Published:Updated:

How to: கண்ணாடியை சுத்தம் செய்வது எப்படி? I How to clean glass surface?

Glass Surface
News
Glass Surface ( Pixabay )

சூரிய ஒளி அதிகமாக இருக்கும் நேரங்களில் தண்ணீர்/லிக்விட் ஸ்பிரே செய்யும்போது ஈரம் உடனடியாகக் காய்ந்து விடும். அந்த தண்ணீர் திட்டுத் திட்டாகத் தெரியவும் வாய்ப்புள்ளது. அதனால் காலை அல்லது மாலை வேளைகளில் கண்ணாடிகளை சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ளவும்.

Published:Updated:

How to: கண்ணாடியை சுத்தம் செய்வது எப்படி? I How to clean glass surface?

சூரிய ஒளி அதிகமாக இருக்கும் நேரங்களில் தண்ணீர்/லிக்விட் ஸ்பிரே செய்யும்போது ஈரம் உடனடியாகக் காய்ந்து விடும். அந்த தண்ணீர் திட்டுத் திட்டாகத் தெரியவும் வாய்ப்புள்ளது. அதனால் காலை அல்லது மாலை வேளைகளில் கண்ணாடிகளை சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ளவும்.

Glass Surface
News
Glass Surface ( Pixabay )

வீட்டை பராமரிப்பதில் முக்கியமான பகுதி, ஜன்னல், கதவுகளில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடிகளை சுத்தம் செய்வது. கண்ணாடிகளை எப்படி பராமரித்தாலும் சில வீடுகளில் பளிச் என்ற லுக் வராது.

Glass Surface
Glass Surface
Pixabay

அதற்கு, விலை அதிகமுள்ள க்ளீனர்களையும், நம் நேரத்தையும் அதிகமாக செலவழிக்க வேண்டும் என்பதில்லை. எளிய முறையில் கண்ணாடிகளை பொலிவாக்கும் பராமரிப்பு வழிமுறைகள் இங்கே.

கண்ணாடி ஜன்னல்களை, கதவுகளை துடைக்கும்போது ஸ்பிரே செய்த பின்னோ, துடைக்கும்போதோ கீழிருந்து மேல்நோக்கி துடைக்காதீர்கள். மேலிருந்து கீழ்நோக்கி வரும்படி துடையுங்கள். இப்படி செய்யும்போது கண்ணாடியில் கீறல்கள், கோடுகள் விழாது பாதுகாக்கப்படும்.

Mirror Glass
Mirror Glass
Pixabay

கண்ணாடிகள் சுத்தம் செய்ய மதிய நேரத்தை தவிர்த்திடுங்கள். சூரிய ஒளி குறைவாக இருக்கும் நேரங்களில் கண்ணாடியை சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ளலாம். சூரிய ஒளி அதிகமாக இருக்கும் நேரங்களில் ஸ்பிரே செய்யும்போது ஈரம் உடனடியாகக் காய்ந்து விடும். அந்த தண்ணீர் திட்டுத் திட்டாகத் தெரியவும் வாய்ப்புள்ளது. அதனால் காலை அல்லது மாலை வேளைகளில் கண்ணாடிகளை சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ளவும்.

கண்ணாடியில் பஞ்சு ஒட்டுவதை தவிர்க்க, சுத்தம் செய்யும்போது பஞ்சு வெளியே வராத துணிகள், அல்லது ஸ்பாஞ் பயன்படுத்துங்கள். மேலும் இவை ஸ்பிரே செய்துள்ள தண்ணீர்/லிக்விட்டை முழுமையாகத் துடைத்தெடுக்கும். துடைத்தெடுக்க பழைய டிஷர்ட்களையும் பயன்படுத்தலாம், நன்றாக சுத்தம் செய்யும், செலவும் மிச்சமாகும்.

Glass Door
Glass Door
Pixabay

வீட்டிலேயே கண்ணாடி கிளீனர் தயாரித்தும் பயன்படுத்தலாம். இது சிக்கனமாக இருக்கும் என்பதுடன், ரசாயனமற்றதாகவும் இருக்கும்.

கண்ணாடி கிளீனர் தயாரிக்க: 1 கப் ரப்பிங் ஆல்கஹால் (Rubbing Alcohol), 1 கப் தண்ணீர் மற்றும் 1 தேக்கரண்டி வினிகர் ஆகியவற்றை சேர்த்து ஒன்றாகக் கலக்கவும். இதனை கொண்டு கண்ணாடியை சுத்தம் செய்யலாம், எளிதாக சுத்தமாகும். இதனை டைல்ஸ் சுத்தம் செய்யவும் பயன்படுத்தலாம்.

கண்ணாடி கொண்டு ஜன்னல் அல்லது கதவு அமைக்கும் போது அவற்றின் இடையில் மர வேலைப்பாடுகளைக் கொண்டு அலங்காரம் செய்யாதீர்கள்; பராமரிக்க கடினமாக இருக்கும்.

Cleaning
Cleaning
Pixabay

கவனத்தில் கொள்க, கண்ணாடியை சுத்தம் செய்யும்போது பஞ்சு, அல்லது காது குடையும் பட்ஸ் கொண்டு கண்ணாடியின் மூலைகளிலும் சுத்தம் செய்ய வேண்டும்.