Published:Updated:

கல்விக்கடனுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? கைகொடுக்கும் அரசின் இணையதளம்! #HerMoney

Education (Representational Image)
News
Education (Representational Image)

பல பெற்றோர்களின், மாணவர்களின் இன்னல்களைக் குறைத்ததில் வித்யாலட்சுமி இணையதளத்துக்கு பெரும் பங்குண்டு.

Published:Updated:

கல்விக்கடனுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? கைகொடுக்கும் அரசின் இணையதளம்! #HerMoney

பல பெற்றோர்களின், மாணவர்களின் இன்னல்களைக் குறைத்ததில் வித்யாலட்சுமி இணையதளத்துக்கு பெரும் பங்குண்டு.

Education (Representational Image)
News
Education (Representational Image)

அனைத்து ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மாணவர்களும் அவர்கள் விரும்பும் உயர் கல்வியைத் தொடர உதவும் நோக்கில், கல்விக் கடன் திட்டங்களை நிர்வகிக்கவும் கண்காணிக்கவும் 2015, ஆகஸ்ட் 15 அன்று அறிவிக்கப்பட்ட திட்டம் `பிரதான் மந்திரி வித்யாலட்சுமி காரியக்ரம்' (Pradhan Mantri Vidya Lakshmi Karyakram - PMVLK). மாணவ-மாணவிகளுக்குக் கல்விக்கடன் வழங்குவதற்கான நிதி உதவி செய்யும் ஆணையமாக அறிவிக்கப்பட்டிருக்கும் இதன் மூலம் கல்விக்கடன் பெறும் வழிமுறைகள் எளிமையாக்கப்பட்டு மாணவர்கள் பயன்பெறும் வகையிலான ஏற்பாட்டை அரசு செய்திருப்பது குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாகும்.

இத்திட்டத்தின் கீழ் கல்விக் கடனுக்காக மத்திய அரசால் பிரத்யேகமாகத் தொடங்கப்பட்ட இணையதளம்தான் வித்யாலட்சுமி. இந்த இணையதளத்தில் (www.vidyalakshmi.co.in) தற்சமயம் 39 வங்கிகளின் மூலம் 70 வகையான கல்விக்கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நிதி அமைச்சகம், கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சகம் மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் ஆகிய மூன்றின் வழிகாட்டுதலில் அமைக்கப்பட்ட இது NSDL (National Securities Depository Limited)-யால் நிர்வகிக்கப்படுகிறது. அதில் உங்களுக்குப் பொருத்தமான திட்டத்தைத் தேர்வு செய்து விண்ணப்பிக்க முடியும்.

Education (Representational Image)
Education (Representational Image)

``நான் என் பையனுக்குக் கல்விக்கடன் கேட்டு வங்கிகளுக்கு நடையாய் நடக்கிறேன். ஆனால், கடன்தான் கிடைக்க மாட்டேங்குது...” என்று புலம்பும் பல பெற்றோர்கள் வங்கியில் கடன் மறுக்கப்பட்டால் என்ன செய்வார்கள்? அவர்கள் தனி நபர்களிடம் வட்டிக்குக் கடன் வாங்குவதையும் அதனால் பிற இன்னல்களுக்கு உள்ளாவதையும் கண்கூடாகப் பார்க்கிறோம். அந்த நிலையில் இருக்கும் பல பெற்றோர்களின், மாணவர்களின் இன்னல்களைக் குறைத்ததில் வித்யாலட்சுமி இணையதளத்துக்கு பெரும் பங்குண்டு. வங்கிகளிலிருந்து கல்விக் கடனுக்காக நாம் அலைந்ததெல்லாம் பழைய காலம். இப்போது கல்விக் கடன் பெற வங்கிக் கிளைகளுக்குச் செல்ல வேண்டுமென்ற அவசியமே இல்லை. ஆன்லைன் மூலமேகூட கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்க முடியும் என்பதை இந்த இணையதளம் சாத்தியப்படுத்தி இருக்கிறது.

PMVLK திட்டத்தின் நன்மைகள்...

வங்கிகளின் கல்விக்கடன் திட்டங்கள் பற்றிய தகவல்களை அறிய...

  • இதன் மூலம் இளங்கலை, முதுகலை, தொழில்முறை மற்றும் தொழிற்கல்வி உள்ளிட்ட எந்த வகை பாடத்துக்குமான கல்விக்கடனை ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.

  • கல்விக்கடன் அல்லது உதவித்தொகை பெறும்/பெற விரும்பும் மாணவர்களுக்கு இது ஒரு SINGLE WINDOW PLATFORM ஆக இருக்கிறது. அதாவது, ஒரே நேரத்தில் பல வங்கிகளில் கல்விக்கடன் பெற விண்ணப்பிக்க வழிவகுக்கிறது.

  • ஆன்லைனில் கடனுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் கடன் விண்ணப்பங்களைப் பார்க்கவும் பரிசீலிக்கவும் வங்கிகளுக்கான வசதியான ஒரு தளம்.

  • கடன் விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை (status update) பதிவேற்றும் வசதியை வங்கிகளுக்குக் கொடுக்கிறது.

  • கல்வி கடன்கள் தொடர்பான குறைகளை, கேள்விகளை, புகார்களை வங்கிகளுக்கு மின்னஞ்சல் செய்வதற்கான வசதி உடையது.

இதன் மூலம் தனித்தனியாக வங்கிகளுக்கு ஏறாமல், தனித்தனியாய் அந்தந்த வங்கிகளின் இணையதளத்துக்கு போய் விண்ணப்பிக்காமல், ஒரே இணையதளத்தில் மூன்று வெவ்வேறு வங்கிகளில் கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்கும் வசதிகொண்டது.

#HerMoney
#HerMoney

வித்யாலட்சுமி இணையதளத்தில் பதிவு செய்வது எப்படி?

பிரதான் மந்திரி வித்யாலட்சுமி காரியக்ரமுக்கான பதிவு செயல்முறை மிகவும் எளிதானது. இணையதளத்தில் உள்ள `பதிவு (register)' இணைப்பைக் க்ளிக் செய்வதன் மூலம் பின்வரும் விவரங்களை விண்ணப்பதாரர் பூர்த்தி செய்ய வேண்டும்.

- மாணவ/மாணவியின் முழுப் பெயர்

- 10 இலக்க மொபைல் எண்

- மின்னஞ்சல் ஐடி (e-mail id)

  • கடவுச்சொல் எழுத்துகள், எண்கள் மற்றும் சிறப்பு எழுத்துகளைக் கொண்ட 8 - 14 எழுத்துகளுடன் இருக்க வேண்டும். மிக முக்கியமாக, மின்னஞ்சல் முகவரியை கடவுச்சொல்லாக வைக்கக் கூடாது.

மேலே உள்ள விவரங்கள் வெற்றிகரமாகச் சேர்க்கப்பட்டு Submit அழுத்தியவுடன், நமக்கான கணக்குத் தொடங்கப்பட்டுக் கல்விக்கடன் தேடலுக்கும் பயன்பாட்டிற்கும் இந்த போர்ட்டலைப் பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.

கடனுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

பதிவு செய்து லாகின் ஆனவுடன் நீங்கள் படிக்க விரும்பும் பாடம், விரும்பும் ஊர் மற்றும் தேவையான கடன் தொகை ஆகிய மூன்றையும் உள்ளீடாகக் கொடுப்பதன் மூலம் நமக்குத் தேவையான கடன் குறித்த விவரங்களைத் தேடலாம். உங்கள் தேவையை நீங்கள் குறிப்பிட்டவுடன், வங்கிகளின் பட்டியல், அது தொடர்பான பொருத்தமான கடன் திட்ட விவரங்கள் பட்டியலிடப்படும். அதிலிருந்து உங்களின் தேவைக்கு ஏற்றாற்போல் எந்த வங்கிகளில் விண்ணப்பிக்க வேண்டுமோ அவற்றுக்கு விண்ணப்பிக்கலாம். கடனுக்கு விண்ணப்பிக்க, மாணவர் முதலில் CELAF படிவத்தை நிரப்ப வேண்டும்.

CELAF - The Common Educational Loan Application Form என்பதன் சுருக்கமே CELAF.

இந்த ஒரே விண்ணப்பத்தை பூர்த்திசெய்வதன் மூலம் பல வங்கிகள் வழங்கும் பல்வேறு கடன் திட்டங்களுக்கு ஒரே சமயத்தில் விண்ணப்பிக்க இயலும். இந்திய வங்கிகள் சங்கமான IBA-வின் கீழ் இயங்கும் அனைத்து வங்கிகளிலும் ஏற்றுக்கொள்ளப்படும் விண்ணப்பப் படிவம் இது.

CELAF விண்ணப்பத்தை பூர்த்தி செய்யத் தேவையான தகவல்கள்

https://www.vikatan.com/lifestyle/women/a-to-z-details-about-educational-loan-and-its-procedures-her-money

இதில் பார்த்து விவரங்களுடன் விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி, கடைசியாகப் பெற்ற மதிப்பெண்கள் பற்றிய விவரம், பெற்றோரின் பான் விவரங்கள் ஆகியவற்றையும் கொடுக்க வேண்டும். வித்யாலட்சுமி போர்ட்டலில் விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை (Current Status) வங்கி புதுப்பிக்கும். விண்ணப்பதாரர்கள் அவர்களின் விண்ணப்பத்தின் தற்போதைய ஸ்டேட்டஸைக் காணலாம்.

கிளை மேலாளர் அந்தஸ்தில் உள்ள வங்கி அதிகாரிகளுக்கு, கல்விக்கடன் விண்ணப்பங்களை நிராகரிக்க அதிகாரம் இல்லை. பிராந்திய மேலாளர் (Regional Manager) அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளுக்கு மட்டுமே தகுந்த காரணங்களுக்காக விண்ணப்பங்களை நிராகரிக்க அதிகாரம் உண்டு.

education
education

மாணவர்களிடமிருந்து இன்னும் சில தகவல்கள் அல்லது ஆவணங்கள் தேவைப்படும்போது வங்கிக் கிளை கடன் விண்ணப்பத்தை நிறுத்தி ஹோல்டில் வைக்கும்.

எதனால் விண்ணப்பம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்ற விவரங்களும் கொடுக்கப்பட்டிருக்கும். அதற்கேற்றாற்போல விண்ணப்பதாரர்கள் தேவையான விவரங்களை, ஆவணங்களைக் கொடுப்பதன் மூலம் விண்ணப்பத்தை அடுத்தகட்டத்துக்கு நகரச் செய்யலாம்.

கடனுக்கு விண்ணப்பிக்கும் சிக்கல்களைக் களைந்து அதை எல்லோருக்கும் சென்றடையும்படியாக எளிமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் தொடங்கப்பட்ட வித்யாலட்சுமி இணையதளத்தின் மூலம் கடன் பெறுவதிலும் சில நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன.

பொதுவாக, எல்லோரும் சொல்லும் குற்றச்சாட்டு, விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதில் ஏற்படும் காலதாமதம். பல வங்கிகள் இருந்தாலும் எல்லா வங்கிகளும் விண்ணப்பங்களை குறிப்பிட்ட நேரத்துக்குள் பரிசீலித்து பதில் அளிப்பதில்லை. இதில் விண்ணப்பித்தாலும் பல சமயங்களில் விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை அறிய சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைக்குத்தான் போக வேண்டியுள்ளது.

`பிள்ளையின் படிப்புக்காக செருப்புத் தேய அலையாய் அலைந்தேன்' என்ற குரல்களைக் குறைக்கும் முயற்சியில் உருவாக்கப்பட்ட இணையதளம், மக்கள் சுட்டிக்காட்டும் குறைபாடுகளைக் களைந்து அதன் மூலம் அதை எல்லோருக்குமானதாக விரைவில் மாற்ற வேண்டும்.