Published:Updated:

முதுமையில் தாய்மை ஒரு மெழுகுவர்த்தி| முதுமை எனும் பூங்காற்று #MyVikatan

Dr V S Natarajan
News
Dr V S Natarajan

அளவுக்கு அதிகமான பாசம், பல தொல்லைகளைத் தரக் கூடியதுதான். பேரப்பிள்ளைகள் பள்ளியிலிருந்தோ, கல்லூரியிலிருந்தோ வீட்டுக்கு வருவதற்கு சற்று கால தாமதம் ஆகிவிட்டால் போச்சு... ’ஐயோ, குழந்தைக்கு என்னவாயிற்றோ?’ என்று கூச்சலிட்டு வீட்டில் உள்ளவர்களை ஒரு பாடுபடுத்தி விடுவாள்!

வயதான காலத்திலும், பல தொல்லைகளுக்கு இடையே வாழ்க்கையில் ஒரு பிடிப்பு இருக்கிறது என்றால், அது குடும்பத்தாரிடம் வைத்திருக்கும் அன்பும் பாசமும்தான்.

தாய்மை என்பது அன்பு, பரிவு, பாசம், தியாகம், பொறுமை, நிதானம் போன்ற பல நல்ல பண்புகளை கொண்டதேயாகும். தாய்மைக்கு ஈடாக உலகில் வேறு எதையும் ஒப்பிட்டுக் கூறிவிட முடியாது. இத்தகைய உயர்ந்த பண்புகளைக் கொண்ட தாய்மையின் முழு வெளிப்பாடு ஒரு பெண் முதுமை அடையும் பொழுதுதான் அது முழு நிலவாகத் தெரிகிறது.

ஒரு பெண் தாய்மை அடைந்ததிலிருந்து அவள் முதுமை அடையும் வரை அவள் பாசம் என்ற அன்புக் கயிற்றால் கட்டுப்பட்டு தனது வாழ்க்கையை கடந்து வருகிறாள். மகன், மகளிடம் காட்டும் பாசத்தைவிட பேரன், பேத்திகளிடையே காட்டும் பாசம்தான் மிகவும் அதிகம். ஒரு பெண் தனது வாழ்க்கைப் பருவத்தில் அதாவது நடுத்தர வயதில், குடும்ப பாரத்தை சுமப்பதிலேயே காலம் கடந்து விடுகிறது. தனது குழந்தைகளின் மேல் பாசம் இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளும் அளவிற்கு அவளுக்கு கால அவகாசம் கிடைப்பதில்லை. ஆனால், முதுமைப் பருவத்திலோ, காலம் கை கூடி நிற்கிறது. பேரப் பிள்ளைகள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் காலத்தில் தன்னால் முடிந்த அளவிற்கு அவர்களுக்கு உதவி செய்து மகிழ்ச்சி அடைகிறாள்.

உதாரணம்: காலை உணவு மற்றும் மதிய உணவு செய்வதற்கு குடும்பத்தார்களுக்கு உதவுவது, மாலையில் பள்ளி மற்றும் சிற்றுண்டி செய்வது, பேரன் பேத்திகளின் நிச்சயதார்த்த, திருமணம் மற்றும் வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளில் தன்து உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் மிகுந்த மகிழ்ச்சியோடும் ஒருவித பெருமிதத்தோடும் கலந்துகொண்டு தனது கடமையை முதுமையிலும் முழுமையாக வெளிக்கொண்டு வருகிறாள்.

ஆனால், அளவுக்கு அதிகமான பாசமும் பல தொல்லைகளை தரக் கூடியதுதான். பேரப்பிள்ளைகள் பள்ளியிலிருந்தோ, கல்லூரியிலிருந்தோ வீட்டுக்கு வருவதற்கு சற்று கால தாமதம் ஆகிவிட்டால் போச்சு! ஐயோ, குழந்தைக்கு என்னவாயிற்றோ? ஏன் குழந்தை வீட்டிற்கு வரவில்லை? இப்படியெல்லாம் கூச்சலிட்டு வீட்டில் உள்ளவர்களை ஒரு பாடுபடுத்தி விடுவாள். அந்தப் பாட்டியைச் சொல்லி குற்றமில்லை... வயதான காலத்திலும், பல தொல்லைகளுக்கு இடையே வாழ்க்கையில் ஒரு பிடிப்பு இருக்கிறது என்றால், அது குடும்பத்தாரிடம் வைத்திருக்கும் அன்பும் பாசமும்தான்.

Grandmother
Grandmother
Book vector created by vectorpouch - www.freepik.com

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
முதுமைப் பருவம் என்பது ஒரு வரம். சிலருக்கு மட்டும் தன் துணையுடன் இதை அனுபவிக்கும் வாய்ப்பு கிட்டுகிறது. இப்பருவத்தில் எத்துனை எத்தனை துன்பங்கள் வந்தாலும், ஒருவருக்கொருவர் தோள் கொடுத்து தன் துணையோடு வாழ்வதிலே ஒரு சுகம்.

பேரக் குழந்தைகளுக்கு அடுத்ததாக, பாட்டி பாசத்தைக் காட்டுவது தாத்தாவிடம்தான். ஆனால், இது முற்றிலும் மாறுபட்டது. தாத்தாவை அடிக்கடி திட்டுவது, சண்டை இடுவது போன்ற பல செயல்கள் வீட்டில் தினம் தினம் காணலாம். உண்மையில் பாட்டி தாத்தைவை திட்டுவது மற்றும் கோபப்படுவது எல்லாம், தாத்தாவின் மேல் வைத்திருக்கும் உண்மையான அன்பினால்தான். அவருக்கு ஏதாவது ஆகிவிடக் கூடாது என்ற பயத்தினால் அப்படி நடந்து கொள்கிறாள். இது தாத்தாவிற்கும் நன்றாகவேத் தெரியும். அவள் திட்டுவதை இவர் சுகம் என உள்ளார அனுபவிக்கிறார். இந்த உண்மை நிலை புரியாமல் மற்றவர்கள், பாட்டி எப்பொழுதும் தாத்தாவிடம் சண்டைபோட்டுக் கொண்டு இருப்பதாக எண்ணுகிறார்கள். இது முற்றிலும் தவறு என்று அந்த பாட்டிக்கும் தாத்தாவுக்கும் மட்டுமே தெரியும். முதுமையில் இது ஒரு சுகமான அனுபவம்.

முதுமைப் பருவம் என்பது ஒரு வரம். சிலருக்கு மட்டும் தன் துணையுடன் இதை அனுபவிக்கும் வாய்ப்பு கிட்டுகிறது. இப்பருவத்தில் எத்துனை எத்தனை துன்பங்கள் வந்தாலும், ஒருவருக்கொருவர் தோள் கொடுத்து தன் துணையோடு வாழ்வதிலே ஒரு சுகம். முதுமையும் தாய்மையும் ஒன்றோடு ஒன்றி கலந்தது. அதைப் புரிந்து கொள்ள முடியாது. அவர்களும் வாழ்ந்து மற்றவர்களும் வாழ நினைப்பதுதான் முதுமையில் தாய்மை என்பதன் தனிச் சிறப்பு.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
முதுமைத் தாய் தன் குடும்பத்திற்காக தன் வயதையும், உடல் நலத்தையும் பாராமல் இரவு பகலாக உழைத்து, மெழுகுவர்த்தியாக உருகுவாள். அந்த முதுமைத் தாய்க்கு, இந்த இளைய சமுதாயம் என்ன கைம்மாறு செய்யப்போகிறது?

வயது ஆக ஆக மனதளவில் பந்த, பாசங்களை குறைத்துக்கொண்டு வாழ முயற்சிக்க வேண்டும். ஒரேடியாக, மனைவி, பிள்ளை, பேரன், பேத்தி என்று பாசத்தைக் கொட்டக்கூடாது. ஏனென்றால் அவர்களுக்கு ஒரு சிறிய பாதிப்பு ஏற்பட்டாலும் அம்முதியவர்கள் மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும், கொஞ்சம், கொஞ்சமாக பாச வலையிருந்து மீண்டு, தாமரை இலைமேல் இருக்கும் தண்ணீரைப்போல வாழக் கற்றுக்கொள்வது முதியவர்களுக்கு மிக நல்லது. சொல்வது எளிது. அதன்படி செயல்படுவது சற்று கடினம் தான்.

முதுமைத் தாய் தன் குடும்பத்திற்காக தன் வயதையும், உடல் நலத்தையும் பாராமல் இரவு பகலாக உழைத்து, மெழுகுவர்த்தியாக உருகுவாள். அந்த முதுமைத் தாய்க்கு, இந்த இளைய சமுதாயம் என்ன கைம்மாறு செய்யப்போகிறது?

முதியவர்கள் தனிக்குடித்தனம் போக ஒரு சூழ்நிலையை குடும்பத்தில் உருவாக்க வேண்டாம் அல்லது முதியோர் இல்லங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டாம். இவற்றைச் செய்யாமல் முதியோர்களை தங்களோடு வைத்துக் கொள்ளுங்கள் என்றுதான் கேட்டுக் கொள்கிறோம். இது ஒரு பெரிய காரியம் அல்ல... மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.

- பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன், முதியோர் நல மருத்துவர், டாக்டர் வி.எஸ். நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை, சென்னை