணம் எனக்கு எந்த விதத்துலயும் பயன்படாதுன்னு தோணுது. அதனால இந்த நிம்மதியும் சந்தோஷமுமே போதும்னு நினைக்கிறேன்."