Published:Updated:

How to: வெள்ளிப் பொருள்களை `பளிச்’ என சுத்தம் செய்வது எப்படி? I How to clean Silver at home?

வெள்ளிப் பொருள்கள்
News
வெள்ளிப் பொருள்கள்

கார்ன்ஃப்ளார் மற்றும் தண்ணீர் கலந்து ஒரு கெட்டியான பேஸ்ட்டை செய்து, அதை வெள்ளிப் பொருள்களில் அப்ளை செய்து வைக்கவும். பின்னர் அதை மெல்லிய துணி கொண்டு துடைத்து எடுக்கவும். பிரகாசிக்கும்.

Published:Updated:

How to: வெள்ளிப் பொருள்களை `பளிச்’ என சுத்தம் செய்வது எப்படி? I How to clean Silver at home?

கார்ன்ஃப்ளார் மற்றும் தண்ணீர் கலந்து ஒரு கெட்டியான பேஸ்ட்டை செய்து, அதை வெள்ளிப் பொருள்களில் அப்ளை செய்து வைக்கவும். பின்னர் அதை மெல்லிய துணி கொண்டு துடைத்து எடுக்கவும். பிரகாசிக்கும்.

வெள்ளிப் பொருள்கள்
News
வெள்ளிப் பொருள்கள்

வெள்ளியிலான ஆபரணம், குத்துவிளக்கு, தட்டு, தம்ளர் எனப் பல பொருள்களும் சிறிது காலத்தில் மங்கிவிடும், நிறம் கறுத்துக் காணப்படும். வெள்ளி உலோகத்தில் ஏற்படும் வேதியியல் வினைகளே இதற்குக் காரணம்.

வெள்ளிக் கொலுசு
வெள்ளிக் கொலுசு

படிந்த கறுமை நீங்கி வெள்ளிப் பொருள்களை எப்படி எளிய முறையில், வீட்டிலேயே இருக்கக்கூடிய பொருள்களைக் கொண்டு பளிச் என சுத்தப்படுத்துவது என்று பார்க்கலாம்.

எலுமிச்சை மற்றும் உப்பு

சாப்பாட்டு தட்டு போன்ற தினமும் சுத்தம் செய்ய வேண்டிய வெள்ளிப் பொருள்களை பராமரிக்க, எலுமிச்சை மற்றும் உப்பை பயன்படுத்தலாம். ஓர் அகன்ற பாத்திரத்தில் எலுமிச்சை பழத்தை பிழிந்துவிடவும். அதில் சிறிதளவு உப்பு சேர்த்து, அதனுடன் வெந்நீர் சேர்த்துக் கலந்து வைக்கவும். அதில் வெள்ளிப் பொருள்களை ஊறவைத்து 5 நிமிடங்கள் கழித்து எடுத்து, வெள்ளைத் துணி கொண்டு துடைக்கவும். அழுக்குகள் நீங்கும்.

எலுமிச்சை
எலுமிச்சை

சோப் பவுடர்

பல காலமாக நடைமுறையில் இருக்கும் பராமரிப்பு இது. ஒரு சிறிய கிண்ணத்தில் சோப் பவுடர் சேர்த்து, அதில் வெந்நீர் ஊற்றி கலந்து வைக்கவும். இதில் வெள்ளிப் பொருள்களை ஊற வைக்கவும். இதை 5 - 7 நிமிடங்களுக்குப் பின் எடுத்து பிரஷ் கொண்டு தேய்த்து, மிருதுவான காட்டன் துணியால் துடைத்தால் பளிச்சென இருக்கும்.

வினிகர்

வினிகர், தண்ணீர் மற்றும் பேக்கிங் சோடா ஆகியவை சேர்ந்த கலவை வெள்ளிப் பொருள்களுக்கு மிகச் சிறந்த பராமரிப்பு முறை. ஒரு கிண்ணத்தில், வெதுவெதுப்பான நீரில் 1/2 கப் வெள்ளை வினிகர், 2 தேக்கரண்டி பேக்கிங் சோடா எனக் கலக்க வேண்டும். மிகவும் ஒளி மங்கிய வெள்ளிப் பொருள்களை, இரண்டு முதல் மூன்று மணி நேரம் அதில் ஊற வைக்கவும். பின் அவற்றை எடுத்து குளிர்ந்த நீரில் அலசி உலர்த்தவும்.

வெள்ளி
வெள்ளி

கார்ன்ஃப்ளார்

வெள்ளி பொருள்கள் பிரகாசம் இழந்திருந்தால், அதைத் தண்ணீர் மற்றும் கார்ன்ஃப்ளார் பயன்படுத்தியும் சரி செய்யலாம். கார்ன்ஃப்ளார் மற்றும் தண்ணீர் கலந்து ஒரு கெட்டியான பேஸ்ட்டை செய்து, அதை வெள்ளிப் பொருள்களில் அப்ளை செய்து வைக்கவும். பின்னர் அதை மெல்லிய துணி கொண்டு துடைத்து எடுக்கவும். பிரகாசம் மீளும்.

கெட்ச் அப்
சிறிதளவு கெட்ச் அப் எடுத்துக்கொள்ளவும். இதை பேப்பர் டவல் கொண்டு வெள்ளிப் பொருள்களில் தேய்த்துத் துடைக்கவும். கறைகள் அகலும். ஒருவேளை நீண்டநாள் கரைகள், அகலவில்லை எனில் கெட்ச் அப்-ஐ வெள்ளிப் பொருள்களில் அப்ளை செய்து 30 நிமிடங்களுக்குப் பின் அழுத்தித் துடைக்க... பளிச் என்றாகும்.