Published:Updated:

How to: வீட்டிலிருந்து பல்லிகளை ஒழிப்பது எப்படி? I How to get rid of Lizards at home?

பல்லி
News
பல்லி

அடுப்படி, குப்பைத்தொட்டி எனச் சிதறிக் கிடக்கும் உணவுகள் ஈக்கள் மற்றும் எறும்புகளை ஈர்க்கும். ஈக்கள் மற்றும் எறும்புகளைச் சாப்பிட பல்லிகள் வரும். சமையலறையில் பல்லிகளின் எண்ணிக்கை அதிகமாகும்.

Published:Updated:

How to: வீட்டிலிருந்து பல்லிகளை ஒழிப்பது எப்படி? I How to get rid of Lizards at home?

அடுப்படி, குப்பைத்தொட்டி எனச் சிதறிக் கிடக்கும் உணவுகள் ஈக்கள் மற்றும் எறும்புகளை ஈர்க்கும். ஈக்கள் மற்றும் எறும்புகளைச் சாப்பிட பல்லிகள் வரும். சமையலறையில் பல்லிகளின் எண்ணிக்கை அதிகமாகும்.

பல்லி
News
பல்லி

வீட்டில் உள்ள கரப்பான் பூச்சி, கொசு, ஈக்கள் போல சிலருக்கு ஒவ்வாத மற்றோர் உயிரினம், பல்லி. வீட்டின் அனைத்து அறைகளிலும், சுவர்களின் மீதும் ஊர்ந்துகொண்டு இருக்கும் பல்லியை பார்க்க பயம், அருவருப்பு என்று தோன்றும் பலருக்கு.

Lizard Free Home
Lizard Free Home

பல்லிகளைக் கொல்லாமல் எப்படி வீட்டில் இருந்து வெளியேற்றலாம் என்பதற்கான சில எளிய வழிகளைப் பார்க்கலாம்.

மீதமாகும் உணவுகளை அப்புறப்படுத்தவும்

வீட்டில் மீதமாகும் உணவுகளை வீட்டில் தேங்காமல் அப்புறப்படுத்தி, சுத்தம் செய்யவும். அடுப்படி, குப்பைத்தொட்டி எனச் சிதறிக் கிடக்கும் உணவுகள் ஈக்கள் மற்றும் எறும்புகளை ஈர்க்கும். ஈக்கள் மற்றும் எறும்புகளைச் சாப்பிட பல்லிகள் வரும். சமையலறையில் பல்லிகளின் எண்ணிக்கை அதிகமாகும். எனவே, மீதமாகும் உணவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்துவது பல்லிகளின் எண்ணிக்கையைக் குறைக்க உதவும்.

முட்டை
முட்டை
எம். விஜயகுமார்

முட்டை ஓடுகள்

முட்டை ஓடுகளிலிருந்து வரும் வாசனையை பல்லிகள் விரும்புவதில்லை. எனவே, வீட்டில் அடிக்கடி பல்லிகள் காணப்படும் இடங்களில் காலியான முட்டை ஓடுகளை வைக்கவும். பல்லிகளின் நடமாட்டம் நீங்க ஆரம்பிக்கும்.

நாப்தலின் பந்துகள்

துணிகளில் நறுமணம் ஏற்படுத்துவதற்காக பீரோவில் நாம் வைக்கும் நாப்தலின் பந்துகளை, பள்ளிகள் இருக்கும் இடங்களில், அவை புழங்கும் இடங்களில் வைக்கவும். அந்த வாசனை பல்லிகளுக்கு சுத்தமாகப் பிடிக்காது என்பதால் அதன் எண்ணிக்கை குறைய இவை உதவும். நாப்தலின் பந்துகளை பயன்படுத்தும் போது அவை குழந்தைகள் எடுக்க முடியாத அளவில் உயரத்தில் இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்க.

நாப்தலின் உருண்டைகள்
நாப்தலின் உருண்டைகள்

மிளகு ஸ்பிரே

மிளகினை நன்றாக அரைத்து, அதனுடன் நீர் சேர்த்து ஸ்ப்ரே பாட்டிலில் எடுத்து வைத்துக்கொள்ளவும். இதனை பல்லி இருக்கும் இடங்களில் ஸ்பிரே செய்தால், மிளகின் வாசனைக்கு பல்லி அங்கிருந்து விலகிவிடும்.

வெங்காயம் மற்றும் பூண்டு

வெங்காயம் மற்றும் பூண்டின் வாசனைகள் பல்லிகளுக்கு சுத்தமாகப் பிடிக்காது . வீட்டின் மூலைகளில் அல்லது ஒரு டேபிள் ஃபேன் அருகில் இவற்றை வைத்து வீடு முழுவதும் அந்த வாசனையை பரவ விடலாம். இதனால் பல்லிகள் வீட்டில் இருந்து வெளியேறும் வாய்ப்புகள் அதிகமாகும்.

பூண்டு
பூண்டு

தண்ணீர்

வீட்டுக்குள் பெட் பறவைகளுக்கு, விலங்குகளுக்குத் தண்ணீர் வைப்பது, குழாயில் தண்ணீர் லீக் ஆவது என இவையெல்லாம் தண்ணீரை தேடி பல்லியை வரவைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.