Published:Updated:

How to: லேப்டாப் டிஸ்ப்ளே, கீபோர்டு சுத்தம் செய்வது எப்படி? | How to clean laptop screen, keyboard?

Laptop (Representational Image)
News
Laptop (Representational Image) ( Photo by Marvin Meyer on Unsplash )

சீரான இடைவெளியில் மடிக்கணினி மற்றும் கணினியின் திரையை சுத்தம் செய்வதைப் பலரும் பின்பற்றுவதில்லை. தூசு மட்டுமல்லாமல், கிருமிகளும் இதில் சேரலாம். அவற்றை சுத்தம் செய்யும் எளிய வழிமுறைகள் இங்கே.

Published:Updated:

How to: லேப்டாப் டிஸ்ப்ளே, கீபோர்டு சுத்தம் செய்வது எப்படி? | How to clean laptop screen, keyboard?

சீரான இடைவெளியில் மடிக்கணினி மற்றும் கணினியின் திரையை சுத்தம் செய்வதைப் பலரும் பின்பற்றுவதில்லை. தூசு மட்டுமல்லாமல், கிருமிகளும் இதில் சேரலாம். அவற்றை சுத்தம் செய்யும் எளிய வழிமுறைகள் இங்கே.

Laptop (Representational Image)
News
Laptop (Representational Image) ( Photo by Marvin Meyer on Unsplash )

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களில் மிக அதிக நேரத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும் பொருள்களில் ஒன்று, மடிக்கணினி மற்றும் கணினி. ஆனால், சீரான இடைவெளியில் இவற்றை சுத்தம் செய்வதைப் பலரும் பின்பற்றுவதில்லை. தூசு மட்டுமல்லாமல், கிருமிகளும் இதில் சேரலாம். அவற்றை சுத்தம் செய்யும் எளிய வழிமுறைகள் இங்கே.

Laptop (Representational Image)
Laptop (Representational Image)
Photo by Bram Naus on Unsplash

ஸ்டெப் 1:
லேப்டாப்பை/டெஸ்க்டாப்பை சுத்தம் செய்யும் முன் ஷட்டௌன் செய்யவும். கறுப்பாக இருக்கும் ஸ்க்ரீனில் தூசுகள் நன்றாகத் தெரியும் என்பதால் துடைப்பது எளிதாக இருக்கும்.

ஸ்டெப் 2:
மைக்ரோ ஃபைபர் (Micro fibre) துணியைக் கொண்டு ஸ்கிரீனை துடைக்க வேண்டும். மைக்ரோஃபைபர் துணியை சதுர வடிவில் மடித்துக்கொள்ளவும். இடது வலமாக, திரையின் ஒரு மூலையில் தொடங்கி மறுமுனை வரை துடைக்கவும். துணியை நன்றாக உதறிவிட்டு, மறுபடியும் மேலிருந்து கீழாகத் துடைக்கவும். இப்படி திரை முழுக்கத் துடைக்கவும். அதிகமான அழுத்தம் கொடுத்துத் துடைக்க வேண்டாம், திரையில் ஸ்க்ராட்ச் விழ வாய்ப்புள்ளது. எந்தக் காரணம் கொண்டும் டிஷ்யூ பேப்பர், செய்தித்தாள் போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது.

Laptop (Representational Image)
Laptop (Representational Image)
Pixabay

ஸ்டெப் 3:
திரையில் ஏதேனும் நீங்காத அழுக்கு, கறை இருந்தால் சுத்தம் செய்ய மைக்ரோ ஃபைபர் துணி மட்டும் போதாது. அதற்கு ஈரப்பதமான துணி தேவைப்படும் என்பதால், நன்றாகக் காய்ச்சி வடிகட்டிய நீரில், மைக்ரோ ஃபைபர் துணியை நனைத்து, பிழிந்து, அதைக்கொண்டு திரையை மேல் - கீழ், இடம் - வலமாகத் துடைக்கவும். இதை செய்வதற்கு முன், கண்டிப்பாக லேப்டாப்/டெஸ்க்டாப்பின் மின் இணைப்பை அணைத்து விட வேண்டும்.

ஸ்டெப் 4:
ஒருவேளை, எண்ணெய்ப் பசை போன்ற கறைகள் நீர் தொட்டுத் துடைத்தும் நீங்கவில்லை என்றால், ஒரு கப் காய்ச்சி வடிகட்டிய நீருடன், ஒரு கப் காய்ச்சி வடிகட்டிய வெள்ளை வினிகரை கலந்து, அதை மைக்ரோ ஃபைபர் துணியில் தொட்டுத் துடைக்கவும். மேலும் நீர் கொண்டு துடைக்கும்போது கீபோர்டில் படாமல் இருக்க, அதை பிளாஸ்டிக் பேப்பர் கொண்டு மூடி வைக்கவும்.

இந்த வெந்நீர், வினிகர் கலவை வேண்டாமென்றால், கடைகளில் லேப்டாப்/டெக்ஸ்டாப் திரையைத் துடைக்கக் கிடைக்கும் கிளீனர்களை வாங்கிப் பயன்படுத்தலாம்.

Laptop (Representational Image)
Laptop (Representational Image)
Photo by Vandan Patel on Unsplash

ஆனால், எதையும் நேரடியாகத் திரையில் தெளிக்கக் கூடாது. மைக்ரோ ஃபைபர் துணியில் தொட்டு, அல்லது தெளித்து, அதன் பின்தான் பயன்படுத்த வேண்டும். முக்கியமாக அசிட்டோன், அமோனியா, எத்தில் அமிலம், எத்தில் ஆல்கஹால், மெத்தில் ஆல்கஹால், மெத்தில் குளோரைடு, டோலுயீன் போன்ற கெமிக்கல் உள்ள கிளீனர்களைப் பயன்படுத்தக் கூடாது.

ஸ்டெப் 5:
கீபோர்டை சுத்தம் செய்ய, அதற்கெனக் கடைகளில் விற்கும் பிரத்யேக பிரஷ் கொண்டு, ஒவ்வொரு எழுத்திற்கும் இடையே உள்ள தூசுகளைச் சுத்தம் செய்ய வேண்டும்.

லேப்டாப்/டெஸ்க்டாப்பை வாரத்துக்கு மூன்று முறை, முடிந்தால் தினமும்கூட சுத்தம் செய்யலாம்.