Published:Updated:

How to series: குளியலறை டைல்ஸ்களை சுத்தம் செய்வது எப்படி? | How to clean bathroom tiles?

Bathroom tiles (Representational Image)
News
Bathroom tiles (Representational Image) ( Photo by Joey from Pexels )

பாத்ரூம் டைல்ஸை சுத்தமாக்கப் பயன்படுத்தக்கூடிய, ரசாயனம் குறைந்த, ஆபத்து இல்லாத எளிய பொருள்களையும், அவற்றை பயன்படுத்தும் முறையையும் இங்கு பார்க்கலாம்.

Published:Updated:

How to series: குளியலறை டைல்ஸ்களை சுத்தம் செய்வது எப்படி? | How to clean bathroom tiles?

பாத்ரூம் டைல்ஸை சுத்தமாக்கப் பயன்படுத்தக்கூடிய, ரசாயனம் குறைந்த, ஆபத்து இல்லாத எளிய பொருள்களையும், அவற்றை பயன்படுத்தும் முறையையும் இங்கு பார்க்கலாம்.

Bathroom tiles (Representational Image)
News
Bathroom tiles (Representational Image) ( Photo by Joey from Pexels )

குளியலறை டைல்ஸ்களை சுத்தப்படுத்துவது பலருக்கும் சிரமமான டாஸ்க். அழுக்கு, பூஞ்சை காளான், சோப்புக் கறை என இவற்றை முற்றிலுமாக நீக்க, என்னென்ன க்ளீனிங் பொருள்களைப் பயன்படுத்தலாம் என்பது பலரிடமும் உள்ள கேள்வி. அதே நேரம், ஆசிட் போன்ற ஆபத்து ரசாயனங்களை சுத்தப்படுத்தக் கையாள்வதிலும் கவனம் தேவை. எனவே, பாத்ரூம் டைல்ஸை சுத்தமாக்கப் பயன்படுத்தக்கூடிய, ரசாயனம் குறைந்த, ஆபத்து இல்லாத எளிய பொருள்களையும், அவற்றை பயன்படுத்தும் முறையையும் இங்கு பார்க்கலாம்.

எலுமிச்சை
எலுமிச்சை

எலுமிச்சை சாறு

தேவையான பொருள்கள்:

- எலுமிச்சை சாறு

- பேக்கிங் சோடா

- ஸ்கிரப்பிங் ஸ்பாஞ்

எப்படிச் செய்வது?

எலுமிச்சை சாறு ஒரு சிறந்த இயற்கை கறை நீக்கி. குளியலறையின் சுவர், டைல்ஸ்களை சுத்தப்படுத்தப் பயன்படுத்தலாம். லெமனை கட் செய்து, சுத்தம் செய்ய வேண்டிய இடத்தில் நேரடியாகப் பிழிந்துவிடவும். பின்னர், ஸ்பாஞ்சில் பேக்கிங் சோடா, லெமன் ஜூஸை தெளித்து, அந்த ஸ்பாஞ்சால் கறை நீக்க வேண்டிய இடத்தை அழுத்தித் தேய்த்து சுத்தம் செய்யவும்.

உப்பு

தேவையான பொருள்கள்:

- கல் உப்பு

- ஈரமான துணி

- ஸ்கிரப்பிங் பிரஷ்

எப்படிச் செய்வது?

உப்பை பயன்படுத்தும்போது, சுத்தம் செய்ய வேண்டிய பகுதி ஈரப்பதமாக இருக்க வேண்டும். அந்தப் பகுதியை ஒருமுறை துணியால் நன்கு துடைத்துவிட்டு, டைல்ஸ் மீது உப்பை தூவவும். அழுக்குப் போக வேண்டிய இடங்களில் தேய்க்கவும் (ஸ்கிரப்). இரவு முழுவதும் விட்டு, ஸ்கிரப் செய்து சுத்தம் செய்யவும்.

Vinegar (Representational Image)
Vinegar (Representational Image)
Pixabay

வினிகர்

தேவையான பொருள்கள்:

- வெள்ளை வினிகர்

- தண்ணீர்

- ஸ்பிரே பாட்டில்

- ஸ்கிரப்பிங் ஸ்பாஞ்

எப்படிச் செய்வது?

வினிகரின் அமிலத்தன்மை பூஞ்சைக் காளான், பாக்டீரியா போன்றவற்றை நீக்கும், தடுக்கும். ஸ்பிரே பாட்டிலில் சம அளவு தண்ணீர் மற்றும் வினிகரைக் கலக்கவும். தேவைப்படும் இடங்களில் தெளித்து, சில நிமிடங்கள் ஊறவிட்டு, பின்னர் ஸ்பாஞ் கொண்டு சுத்தமாகத் தேய்க்கவும்.

போராக்ஸ் (Borax)

தேவையான பொருள்கள்:

- ஸ்கிரப்பிங் ஸ்பாஞ்

- போராக்ஸ் தூள்

எப்படிச் செய்வது?

போராக்ஸ், கிருமி நீக்கம், வாசனை நீக்கம், சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் ஒரு ரசாயனம்.

ஈரமான ஸ்பாஞ்சை போராக்ஸ் தூளில் தோய்த்தெடுத்து, டைல்ஸில் அழுக்குப் படிந்திருக்கும் பகுதிகளை நன்றாக ஸ்கிரப் செய்யவும்.

Borax (Representational Image)
Borax (Representational Image)
Pixabay

சமையல் சோடா

தேவையான பொருள்கள்:

- சமையல் சோடா

- ஸ்கிரபிங் ஸ்பாஞ்

எப்படிச் செய்வது?

அதிக கடினத்தன்மை இல்லாத, தினமும் செய்யப்படும் க்ளீனிங் தேவைகளுக்கு பேக்கிங் சோடாவை பயன்படுத்தலாம். இதை வினிகர் அல்லது எலுமிச்சை சாற்றுடன் கலந்து பயன்படுத்துவது சிறந்தது. அந்தக் கலவையில் ஸ்பாஞ்சை தோய்த்தெடுத்து, தேவையான இடங்களில் நன்கு தேய்க்கவும்.

- வைஷ்ணவி