Published:Updated:

How to: சருமத்திற்கு ஏற்ற Cleanser வீட்டிலேயே தயார்செய்வது எப்படி?|How To Prepare Cleanser At Home?

Face wash
News
Face wash

ஃபேஸ்வாஷ் தொடர்ந்து பயன்படுத்தும் போது சிலருக்கு சருமம் வறண்டு போக வாய்ப்புள்ளதால், க்ளென்ஸர் மற்றும் ஃபேஸ்வாஷ் இரண்டையும் மாற்றி மாற்றி பயன்படுத்துவது நல்லது. சருமத்துக்கு ஏற்ற க்ளென்ஸரை வீட்டிலேயே செய்வது பற்றி பார்ப்போம்.

Published:Updated:

How to: சருமத்திற்கு ஏற்ற Cleanser வீட்டிலேயே தயார்செய்வது எப்படி?|How To Prepare Cleanser At Home?

ஃபேஸ்வாஷ் தொடர்ந்து பயன்படுத்தும் போது சிலருக்கு சருமம் வறண்டு போக வாய்ப்புள்ளதால், க்ளென்ஸர் மற்றும் ஃபேஸ்வாஷ் இரண்டையும் மாற்றி மாற்றி பயன்படுத்துவது நல்லது. சருமத்துக்கு ஏற்ற க்ளென்ஸரை வீட்டிலேயே செய்வது பற்றி பார்ப்போம்.

Face wash
News
Face wash

சருமப் பராமரிப்பில் அழகு சாதனப் பொருள்களை தாண்டி, சரும ஆரோக்கியத்தின் அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்தவை ஃபேஸ்வாஷும், க்ளென்ஸரும். இவற்றில் க்ளென்ஸரின் நன்மையையும், சரும தன்மைக்கு ஏற்ப வீட்டிலேயே க்ளென்ஸர் தயாரிப்பது பற்றியும் கூறுகிறார், அழகுக்கலை நிபுணரான வினோத் பாமா.

வினோத் பாமா
வினோத் பாமா

* சருமத்துக்கு சோப்பைவிட, ஃபேஸ்வாஷ், க்ளென்ஸர் பயன்படுத்துவது சிறந்தது. இவை சருமத்தின் ஆரோக்கியத்துக்கு கைக்கொடுக்கும்.

* தொடர்ந்து ஃபேஸ்வாஷ் பயன்படுத்தும் போது சிலருக்கு சருமம் வறண்டு போக வாய்ப்புள்ளதால், க்ளென்ஸர் மற்றும் பேஸ்வாஷ் இரண்டையும் மாற்றி மாற்றி பயன்படுத்துவது நல்லது. க்ளென்ஸர் முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதுடன் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவும்.

* மார்க்கெட்டில் பல வகை க்ளென்ஸர்கள் பல பிராண்டுகளில் கிடைத்தாலும் அதில் paraben free, sulfate free என்று இருப்பதாய் பார்த்து வாங்கிக் கொள்ளவும். இவற்றால் சருமத்தில் பாதிப்பு ஏற்படாது. ஆர்கானிக் க்ளென்ஸர் பயன்படுத்துவது, அதைவிட மிக நல்லது. சரும தன்மைக்கு ஏற்ற க்ளென்ஸரை வீட்டிலேயே தயாரிப்பது பற்றி இங்கு பார்ப்போம்...

சரும நிறத்தில் மாற்றம் இருப்பவர்களுக்கான க்ளென்ஸர்

நீர்ச்சத்து குறைந்து, சரும நிறத்தில் மாற்றம் இருப்பவர்கள் வீட்டிலேயே க்ளென்ஸர் செய்து பயன்படுத்தலாம். அதற்கு, தயிருடன் சிறிதளவு வெள்ளரி சேர்த்து நன்றாக அரைத்து க்ரீம் பதத்தில் எடுத்துக்கொள்ளவும். இதனை சருமத்தில் அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்து பின் முகத்தை கழுவவும். இதன் மூலம் முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீக்கப்படும்; சருமம் வறண்டு போவது தடுக்கப்படும், சருமத்துக்கு ஈரப்பதம் கிடைக்கும்.

Homemade Skin Care
Homemade Skin Care

எண்ணெய் சருமத்திற்கான க்ளென்ஸர்

எலுமிச்சை சாறு 50 மில்லியுடன், மினரல் அல்லது டிஸ்டில்டு வாட்டர் 50 மில்லி எடுத்துக் கொள்ளவும். இவற்றுடன் விட்டமின் ஈ எண்ணெய் இரண்டு அல்லது 3 சொட்டுகள் விடவும். புங்கன் கோட்டையை ஊறவைத்து, அந்த தண்ணீரை மேலே சொன்ன கலவையுடன் சேர்த்துக்கொள்ளவும். இதனை ஒரு பாட்டிலில் சேமித்து வைத்து, க்ளென்ஸர் ஆகப் பயன்படுத்தவும். இது எண்ணெய் சருமத்திற்கு உகந்ததாக இருப்பதுடன், முகத்தில் பருக்கள் இருந்தால் குறையவைக்கும்.

வறண்ட சருமத்திற்கான க்ளென்ஸர்

ஆமணக்கு எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் இரண்டையும் ஒரே அளவில் எடுத்துக்கொண்டு, அவற்றுடன் வைட்டமின் ஈ எண்ணெய் 4 சொட்டுகள் வரை சேர்த்து, நன்றாகக் கலந்து எடுத்துக் கொள்ளவும். இதனை ஒரு டப்பாவில் சேமித்துக்கொள்ளவும். இதனை க்ளென்ஸராக பயன்படுத்தும்போது வறட்சி நீங்கும், சருமம் பொலிவு பெறும். இதனை நார்மல் சருமம் உள்ளவர்களும் பயன்படுத்தலாம்.

மேக்கப் க்ளென்ஸர்

புங்கன் கொட்டையை ஊறவைத்த தண்ணீர், விர்ஜின் ஆலிவ் எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன், 100 மிலி டிஸ்டில்ட் வாட்டர் மூன்றையும் ஒன்றாகக் கலந்து, அதில் 3 சொட்டுகள் லாவண்டர் எண்ணெய் சேர்த்துக் கலந்து எடுத்து வைத்துக்கொள்ளவும். எப்போது மேக்கப்பை ரிமூவ் செய்ய வேண்டும் என்றாலும், இந்த க்ளென்ஸரை காட்டனில் சிறிது எடுத்து, முகத்தில் பயன்படுத்தி மேக்கப்பை நீக்கலாம்.