Published:Updated:

How to: வீட்டிலிருந்து கொசுக்களை விரட்டுவது எப்படி?| How to get rid of mosquitoes at home?

Mosquito (Representational Image)
News
Mosquito (Representational Image) ( Pixabay )

கொசுக்களை ஒழிக்க கொசுவத்தி, கொசு பேட் எனப் பலவற்றை உபயோகித்தாலும் குறையாத கொசுக்களை, வீட்டில் உள்ள சில இயற்கைப் பொருள்களை வைத்து விரட்டலாம். அதற்கான வழிமுறைகள் இங்கே.

Published:Updated:

How to: வீட்டிலிருந்து கொசுக்களை விரட்டுவது எப்படி?| How to get rid of mosquitoes at home?

கொசுக்களை ஒழிக்க கொசுவத்தி, கொசு பேட் எனப் பலவற்றை உபயோகித்தாலும் குறையாத கொசுக்களை, வீட்டில் உள்ள சில இயற்கைப் பொருள்களை வைத்து விரட்டலாம். அதற்கான வழிமுறைகள் இங்கே.

Mosquito (Representational Image)
News
Mosquito (Representational Image) ( Pixabay )

கொசுக்களால் ஏற்படும் பாதிப்பு என்பது கொடுக்கடி என சிறிய அளவில் ஆரம்பித்து, நேரங்களில் மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய்க்காரணி ஆகி உயிருக்கு ஆபத்தாகும் பாதிப்புகள் வரை ஏற்படுத்துகிறது. கொசுக்களை ஒழிக்க கொசுவத்தி, கொசு பேட் எனப் பலவற்றை உபயோகித்தாலும் குறையாத கொசுக்களை, வீட்டில் உள்ள சில இயற்கைப் பொருள்களை வைத்து விரட்டலாம். அதற்கான வழிமுறைகள் இங்கே.

1. ஜன்னல் மற்றும் கதவுகள்...

காலையில் வீட்டிற்குள் அதிகமாகக் காணப்படாத கொசுக்கள், மாலை நேரத்தில் அதிகளவில் படையெடுக்கும். அதனால் கொசுக்களை வீட்டிற்குள் வரவிடாமல் தடுப்பதற்கு முதலில் நாம் செய்யவேண்டியது மாலை நேரங்களில், அதாவது சூரியன் மறைவதற்குள் வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகளை மூடி விடவும். குழந்தைகள், முதியவர்கள் என நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் உள்ள வீடுகளில், ஜன்னல், கதவுகளில் நிரந்தரக் கொசு வலைகள் அமைப்பது பரிந்துரைக்கத்தக்கது.

stagnant water (representational image)
stagnant water (representational image)
Pixabay

2. தண்ணீர் தேங்காமல் இருக்க வேண்டும்

சுகாதாரத்துறை அதிகாரிகள் மழைக்காலங்களில் வசிப்பிடங்களில் வீடுகளின் அருகில் தேங்கியிருக்கும் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வர். அது தனிநபரின் கடமையும்கூட என்பதால், ஒவ்வொருவரும் வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்து அகற்ற வேண்டும். அது பக்கத்து வீட்டு எல்லை என்று சாலையில் கண்டும் காணாமல் செல்லாமல் சமூகப் பொறுப்புணர்வோடு செயல்படலாம். கொசுக்களுக்கு காம்பவுண்ட் சுவர் எல்லை பற்றியெல்லாம் தெரியாது.

3. ஃபேன்

காற்று கொசுக்களுக்கு எதிரி. அதனால் வீட்டில் கொசுக்களை விரட்ட வேண்டுமென்றால் கண்டிப்பாக பேனை சுழலவிடவும். கொசுக்கடியைத் தடுக்க எளிய வழி.

4. எலுமிச்சை மற்றும் கிராம்பு

எலுமிச்சையின் வாசமும், கிராம்பின் வாசமும் கொசுக்களுக்கு அலர்ஜி. அதனால் வீட்டில் ஆங்காங்கே, ஒரு சிறிய தட்டில் எலுமிச்சை பழத்தை இரண்டாக வீட்டில் அதில் கிராம்புகளை குத்தி வைக்கவும். இந்த மணத்தால் கொசுக்கள் வருவது குறைய ஆரம்பிக்கும்.

 மெழுகுவத்தி
மெழுகுவத்தி
Pexels

5. மெழுகுவத்தி

வீட்டில் மெழுகுவத்தி அல்லது வாசனை எண்ணெய்கள் கொண்டு விளக்கு ஏற்றி வைக்கவும். இவற்றிலிருந்து வரும் மணம் கொசுக்களை விரட்டக் கைகொடுக்கும்.

6. செடிகள்

இயற்கையாகவே சில செடிகளுக்குக் கொசுக்களை விரட்டக்கூடிய தன்மை இருப்பதால் அந்தச் செடிகளை வீட்டில் வாங்கி வைக்கவும். வீட்டில் சிறிதாக வளரக்கூடிய புதினா, துளசி, லெமன் க்ராஸ் போன்றவற்றை வளர்க்கலாம். இண்டோராக, வீட்டின் உட்புறத்தில் வளர்க்கக்கூடிய செடிகளில் கொசுக்களை விரட்டுவதற்கு என இருக்கும் செடிகளை வாங்கி வீட்டினுள் வைக்கலாம்.

7. பூண்டு ஸ்ப்ரே

பூண்டை தண்ணீரில் கொதிக்கவைத்து, அந்தத் தண்ணீரை ஸ்பிரேபோல தெளிக்கவும். கொசுக்கள் நிச்சயம் வெளியேறிவிடும்.

கொசு
கொசு
Pixabay

8. சோப்புத் தண்ணீர்

சோப் அல்லது சோப்புத்தூள் ஏதேனும் ஒன்றை எடுத்து கொண்டு அதனை தண்ணீரில் கலந்து சிறிய பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். இதனை வீட்டின் ஓர் ஓரத்தில் வைத்துவிட்டால் வீட்டிற்குள் இருக்கும் கொசுக்கள் குறைவதை உணர முடியும்.