
News
இரா.பூமாதேவி
பிள்ளைகள் உள்ள வீடுகளில் எத்தனை பென்சில், பேனாக்கள் வாங்கிக்கொடுத்தாலும் போதாது. அடிக்கடி தொலைப்பார்கள். பென்சில், பேனா, கலர் பென்சில்கள் என அவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களை பத்திரமாக வைத்துக்கொள்ள அவர்களுக்கென்று பிரத்யேக ஸ்டாண்டு கொடுத்துவிட்டால்..? அதையும் அவர்கள் கைப்படவே செய்யக் கற்றுக்கொடுத்துப் பயன்படுத்தச் சொன்னால்... இன்னும் உற்சாகமாவார்கள்தானே! காலியான நூல்கண்டிலும் செலோடேப் அட்டையிலும் சூப்பரான பென்சில் ஸ்டாண்டு செய்யக் கற்றுத் தருகிறேன்.

தேவையானவை: காலியான செலோ டேப்பின் அட்டை நூல்கண்டு பெயின்ட் பிரஷ் கத்தரிக்கோல் தண்ணீர் லேஸ் பசை