Published:Updated:

How To: மலையேற்றம் செய்வது எப்படி?| How To Prepare For Trekking?

மாதிரிப்படம்
News
மாதிரிப்படம் ( secretcompass )

ஒவ்வோர் இடத்திலும் மலைப்பகுதி ஒவ்வொரு விதமாக இருக்கும். ட்ரெக்கிங் ஷூ என்று ஆன்லைனில் வாங்கும்போது பெரும்பாலும் பூட் போன்ற ஷூ கிடைக்கும். ஆனால், நீங்கள் செல்லும் மலைப்பகுதிக்கு ஏற்ற ஷூவாகப் பார்த்து வாங்க வேண்டும்.

Published:Updated:

How To: மலையேற்றம் செய்வது எப்படி?| How To Prepare For Trekking?

ஒவ்வோர் இடத்திலும் மலைப்பகுதி ஒவ்வொரு விதமாக இருக்கும். ட்ரெக்கிங் ஷூ என்று ஆன்லைனில் வாங்கும்போது பெரும்பாலும் பூட் போன்ற ஷூ கிடைக்கும். ஆனால், நீங்கள் செல்லும் மலைப்பகுதிக்கு ஏற்ற ஷூவாகப் பார்த்து வாங்க வேண்டும்.

மாதிரிப்படம்
News
மாதிரிப்படம் ( secretcompass )

குடும்பத்தினர், நண்பர்களுடன் பலரும் சுற்றுலா செல்வோம். தற்போது பலரும் மலையேற்றத்தின் மீது ஆர்வம்கொண்டு, மலையேறத் தொடங்கியுள்ளனர். தமிழில் மலையேற்றம் என்று கூறினாலும் ஆங்கிலத்தில் இதை Walking, Hiking, Trekking எனப் பலவகையாகப் பிரிக்கின்றனர்.

அதாவது, Walking என்பது 1- 4 கி.மீ. தூரம் சரியான பாதை இருக்கும் பகுதியில் நடப்பது. Hiking என்றால் 4 மணி நேர தூரத்தில் இருந்து ஒரு நாளுக்குள், குறைவான பொருள்களை மட்டும் எடுத்துக்கொண்டு ஏறி, இறங்கிவிடும் வகையில் மலையேறுதல். Trekking என்றால் சற்று பெரிய் பையில், மலையில் தங்குவதற்கான டென்ட், உணவுகள் என சில அத்தியாவசியமான பொருள்களை எடுத்துக் கொண்டு, இரண் முதல் சில நாள்கள் வரை, முறையான பாதை இல்லாத மலையில் ஏறுவது.

இப்படியான மலையேற்றங்களை மேற்கொள்வதற்கு, சில அடிப்படையான விஷயங்களை அறிந்துகொள்வது அவசியம். அவை பற்றி இங்கே...

How To: மலையேற்றம் செய்வது எப்படி?| How To Prepare For Trekking?
Photo by Varun Nambiar on Unsplash

* மலையேற்றம் செல்ல தொடங்குவதற்கு முன்பு நிச்சயமாக வாக்கிங் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.

* பொதுவாக அதிகாலை வேளையில் ட்ரெக்கிங் செல்வதாலோ, மலையின் மேலே செல்வதாலோ மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்க ரெகுலராக மூச்சுப்பயிற்சி மேற்கொள்வது, தியானம் செய்வது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

* மலையேற்றத்திற்கு உடல் வலிமையுடன், மன வலிமையையும் முக்கியம். மனதை அமைதியாகவும், ஸ்ட்ரெஸ் இல்லாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, மலையேற்றம் செய்வது குறித்து பயம் இல்லாமல் இருக்க வேண்டும்.

* இந்தியாவை பொறுத்தவரை தட்ப வெப்பநிலை மாற்றம் இருப்பதால் ஒவ்வோர் இடத்திலும் மலைப்பகுதி ஒவ்வொரு விதமாக இருக்கும். ட்ரெக்கிங் ஷூ என்று ஆன்லைனில் வாங்கும்போது பெரும்பாலும் பூட் போன்ற ஷூ கிடைக்கும். அதனை வாங்கி விடுவார். அதுபோல் இல்லாமல், நீங்கள் செல்லும் மலைப்பகுதிக்கு ஏற்ற ஷூவாகப் பார்த்து வாங்க வேண்டும்.

* டிரெக்கிங்கின்போது காரமான உணவுப் பொருள்கள் அதிகமாக எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும். பெரும்பாலும் பிரெட், ஜாம், சிட்ரஸ் பழங்கள் போன்றவற்றை எடுத்துக்கொள்ளவும்.

* டார்கெட் வைத்துக்கொண்டு வேகமாக நடக்கக் கூடாது. பொறுமையாக நடந்து இலக்கினை அடைய வேண்டும். அதிகமான பொருள்களை எடுத்துச் செல்லக் கூடாது.

* மலையேற்றத்தில் இருக்கும்போது சாய்வான இடத்தில் நின்று ஓய்வெடுக்க கூடாது; சற்று சமதள பரப்புக்கு சென்றபின் ஓய்வெடுத்துக் கொள்ளலாம். உடலுக்கு ஏற்ற, ரொம்ப தளர்வாக இல்லாத, அதிக எடையில்லாத ஆடைகளை அணியலாம்.

வெள்ளியங்கிரி மலை
வெள்ளியங்கிரி மலை
கோப்புபடம்

* தெரியாத இடங்களில் தனியாகச் செல்வதை தவிர்த்து பெரும்பாலும் வழிகாட்டியுடன் செல்வது நல்லது.

* மலைவளம் மற்றும் சுற்றுச்சூழல் காக்க, பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.

இவையெல்லாம் மலையேற்றத்தில் தொடக்கக் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை செயல்கள். தவிர, ட்ரெக்கிங் செல்வதற்கு என பயிற்சி நிலையங்களும், கோர்ஸ்களும் இருக்கின்றன. அவற்றில் சேர்ந்து பயிற்சி பெற்ற பின்னும் மலையேற்றங்களை தொடங்கலாம்.