Published:Updated:

இலவச சிபில் அறிக்கை முதல் நல்ல ஸ்கோருக்கான இலக்கணம் வரை; கிரெடிட் ரிப்போர்ட் A to Z அலசல் #HerMoney

சிபில்
News
சிபில்

கிரெடிட் கார்டு தவணை தவறாமல் கட்டாவிடில் சிபில் ஸ்கோர் பாதிக்கப்படும் என்பது தொடங்கி, கல்விக்கடனைத் திருப்பிச் செலுத்தாமல் விடுவதுவரை சிபில்ஸ் கோரை பாதிக்கும் என்பதுவரை, #HerMoneyல் சிபில் ஸ்கோர் அவ்வப்போது தலைகாட்டியிருக்கிறது. இன்று அதைப் பற்றி விரிவாக அலசலாமா?

Published:Updated:

இலவச சிபில் அறிக்கை முதல் நல்ல ஸ்கோருக்கான இலக்கணம் வரை; கிரெடிட் ரிப்போர்ட் A to Z அலசல் #HerMoney

கிரெடிட் கார்டு தவணை தவறாமல் கட்டாவிடில் சிபில் ஸ்கோர் பாதிக்கப்படும் என்பது தொடங்கி, கல்விக்கடனைத் திருப்பிச் செலுத்தாமல் விடுவதுவரை சிபில்ஸ் கோரை பாதிக்கும் என்பதுவரை, #HerMoneyல் சிபில் ஸ்கோர் அவ்வப்போது தலைகாட்டியிருக்கிறது. இன்று அதைப் பற்றி விரிவாக அலசலாமா?

சிபில்
News
சிபில்
கிரிக்கெட்டுக்கு கபிலும் கடனுக்கு சிபிலும் முக்கியம்!

தோழிகளே, பன்ச் சுமாராக இருக்கலாம். ஆனால், இந்த வார #HerMoney-ல் பேசப்போகும் விஷயம் சூப்பரான ஒன்று - கிரெடிட் ஸ்கோர்.

நம்மில் பெரும்பாலானோர் நிச்சயம் ஒரு முறையாவது கடந்து வந்த வார்த்தை சிபில். அதென்ன சிபில் (CIBIL)? Credit Information Bureau (India) Ltd என்பதன் சுருக்கம்தான் இது.

கிரெடிட் கார்டு தவணை தவறாமல் கட்டாவிடில் சிபில் ஸ்கோர் பாதிக்கப்படும் என்பது தொடங்கி, கல்விக்கடனைத் திருப்பிச் செலுத்தாமல் விடுவதுவரை சிபில்ஸ் கோரை பாதிக்கும் என்பதுவரை, #HerMoneyல் சிபில் ஸ்கோர் அவ்வப்போது தலைகாட்டியிருக்கிறது. இன்று அதைப் பற்றி விரிவாக அலசலாமா?

கிரெடிட் ஸ்கோர் - கடனாளர் மதிப்பீடு

படிக்கும் பிள்ளைகளுக்கு ஒரு பள்ளியிலோ கல்லூரியிலோ மேற்படிப்பில் சேர எப்படி மதிப்பெண்கள் அவசியமோ, அதுபோல நம்மை நம்பி கடன் கொடுக்கலாமா, கூடாதா என்பதை வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் முடிவெடுக்க இந்த கிரெடிட் ஸ்கோர்/கடனாளர் மதிப்பீடு தேவை. கடனாளர் மதிப்பீடு என்பது கடன் வேண்டி விண்ணப்பித்திருக்கும் விண்ணப்பதாரரின் கடன் பெறும் தகுதியைத் தீர்மானிக்கும் காரணிகளில் முக்கியக் காரணியாக அமைகிறது.

சிபில்
சிபில்

சிபில்

நூடுல்ஸ் என்றாலே ஒரு குறிப்பிட்ட பிராண்ட் நினைவுக்கு வருவதுபோல, கிரெடிட் ஸ்கோர் என்றாலே பலருக்கும் சிபில்தான் நினைவுக்கு வரும்.

பெரும்பான்மையான வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களால் பயன்படுத்தப்படுவது சிபில் என்பதால், கடனாளர் மதிப்பீடு என்று வரும்பொழுது சிபில் சூப்பர்ஸ்டாராக ஆகிவிடுகிறது.

சிபில் – சில தகவல்கள்...

டிரான்ஸ் யூனியன் சிபில், இந்தியாவின் பழைமையான நிறுவனம். மேலும் இது ஏராளமான வங்கிகள் மற்றும் என்.பி.எஃப்.சி-களுடன் தொடர்புடையது. இதன் மூலம் கணக்கிடப்பட்டதாலேயே கிரெடிட் ஸ்கோர் பொதுவாக `சிபில் ஸ்கோர்’ என்று பெயர் பெற்றது. ஆனால், எல்லா தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் வாங்கிய கடன்களின் மொத்த தகவல்களையும் வைத்திருக்கும் நான்கு அமைப்புகளில் ஓர் அமைப்புதான் சிபில். ஆம்... இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட வேறு சில அமைப்புகளும் கிரெடிட் ஸ்கோரை கண்டறிய இங்கு இருப்பதை அறிவீர்களா?

கிரெடிட் ஸ்கோர் கணக்கிடும் பிற ஏஜென்சிகள்

ஈக்குஃபேக்ஸ் (Equifax)

எக்ஸ்பீரியன் (Experian)

ஹை மார்க் (CRIF High Mark)

இந்தியாவில் மைய வங்கி நெறிமுறைகளின்படி, அனைத்து வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களும் தாங்கள் வழங்கும் கடன்கள் மற்றும் ஏற்கெனவே வழங்கியுள்ள கடன் பற்றிய விவரங்களை ஒவ்வொரு மாதமும் மேற்கூறிய அமைப்புகளுக்குத் தர வேண்டும். இந்த நான்கு அமைப்புகளும் மொத்தத் தகவல்களையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்வார்கள். இத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கும் கடன் தகவல் அறிக்கை கொடுக்கப்படும். இந்த அறிக்கையை பெறும் வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள், தனிநபர்/நிறுவனங்களுக்கு கடன் வழங்கும்போது இவ்வமைப்புகளின் வலைப்பக்கங்களிலிருந்து தேவையான தகவல்களைப் பெறுகின்றன.

சிபில்
சிபில்

கிரெடிட் ஸ்கோர் ஏன் முக்கியம்?

ஒருவருக்குக் கடன் கொடுக்கலாமா, மறுக்கலாமா என ஒருவரின் கடன்வாங்கும் தகுதியை தீர்மானிப்பது மட்டுமல்ல, அவருக்கு வழங்கக்கூடிய கடன்தொகை, வட்டிவிகிதம் முதலான பலவற்றை தீர்மானிப்பதில் அவரின் கிரெடிட் ஸ்கோர் முக்கியப் பங்காற்றுகிறது. தற்போதைய காலகட்டத்தில் வாங்கிய கடனை முறைப்படி ஓர் ஒழுங்குடன் மக்களை அடைக்கச்செய்வதில் கிரெடிட் ஸ்கோரின் பங்கு அதிகம் எனலாம். ஏற்கெனவே மேலே சொன்னதுபோல வேறு சில கிரெடிட் ஸ்கோர் கணக்கிடும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் இருந்தாலும், இந்தியாவில் மிகவும் பிரபலமானதாக இருப்பது சிபில்தான்.

சிபில் ஸ்கோர் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

கடன் பெறும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும், அவர் அந்தக் கடனை திரும்பச் செலுத்தும் ஒழுங்கை அடிப்படையாக வைத்துதான் கிரெடிட் ஸ்கோரானது வழங்கப்படுகிறது. கடனை திரும்பச் செலுத்தும் முறை, கடனின் வகை, கடனின் கால அளவு, சம்பளத்துக்கும் கடன் தொகைக்கும் இடையே உள்ள வித்தியாசம், கிரெடிட் கார்டு லிமிட்டில் எத்தனை சதவிகிதத்தை ஒவ்வொரு மாதமும் பயன்படுத்துகிறார், ஒரு கடனுக்கும் மற்றொரு கடனுக்குமான கால இடைவெளி என ஒவ்வொன்றும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

அத்துடன் சிபில் அமைப்பு, வங்கிக்கடனை திருப்பிச் செலுத்துவதை மட்டும் ஆராய்வதில்லை. வங்கிகளில் கடந்த காலங்களில் நீங்கள் காலம் தாழ்த்திச் செலுத்திய இ.எம்.ஐ, நிலுவைத் தொகைகள், கணக்கில் பணம் இல்லாமல் காசோலை திரும்பிய நிகழ்வுகள் (CHEQUE BOUNCE), நகைக்கடன், கல்விக்கடன், தனிநபர்கடன் உள்ளிட்ட பிறகடன் திட்டங்கள் குறித்த பல்வேறு விவரங்களை வங்கிகளிடமிருந்து பெற்று உங்களை மதிப்பிட்ட பின்னரே கிரெடிட் ஸ்கோர் வழங்குகிறது. ஆனால், வங்கிகளுக்கு கொடுக்கப்படும் விரிவான சிபில் அறிக்கை குறித்த விவரங்கள் வாடிக்கையாளரான நமக்குத் தெரிவிக்கப்படுவதில்லை.

Money
Money
Photo by Disha Sheta from Pexels

சிபில் ஸ்கோர்/கிரெடிட் ஸ்கோர் எவ்வளவு இருக்க வேண்டும்?

  1. மூன்று இலக்க கிரெடிட் ஸ்கோரானது 300 - 900 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  2. பொதுவாக சிபில் ஸ்கோர் 300 முதல் 900 வரை இருக்கும். 750-க்கு மேல் இருந்தாலே எளிதில் கடன் கிடைக்கும். வட்டியும் குறைவாக இருக்கும். ஆனால், அதற்குக் கீழ் சிபில் ஸ்கோர் உள்ளவர்களுக்கு கடன் கொடுக்க வங்கிகள் தயங்கும். அப்படியே கொடுத்தாலும் கடனுக்கான வட்டி விகிதம் அதிகமாகவே இருக்கும்.

  3. இதில் 750 மற்றும் 750-க்கு மேல் மதிப்பெண் வைத்திருந்தால், குறைவான ரிஸ்க் உடைய வாடிக்கையாளர் என்று பொருள்.

  4. அதற்குக் கீழிருந்தால் அவர்களுக்குக் கடன் கொடுப்பதில் ரிஸ்க் அதிகம் என்றும் அர்த்தம்.

5. வங்கிகள், 750 மதிப்பெண்களுக்கு மேல் கிரெடிட் ஸ்கோர் இருப்பவர்களுக்குக் கடன் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கின்றன.

300 – 549 வரையிலும் இருக்கும் கிரெடிட் ஸ்கோர் இருப்பதிலேயே மோசமானதாகக் கருதப்படுகிறது. இதை வைத்திருப்பவர் கடன் பெறும் தகுதியற்றவர் என முத்திரை குத்தப்படுவார்.

550 – 649 என்றிருக்கும் ஸ்கோரும் மோசமானதுதான் என்றாலும் கடன் கொடுக்கத் தடைக்கல்லாக இருக்காது. ஆனால், இந்த கிரெடிட் ஸ்கோர் கொண்டவர்களிடம் வசூலிக்கப்படும் வட்டி விகிதம் கூடுதலாக இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம்.

650 – 699 வரை ஸ்கோர் இருப்பவர்கள் ஒப்பேரி விடுவார்கள் எனும் கேட்டகிரி. `ஓகே இவர்களுக்குக் கொடுக்கலாம்' எனும் நம்பிக்கையைக் கொடுக்கும் ஸ்கோர் இது. மேலும், இவர்களுக்கான கடன் மீதான வட்டி விகிதம் மேலே சொன்னதைவிட சற்றே குறையும்.

700 – 749 நல்ல ஸ்கோர். இந்த ஸ்கோர் உடையவர்களுக்குக் கடன் கிடைப்பதில் பெரிய அளவில் சிக்கல்கள் இருக்காது. குறைந்த அளவு வட்டியுடன் கடன் கிடைப்பதற்கான சாத்தியங்கள் அதிகம்.

750 - 850... பார்த்த மாத்திரத்தில் `யூ ஆர் செலக்டட்' எனச் சொல்ல வைக்கும்படியான ஸ்கோர் இது.

Credit Card
Credit Card
Pixabay

சிபில் ஸ்கோரை எப்படி அறியலாம்? அதற்குக் கட்டணம் உண்டா?

மேலே பார்த்தது போல நம் மைய வங்கி அனுமதி பெற்ற நான்கு கடனாளர் மதிப்பீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் இருக்கின்றன. அவை நான்கும் ஆண்டுக்கு ஒருமுறை இலவசமாகக் கடனாளர் மதிப்பீட்டெண்ணை நமக்குக் கொடுக்க வேண்டும். சிபில் முதற்கொண்டு அந்த நான்கு நிறுவனங்களின் இணைப்புகளும் கீழே உள்ளன. அதில் காலாண்டுக்கு ஒரு முறை உங்கள் மதிப்பீட்டெண்ணைப் பார்த்துக்கொள்ளுங்கள். இவ்வகையில் ஆண்டுக்கு நான்கு முறை சரிபார்த்துக் கொள்ளலாம்.

https://myscore.cibil.com/CreditView/enrollShort.page?enterprise=CIBIL&offer=FACRAA

https://eport.equifax.co.in/gcs/registration.jsp#/gcs/portalRouter/landing-page

https://consumer.experian.in/ECV-OLN/signIn?_ga=2.85638111.751110608.1609546820-326743318.1609546820

https://www.crifhighmark.com/your-credit-score


கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன? அது எப்படி கணக்கிடப்படுகிறது? எது நல்ல கிரெடிட்ஸ்கோர்? இப்படி பல விவரங்களைப் பார்த்தோம். நல்ல கிரெடிட் ஸ்கோர் எதனால் இருக்க வேண்டும் என்பதையும், ஒருவேளை கிரெடிட் ஸ்கோர் இல்லாததால் சந்திக்கப்போகின்ற சாதக, பாதகங்களையும் அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம் தோழிகளே!