Published:Updated:

பருவங்கள் எட்டு! | முதுமை எனும் பூங்காற்று #MyVikatan

Ageing
News
Ageing

தகவல் தொழில்நுட்ப (IT) கம்பெனியில் பல மணி நேரம் ஒய்வின்றி கடுமையாக உழைப்பவர்களுக்கு உடலும் மனமும் சேர்ந்து Software syndrome என்ற புதிய தொல்லை ஆரம்பிக்கிறது. இளைஞர்களிடையே மனச்சோர்வும் அதிகம் தாக்குகிறது.

பருவங்கள் எட்டு! | முதுமை எனும் பூங்காற்று #MyVikatan

தகவல் தொழில்நுட்ப (IT) கம்பெனியில் பல மணி நேரம் ஒய்வின்றி கடுமையாக உழைப்பவர்களுக்கு உடலும் மனமும் சேர்ந்து Software syndrome என்ற புதிய தொல்லை ஆரம்பிக்கிறது. இளைஞர்களிடையே மனச்சோர்வும் அதிகம் தாக்குகிறது.

Published:Updated:
Ageing
News
Ageing

‘அரிது அரிது, மானிடராய் பிறப்பது அரிது. அதனினும் அரிது கூண், குருடு, செவிடு இன்றி பிறத்தல் அரிது.’ – ஓளவையார். அப்படிப்பட்ட அரிய பிறவியை எடுத்துள்ள நாம் அதை எப்படி நமக்கும், பிறருக்கும் பயனுள்ளதாக இருக்கும்படி அமைத்துக்கொள்வது என்பது மிகவும் முக்கியம். இதற்கு தேவை நல்ல உடல் நலமும், மனநலமும்.

முதுமை என்பது ஒரு பருவமே என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அதில் பல தொல்லைகளுக்கு இடையே மகிழ்ச்சியான நிகழ்வுகளும் நிறையவே உண்டு. ஒருவர் நடுத்தர வயதிரிருந்தே தன்னை முதுமைப் பருவத்திற்காக திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். எண்ணங்களும், செயல்பாடுகளும் ஒரே சீராகவும், ஆணித்தரமாகவும் செயல்பட்டால் முதுமையில் பல தொல்லைகளைத் தவிர்க்க முடியும்.

Ageing
Ageing
கல்லூரிப் படிப்பை ஆனந்தமாக முடித்துவிட்டு, வேலை தேடும் பொழுதுதான், வாழ்க்கையில் முதன் முறையாக பொறுப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. வார நாட்கள் மட்டுமின்றி விடுமுறை நாட்களிலும் உழைத்து உழைத்து பணத்திற்காக உடல் நலம், அடகு வைக்கப் படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு மனிதனின் எட்டு பருவங்களும், ஒவ்வொரு விதத்தில் ஒரு தனித்தன்மை வாய்ந்தது. அவை:

- பிறப்பு - வாழ்க்கையின் ஆரம்பம்

- குழந்தைப் பருவம் – 2 வயது வரை – உலகத்தை உணர்தல். அதாவது தனது தேவைகளை அறிந்து அவற்றை அளிப்பவர்களையும், தனது குடும்பத்தினரையும் அறிதல், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனும் ஐந்து புலனறிவுகளையும் அறிதல்.

- இளமைப்பருவம்: கற்றல், தொழில் பழகுதல் உலக வாழ்வைப்பற்றி அறிந்து கொள்ளுதல்.

- விடலைப்பருவம் – காதல் வயப்படுதல்

- சம்சாரி - தொழில் முனைதல், பொருள் ஈட்டல், குடும்பப் பொறுப்பு பெறல்.

- முன் முதுமைப்பருவம் – தொழிலிருந்து ஓய்வு பெறுதல், ஆன்மீகத்தில் நாட்டம் உண்டாகுதல்.

- பின் முதுமைப்பருவம் – உடல் நழிவுறுதல், பிறரின் உதவி வேண்டுதல், பிறரைச் சார்ந்து வாழ்தல் மேலும் இரண்டாவது குழந்தைப் பருவம்.

- இறப்பு - வாழ்க்கையின் முடிவு. குழந்தைப் பருவத்தில் ஆரம்பித்து முதுமையில் முடியும் நம் வாழ்வு ஒரு நீண்ட பயணமே! அப்பயணம் மீளாதூக்கத்தில் (மரணம்) முடிவடைகிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
உண்பதற்கு ஒரு நேரம், வேலை செய்வதற்கு ஒரு நேரம், விளையாட ஒரு நேரம், தூங்க ஒரு நேரம் என்று இருந்த காலம் எல்லாம் கடந்து போய், எப்பொழுதும் அவசரம், அவசரம் என்று வாழ்க்கை வெகு வேகமாக சூழல ஆரம்பிக்கிறது. விளைவு... இப்பருவம் பல நோய்களின் மேய்ச்சல் காடாக மாறுகிறது.

தற்பொழுது நம் நாட்டில் ஒருவரின் சராசரி வாழும் வயது 70க்கு மேல். நாம் வாழும் வயதை வைத்து, நமது வாழ்க்கைப் பருவத்தை சுமார் மூன்று பாகமாக பிரிக்கலாம்.

- இளமைப் பருவம் - முதல் ஆண்டு முதல் முப்பது ஆண்டு வரை

- வாழ்க்கைப் பருவம் - முப்பது முதல் அறுபது வயது வரை

- முதுமைப் பருவம் - அறுபது வயதிற்கு மேல்

இளமைப் பருவம்

இந்த மூன்று பருவத்திலும் மிகவும் ஆனந்தமானது முதல் முப்பது ஆண்டுகளாகிய குழந்தை மற்றும் இளமைப் பருவம் தான். பெற்றோர்களின் பாதுகாப்பில் வளரும் ஒரு இனிய பருவம். ஒருவர் தன் கடமைகளை மட்டும் செய்தால் போதும், மற்றவைகளை பெற்றோர்களே கவனித்துக் கொள்வார்கள்.

குழந்தைப் பருவத்தில் ஆரோக்கியமான உணவாகிய தாய்ப்பாலை ஊட்டி, தடுப்பூசி போட்டு நல்லபடியாக குழந்தையை வளர்த்து, பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள், தன் மகன்/மகள் நன்றாக படித்து பின்னாளில் பெரிய பதவி வகிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்புடன் உள்ளார்கள். மேலும் வயதான காலத்தில் தன் பிள்ளை தன்னை நன்றாகப் பார்த்துக் கொள்வான் என்ற எண்ணமும் ஆழ்மனதில் உண்டு.

மாணவ பருவத்தில் பிள்ளைகள் ஒரு சுதந்திர பறவையாக இருக்க ஆசைப்படுகிறார்கள். உடை உடுத்துதல், உணவு முறை, அன்றாட பழக்க வழக்கங்கள், பொழுதுபோக்கு, நண்பர்கள் மற்றும் உறவு முறையில் எதிலும் அவர்கள் தனிச்சையாக செயல்பட விரும்புகிறார்கள். பெற்றோர்களின் ஆலோசனைகளை ஏற்க மறுக்கிறார்கள். தீய பழக்கங்கள், கூடா நட்பு போன்றவைகளினால் உடல் நலமும், மன நலமும் பாதிக்கப்பட்டு வாழ்க்கையில் தோல்வியை சிலர் சந்திக்க நேரிடுகிறது. இதையெல்லாம் தாண்டி நன்றாக படித்து வேலைக்கு போகும் பொழுது புதிய சில பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. பொறுப்பு அதிகமில்லாமல் பள்ளி, கல்லூரிப் படிப்பை ஆனந்தமாக முடித்துவிட்டு, வேலை தேடும் பொழுதுதான், வாழ்க்கையில் முதன் முறையாக பொறுப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. வார நாட்கள் மட்டுமின்றி விடுமுறை நாட்களிலும் உழைத்து உழைத்து பணத்திற்காக உடல் நலம், அடகு வைக்கப் படுகிறது.

அடுத்த பொறுப்பு, திருமணம். அதுவும் நன்றாக முடிந்து முதல் கட்டம், சுகமான வாழ்க்கையாக அமைகிறது. கணவர் வேலைக்குச் செல்லும் இடத்தில் காலம் கழிப்பது அதிகமாகி, வீட்டில் குடும்பத்துடன் இருப்பது குறைந்து கொண்டே போகிறது. இதனால் பெற்றோர்கள், குழந்தைகள் மற்றும் உறவினர்களுக்கிடையே உள்ள பாசப்பிணைப்பு குறைய ஆரம்பித்து விடுகிறது. பொருளாதார நெருக்கடி காரணமாக கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. குடும்பத்தில் பெரியவர்கள் இல்லாததினால் குழந்தை ஆயா மூலம் வளர்க்கப்படுகிறது. ஆகையால் குழந்தைகளின் குணங்களும் நாம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாமல் போய்விடுகிறது.

மனைவியின் உறவுக்காரர்களுக்கு கை கொடுத்து உதவும் பொழுது பொறுப்பு மேலும் கூடுகிறது. திருமணத்திற்கு பின்பு தன் மகன், மனைவி மற்றும் அவர்களின் உறவினர்களிடம் அதிகம் உறவை செலுத்துவது பெற்றோர்களினால் ஜீரணிக்க முடிவதில்லை. அதை அவர்கள் அதிகம் விரும்புவதில்லை. பல குடும்பங்களிடையே முதல் விரிசல் இப்படித்தான் ஆரம்பமாகிறது. பின்பு அது நாளைடைவில் தனிக்குடும்பத்தில் முடிகிறது. ஆகையால் முதல் பருவம் பல பொறுப்புகளை உள்ளடக்கியதாக இருந்தாலும் பொதுவாக இனிமையான பருவம் என்றே கூறலாம்.

Ageing
Ageing
உண்பதற்கு ஒரு நேரம், வேலை செய்வதற்கு ஒரு நேரம், விளையாட ஒரு நேரம், தூங்க ஒரு நேரம் என்று இருந்த காலம் எல்லாம் கடந்து போய், எப்பொழுதும் அவசரம், அவசரம் என்று வாழ்க்கை வெகு வேகமாக சூழல ஆரம்பிக்கிறது. விளைவு... இப்பருவம் பல நோய்களின் மேய்ச்சல் காடாக மாறுகிறது.

வாழ்க்கைப் பருவம்

வாழ்க்கையில் பல சவால்கள், எதிர்ப்புகள், சோதனைகள், வேதனைகள் மற்றும் சில சுகங்களை சந்திக்கும் மிக முக்கியமான பருவம் தான் முப்பது முதல் அறுபது வயதுவரையிலான இரண்டாவது பருவம். இதுவரையில் பெற்றோர்களின் நிழலில் இருந்து வந்த வாழ்க்கை, அவர்களிடம் இருந்து சற்று விலகி, தனி வாழ்க்கைப் தொடங்கும் பருவம். எல்லா செயல்களுக்கும் தானே பொறுப்பாகும் ஒரு கட்டாய நிலை. மேலை நாட்டுக் கலாசாரம், அவசர வாழ்க்கை, போதுமான நிதி வசதியின்மை, குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் மொத்த குடும்ப பாரம் என்ற எல்லா பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டிய அதிக பொறுப்பு மிகுந்த பருவம் ஆகும்.

பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கையின் ஒரே குறிக்கோளாக இருக்கிறது. அதற்காக நேர்வழியை விட்டு விட்டு குறுக்கு வழியை நாடுகிறார்கள். அதனால் மனம் அமைதி இழக்கிறது. பணம் சம்பாதிப்பது, வாழ்க்கையை அனுபவிக்கத்தான் என்ற எண்ணம் தலைதூக்க ஆரம்பிக்கிறது. பணத்திற்கு மதிப்பு அதிகம் கொடுக்க கொடுக்க பாசத்தின் மதிப்பு குறைந்து கொண்டே போகிறது. இதில், தன் உடல் நலமோ, பெற்றோர்களை கவனிக்கும் கடமையோ கடலில் கரைத்த பெருங்காயம் போல் காணாமல் போய் விடுகிறது!

உண்பதற்கு ஒரு நேரம், வேலை செய்வதற்கு ஒரு நேரம், விளையாட ஒரு நேரம், தூங்க ஒரு நேரம் என்று இருந்த காலம் எல்லாம் கடந்து போய், எப்பொழுதும் அவசரம், அவசரம் என்று வாழ்க்கை வெகு வேகமாக சூழல ஆரம்பிக்கிறது. விளைவு... இப்பருவம் பல நோய்களின் மேய்ச்சல் காடாக மாறுகிறது. எழுபது வயதில் வர வேண்டிய மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்கள் முப்பது, நாற்பது வயதிலேயே வரத் தொடங்கிவிடுகின்றன. எத்தனை இளைஞர்கள் மற்றும் நடுத்தரவயது மக்கள் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்? சாலை விபத்தில் கை, கால்களை இழந்தவர்களும், மரணமடைந்தவர்களும் இந்தப் பருவத்தில்தான் அதிகம். தகவல் தொழில்நுட்ப (IT) கம்பெனியில் பல மணி நேரம் ஒய்வின்றி கடுமையாக உழைப்பவர்களுக்கு உடலும் மனமும் சேர்ந்து Software syndrome என்ற புதிய தொல்லை ஆரம்பிக்கிறது. இளைஞர்களிடையே மனச்சோர்வும் அதிகம் தாக்குகிறது.

தங்களைக் கவனிக்கவே காலம் இல்லாத பொழுது தன் வீட்டில் உள்ள பெரியவர்களைக் கவனிக்க காலம் ஏது? முதியோர்கள்; தனிமைப் படுத்தப்படுகிறார்கள். தனிக்குடித்தனம் புற்றீசல் போல பெருக ஆரம்பித்து விட்டன.

ஒட்டு மொத்தத்தில் இந்த நடுத்தர வயதுப் பருவம் இன்பமும் துன்பமும் இணைந்த ஒரு கலவை எனறே கூறலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒவ்வொரு கால கட்டத்திலும் வெவ்வேறான அனுபவங்கள். சில சுகமான அனுபவங்களும், சில சுமையான அனுபவங்களும் உள்ளன. மொத்தத்தில் கிடைத்தற்கரிய இம்மானிடப் பிறவியை நன்கு அனுபவித்து வாழ வேண்டும். நாமும் நன்றாக வாழ்ந்து மற்றவர்களுக்கும் சற்றேனும் உபயோகத்தோடு வாழ வேண்டும்.

முதுமைப் பருவம்

இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது, கடைசிப் பருவம் – ஆம் அது தான் அறுபது வயதிற்கு மேலான முதுமைப் பருவம். இப்பருவத்தில் பல பொறுப்புகள் கழிந்து விடுகின்றன. கூட்டுக் குடும்பத்தில் இருந்தால் (இதிலும் சில பிரச்னைகள் உண்டு), பேரன் பேத்திகளோடு கொஞ்சி, மகிழும் காலம். ஆனால், தற்போது எத்தனை முதியவர்களுக்கு இந்த பாக்கியம் கிடைக்கிறது? கூட்டுக் குடும்பம் சிதறுவதற்கு பல காரணம் உண்டு. அதற்கு இளைஞர்களின் மன நிலை ஒரு முக்கிய காரணமாகும். பல முதியவர்கள் வறுமை, தனிமை மற்றும் பல நோய்கள் எனும் பூதங்களால் சிக்குண்டு அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு இன்னமும் வாழ வேண்டும் என்ற ஆசையில்லை. ஆனால் இருக்கும் வரை காலத்தை தள்ள வேண்டுமென்ற ஒரு கட்டாய நிலைக்கு ஆட்படுகிறார்கள்.

கடைசிவரை சற்று பண வசதியோடு இருக்கும் முதியவர்கள் ஒரு தன்னம்பிக்கையுடன், தைரியமாக வாழ்க்கையை கடத்துகிறார்கள். மகனின் பொய்யான அன்புப் பேச்சாலும், பயமுறுத்தலினாலும் மனம் மாறி தன் சொத்துகளை எல்லாம் வாரிசுகளுக்கு எழுதிக் கொடுத்து விட்டு, தனிமரமாக எவ்வித உதவியும் இன்றி நடுரோட்டில் நிற்கும் முதியவர்களின் எண்ணிக்கை அதிமாகிக் கொண்டே போகிறது. தனக்கு மிஞ்சிய பின்பு தான் தானமும் தர்மமும் என்பதை பெரியவர்கள் மறந்து விடுகிறார்கள். என்ன செய்வது பெற்ற மனம் பித்து.

காலதேவன் வேகமாக சுழல்கிறான். இன்று தான் பிறந்தாற்போல இருக்கும்., ஆனால், தீடீரென்று முதுமைப் பருவத்தில் காலடி எடுத்து வைத்துக் கொண்டு இருப்போம். இந்த வேகச் சுழல் நம்மை அறியாமலேயே இளமை கொஞ்சம் கொஞ்சமாக தேய ஆரம்பித்து விடுகிறது. அதோடு போட்டிப்போட்டுக் கொண்டு முதுமையும் லேசாக தலை தூக்க ஆரம்பிக்கிறது.

Dr V S Natarajan
Dr V S Natarajan

மொத்தத்தில் முதுமைப் பருவம் ஒரு திரிசங்கு போல! ஒவ்வொரு கால கட்டத்திலும் வெவ்வேரான அனுபவங்கள். சில சுகமான அனுபவங்களும், சில சுமையான அனுபவங்களும் உள்ளன. மொத்தத்தில் கிடைத்தற்கரிய இம்மானிடப் பிறவியை நன்கு அனுபவித்து வாழ வேண்டும். நாமும் நன்றாக வாழ்ந்து மற்றவர்களுக்கும் சற்றேனும் உபயோகத்தோடு வாழ வேண்டும். அதற்கு உடல் நலமும், மன நலமும் நன்றாக இருக்க வேண்டும். அது சாத்தியமா? வாழ்க்கையில் மறுபடியும் வசந்தம் வருமா? முதுமைக்கு குட்பை சொல்ல முடியுமா? பலருக்கு முதுமைப் பருவம் ஒரு திரிசங்கு நிலையாகத்தான் அமைந்து விடுகிறது.

- பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன், முதியோர் நல மருத்துவர், டாக்டர் வி.எஸ். நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை, சென்னை
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism