Published:Updated:

பிறந்தநாள் பார்ட்டிக்கு வீட்டை அலங்கரிப்பது எப்படி? | How to decorate home for birthday party?

Birthday Celebration (Representational Image)
News
Birthday Celebration (Representational Image) ( Photo by George Dolgikh @ Giftpundits.com from Pexels )

இன்று பிறந்தநாள் பார்ட்டிகள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. ஹோட்டலில் ஹால் புக் செய்வது ஒரு பக்கம் என்றால், வீட்டிலேயே பார்ட்டிக்கு ஏற்பாடு செய்வது இன்று அதிகரித்து வரும் வழக்கமாக இருக்கிறது.

Published:Updated:

பிறந்தநாள் பார்ட்டிக்கு வீட்டை அலங்கரிப்பது எப்படி? | How to decorate home for birthday party?

இன்று பிறந்தநாள் பார்ட்டிகள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. ஹோட்டலில் ஹால் புக் செய்வது ஒரு பக்கம் என்றால், வீட்டிலேயே பார்ட்டிக்கு ஏற்பாடு செய்வது இன்று அதிகரித்து வரும் வழக்கமாக இருக்கிறது.

Birthday Celebration (Representational Image)
News
Birthday Celebration (Representational Image) ( Photo by George Dolgikh @ Giftpundits.com from Pexels )

இன்று பிறந்தநாள் பார்ட்டிகள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. ஹோட்டலில் ஹால் புக் செய்வது ஒரு பக்கம் என்றால், வீட்டிலேயே பார்ட்டிக்கு ஏற்பாடு செய்வது இன்று அதிகரித்து வரும் வழக்கமாக இருக்கிறது. பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு வீட்டை எப்படி அலங்கரிப்பது என்று இங்கு பார்க்கலாம்.

Balloons
Balloons
Photo by Ylanite Koppens from Pexels

பலூன்

பிறந்தநாள் கொண்டாட்டம் என்றாலே பலூன் நிச்சயம் இடம்பிடித்துவிடும். பலூன்களைக் கொண்டு வீட்டு முகப்பில் வளைவு அமைப்பது, சுவர் முழுவதும் அலங்காரம் செய்வது, மேசையை சுற்றி அலங்கரிப்பது எனச் செய்திடலாம். இன்னும் சற்று அட்வான்ஸ்டாக தற்போது, ஹீலியம்(helium) வாயு நிரம்பிய பலூன் பயன்படுத்தப்படுகிறது. இந்த பலூனில் ஹீலியம் வாயுவை நிரப்பி கேக் வெட்டும் அறை, பக்கவாட்டு சுவர், சீலிங் முதலியவற்றை அலங்கரிக்கலாம்.

ஒளிவிளக்குகள் (Fairy lights)

கொண்டாட்டம் என்னும்போது அவற்றில் ஒளிக்கு முக்கியப் பங்கு உண்டு. Fairy lights எனச் சொல்லப்படும் சிறிய அளவிலான ஃபேன்ஸி விளக்குகளை சுவரிலும், அறையிலும் ஒளிரவிடலாம்.

டிஷ்யூ(Tissue)

தற்போது டிஷ்யூ பேப்பரைக் கொண்டே பலவகையான அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. அலங்காரத்திற்கு எனக் கிடைக்கும் tissueகளை வாங்கி, அவற்றை மலர்கள் போன்றோ, பந்துகள் போன்றோ, நமக்குப் பிடித்த வடிவங்களிலோ செய்து சுவர், மேசை, தரை என அலங்கரிக்கலாம்.

Birthday celebration
Birthday celebration
Photo by Ibrahim Boran from Pexels

சுவர் அலங்காரங்கள் - பேனர்(Banner)

சுவர் அலங்காரங்கள் செய்வதற்கு என தற்போது `HAPPY BIRTHDAY' என ஆங்கிலத்தில் மட்டுமல்லாது, பல மொழிகளிலும் கலர், கலராக ஜொலிக்கிற பேனர்கள் கிடைக்கின்றன. `பிறந்தநாள் வாழ்த்துகள்' என்று வாங்கி சுவரை அலங்கரிக்கலாம். மேலும், பிறந்தநாள் கொண்டாடுபவருக்குப் பிடித்த வாசகங்களை நாமே கஸ்டமைஸ்டு பேனராக உருவாக்கினால், நம் கையெழுத்தால் எழுதித் தயாரித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

கலர் பேப்பர் (Streamer)

சுவரை அலங்காரப்படுத்த, வழக்கமான கலர் பேப்பரை (streamer) கிரியேட்டிவிட்டியுடன் பயன்படுத்தலாம். இந்த கலர் பேப்பர்களைப் பார்க்கும் நொடியிலேயே கொண்டாட்டம் ஆரம்பித்துவிடும் எனும் அளவுக்கு பார்ட்டிகளில் இது இன்றியமையாதது.

தீம் கலர்களில் அலங்காரம் (Theme)

இப்போதெல்லாம் ஃபேரி டேல்ஸ், பார்பி, ஸ்பைடர் மேன் எனக் குழந்தைகளுகுப் பிடித்த தீம்களில் பிறந்தநாள் பார்ட்டிகள் திட்டமிடப்படுகின்றன. அந்தப் பார்ட்டிகளை, அந்த தீமுக்கு ஏற்ற அலங்காரத்தில் வடிவமைக்கலாம். உதாரணமாக, சான்டா க்ளாஸ் தீம் என்றால், பார்ட்டிக்கு வருபவர்கள் அனைவரும் வெள்ளை, சிறப்பு நிறத்தில் ஆடை அணிந்து வர ரெக்வஸ்ட் செய்து, சான்டா கேக் ஆர்டர் கொடுப்பதுடன், பலூனில் இருந்து கலர் பேப்பர்கள் வரை அதே கலர் காம்பினேஷனில் வீட்டையும் அலங்காரம் செய்யலாம். தீம் ஐடியாக்களுக்கு கூகுள் செய்யலாம், நம் கற்பனைத் திறனையும் தட்டிவிடலாம். தீம் பார்ட்டிகளில் வித்தியாசமான அனுபவமும், சந்தோஷமும் கிடைக்கும்.

Birthday celebration
Birthday celebration
Photo by Karley Saagi from Pexels

பூ அலங்காரம்

மிக எளிதானது, பூ அலங்காரம். வண்ண வண்ணப் பூக்களைக் கொண்டு ஹைலைட்டான இடங்களில் அலங்காரம் செய்யலாம். டிரெடிஷனல் லுக்கும் கிடைக்கும்.

டிப்ஸ்..

* வீட்டை அலங்கரிக்கும் முன், சுத்தப்படுத்த வேண்டும்.

* விருந்தினர்களின் வருகைக்கு ஏற்ப இருக்கைகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.

* வீட்டை அடைத்துக்கொள்ளாமல், பார்ட்டிக்கு இடம் இருக்குமாறு பார்த்து அலங்காரத்தை செய்ய வேண்டும்.

* கார்னர்களில் இண்டோர் ப்ளான்ட்கள் வைக்கலாம்.

* கேக் வெட்டும் மேசையை பொருள்களால் நிரப்பாமல் நீட்டாக அலங்கரிக்க வேண்டும்.

* விருந்தினர்களை உற்சாகப்படுத்த கேம்ஸ் நடத்தலாம்.

* `தங்கள் வருகைக்கு நன்றி' எனப் பொருள்படும் வகையில் நம் கைப்பட எழுதிய, எழுதியதை பிரதியெடுத்த கார்டுகளை ரிட்டர்ன் கிஃப்ட் ஆகக் கொடுக்கும்போது, அல்லது ரிட்டர்ன் கிஃப்ட்டுடன் சேர்த்துக் கொடுக்கும்போது அது விருந்தினர்களுக்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்கும்.