Published:Updated:

How to: காஸ் அடுப்பை சரியான முறையில் சுத்தம் செய்வது எப்படி? I How To Clean Gas Stove?

கிச்சன் கைடு!
News
கிச்சன் கைடு!

காஸ் அடுப்பின் ஒவ்வொரு பகுதியையும் சரியான முறையில் சுத்தப்படுத்துவது மிக முக்கியம். எப்படி அதைச் சுத்தம் செய்வது என்பதைப் பார்க்கலாம்.

Published:Updated:

How to: காஸ் அடுப்பை சரியான முறையில் சுத்தம் செய்வது எப்படி? I How To Clean Gas Stove?

காஸ் அடுப்பின் ஒவ்வொரு பகுதியையும் சரியான முறையில் சுத்தப்படுத்துவது மிக முக்கியம். எப்படி அதைச் சுத்தம் செய்வது என்பதைப் பார்க்கலாம்.

கிச்சன் கைடு!
News
கிச்சன் கைடு!

வீட்டில் பெரும்பான்மையான நேரம் செயல்பட்டுக்கொண்டே இருக்கும் ஒரு சாதனம் என்றால், அது காஸ் அடுப்பு. எனில், அதன் பராமரிப்பும் அதற்கு ஈடுகொடுத்து இருக்க வேண்டியது மிக அவசியம்.

gas stove
gas stove

மேற்பகுதி மட்டுமல்லாமல் காஸ் அடுப்பின் ஒவ்வொரு பகுதியையும் சரியான முறையில் சுத்தப்படுத்துவது மிக முக்கியம். எப்படி அதைச் சுத்தம் செய்வது என்பதைப் பார்க்கலாம்.

சுத்தம் செய்ய தேவையான பொருள்கள்
- வினிகர்
- டிஷ்சோப்
- ஸ்க்ரப் செய்வதற்கு பிரஷ்

- பழைய துணி அல்லது பேப்பர்
- வெந்நீர்

வழிமுறைகள்

* முதலில் அடுப்புக்கு வரும் காஸ் இணைப்பை அணைத்து வைக்கவும்.
* அடுத்ததாக அடுப்பில் உள்ள பிளேட்களை தனியாக எடுத்து அதை ஒரு பாத்திரத்தில் வெந்நீர் நிரப்பி அதில் போட்டு வைக்கவும்.

காஸ் அடுப்பு
காஸ் அடுப்பு

* அடுப்பின் பர்னர் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டிய பகுதியாகும். இதையும் தனியாக எடுத்து வெந்நீரில் போட்டு வைக்கவும்.
* இவை இரண்டும் ஊறும் நேரத்தில் அடுப்பின் மேல்பகுதியை சுத்தம் செய்துவிடலாம். அதற்கு 1:1 என்ற விகிதத்தில் வினிகர் மற்றும் நீர் கலந்து, அடுப்பின் மேற்பகுதி, அடிப்பகுதியில் ஸ்பிரே செய்து 1 முதல் 2 நிமிடங்கள் வரை ஊற விடவும்.

* 2 நிமிடங்களுக்குப் பின் அடுப்பை துணி கொண்டு துடைத்து எடுக்கவும். கறைகள் நீங்கிவிடும். அதனையும் மீறி கறை இருந்தால் சோப் கொண்டு பிரஷ்ஷால் மென்மையாகத் தேய்த்துக் கழுவவும். இதே செய்முறையை அடுப்பின் கீழ்ப்பகுதியிலும், அடுப்பு நாப் (Knob) பகுதியிலும் செய்யவும். இதன் மூலம் அடுப்பு முழிவதும் கறைகள் அகற்றப்படும்.

கேஸ் அடுப்பு
கேஸ் அடுப்பு

* அடுப்பை சுத்தம் செய்த பின் பிளேட் மற்றும் பர்னரை சுத்தம் செய்யவும். சோப்பு நீரைக் கொண்டு பிரெஷ் மூலம் இவற்றையும் நன்றாகத் தேய்த்து சுத்தம் செய்யவும். பர்னரை சுத்தம் செய்யும்போது ஓட்டையில் அடைந்திருப்பதை ஊசி கொண்டோ, சேஃப்டி பின் கொண்டோ நீக்கிவிட வேண்டும்.
* அனைத்தையும் சுத்தப்படுத்திய பின் பர்னர் மற்றும் பிளேட்டை மறுபடியும் அடுப்பில் வைப்பதற்கு முன் சரியாக உள்ளதா, தூசி ஏதும் இல்லாமல் இருக்கிறதா எனபதை செக் செய்துகொள்ளவும்.