Published:Updated:

How to: ஃபிரிட்ஜை சுத்தம் செய்வது எப்படி? | How to keep the refrigerator clean?

Refrigerator (Representational Image)
News
Refrigerator (Representational Image) ( Pixabay )

உணவுப் பொருள்களை சேமித்து வைத்திருக்கும் இடம் என்பதால் ஃபிரிட்ஜை சுத்தமாகப் பராமரிப்பது மிகவும் முக்கியமானது. அதற்கான எளிய வழிகள் இங்கே...

Published:Updated:

How to: ஃபிரிட்ஜை சுத்தம் செய்வது எப்படி? | How to keep the refrigerator clean?

உணவுப் பொருள்களை சேமித்து வைத்திருக்கும் இடம் என்பதால் ஃபிரிட்ஜை சுத்தமாகப் பராமரிப்பது மிகவும் முக்கியமானது. அதற்கான எளிய வழிகள் இங்கே...

Refrigerator (Representational Image)
News
Refrigerator (Representational Image) ( Pixabay )

உணவுப் பொருள்களை சேமித்து வைத்திருக்கும் இடம் என்பதால் ஃபிரிட்ஜை சுத்தமாகப் பராமரிப்பது மிகவும் முக்கியமானது. அதற்கான எளிய வழிகள் இங்கே...

ஸ்டெப் 1:

- ஃபிரிட்ஜை சுத்தம் செய்வதற்கு முன், அதை அணைத்துவிட்டு சிறிது நேரம் அப்படியே விடவும். அதன் வெப்பநிலை அறை வெப்பநிலைக்கு மாற வேண்டும்.

Refrigeration
Refrigeration

ஸ்டெப் 2:

- ஃபிரிட்ஜின் உள்ளே இருக்கும் உணவுப் பொருள்கள் அனைத்தையும் எடுத்து வெளியே வைக்கவும். பின், ஃபிரிட்ஜின் அடுக்குகள் அனைத்தையும் கழற்றவும். அவற்றை முதலில் சுத்தம் செய்திடவும். பலவிதக் கறைகள், அழுக்குகள் எனச் சேர்ந்திருக்கும் இவற்றை பாத்திரம் துலக்கும் சோப் கொண்டோ, எலுமிச்சை சாறு கொண்டோ நன்றாகக் கழுவவும்.

ஸ்டெப் 3:
- தற்போது ஃபிரிட்ஜின் உட்புறத்தை சுத்தப்படுத்த வேண்டும். இதற்கு காட்டன் துணியுடன், எலுமிச்சை சாறு/வினிகர், சிறிதளவு வெந்நீர் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

முன்னதாக, ஃபிரிட்ஜின் உள்ளே இருக்கும் குளிர் வெப்பநிலை குறைந்து அறை வெப்பநிலைக்கு மாறியிருக்க வேண்டும்.

வெந்நீரில் எலுமிச்சை சாறு/வினிகர் கலந்து, அதைக்கொண்டு காட்டன் துணியை நனைத்து, ஃபிரிட்ஜ் முழுக்க அனைத்து இடங்களிலும் நன்றாகத் துடைத்துக் கொள்ளவும். வினிகர் அழுக்கு மற்றும் கறைகளை நீக்குவதற்குச் சிறப்பாகக் கைக்கொடுக்கும் பொருள்.

Refrigerator (Representational Image)
Refrigerator (Representational Image)
Photo by Polina Tankilevitch from Pexels

ஸ்டெப் 4
- பிரிட்ஜின் உள்ளே இருக்கும் ஃப்ரீஸரையும் மேலே கூறியுள்ள முறையில் நன்றாகத் துடைத்து சுத்தம் செய்து கொள்ளவும்.

ஸ்டெப் 5

- ஃபிரிட்ஜின் கைப்பிடி, ஃபிரிட்ஜின் வெளிப்புறம் என அனைத்தையும், காட்டன் துணியில் சோப் திரவத்தைக் தொட்டுத் கொண்டு துடைக்கவும். இது வெளிப்புறத்தில் இருக்கும் பிசுபிசுப்பான கறைகளை நீக்கிவிடும். பின், ஓர் உலர்ந்த துணியைக் கொண்டு சுத்தம் செய்யவும்.

ஸ்டெப் 6
- ஃபிரிட்ஜ் உட்புறத்தில் நன்றாக உலர்ந்த பின் ஆன் செய்து, அடுக்குகள், டோர், டெம்ப்பரேச்சர் என அனைத்தையும் செட் செய்த பின், உணவுப் பொருள்களை உள்ளே எடுத்து வைக்கவும்.

இப்படி சுலபமான முறையில் ஃபிரிட்ஜை சுத்தம் செய்யலாம். மேலும், தொடர்ந்து சில சின்னச் சின்ன விஷயங்களில் எல்லாம் கவனம் செலுத்தி வந்தால் ஃபிரிட்ஜை பராமரிப்பது ஈஸியாக இருக்கும். அவை...

- உணவுப் பொருள்களைத் தனித்தனியாகப் பிரித்து சேமிக்கவும்.
- போன வாரம் ஃபிரிட்ஜில் வைத்த சட்னியை அடுத்த வாரம் வரை அப்படியே விடாமல், பழைய உணவுப் பொருள்களை அவ்வப்போது அப்புறப்படுத்த வேண்டும்.
- ஃபிரிட்ஜுக்குள் உணவுப் பொருள்கள் ஏதேனும் சிந்தியிருந்தால் உடனடியாகச் சுத்தம் செய்யவும்.