என்டர்டெயின்மென்ட்
ஹெல்த்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

வாழ்க்கையை மாற்றிய வண்ணக் காகிதங்கள்! - க்வில்லிங் குயின் குணவதி

க்வில்லிங் கலை
பிரீமியம் ஸ்டோரி
News
க்வில்லிங் கலை

க்வில்லிங் கலையில் பலவிதமான நிறங்களை உபயோகிப்பதால், மன அழுத்தம் குறைவது நிஜம்.

றியில் நெய்யப்பட்ட கண்டாங்கிச் சேலைகளுக்குப் பெயர் பெற்ற சின்னாளப்பட்டியில் பிறந்தவர் குணவதி. ஊரின் முதல் மருத்துவர் குணவதியின் தந்தை சண்முகம். வீட்டில் அப்பா, அண்ணன், அண்ணி என மூன்று டாக்டர்கள்.

‘நாமும் டாக்டருக்குப் படித்து அப்பா போல பெயரெடுக்க வேண்டும்’ என்ற குணவதியின் இளவயதுக் கனவைத் தகர்த்தெறிந்தது ஒன்றரை வயதில் அவரைத் தாக்கிய போலியோ நோய். ‘‘ஊரில் இருக்கும் குழந்தைகளுக்கெல்லாம் அப்பாதான் போலியோ சொட்டு மருந்து கொடுத்தார். ஆனால், எனக்கே போலியோ அட்டாக் வந்ததுதான் விதி” என்று மென்மையாகத் தனது கடந்தகாலத்தை விவரிக்கிறார் சிவகாசி நகரில் வசிக்கும் குணவதி.

வாழ்க்கையை மாற்றிய வண்ணக் காகிதங்கள்! - க்வில்லிங் குயின் குணவதி

‘‘அந்தத் தாக்குதலால் என்னுடைய வலதுகாலின் உயரம் ரெண்டு மூணு இன்ச் குறைஞ்சிருச்சு. 12 வயதில் ஒரு ஆபரேஷன் பண்ணினாங்க. ஆனா, அது சக்சஸ் ஆகல. அதனால இப்பவும் கூட கொஞ்சம் சாய்ந்துதான் நடப்பேன்” - புன்னகையோடு பேசும் குணவதி, `க்வில்லிங்' என்னும் வண்ணக் காகிதச் சுருட்டுக் கலையில் எக்ஸ்பர்ட்.

‘‘என்னுடைய இந்தக் குறையால், என்னை நல்லாப் பார்த்துக்கக்கூடிய மாப்பிள்ளை வரும்போது கல்யாணம் செய்து கொடுத்து டணும்னு நினைச்சாங்க பெற்றோர். நான் 10-ம் வகுப்பு முடிச்சபோது பொண்ணு கேட்டு வந்தாங்க. என் கணவர் சந்திர சேகருக்கு சிவகாசியில் பிரின்டிங் பிசினஸ். 16 வயசிலேயே கல்யாணமாயிடுச்சு. எங்களுக்கு ரெண்டு மகள்கள். மூத்த பொண்ணுக்கு திருமணமாகி, குழந்தை இருக்கு.

குணவதி
குணவதி

விருதுநகரில் கூட்டுக் குடும்பமா இருந்தோம். என் நாத்தனார் பியூட்டி பார்லர் வெச்சிருந்தாங்க. நானும் பார்லருக்கு போய் அவங்களுக்கு உதவியா இருந்தேன். அப்புறம் சிவகாசிக்கு வந்தோம். பிரின்டிங் மெஷின் இறக்குமதி தொழிலும் செய்துகிட்டிருந்த என் கணவருக்கு அலுவலக வேலைகளில் உதவியா இருந்தேன்.

வாழ்க்கையை மாற்றிய வண்ணக் காகிதங்கள்! - க்வில்லிங் குயின் குணவதி
வாழ்க்கையை மாற்றிய வண்ணக் காகிதங்கள்! - க்வில்லிங் குயின் குணவதி

என்னைப் படிக்க வைக்காம விட்டுட்டாங்களே என்ற ஆதங்கம் எனக்கு இருந்துகிட்டே இருந்தது. அம்மாகிட்ட அடிக்கடி அதைச் சொல்லிக் குறை பட்டுக்குவேன். அதனாலேயே நான் ஊருக்குப்போகும் போதெல்லாம் என்னை ஊக்கப்படுத்துற மாதிரியான பத்திரிகை செய்திகள் வந்த பேப்பர் கட்டிங்ஸை சேகரிச்சு வெச்சுக் கொடுப்பாங்க அம்மா.

என் தோழியின் மகள் ஃபேஸ்புக்கில் போட்டிருந்த க்வில்லிங் ஜிமிக்கியைப் பார்த்தேன். ரொம்ப அழகா இருந்தது. க்வில்லிங் செய்யத் தேவை யான பொருள்களை எல்லாம் என் மகளுக்கு வாங்கிக் கொடுத்து அந்தப் பொண்ணுகிட்ட கத்துக்கச் சொன்னேன். என் மகள் செய்யும் போது நானும் சுலபமா கத்துக்கலாம் போலிருந்தது. பிறகு, நானே செய்து பார்த்தேன். ரொம்ப அழகா வந்தது.

வாழ்க்கையை மாற்றிய வண்ணக் காகிதங்கள்! - க்வில்லிங் குயின் குணவதி
வாழ்க்கையை மாற்றிய வண்ணக் காகிதங்கள்! - க்வில்லிங் குயின் குணவதி

என் கணவர் நான் செய்த வண்ணத்துப்பூச்சி க்வில்லிங்கை ஃப்ரேம் செய்து கொண்டுவந்ததைப் பார்த்த என் டாக்டர் அண்ணா, அடுத்து நடக்கவிருந்த மருத்துவர்கள் கூட்டத்தில் கலந்துக்கிற டாக்டர் களுக்கு நினைவுப் பரிசாகக் கொடுக்கிறதுக்கு 40 பீஸ் செய்து தர முடியுமான்னு கேட்டார். ஏதோ ஒரு தைரியத்தில் சம்மதிச்சேன். குறைவான கால அவகாசத்தில் என் மகளும் உதவி செய்ய, குறித்த நேரத்தில் ஆர்டரை செய்து முடிச்சேன். எல்லாப் படங்களையும் ஃப்ரேம் செய்து, பின்புறம் ‘குணாஸ் க்வில்லிங்’னு ஸ்டிக்கர் ஒட்டி, என் போன் நம்பருடன் கொடுத்தேன்.

நான் செய்த க்வில்லிங் நகை களைப் போட்டுகிட்டு ஒரு ஜூட் எக்ஸிபிஷன் போயிருந்தேன். அங்கே ஒரு பெண் அதைப் பத்தி விசாரிச் சிட்டு, அரசாங்கத்தின் கைவினைக் கலைஞர்கள் துறை இருப்பது பத்தி சொல்லி, அங்கே இருந்த உதவி இயக்குநரிடம் அறிமுகம் செய்து வெச்சாங்க. என்னுடைய மற்ற படைப்புகளைப் பார்த்துட்டு, எனக்கு ‘ஆர்ட்டிஸான்’ (கைவினைக் கலைஞர்) கார்டு கொடுத்தாங்க. அந்த கார்டு இருந்தால் இந்தியா முழுவதும் எங்கே கைவினைக் கலை கண்காட்சி நடந்தாலும் நமக்குத் தகவல் வரும்... ஸ்டால் போடலாம்.

வாழ்க்கையை மாற்றிய வண்ணக் காகிதங்கள்! - க்வில்லிங் குயின் குணவதி
வாழ்க்கையை மாற்றிய வண்ணக் காகிதங்கள்! - க்வில்லிங் குயின் குணவதி

இதுவரை தமிழ்நாடு மட்டு மல்லாமல் புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரான்னு பல மாநிலங்களில் நடந்த கண்காட்சிகளில் ஸ்டால் போட்டிருக்கேன். இந்த ஓட்டத்தில் என் குறைபாடெல்லாம் காணாமலேயே போயிடுச்சு’’ என்று சிரிக்கிறார் குணவதி.

வாழ்க்கையை மாற்றிய வண்ணக் காகிதங்கள்! - க்வில்லிங் குயின் குணவதி
வாழ்க்கையை மாற்றிய வண்ணக் காகிதங்கள்! - க்வில்லிங் குயின் குணவதி

திருமண புகைப்படங்கள், சுவர் கடிகாரங்கள், மினியேச்சர் பொம்மைகள், பரிசுப் பொருள்கள், நகைகள், சுவாமி உருவங்கள் என வண்ணக் காகிதங்களில் வானவில் ஜாலம் காட்டுபவர், எந்த விளம்பரமும் இல்லாமல்தான் இயங்கிக்கொண்டிருக்கிறார்.

‘‘இரண்டாம் உலகப் போரின் போது யு.கே-யில் பெண்கள் செய்யத் தொடங்கியதுதான் இந்த பேப்பர் க்வில்லிங். இப்போ வியட்நாமில் இதை பெரிய பிசினஸாக செய்யுறாங்க. இந்தக் கலையில் பலவிதமான நிறங்களை உபயோகிப்பதால், மன அழுத்தம் குறைவது நிஜம். அம்மாவுக்கும் க்வில்லிங் சொல்லிக் கொடுத்திருக்கேன். பல வருஷங்களாக மாத்திரை போட்டுத் தூங்கும் அம்மா, இப்போ க்வில்லிங் பேப்பர் சுருட்டிட்டே இருப்பதால் மாத்திரை இல்லாமலேயே தூங்குறாங்க” என்று கூறும் குணவதிக்கு, இக்கலையை முதியோர் இல்லங்களில் வாழும் மூத்த குடிமக்களுக்கும் சிறையில் இருக்கும் கைதிகளுக்கும் கற்றுத் தர வேண்டும் என்பது ஆசை!

வாழ்க்கையை மாற்றிய வண்ணக் காகிதங்கள்! - க்வில்லிங் குயின் குணவதி
வாழ்க்கையை மாற்றிய வண்ணக் காகிதங்கள்! - க்வில்லிங் குயின் குணவதி
வாழ்க்கையை மாற்றிய வண்ணக் காகிதங்கள்! - க்வில்லிங் குயின் குணவதி

பெங்களூர் ஐ.ஐ.எம் கல்வி நிறுவனத்தில், மகளிர் தொழில் முனையும் துறையில் ஓராண்டு டிப்ளோமா முடித்திருக்கிறார் குணவதி. பள்ளிகள், கல்லூரிகள், ஆதரவற்றோர் இல்லங்கள், இல்லத்தரசிகள் என்று இதுவரை 1,000 பேருக்கு மேல் க்வில்லிங் பயிற்சி கொடுத்திருக்கிறார்.

‘‘என் வாழ்க்கையையே மாற்றியது அந்த வண்ணக் காகிதம்தான். முடிந்தவரை கைவினைக் கலைஞர் களின் படைப்புகளை, கைத்தறித் துணிகளை வாங்குங்க. பல மாற்றுத் திறனாளிகளுக்கு அது சோறு போடும்!” - அன்பு வேண்டுகோளுடன் விடை கொடுத்தார்.