Published:Updated:

How to: எலிகளை வீட்டிலிருந்து ஒழிப்பது எப்படி? I How to get rid of rats?

Rat
News
Rat ( Pixabay )

எலிகளை விரட்டும் பழமையான முறைகளில் ஒன்று, மிளகாய் விதைகள். இவற்றை வீட்டின் மூலைகள், சமையலறைகளில் தூவலாம். இதன் காரத்தன்மைக்கு, நெடிக்கு எலிகள் வீட்டினுள் வரவே வராது. மேலும் தோட்டத்திலும் இதனை தூவுவதால் செடிகளை தாக்கும் எலிகளும் தாவரங்களை விட்டு விலகியே இருக்கும்.

Published:Updated:

How to: எலிகளை வீட்டிலிருந்து ஒழிப்பது எப்படி? I How to get rid of rats?

எலிகளை விரட்டும் பழமையான முறைகளில் ஒன்று, மிளகாய் விதைகள். இவற்றை வீட்டின் மூலைகள், சமையலறைகளில் தூவலாம். இதன் காரத்தன்மைக்கு, நெடிக்கு எலிகள் வீட்டினுள் வரவே வராது. மேலும் தோட்டத்திலும் இதனை தூவுவதால் செடிகளை தாக்கும் எலிகளும் தாவரங்களை விட்டு விலகியே இருக்கும்.

Rat
News
Rat ( Pixabay )

சில வீடுகளில் எலிகள் பெரும் பிரச்னையாக இருக்கும். என்ன செய்தாலும், எப்படியான வழிமுறைகள் மேற்கொண்டாலும் அவற்றை ஒழிப்பது சுலபமாக இருக்காது. எலிகளின் மூலமாகவும், அவற்றின் கழிவுகள் மூலமாகவும் சில நோய்கள் ஏற்படக் கூடும் என்பதால் இது ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்னையும் கூட. எனவே, எலி பிரச்னையை அலட்சியம் செய்யக் கூடாது.

Rats
Rats
Pixabay

வீட்டில் இருக்கும் எளிய பொருள்களைக் கொண்டு எலியை விரட்டும், மீண்டும் அவை வராமல் தவிர்க்கக் கைக்கொடுக்கும் வழிமுறைகள் இங்கே.

வெங்காயம்

வெங்காயத்தை தோல் உரித்து எலிகள் இருக்கும், அவை நடமாடும் பகுதிகளில் வைக்கவும். வெங்காயத்தின் வாசனை எலிகளுக்கு சுத்தமாகப் பிடிக்காது என்பதால் அவை அவ்விடங்களை விட்டு தள்ளியே இருக்கும். வெங்காயம் இரண்டு நாள்களில் அழுகிவிடும் என்பதால் இரண்டு நாள்களுக்கு ஒருமுறை அதை அப்புறப்படுத்த வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

Onion
Onion
Photo: Vikatan / Manikandan.N.G

மிளகாய் விதைகள்

எலிகளை விரட்டும் பழமையான முறைகளில் ஒன்று, மிளகாய் விதைகள். இவற்றை வீட்டின் மூலைகள், சமையலறைகளில் தூவலாம். இவற்றின் காரத்தன்மைக்கு எலிகள் வீட்டினுள்ளே வரவே வராது. மேலும் தோட்டத்திலும் இதனை தூவுவதால் செடிகளை தாக்கும் எலிகளும் தாவரங்களை விட்டு விலகியே இருக்கும்.

பூண்டு

பூண்டை உரித்து, அரைத்து, நீருடன் கலந்து ஸ்பிரே ஒன்றை உருவாக்கவும். இந்த ஸ்பிரேயை எலிகள் நடமாடும் இடங்களில் அடிக்க, எலிகள் ஓடிவிடும்.

Rat
Rat
Unsplash

உருளைக்கிழங்கு பொடி

கடைகளில் உருளைக்கிழங்கு பொடி என்று கேட்டால் கிடைக்கும். அதை வாங்கிவந்து எலிகள் காணப்படும் பகுதியில் தூவவும். எலிகள் இந்தப் பொடியை சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே இறந்துவிடும். எலித் தொல்லைக்கு உடனடி பலனாக இது இருக்கும். கவனம், செத்த எலியை கவனித்து அப்புறப்படுத்த வேண்டும்.

புதினா எண்ணெய்

புதினா வாசனை எலிகளுக்குப் பிடிக்காது. அதனால், ஓர் உருண்டை பஞ்சை எடுத்து, அதை புதினா எண்ணையில் தோய்த்து எடுத்து, எலி இருக்கும் இடங்களில் ஆங்காங்கே வைக்கவும். கண்டிப்பாக எலிகள் ஓடிப் போய்விடும்.

புதினா
புதினா
freepik

கிராம்பு, பட்டை

கிராம்பு, பட்டை வாசனை எலிகளுக்கு ஒவ்வாதது. எனவே, அவற்றை பொடி செய்து, எலி இருக்கும் இடங்களில் தூவலாம். அல்லது தண்ணீரில் அந்தப் பொடியைக் கலந்து ஸ்பிரே செய்யலாம். இதனால் எலிகள் குறைவதுடன், வீடும் மணத்துடன் இருக்கும்.

தவிர, எலிப்பொறி, எலி கேக், எலி பேஸ்ட் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.